Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டொலருக்காக சமாதானம் பேசினால் அது பேராபத்திலேயே முடியும்
#1
டொலருக்காக சமாதானம் பேசினால் அது பேராபத்திலேயே முடியும் - ஐ.தே.க. எச்சரிக்கை


சமாதான நடவடிக்கைகளுக்கச் செல்லும் முன்னர் அது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர் மோகத்தில் சமாதானம் பற்றி பேச முனைந்தால் அது முடியாமல் போவதுடன், பேராபத்தையே உண்டாக்கும் என்றும் சமாதானப் பேச்சுகளுக்கு அர்ப்பணிப்புகளும், பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் மிக அவசியமானவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இது தொடர்பாக விளக்கமளித்தார். ஐ.தே.க. வினர் முன்னெடுத்த சமாதான நடவடிக்கைகளுக்கும், தற்போதைய அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளுக்கும் புள்ளியளவாவது வித்தியாசம் இருந்தால் காண்பிக்குமாறு அரசு தலைவர் மகிந்தவுகச்கும், ஜே.வி.பி.யின் விமல் வீரவன்சவுக்கும் நான் சவால் விடுகின்றேன் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச அன்று ஐரோப்பாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், தற்போது அங்கிருக்கும் ஜெனிவாவிலேயே பேச்சுகள் இடம்பெற இருக்கின்றன. அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையினையே அங்கு பேச்சுக்கு எடுத்துச்செல்கின்றனர்.

நோர்வேயின் விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் ஜெனிவா பேச்சுகளில் போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து மட்டுமே பேசப்படவுள்ளதாகவும் அதன் திருத்தம் ஏதும் பாரிய அளவில் செய்யப்படமுடியாது எனவும் கண்டிப்பாக கூறியிருக்கின்றார்.

அதேபோல, விடுதலைப்புலிகளின் உத்தியோக புூர்வ பத்திரிகையில் அவ்வமைப்பின் தலைவர் ஜெனிவா பேச்சகளில் உடன்படிக்கை குறித்து மட்டுமே பேச்சப்படவுள்ளது என்றும் அதைவிடுத்து அங்கு வேறெதுவும் அராயப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
அன்று போர்நிறுத்த உடன்படிக்கையினை யானை - புலி ஒப்பந்தம் எனக்கூறி கிளித்தெறியப் போவதாக கூச்சல் போட்டனர். அந்த நேரத்தில் அது இலங்கையிலேயே இருந்தது ஆனால் இன்று உலகம் முழுவதற்கும் திரிவதற்கு தற்போது அதை எடுத்துக்கொண்டு ஜெனிவாவுக்கு போகின்றனர்.

அதே போல சொல்ஹெய்மையும் வெள்ளைப்புலி என வர்ணித்து அவரது கொடும்பாவிகளை எரித்து விமல்வீரவன்சவும், சோமவன்சவும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்று டெய்லி நியுூஸ் பத்திரிகையில் மகிழ்ந்த ராஜபக்ஸவுடன் சொல்ஹெய்ம் கைலாகு கொடுக்கும் படமே முதற்பக்கத்திலேயே பெரிதாகப்போடப்படுகின்றது.

இது தவிர வேடிக்கையாக, ஜெனிவாவுக்கு பேச்சுகளுக்கு செல்பவர்களுக்கு ஆலோசனைச் செயலமர்வுகள், பேச்சுகளில் கலந்து கொள்வது எப்படி என்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தலைமையில் பேச்சுகளில் கலந்துகொள்ளச் செல்பவர்களக்கு சமாதானம் பற்றியோ, சமஸ்டி என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவும் தெரியாது. ஒற்றை ஆட்சிக்கும் ஐக்கிய இலங்கைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பது கூட அவர்களுக்கு புரியாது.

ஆனால் ஐ.தே.க. அன்று பேசும் போது அதன் தலைமைதாங்கிச்சென்ற பரந்த அறிவுடைய பேராசியர் பீரிஸை 'சமாதானக்கோமாளி" என இதே வித்தகர்கள் வர்ணித்தனர். தற்போது அதே பீரிஸை தமக்கு பயிற்சி வழங்க அழைத்துள்ளனர்.

எனினும் இது சந்தோசமான விடயம் தான்.

சமாதானப் பேச்சுகளுக்கு செல்வதற்கு முன்னர் அதைப்பற்றிய தங்களிடம் இல்லாத அறிவினை அதைப்பற்றி அறிந்தவர்களிடம் அதுபற்றி தமது அறிவினை வளர்த்துக்கொள்வது சிறந்த விடயம் தான்.

வெளிநாட்டு டொலருக்காக வெறுமனே சமாதானம் பேசமுடியாது. அதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும். வடக்கில் சமாதானத்திற்கு விருப்பம் என்றால் தெற்கில் அதற்கான பொது இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்துவது அவசியம்.

அதே நேரம் தற்போதைய அரசாங்கம் சமாதானத்திற்காக அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்கின்றது. நாம் அப்படி செல்லவில்லை. நாம் மேற்கொண்டது உள்நாட்டு சமாதானம். அரசாங்கம் தற்போது சமாதானத்தினை இறக்குமதி செய்கின்றது.

சமாதான நடவடிக்கைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினை அழைத்தால் நாம் அதற்கு ஆதரவு வழங்கத்தயார் எனவும் ராஜித சேனாரட்ண மேலும் தெரிவித்தார்

நிதர்சனம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)