02-09-2006, 12:21 PM
இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம்
க.மு. தருமராஜா
அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில் அவரை நினைவு கூருவதற்குரிய காரணங்கள் இது வரையில் பல நினைவுக் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழ்த் தேசிய இனத்தை பிரியவிடாமல் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் இயங்குவதற்காகவே செயல்பட்டவர்.
தமிழ்த் தேசிய இனத்திற்கு தீமைவரும் செயல்களை இந்நாட்டு அரசாங்கங்கள் கையாண்ட பொழுது தனது அறிவிற்கு எட்டியவைகளை தனது நாவன்மையால் தமிழ்த் தேசிய இனத்திற்காக செயல்பட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் "The Fall & Rise of the Tamil Nation" என்ற நூலில் எழுதியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
"அடையாள அட்டை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடந்த சமயம் என்னை ஒரு அரசியல் எதிரியாகக் கருதி என் மீது கடும் வெறுப்புக்காட்டுவதற்கான அனைத்துக் காரணங்களையும் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் எதிர்ச் செயலோடு வேறுபடுத்திக் காட்டாமலிருக்க என்னால் இயலவில்லை. சட்ட மூலத்தின் மூலம் உரையாற்று முன்னர் பாராளுமன்றக் புறக்கூடத்தில் என்னை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் கேட்டார் நீங்கள் இரட்டைக்குழல் என்ற பதத்தை பயன்படுத்தினீர்கள். ஒரு குழாய் சட்டத்திலுள்ள ஏற்பாடு என ஒத்துக்கொள்கிறேன். மற்றையது என்ன என்று தமிழர்களுக்கு தீங்கிழைக்கப்பயன்படுத்தக் கூடியதென நான் உணர்ந்த சட்ட ஏற்பாடுகளை அவருக்கு சுட்டிக்காட்டி விளக்கினேன். அவர் (ஜீ.ஜீ.) சபையில் பேசுகையில் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். எப்படியெனில் ஒழுங்கு விதிகளை இயற்றுவதில் அமைச்சருக்குள்ள அதிகாரங்களை குறித்த வார்த்தைப் பிரயோகத்தை அவர் சாடியதுடன், அடையாள அட்டைகள் வைத்திருப்போர் எவ்வகை பிரசா உரிமை கொண்டவர் என்பதை அவ் அட்டைகள் காட்ட மாட்டா என்று உறுதி மொழியை பிரதமரிடமிருந்து அவர் வரவழைத்துக் கொண்டார்.
அமரர் ஜீ.ஜீ. தனது நாவன்மையால் சமபலக் கோட்பாட்டுக் கொள்கையை சோல்பரிக் கமிஷன் முன் தமிழ்த் தேசிய இனத்திற்கு வரும் இன்னல்களை முன் உணர்ந்து சமர்ப்பித்து வாதாடினார். சோல்பரிக் கமிஷன் குழுவினர் சமபிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்காவிடிலும் ஜீ.ஜீ. யின் நாவன்மை வாதத்திறமையால் 29 ஆம் பிரிவு ஒன்றில் சில பாதுகாப்புகளை சிறுபான்மையினரின் நன்மை கருதி அரசியல் சாசனத்தில் உட்புகுத்த வேண்டுமென சிபார்சு செய்தனர்.
அச்சட்டம் அமரர் ஜீ.ஜீ. பாராளுமன்றத்தில் இல்லாத சமயமே நீக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் புகுத்தப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் சமபலக்கோட்பாட்டுக் கொள்கையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் அவர் இறுதியாகக் கோரியதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
"சபாநாயகர் அவர்களே, இறுதி வார்த்தையானது அரசியலமைப்புச் சீராக்கம் பற்றியல்ல, ஆனால், இலங்கையின் எதிர்கால அரசியல் அமைப்பு பற்றியதாகும். பாராளுமன்ற முறைமைகள் ஒவ்வொன்றும் அந்தந்த இடங்களில் நிலவும் சூழ்நிலைகளின் ஆளுகைக்குட்பட்டதாக விளங்க வேண்டும். சூழ் நிலைக்கொவ்வாத ஒரு விடயத்தை அறிமுகம் செய்வதில் பயனில்லை. பிரதிநிதித்துவ முறையில் மாற்றம் செய்து ஜனநாயகத்தை முறையாக இயங்கச் செய்வதில் உள்ளார்ந்த விதத்தில் தவறேதுமில்லை.
ஐக்கிய தேசமொன்றை விரும்புபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனநாயகம் பற்றி வாய் ஓயாமல் பேசுவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் பெருமைப்படத்தக்க விதத்திலே வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு முதுசொத்தை, ஒரு கலாசாரத்தை விட்டுச் செல்ல விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சிறுபான்மையினரின் நியாயபூர்வமான கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு ஐக்கியம் தேவை என்று விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈடிணையற்ற பாராளுமன்ற அதிகாரத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உலக வரலாறு முழுவதிலும் சுதந்திரத்தின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய இங்கிலாந்து தேசத்திடம், சிறிய தேசங்கள் மற்றும் சிறிய சமூகங்களின் நலன்களுக்காகப் போராடிய இங்கிலாந்து தேசத்திடம், வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய கவனத்துடன் கூடிய நியாயத்தை வழங்குங்கள்"
அமரர் ஜீ.ஜீ. சட்டமாமேதை என்று எவரும் மறுக்கமாட்டார்கள். சட்டத்துறையில் அவருடைய ஆற்றலைப்பற்றி, சில வழக்குகளைப்பற்றி முந்திய நினைவுக்கட்டுரைகளில் வெளிவந்தன. அவர் சட்டத்துறையிலே ஏழைகளுக்கும் நண்பர்களுக்கும் பல உதவிகள் செய்தவர் என்பதை அவருடன் நெருங்கி தொடர்புடையவர்கள் பலருக்குத் தெரியும். இன்றைய தினத்திலே ஓர் ஏழைக்கு உதவி செய்த வழக்கைப்பற்றி ஞாபகப்படுத்துவது சாலப்பொருத்தம் என்ற எண்ணுகிறேன்.
எழுபது வயது ஏழைக்கு உதவி
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கோட்டில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக ஜீ.ஜீ. ஆஜராகி கோட்டுக்குச் சென்றார். அச்சமயம் கோட் தொடங்கவில்லை. அவர் சக வழக்கறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் கம்பிச் சிறைக்கூட்டில் இருந்து "ஜீ.ஜீ. ஐயா என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அபயக்குரல் கேட்டது. உடனே ஜீ.ஜீ. திரும்பிக் கூட்டைக் கவனித்தார். தலை நரைத்த தள்ளாடும் வயோதிபரைக் கண்டதும் உடனே எழுந்து அவரிடம் சென்றார். வயோதிபருக்கு வயது 70 இருக்கும். இரு கையும் கூப்பியபடி கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு "நான் சாகப் போறன் ஐயா என்னைக்காப்பாற்றுங்கள்" என்று இரந்து வேண்டினார்.
இக்கோலத்தைக் கண்ட ஜீ.ஜீ. மனம் இழகிவிட்டார். "அப்பு இன்று உங்களைப் பிணை எடுக்கின்றேன். மறு தவணை உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கின்றேன்" என்று சொல்லி அவரை அமைதியாக இருக்கும்படி கேட்டார். வயோதிபர் அமைதியோடு உட்கார்ந்து விட்டார். கோட் தொடங்கியது. அவருடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுபட்டது. வெகு நேர வாதாட்டத்தின்பின் வழக்கு தவணை போடப்பட்டது. பின்னர் பெரியவருடைய வழக்கை பொலிஸ் அதிகாரியிடம் சுருக்கமாகக் கேட்டறிந்தார். வயோதிபரை பிணையில் செல்ல நடவடிக்கை எடுத்து தன்னுடைய வழக்கின் மறு தவணை தினத்தில் வயோதிபருடைய வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்து சென்று விட்டார். மறு தவணை கோட்டுக்கு வந்தவர் வயோதிபரிடம் வழக்கு விபரத்தைக் கேட்டறிந்தார்.
ஐயா எனக்கு வயது 70. எனக்கு எதுவித வருவாயும் இல்லை. எனது இயலாத்தன்மையினால் சாராயம் குடிப்பேன். அத்துடன் தினம் இரண்டு அல்லது மூன்று போத்தல் சாராயம் விற்பேன். இதனால் வரும் வருவாயைக் கொண்டு நானும் குடிப்பேன். அதனால் அதிகாரிகளுக்கும் கை லஞ்சம் கொடுப்பேன். கொடுக்க முடியாத சமயங்களில் இந்த அதிகாரிகளால் எனக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் என்னை கைது செய்து கொண்டு வந்து கிழமை ஒன்றாகி விட்டது. இன்னும் கூட்டில் இருக்கின்றேன். உங்களை என் பிள்ளையாக நினைத்து கெஞ்சுகின்றேன். என்னை இதில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று விபரத்தைச் சொல்லி இரந்து வேண்டினார்.
பெரியவர் பயப்படவேண்டாம். நான் சொல்லுகிறபடி நீர் சொல்லும் நான் உம்மைக் காப்பாற்றுவேன் சரிதானே. ஆம் ஐயா, கோட் தொடங்கியது. பெரியவரின் வழக்கு கூப்பிடப்பட்டது. பெரியவர் கூனிக் குறுகிய தோற்றத்தில் வந்து கூண்டில் ஏறி நின்றார். பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் வழக்கின் விபரம் கேட்டார். ஜீ.ஜீ. அவரின் பெயர், சேவைக்காலம், பிறந்த ஊர், கடமையாற்றிய இடங்கள், ஆங்கிலத்திலா? சிங்களத்திலா? விசாரணையை விரும்புகிறீர் என்று கேட்டார். சிங்களத்தில் சேர் என்றார் இன்ஸ்பெக்டர்.
சரி எத்தனை போத்தலோடு கைது செய்தீர். இரண்டரை போத்தலோடு சேர். பெரியவர் உங்களை எத்தனை போத்தலோடு கைது செய்தார். பத்தரை போத்தல் சேர். பத்தரை போத்தலா? ஆம் சேர்.இன்ஸ்பெக்டர் மீதி எட்டுப்போத்தலும் எங்கே என்று கேட்டதும், இன்ஸ்பெக்டர் பதில் சொல்ல முடியாத நிலையில் பதறிக் கொண்டே இல்லை சேர் இரண்டரை போத்தல் தான் என்றார். இது பொய். ஏழைகளை நீங்கள் இவ்விதம் தான் கைது செய்து கைலஞ்சம் வாங்குவதற்காக வருத்தி வதைத்து கஷ்டப்படுத்தி இப்படியான பொய் வழக்குகளை தொகுத்து நீதி ஸ்தலங்களையும் ஏமாற்றுகின்றீர். ஜீ.ஜீ.யின் சிங்கள பேச்சை கேட்டதுமே திகைப்பு உண்டாகி உண்மையைக் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சேர்! இன்ஸ்பெக்டர் பிடித்தது பத்தரைப் போத்தல் சாராயம். வழக்குப் போட்டு கோட்டுக்கு காட்டியது இரண்டரை போத்தல் சாராயம். அந்த வயோதிபர் ஒரு கிழமைக்கு மேலாக சிறைக் கூடத்திலும், கம்பிக் கூட்டிலும் காலத்தை போக்கி கஷ்டப்பட்டுள்ளார். எட்டு போத்தல் சாராயம் காட்டப்படவில்லை. வயோதிபரையும் ஏமாற்றி கஷ்டப்படுத்தி நீதி ஸ்தலத்தையும் ஏமாற்றி விட்டார்கள். எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இது போன்ற பொய் சோடனை வழக்குகள் ஏற்படாதவாறு நீதிபதி அவர்களின் முடிவான தீர்ப்பு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கின்றேன் என்றார்.
இதைக்கேட்டதும் நீதிபதி பொய் வழக்கு சோடித்தமையை இட்டு உமது தகுதியற்ற தன்மையை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கின்றேன். பெரியவர் அவர்களே சொற்ப நாளாவது நீங்கள் விளக்க மறியலில் இருந்து விட்டீர்கள். உங்களுடைய வயதை பொறுத்து மன்னிப்பு தருகின்றேன். இதன்பிறகு இப்படியான வழக்கினால் கோட்டிற்கு வராதபடி எச்சரிக்கை செய்து விடுதலை செய்கின்றேன். நீதிபதியின் வேண்டுகோளின் படி இன்ஸ்பெக்டருக்கு ஒரு வருட பதவி உயர்வு நிறுத்தப்படவேண்டும் என்று மேலிடத்திற்கு அறிவிப்பதாக கூறப்பட்டது. கூட்டால் இறங்கிய வயோதிபர் ஜீ.ஜீ.யின் கன்னங்களை இரு கையாலும் வருடி கை கூப்பி நன்றி கூறி விடை பெற்றார். என்ர ராசன் நீ நல்லாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.
இந்த நினைவுக் கட்டுரையில் அவர் இறக்கும் பொழுது எந்தச் சொத்தை தமிழ்த் தேசிய இனத்திற்கு விட்டுச் சென்றார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
அமரர் ஜீ.ஜீ. கல்விச்செல்வம், பொருட்செல்வம், இடம், பொருள், ஏவல் யாவற்றையும் தமது மைந்தன் மா மனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு விட்டுச் சென்றமையால் தான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய இனத்திற்கு சேவையாற்றி தன்னுயிரையே தியாகம் செய்தார். அது மட்டுமல்ல மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஆயுதம் ஏந்திய படைகளுக்கும் குழுக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக எவ்வித ஆயுதமுமின்றி ஜனநாயக ரீதியில் இரு ஆயுதங்களைப் பாவித்து போராடினார். ஒன்று அமரர் ஜீ.ஜீ. யின் மைந்தன், இரண்டாவது அமரர் ஜீ.ஜீ. முதன் முதலாக ஸ்தாபித்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்து.
மேலே சுருக்கமாகக் கூறியவற்றிலிருந்து அமரர் ஜீ.ஜீ.யின் நாமம் என்றும் அழியாது.
தினகுரலிலிருந்து பெறப்பட்டது

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: