Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..!
#41
"புங்குடுதீவு தர்சினியை" அவதூறாக பேசிய சிறிலங்கா அமைச்சருக்குக் கண்டனம்: சென்னையில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! சிறிலங்கா கடற்படையால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு தர்சினையை சென்னையில் அவதூறாகப் பேசிய சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரனவைக் கண்டித்து சென்னையில் இன்று வியாழக்கிழமை பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சென்னை விக்டோரியா நினைவு மண்டபம் எதிரே இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

அண்மையில் சென்னையில் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரன, புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட தர்சினி ஒரு பாலியல் தொழிலாளி என்றும் இராணுவத்துக்குச் சேவையாற்றுபவர் என்றும் கூறியிருந்தார்.




சிறிலங்கா அமைச்சரின் இந்த அவதூறைக் கண்டித்து தமிழகப் பெண்கள் எழுச்சி அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்,

வீரவணக்கம்! வீரவணக்கம்!
மனித உரிமைப் போர்க்களத்தில்
பெண் உரிமைப் போர்க்களத்தில்
இன்னுயிர் நீத்த
போராளிகளுக்கு வீரவணக்கம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
தமிழ் பெண் தர்சினியை
பாலியல் பலாத்காரம்
செய்திட்ட சிங்கள இராணுவத்தைக் கண்டிக்கிறோம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
பாலியல் வெறியாட்டத்தை மூடி மறைத்த
சிங்கள அமைச்சர்
திஸ்ஸ விதாரனவைக் கண்டிக்கிறோம்!

இந்திய அரசே! இந்திய அரசே!
தட்டிக்கேள்! தட்டிக்கேள்!
சிங்கள அரசின்
மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேள்!

தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
இந்தியக் கூட்டணி அரசே!
இந்தியக் கூட்டணி அரசே!
இலங்கை வாழும் தமிழர்களை
இலங்கை வாழும் தமிழச்சிகளை
இனக்கொலை செய்து வெறியாட்டம் போடும்
சிங்களப் பேரினவாதிகளை தடுத்து நிறுத்து!

ஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்த
எங்கள் தமிழர்களுக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!!

எங்கள் உடலும் உயிரும்
இராணுவ வெறியாட்டத்துக்கு தீனியாகும் பண்டமல்ல!

அனுமதியோம்! அனுமதியோம்!
இந்தக் கொடுமையை அனுமதியோம்!

மக்களைக் காப்பாற்ற இராணுவமா?
மக்களைக் கொல்ல இராணுவமா?

பதில் சொல்! பதில் சொல்!
சிங்கள அரசே பதில் சொல்!!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரி.எஸ்.எஸ். மணி,

கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்று கூறுகிற மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அரச தலைவராகப் பொறுப்பேற்றார்.




அதன் பின்னர்தான் தமிழ்ப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இத்தகைய பாலியல் வல்லுறவுகள் நடைபெற்றன.

மனித உரிமை மீறல்கள் உலகின் எந்தப் பகுதிகளில் நடந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டியது நம் கடமை என்றார்.

வழக்கறிஞர் மணிராஜ் பேசுகையில்,

சர்வதேச நாடுகளின் மனித உரிமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதைச் செயற்படுத்த இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.




தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசியதாவது:

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்களை இராணுவம் படுகொலை செய்துவிட்டு குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்று முதலில் கூறியது. ஆனால் துப்பாக்கிக் குண்டுகளால்தான் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் விசாரணை நடத்துகிறோம் என்று மறு அறிவிப்பு வெளியிட்டது.

ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு நல்லெண்ண நடவடிக்கையாக தங்கள் காவலில் இருந்த சிங்கள காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை விடுதலைப் புலிகள் விடுதலை செய்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மேஜர் கபிலன் என்கிற போராளி படுகொலை செய்யப்பட்டார்.

ஜெனீவாப் பேச்சுக்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகிற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் 10 பேர் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளனர்.




சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் தர்சினியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனால் தமிழகத்துக்கு அகதிகளின் வரும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்துக்கு வருகை தரும் அகதிகள் அனைவருமே சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தை, பாலியல் வல்லுறவுக் கொடுமைகளைச் சொல்லி வருகின்றனர் என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த பேராசிரியர் சரஸ்வதி பேசியதாவது:

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் பெண் தர்சினி சிங்களக் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். ஆனால் அண்மையில் தமிழகம் வந்த சிங்கள அமைச்சர் திஸ்ஸ விதாரனவோ, தர்ச்னி ஒரு பாலியல் தொழிலாளி என்றும் இராணுவத்துக்கு சேவை செய்பவர் என்றும் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொன்ன செய்தி நமக்குத் தாமதமாகக் கிடைத்தமையினாலே இப்போது இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம் பெண் தர்சினியை அவதூறாகப் பேசிய சிங்கள அமைச்சர் இங்கிருந்து பாதுகாப்பாகச் சென்றுள்ளார். தர்சினி சிந்தியிருக்கும் இரத்தம் நம் இரத்தம் அல்லவா?.

தமிழீழத்தில் மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் பெண்களே. ஈழத்து தர்சினி நம் உறவு அல்லவா? நம் கலாச்சாரத்தை நம் இனத்தைச் சேர்ந்தவர் அல்லவா? அதனால் நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தர்சினியின் படுகொலைக்குப் பொறுப்பேற்று இராணுவப் பொறுப்பில் உள்ள அமைச்சர் பதவி விலக வேண்டும். இலங்கைத் தமிழர்களின் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக இந்திய அரசுக்கு தமிழ்நாடு அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி சாந்தி, தலித் பெண்கள் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி மகிமை உள்ளிட்ட பலரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

- புதினம்.
படங்களினை இங்கே பார்க்கவும்
http://www.eelampage.com/?cn=24105
,
,
Reply
#42
இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.இதே மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.
அன்புடன்
மாலு
yathum oore yavarum kelir
Reply
#43
<b>புதுவையில் பெப்ரவரி 18-ல் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு </b>

இந்தியாவின் புதுவை மாநிலத்தில் பெப்ரவரி 18 ஆம் நாள் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.


புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான லோகு. அய்யப்பன் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார்.

இந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு செயல் களத்தில் ஆதரவு தெரிவித்து சிறையேகிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட பரப்புரையாளர்களில் ஒருவரான விடுதலை க.இராசேந்திரன், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமைக்காக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி விடுதலையான முன்னை நாள் திலீபன் மன்ற நிறுவனரும் தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகி அழகிரி மற்றும் மீனவர், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

<b>இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியது யார்? </b>என்பதை விவரிக்கும் <i><b>விடுதலை க. ராசேந்திரனின் விளக்க நூலும் </b></i>இந்த மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது என்று எமது புதுவை செய்தியாளர் தெரிவிக்கிறார்

<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#44
புலம்பெயர் வானொலில அதுவும் அப்துல் ஜபார் ஜயா சொல்லியிருந்தாரா? நம்புறமய்யா.. நம்புறம்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
8
Reply
#45
னக்குனா. குசுமாறா!

உன்கலிற்கும், என்கலிற்கும் "ரா" சென்னா மட்டும் நம்புவேம்! "ரா"விற்கு ஒறு "றோ"கறா போடுவேமா????????
Reply
#46
Sukumaran Wrote:புலம்பெயர் வானொலில அதுவும் அப்துல் ஜபார் ஜயா சொல்லியிருந்தாரா? நம்புறமய்யா.. நம்புறம்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<b><span style='font-size:25pt;line-height:100%'>சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்</b></span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#47
சிவராம் படுகொலையில் இந்திய பேரரசுக்குத் தொடர்பு: தொல்.திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்]
மாமனிதர் ஊடகவியலாளர் சிவராம் தராக்கி படுகொலையில் இந்தியப் பேரரசுக்குத் தொடர்பிருப்பதாக தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.


சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை:

ஜெனீவாவில் பேச்சு நடைபெற உள்ளது. ஜெனீவா பேச்சுக்களுக்கு முன்பாக என்ன நிலைமை இருந்தது?

ஆசியாவில்தான் பேச்சு நடக்க வேண்டும். ஐரோப்பாவில் பேச்சு நடத்த நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று மகிந்த ராஜபக்ச பிடிவாதம் செய்தார்.




ஆனால் விடுதலைப் புலிகளோ ஆசியாவில் நடத்த ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். ஐரோப்பிய மண்ணில் எந்த தேசத்திலும் நடக்கட்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சிக்கலில் இறுதியாக விடுதலைப் புலிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ராஜபக்ச விரும்பியபடி ஆசியாவில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆசியாவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொன்னால் அது இந்தியாவிலே நடக்கட்டும். இந்தியாவிலே நடந்தால் சிங்கள பேரினவாத அரசுக்கு இந்தியா ஆதரவைப் பெற வேண்டும். இந்தியா ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.

இந்தியா ஆதரவாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தியா தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்பினார். இன்று இந்தியப் பேரரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.




எல்லா வகையிலும் அப்படி ஆதரவு நிலையை இந்திய அரசு எடுக்கிற காரணத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் உடனடியாகத் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

ஈழத்திலே போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு டில்லிக்கு வருகிற மகிந்த ராஜபக்சவை தமிழ்நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. விமான நிலையத்திலேயே கறுப்புக் கொடி விரட்டியடிப்போம் என்ற தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் எடுத்தது.

அதன் அடையாளமாக ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பெரியார் திடலிலே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஆங்காங்கே தமிழ்த் தேசிய சக்திகளால் எழுச்சி உருவானது.




நம்முடைய இந்த எதிர்ப்பெல்லாம் ஒட்டுமொத்தமாக முதல்வரின் கவனத்துக்குச் சென்ற காரணத்தினால், ராஜபக்ச தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள அமைதிச் சூழலை நான் கெடுக்க விரும்பவில்லை. ஆகையால் அவர் வந்தால் வரவேற்கமாட்டேன் என்று தகவல் சொன்னதால் ராஜபக்ச கேரளாவுக்குப் போய் பாயாசம் குடித்துவிட்டுப் போனார்.

இந்த மாநாடு ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு என்று போடப்பட்டிருந்தாலும் ஈழத்திலே இருக்கிற தமிழர்களைப் பாதுகாக்கிற வலிமை நம்மிடம் இல்லை. அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடத்தில் இருக்கிறது. அந்த ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஆனாலும் தமிழர்கள் என்ற முறையிலே நமக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.

நாம் இந்திய எல்லைக்குள் வாழ்கிற குடிமக்கள். நம்முடைய இந்திய அரசு எடுக்கிற முன்முயற்சிகள் நம்முடைய தேசிய இனத்துக்கு எதிரானதாக அமையுமேயானால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.




இன்று தாம்பரம் பக்கத்தில் இருக்கிற இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் இப்போது வான்படை அமைத்துவிட்டார்கள். வான்படையால் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்கிற வலிமை சிங்களப் படைகளுக்கு இல்லை என்பதால் அந்தப் பயிற்சியை இந்தியப் பேரரசு தந்து கொண்டிருக்கிறது.

அதைப்போல் பல தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் கப்பல்களை இழந்திருந்தாலும் இன்று விடுதலைப் புலிகள் கப்பற்படையை வலுப்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது போர்க்களத்திலே 23 கப்பல்களை விடுதலைப் புலிகள் தயாராக வைத்திருக்கிறார்கள் என்கிற உறுதியான செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் சிங்களப் படைகளுக்கு இந்தியப் பேரரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற கடமையில் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.




இந்தியப் பேரரசே! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கைவிடுங்கள்! சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கும் போக்கைக் கைவிடுங்கள் என்று எச்சரிக்கை வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கும் இருக்கிறது.

அதைவிட வேதனையான செய்தி.

ஊடகவியலாளர்களின் ஆராய்ச்சியிலே நம்மால் காண முடிகிற செய்தி.

சிவராம் தராக்கி என்ற சிறந்த ஊடகவியலாளர்- இராணுவ களத்திலே நின்று ஆய்வு செய்யக் கூடிய சிறந்த ஆய்வாளர்- திடீரென்று படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியப் பேரரசும் இருக்கிறது என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் 'றோ' வுக்கு அதிலே தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.




இதையெல்லாம் உண்மையாக இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். அப்படி உண்மை இருக்குமானால் இந்த இனம் விடுதலைக்கு மேலும் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரும்.

ஆகவே இந்தியப் பேரரசே!

ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குகிற போக்கை-

தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்குகிற போக்கை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொள்ளக் கூடிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.




சுடரொளி என்ற ஊடக அலுவலகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழ்த் தேசியத்துக்கு உறுதுணையாக இருக்கிற ஊடகதளங்கள் இந்தியப் பேரரசால் குறிவைக்கப்படுகிற என்கிற செய்தியைக் கேட்கின்றபோது நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். வேதனைப்படுகிறோம்.

ஆகவே இந்தியப் பேரரசை வற்புறுத்தக் கூடிய கடமையும் பொறுப்பும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு இருப்பதால்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

அமெரிக்கப் பேரரசைப் பற்றி இங்கே சொன்னார்கள். அமெரிக்கா என்பது உலக நாடுகளுக்கு எல்லாம் தானே தாதாவாக இருந்து கட்டப் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்கிற வெறித்தனமான காலித்தனமான போக்குகளைக் கடைபிடித்து வருகிறது.




அதனால்தான் ஒவ்வொரு முறையும் மூக்கறுக்கப்பட்டு, வால் நறுக்கப்பட்டு அது அலங்கோலமாக, அகோரமாக நின்றாலும்கூட அதன் ஆணவம் இன்னமும் அடங்கவில்லை.

அதனால்தான் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும்..இல்லையேல்...என்று எச்சரிக்கை விடுக்கக் கூடிய அளவுக்கு ஆணவம் தலைதூக்கி நிற்கிறது.

ஈழப் பிரச்சனையிலும் இதர பிரச்சனைகளிலும் அமெரிக்கா வீம்புக்கு மூக்கை நுழைக்கிற போது இந்தியப் பேரரசு அமைதி காத்ததுதான் காரணம். அப்படி அன்று அமைதி காத்ததன் விளைவால் மூன்றாம் உலக நாடுகளிலேயே வல்லரசாக வளர்ந்துவருகிற இந்தியப் பேரரசை அமெரிக்க வல்லரசு அச்சுறுத்துகிறது.




இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதால் இந்த மாநாட்டை நாம் நடத்துகிறோம்.

ஆனானப்பட்ட அமெரிக்க வல்லரசை ஆனையிறவு மீட்சிப் போரிலே அதன் வாலை விடுதலைப் புலிகள் ஒட்ட நறுக்கி விரட்டியத்த வரலாறு உண்டு.

சிங்களப் படையினரால் விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று திணறிய போது களத்திலேயே நின்று சிங்களப் படைகளுக்கு உத்திகளைக் கற்றுத்தந்தது அமெரிக்கப் படை. பல தந்திரங்களை கற்றுத் தந்தது அமெரிக்கப் படை. ஆனாலும் அந்த உத்திகளை விடுதலைப் புலிகள் முறியடித்தார்கள். தந்திரங்களை முறியடித்தார்கள். ஆனையிறவை மீட்டெடுத்தார்கள்.




சிங்களப் படைகளும் அவர்களுக்கு உத்திகளை வகுத்துத் தந்த அமெரிக்கப் படைகளும் பின்னங்கால் பிடரியிலே படக்கூடிய வகையில் ஓடி ஒளிந்தது. இது வரலாறு.

இன்று அமெரிக்காவின் இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் எல்லாம் புலிகளின் போர் உத்திகளை வகுப்பாகப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கே தெரியாத உத்தியை இவர்கள் எப்படி புதிது புதிதாகக் கையாள்கிறார்கள்? ஒருமுறை கையாள்கிற உத்தியை மறுமுறை கையாளுவதில்லையே.. யூகம் செய்யக் கூடிய வகையிலேயே உத்திகளைக் கையாள்வதில்லையே? எங்கே கற்றார் பிரபாகரன் இந்த இராணுவ தந்திரங்களை? என்று வியப்பு மேலிட பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க வல்லரசு.

அமெரிக்காவுக்கு நாமெல்லாம் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை.

வியட்நாமிலே அதன் வால் நறுக்கப்பட்டது போல, கியூபாவிலே மூக்கறுப்பட்டதைப் போல, இன்னும் சுண்டைக்காய் நாடுகள் என்ன என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த நாடுகளில் எல்லாம் அவமானப்பட்டதைப் போல தமிழீழத்திலும் அமெரிக்க வல்லரசு மூக்கறுபடும். அது நடக்கும். அந்த வல்லமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு.

ஆனாலும் தமிழர்கள் என்ற கடமை உணர்ச்சி நமக்கு இருக்கிறது.

அமெரிக்க வல்லரசே!

உன் காடைத்தனத்தை,

உன் காலித்தனத்தை,

உன் பொறுக்கித்தனத்தை

ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்!

சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருப்பதைக் கைவிடு!

சிங்களப் பேரினவாத சக்திகள் எவ்வளவு பெரிய சேதத்தைச் சந்தித்த பின்னரும் விடுதலைக்கு இடம்கொடுக்கவில்லை என்று சொன்னால் அதற்கு சிங்களப் பேரினவாத அரசுகூட காரணமில்லை தோழர்களே!

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால்

அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகள்தான் ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுகிற சக்திகள்.

சிங்களவர்கள் எப்போதோ தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். விடுதலைப் புலிகளிடம் சிங்களவர்கள் தோற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவர்கள் ஆயுதம் எடுத்த 5 ஆண்டுகளிலேயே சிங்களப் படை தோற்றுப் போனது. ஆனால் வல்லரசுகளின் துணையோடு அவர்கள் உயிரோடு இருப்பது போல மீண்டும் களத்திலே காட்டிக்கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை விடுதலைப் புலிகளுக்கு இருக்கிறது.

விடுதலைப் புலிகள் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.

என்ன அறிவிப்பு?

இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அதன் பிறகு எங்கள் வல்லமையை நாங்கள் மீண்டும் இந்த உலகுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டியது வரும். ஏற்கனவே நாங்கள் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். இதற்கு மேல் நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தையை செவிமடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

உலக நாடுகள் எல்லாம் இன்று என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினார்கள். புலிகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிங்கள இராணுவத்தை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து பட்டியலிட்டுப் பாருங்கள்.

புங்குடுதீவு மாணவி தர்சினி படுகொலை யாரால் நடந்தது? ஏன் நிகழ்ந்தது?

இன்று சிங்களப் படை என்ன சொல்கிறது? தர்சினி ஒரு பாலியல் தொழிலாளி- சிங்கள இராணுவத்துக்கு சேவை செய்து கொண்டிருந்தார். ஆகவே அவரது கொலையை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று பெரிதுபடுத்துகிறார்கள். தர்சினியின் மானத்தையும் கேவலப்படுத்துகிற பிரச்சாரத்தை இன்று சிங்கள அரசு கையிலெடுத்திருக்கிறது.

கொடூரமான முறையிலே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தர்சினி கொலை செய்யப்பட்டது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?

திருகோணமலையில் சிங்களப் படையினரால் மாணவர்கள் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்களே..அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?

தேவாலயத்திலேயே போய் குடும்பத்தோடு யேசு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பெரியவர் மாந்த நேயச் செம்மல் ஜோசப் பரராஜசிங்கம் யாரால் எதனால் எப்படிப்பட்ட சூழலில் படுகொலை செய்யப்பட்டார்? அதுவெல்லாம் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இல்லையா?

கடந்த ஒரு மாத காலமாக யாழ். தீவிலும் வன்னிப் பிரதேசங்களிலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதுவரை மனித உரிமைகள் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களைக் கடத்தியது யார்? காணாமல் போனதன் பின்னணி என்ன? இவையெல்லாம் செய்தது ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?

படைக்குள்ளேயே துரோகிகளை உருவாக்கி அந்த துரோகத்துக்குத் துணை போவதை யார் செய்வது?

துரோகிகளிடமிருந்து தப்பித்து அண்மையிலே புலிகளைச் சந்தித்த சிறுவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். அவன் தெரிவித்திருக்கும் தகவல்கள் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இல்லையா?

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?

விடுதலைப் புலிகளா?

இல்லை.

இதுவெல்லாம் இந்தியப் பேரரசுக்கும் தெரியும். இந்திய உளவுத்துறை 'றோ' வுக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு நிலை இருந்தும் கூட தமிழினத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வந்த நெருக்கடிதான் என்ன என்று தமிழ் மக்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்கிறோம்.

தமிழீழத்தை அங்கீகரிப்பதுதான் இந்தியப் பேரரசு இந்த நேரத்தில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த உத்தி என்று சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

கடந்த கால வரலாற்றில் நடந்த சுவடுகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு,

காணப்படுகிற கறைகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு இனத்தின் எதிர்காலம்- நாட்டின் எதிர்காலம்- இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு தமிழீழத்தை இந்தியப் பேரரசு அங்கீகரிக்க முன்வர வேண்டும்.

உலக அளவிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கம் என்று சொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக பாலஸ்தீன ஆட்சிப் பீடத்தை கைப்பற்றி இருக்கிறது.

பாலஸ்தீனத்து ஆட்சி அதிகாரத்தில் இன்று அமர்ந்திருப்பவர்கள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்.

132 இடங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மக்களின் அங்கீகாரம் பெற்று இன்று அவர்கள் ஆட்சி அதிகாரத்திலே அமர்ந்திருக்கிறார்கள்.

இது உலக அரங்கத்தில் ஏற்பட்டிருக்கிறது ஒரு புதிய திருப்பம்.

இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கிறதா? இல்லையா?

பொங்குதமிழ் நிகழ்ச்சிகள் சான்றுகளா இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் கிடைக்கின்ற விடைகள் சான்றுகளா இல்லையா?

அண்மையிலே நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பை அறைகூவலாக விடுத்தார்கள். மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா?

ஆக

மக்கள் இயக்கமாக இன்று அந்த இயக்கம் நடைபோட்டுக் கொண்டிருக்கிற சூழலில்,

அங்கே ஒரு அரசை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்-

தமிழீழத்தை இந்தியப் பேரரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் இந்திய நாட்டு மக்கள் நாங்கள் விடுக்கின்ற வேண்டுகோள்.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் அகதிகள் முகாம் என்ற பெயரிலே பல்வேறு திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்.

இந்த அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு இந்தியப் பேரரசால் எந்த அளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது?

அடிப்படை உரிமைகள் இல்லை-

மனித உரிமைகள் இல்லை-

அங்கிருந்து வெளியே வர வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-

உள்ளே போக வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-

வேலைக்குச் செல்வதானாலும் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-

சம்பளத்தைப் பெற வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் பெற வேண்டும்-

திரைப்படம் பார்க்க விரும்பினாலும் கூட காவல்துறையிடம் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும்!

தமிழகத்துக்கு அகதி முகாம்கள் எல்லாம் திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன.

அந்த அகதிகளுக்கு என்ன பாதுகாப்பு?

அகதிகளை எவனாவது அடித்தால் - அடித்துக் கொன்றால் எந்தச் சட்டத்தின் கீழ் இங்கே நடவடிக்கை எடுப்பார்கள்?

அகதிகளைக் கொன்றால் தாழ்த்தப்பட்ட தமிழனை கொன்றால் சட்டம் எப்படி கைக்கட்டி இங்கே வேடிக்கை பார்க்குமோ அப்படித்தான் அகதிகளைக் கொன்றாலும் வேடிக்கை பார்க்கும்.

ஆகவே அகதிகளைப் பாதுகாப்பதற்கு என்று ஐக்கிய நாடுகள் பேரவை, அகதிகள் மறுவாழ்வு சபையை நடத்துகிறது.

அது என்ன சொல்கிறது? அதனுடைய விதிகள் என்ன? அதனுடைய விதிமுறைகள் என்ன?

அவற்றையெல்லாம் உலக நாடுகள் அனைத்தும் ஜனநாயக நாடுகள் எல்லாம் மாந்த நேயத்தின் மீது மதிப்பு வைத்துள்ள நாடுகள் எல்லாம் ஐ.நா. பேரவையின் அகதிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டு அதனை பின்பற்றுகின்றன.

இன்று உலக அரங்கிலே அந்தப் பேரவையின் விதிகளை மதிக்காத ஒரு நாடு இந்திய நாடுதான்.

இந்தியப் பேரரசு மட்டும் ஐ.நாவின் அகதிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்படவில்லை. கையொப்பமிடவில்லை. ஒப்புதல் அளிக்கவில்லை. பின்பற்றத் தயாராக இல்லை.

அகதிகளை சிறைக் கைதிகளை விட மிக மோசமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பியாவில், கனடாவில் வாழ்கிற புலம்பெயர் தமிழர்கள் கடினப்பட்டாலும்

நாடு இழந்து-

உறவை இழந்து-

தேசத்து இயற்கையை இழந்து-

எங்கோ ஒரு மூலையில் வாழ வேண்டிய கொடுமைக்கு ஆளாகி இருக்கிற நிலையில் இருந்தாலும் கூட-

கனடாவில் இருக்கிற சுதந்திரம்-

லண்டனிலே இருக்கிற சுதந்திரம்-

ஐரோப்பிய நாடுகளிலே வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமை பாதுகாப்பு

இந்த நாட்டில் இல்லையே...

என்பதுதான் வேதனையளிக்கிறது.

ஆகவேதான் இந்த மாநாட்டிலே அகதிகள் மறுவாழ்வு என்ற தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறோம்.

இந்தியப் பேரரசே!

ஐ.நா. பேரவை காட்டியிருக்கிற வழிகாட்டுதல்களை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொண்டு இந்தியாவிலே வாழுகிற எல்லா அகதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

நேரடியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லை.

அவர்களின் பாதுகாப்பை ஐ.நா. பேரவையிடம் ஒப்படையுங்கள். ஐ.நா. பேரவை பார்த்துக் கொள்ளும்.

ஐ.நா.பேரவை அதற்கென உலக அளவிலே நிதி திரட்டி வைத்திருக்கிறது.

அகதிகளுக்கு வாழ்விடம், குடிநீர், மருத்துவம், உடை, வேலை வாய்ப்பு, மனித உரிமை பாதுகாப்பு என அனைத்துக்கும் உறுதி கொடுக்கக் கூடிய பொறுப்பும் கடமையும் ஐ.நா. பேரவைக்கு இருக்கிறது.

ஐ.நா. பேரவையை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் தடை செய்திருக்கிறது இந்தியப் பேரரசு. அந்த ஒப்பந்ததில் கையெழுத்துப் போடாத காரணத்தால்தான் அத்தகைய தீர்மானத்தை இந்த மாநாட்டில் முன்மொழிந்திருக்கிறோம்.

ஈழம் ஏற்கனவே மலர்ந்துவிட்டது! அங்கே அரசு நடந்து கொண்டிருக்கிறது!

இப்போது ஜெனீவாவில் 22, 23ஆம் நாட்களில் தொடங்க இருக்கிற பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அரசு ஒத்துழைப்பு கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தியப் பேரரசும் அதை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறது.

அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான தீர்வு கிடைக்கக் கூடிய வகையிலே சர்வதேச சமூகம், ஜனநாயக சக்திகள் ஈழத்திலே போர் நடக்காமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

ஈழம் வெல்லும்! அதனை காலம் சொல்லும்!!என்றார் திருமாவளவன்.

http://www.eelampage.com/?cn=24224
- புதினம்
Reply
#48
சர்வதேசமே- தமிழீழத்தை உடனடியாக அங்கீகரி! விடுதலைச் சிறுத்தைகளின் பேரெழுச்சியான சென்னை மாநாட்டில் தீர்மானம்!!
[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 01:58 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழத்தை இந்தியப் பேரரசும், சர்வதேச ஜனநாயக சக்திகளும் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் சென்னை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையிலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில் நள்ளிரவு வரை நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

- கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் மீறி அப்பாவித் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் போடும் சிங்களப் பேரினவாத அரசின் இனவெறிக்கு அண்மையில் பலியான கல்லுரி மாணவி தர்சினி, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இம்மாநாட்டின் மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது.

- கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தொடரும் சிங்களப் பேரினவாத அரசின் இனவெறி அடக்குமுறைகளால் கணக்கிலடங்கா உயிர்ச் சேதங்களுக்கும், உடைமைச் சேதங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, இலட்சக்கணக்கான தமிழர்கள் உலக நாடுகளெங்கும் அகதிகளாய் புலம்பெயர்ந்து வாழும் கேடான நிலையில் மென்மேலும், ஈழத்தில் தலைவிரித்தாடும் சிங்கள இராணுவ வெறியாட்டத்தால் அண்மைக் காலமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வெளியேறும் கொடுமைகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு 'தமிழ் ஈழமே தீர்வு' என்னும் அடிப்படையில் இந்தியப் பேரரசும் சர்வதேச சனநாயக சக்திகளும் தமிழ் ஈழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டுமென இம்மாநாடு தமிழ்ப் பெருங்குடி மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறது.

- கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இனவெறிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக தமிழ்நாடு மற்றும் இந்திய மாநிலங்களில் பரவலாகக் குடியேறியுள்ளனர். அவர்களை ஆங்காங்கே 'அகதிகள் முகாம்' என்னும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து அடிப்படை உரிமைகள் மற்றும் பிற மனித உரிமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் நடத்தப்படும் போக்கு நிலவுகிறது. உலக நாடுகளெங்கும் இவ்வாறான அகதிகளைப் பாதுகாப்பதற்கு, அய்க்கிய நாடுகள் பேரவையின் அங்கமான 'அகதிகள் மறுவாழ்வு அமைப்பின்' விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தியப் பேரரசு ஐ.நா. பேரவையின் விதிகளுக்குக் கட்டுப்படாமல் தொடர்ந்து புறக்கணித்துவருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்திய மாநிலங்களில் குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து அகதிகளின் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திட ஐ.நா. பேரவையின் அகதிகள் மறுவாழ்வு விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

- ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் எதிரான வகையில், தொடர்ந்து சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோதக் காலித்தனத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தமிழீழச் சிக்கல்களில் தொடர்ச்சியாக வீம்புக்கு மூக்கை நுழைத்து, தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகச் செயல்படும் வல்லாதிக்கப் போக்கைக் கைவிட வேண்டும் எனவும் அமெரிக்க வல்லரசை இம்மாநாடு எச்சரிக்கிறது.

- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் எல்லைதாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து கடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய கடற்படை வேடிக்கை பார்க்கிறது. இந்தியக் கடல் எல்லைக்குள்ளாகவே வந்து நமது மீனவர்களைத் தாக்கி வரும் சிங்களக் கடற்படையினர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையையும் இந்தியக் கடற்படை எடுக்கவில்லை என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழக மீனவர்களைக் கொண்ட 'கடல் பாதுகாப்புப் படை' உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சியும், ஆயுதமும் வழங்குவதன் மூலமே சிங்களக் கடற்படைத் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என இம்மாநாடு கருதுவதோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்குமாறு மாநில- மத்திய அரசுகளை வற்புறுத்துகிறது.

- நோர்வே அரசின் சமரச முயற்சியோடு விடுதலைப் புலிகளும் சிங்கள அரசும் பேச்சு நடத்துவதற்கு முழுமையான ஆதரவை இந்திய அரசு தெரிவித்துள்ள அதேவேளையில் சிங்களக் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இந்தியப் படைத் தளபதிகள் அடிக்கடி இலங்கை சென்று சிங்களப் படை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி இராணுவ விமான தளத்தைப் புதுப்பித்துத் தருவது போன்ற நடவடிக்கைகள் சிங்கள அரசுக்குச் சார்பாக இந்திய அரசு செயல்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. நடுநிலை பிறழ்ந்து இந்திய அரசு செயல்படுவதற்கு இம்மாநாடு கடுங்கண்டனம் தெரிவிக்கிறது. உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் தொடக்கத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு தர்சினி, தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அக வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு நிமிட நேரம் மெளனம் கடைபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் வீரவணக்க முழக்கங்களை உணர்ச்சிமிக்க உரத்த குரலில் தொல். திருமாவளவன் எழுப்ப கூட்டத்தில் திரண்டியிருந்த பல்லாயிரக்கணக்கானோரும் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, பாவலர் அறிவுமதி, இயக்குநர்கள் வா.செ.குகநாதன் தங்கர்பச்சான், ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் இன முழக்க எழுச்சி இசை நிகழ்வு நடைபெற்றது.

ஈழத் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் முழக்கங்கள், அமெரிக்காவின் வல்லாதிக்க தலையீடு மற்றும் இந்திய அரசின் கபடத் தனங்களைத் தெரிவிக்கிற பதாகைகளை மாநாட்டில் பங்கேற்றோர் உயர்த்திப்பிடித்திருந்தனர்.
http://www.eelampage.com/?cn=24212
-புதினம்
Reply
#49
<img src='http://img51.imageshack.us/img51/2941/625ym.jpg' border='0' alt='user posted image'>
Reply
#50
மேலதிகபடங்களினை இங்கே பார்க்கவும்.
http://www.tamilnaatham.com/photos/20060214/TAMILNADU/
Reply
#51
நன்றியப்பு
.
Reply
#52
நன்றி
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
Reply
#53
<!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->மேலதிகபடங்களினை இங்கே பார்க்கவும்.http://www.tamilnaatham.com/photos/20060214/TAMILNADU/<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் வை.கோ விடம் நிறைய கற்று கொள்ள இருக்கு...


வைக்கோவின் பேச்சுக்கு என்று தனி கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கிறர்கள் மக்களை கவர கூடிய திறமை இருக்கிறது அவரிடம்
[b]
Reply
#54
தமிழ் நாதத்தில் வந்த செய்தி

http://www.tamilnaatham.com/articles/2006_...si/20060216.htm
,
,
Reply
#55
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


திருச்சி ஊடகவியலாளர்களிடம் இன்று கருணாநிதி கூறியதாவது:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு. அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர். எப்போதும் இது போன்ற பிரச்சினைக்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கும்.

புதினம்
,
,
Reply
#56
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக: மதுரை மாநாட்டில் தீர்மானம்
[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 10:49 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு மதுரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். களப் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார்.

இம்மாநாட்டில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மான விவரங்கள்:

- பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பது போல தமிழீழ விடுதலை போராட்டத்தையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.

- இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்றுள்ள விடுதலை புலிகளின் மீதான தடையை இந்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும்.

- சிங்கள அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இராணுவ உதவிகளை வழங்க கூடாது.

- ஈழத்தமிழர் அகதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.

- தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள இடதுசாரி இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் மனித உரிமை அமைப்புகளும் தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் தமிழர் இயக்க பொது செயலாளர் தியாகு, உலகத் தமிழர் பேரமைப்பு பொது செயலாளர் பரந்தாமன், பெரியார் திராவிடக் கழகப் பொது செயலாளர்கள் கோவை ராமகிருட்டிணன், விடுதலை ராஜேந்திரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.


-புதினம்
,
,
Reply
#57
[size=18]விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் தி.மு.கவில் இணைய மாட்டேன்: கருணாநிதியிடம் சு.ப.வீரபாண்டியன் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிற நிலைப்பாடு கொண்டிருப்பதால் தன்னால் தி.மு.க.வில் இணைய முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழக தேர்தலில் நடுநிலை வகிப்பது என்ற பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளரான சு.ப.வீரபாண்டியன் ஏற்கவில்லை. இதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் சு.ப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை அம்பத்தூரில் நேற்று புதன்கிழமை இரவு தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தென்னவன் கலைமன்றம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று சு.ப.வீரபாண்டியன் பேசியதாவது:

"பொடா" எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டோரில் ஜெயலலிதாவை எதிர்க்கிற ஒற்றைக் குரலாக நான் பேச வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்கான நான் பேச வந்திருக்கிறேன்.

ஜுனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. எனக்கு வாகன வசதிகளையும் பெரிய பதவி ஒன்றையும் தி.மு.க. தர உள்ளதாக சொல்லியிருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் தொண்டன் என்பதை விட- தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவன் என்பதை விட எனக்கு வேறு எந்த பெரிய பதவியும் தேவையில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கலைஞர் அவர்களைச் சந்தித்து அரை மணிநேரம் உரையாடினேன். அப்போது அருகில் இருந்தவர்கள் தி.மு.க.வில் சேருகிறீர்களா? என்று கேட்டனர்.

நான் பார்ப்பன எதிர்ப்பாளன்- தமிழீழ விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கிறவன். இந்த இரண்டு கொள்கைகளோடு உள்ள நான் தி.மு.க.வில் இணைய முடியாது. தி.மு.க.வுக்கும் அது முடியாதது என்று சொல்லிவிட்டேன்.

அதற்குப் பதிலளித்த கலைஞர், எங்கிருந்தாலும் என்ன.. நீ...இராம.சுப்பையாவின் மகன்...என் பிள்ளைதான் நீ என்று சொன்னார். இதைவிட பெரும் பதவி எனக்கு வேறு என்ன தேவை? என்றைக்கும் தந்தை பெரியாரின் தொண்டனாகவும் தலைவர் நெடுமாறனின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் நானும் சீமானும் அறிவுமதியும் இருப்போம். பதவிகளை எதிர்பார்த்து செயற்படுகிறவர்கள் அல்ல நாங்கள் என்றார் சுப.வீரபண்டியன்.


-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)