Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்குவதா அல்லது தாயகம் மீண்டும் திரும்பி வாழுவதா என்பது தொடர்பாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதனை நீங்கள் உங்கள் நிலையில் இருந்து பார்த்தால் இப்படியான கருத்துக்கள் தான் வரும். இங்கு புலம்பெயர்ந்து வாழும் பலர் தாயகம் விடுதலை அடைந்ததும் மீண்டும் சென்று வாழ விரும்புகிறார்கள். தாயகத்தில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறீர்கள். அங்கு இவ்வளவு சம்பளம் எடுக்கமுடியாது என்று கூறுகிறீர்கள். ஏன் முடியாது. அதற்கு சில காலம் ஆகலாம் என்று மட்டுமே கூலாமே தவிர முடியாது என்று கூறவியலாது. இன்று உலகில் எந்தவொரு வளமும் இல்லாத சிங்கப்பூர் ஒரு முன்மாதிரியாக நிற்கும் போது, ஜப்பான் நிமிர்ந்து நிற்கும் போது ஏன் எம்மால் முடியாது. இன்று ஜேர்மனியில் இருந்து கணிசமான சம்பளம் பெறுகிறார்கள் என்றால் அதனை எப்படி அடைந்தார்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் கையில் பணம் இல்லாது மற்றைய நாட்டிடம் கடன் வாங்கித்தான் தமது நாட்டைக் கட்டிவளர்த்தார்கள். அதுவும் மிகவும் குறுகிய காலத்தில். வரலாறு இப்படி உதாரணங்களைக் காட்டி நிற்கும் போது ஏன் எம் தாயகத்தால் முடியாது.
இவை அனைத்து தமிழரிடமும் உள்ள கல்வியறிவினையும் கொண்டே அடையலாம். அவ்வறிவினை வழங்கப் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பல மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
போனவருடம் வடதமிழீழத்துக்கு சென்றிருந்தேன். தமிழீல எல்லையில் இருந்து எங்கட பிள்ளைகள் அன்பாக வரவழைத்தவிதம், பாண்டியன் சுவையுற்று உணவு, யாழ்ப்பாணத்துத்தமிழ்,கிணத்துத்தண்ணீர், நான் பிறந்த ஊர்மக்களுடன் கதைத்தது, நான் அடிக்கடி போகும் பிள்ளையார் கோவில் இவற்றை எல்லாவற்றினையும் நான் இழந்து ஒஸ்ரேலியாவில் எதேற்கெடுத்தாலும் ஆங்கிலம் பேசியும், வெள்ளைக்காரரின் உணவுகள் உண்டும், இனிப்பில்லாத தண்ணீரும் குடித்து வாழுகிறேன். ஒஸ்ரேலியா வெய்யிலும், லண்டன் குளிரிலையும் எப்பவாவது யாழ்ப்பாணத்தில் பார்த்திர்க்கிறோமா?. வைகாசி மாதத்தில் சிலவேளை யாழ்ப்பாணத்தில் வேக்கும்.மற்றும் படி யாழ்ப்பாணக்காலனிலையினை அசைக்கமுடியாது?.எனது ஊர்மக்களிடம் கதைத்தபோது, அவர்களின் பேச்சு வழக்கு இப்பவும் என் காதில் ஒலிக்கிறது. இந்த அருமையான பேச்சு வழக்கத்தினை இனி நான் எப்ப கேப்பது?. பிள்ளையார் கோவில் திருவிழாவின் போது 10 நாட்களும் மணலில் இருந்து கடலைக்கொட்டை சாப்பிட்டுக்கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு, பிரசங்கம் கேட்பது, இங்கை ஒஸ்ரெலியாவில் கேட்கமுடியுமா?. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு யாழ்ப்பாணத்தில் தான் கடைசிக்காலத்தில் வாழ விருப்பம்.ஆனால் ஆச்சி இங்கை சொகுசு வாழ்க்கைக்குப்பழகிவிட்டா.
ஆனால் ஒரே ஒரு நிம்மதி, ஆச்சியிட்டை சொல்லிட்டேன். நான் இறந்தால் எனது உடலினை எறித்து சாம்பலினை கிரிமலைக்கடலில் கரைக்கவேண்டும் என்று. அப்பவாவது எனது மண்ணில் வாழ்வேன் என்ற ஒரு நம்பிக்கை.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
சரி.......சரி..இப்ப என்னத்துக்கு அடிபடுகிறீயள் எல்லாரும் எங்கடை பிரச்சனையை சாட்டா வைச்சுக் கொண்டு வெளிநாட்டுக்கு போனீங்கள் இதில் பாதுகாப்பு படிப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இருந்திருக்கலாம் ஆனா இப்போ நீங்கள் அப்பிடியான வாழ்க்கைக்கு பழகி விட்டீங்கள் இனி ஒரு தீர்வு கிடைத்தாலும் உங்களால் எமது மண்ணில் வந்து வாழ முடியுமா எண்டது சந்தேகமே...........நீங்கள் ஓம் எண்டாலும் உங்களின் தமிங்கிலம் பேசும் பிள்ளைகள் ஒத்து வரமாட்டார்கள் என்பது யதார்த்தம் எத்தனையோ வீடுகளில் பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள் என்றவுடன் வீட்டிலில் அவர்களுக்கு என்று வெளிநாட்டுபாணியில் பாத்துறூம் கட்டியதைப் பாத்திருக்கிறேன் சும்மா ஊரைப் பாத்து சனத்துக்கு லெவல் காட்டியிட்டுப் போக வரலாம் ஆனால் முழு மனத்துடன் அங்கு வருவீர்கள் எண்டு சொல்வது வெறும் பம்மாபத்து...........இதுதான் உண்மை (அல்லாட்டி அந்த நாடுகள் கட்டாயமாக திருப்பி அனுப்பவேணும்)
நீங்கள் நினைக்கலாம் முகத்தான் மாத்திரம் என்ன திறமோ எண்டு நான் மட்டும்நான் இங்கு இருக்கிறேன் என்ரை மனுசி இப்பவும் ஈழத்தில்தான் வருடத்தில் கிடைக்கும் 1மாத லீவுதான் எமக்கு இனிய நாட்கள் ஊரில் இருக்கும் மனுசிக்கு கோல் எடுத்து கேட்டன் எப்பிடி சந்தோஷமாக இருக்கிறீங்களா? எண்டு அவள் சொல்லுறாள் கேட்டு வாசலுக்கை ஆமிக்காரன் நிக்கிறான் எப்பிடியப்பா சந்தோஷமாக இருக்கிறதெண்டு இதுதான் ஈழத்தில் இருப்பவர்களின் நிலை போராட்ட காலத்தில் தப்பிப் பிழைத்து பிறகு போய் வாழ நினைப்பது கூட ஒரு வகையில் சுயநலம்தான்..................(தவறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கந்தப்பு Wrote:இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.
கந்தப்பு சொல்லுறது போலவும் நடக்குது. அதேவேளை வெளிநாட்டுக்கு வந்த பல ஓய்வூதியக்காரர்கள் வெளிநாடுகளில் வாழப்பிடிக்காமல் ஊர் திரும்பிவிட்டார்கள்..! அங்கு அவைக்கு சுதந்திரம் அதிகம்..குளிருக்க மனிசர் படுறபாடு தேவையா என்றிட்டு போயிட்டினம்..! ஒருவருக்கு நிரந்தர வதிவிடம் கிடைத்தும் போடா என் சிறீலங்கன் பாஸ்போட் தா என்று கேட்டு வாங்கிப் போனவர்..!
எங்கள் நாட்டின் காலநிலை சொர்க்கம் போல என்கிறார்கள் அங்கு போய்வந்த வெள்ளையர்கள்..! அவர்கள் வாழ்க்கையை வாழப்பிறந்தவர்கள்.. நாமோ வசதி வாய்ப்புக்காக அடிமையாகவும் வாழக்கூடியவர்கள்..! எங்கே புகழிடத்தில் எத்தனை தமிழர்கள் அரச உயர்பதவிகளில் இருக்கினம்...சொல்லுங்கோ...கை விரல் விட்டு எண்ணலாம்..! எல்லாம் கூலிகள்..! ஆனால் காசுக்காக எங்களவர்கள் எதுவும் செய்வார்கள்..! வெள்ளையர்கள் எங்களை எருமைகள் போல மேய்ப்பார்கள்..! தன்மானமுள்ளவை இருக்க மாட்டினம்..! நமக்குத் தெரிந்த ஒருவர் மருத்துவராக கடமையாற்றியவர்..பல வருட அனுபவம் இருந்தும் உயர்பதவிகளுக்கு செல்ல முடியவில்லை.. அவர் இப்போது தாயகம் சென்று அங்கு பணிபுரிகிறார்..அப்படி கொஞ்சம் சூடுசுரணை உள்ள தமிழர்களும் இல்லாமல் இல்லை..! அவர்களால் தான் இலங்கை அன்று சுதந்திரமடைந்தது..நாளை தமிழீழம் கூட அப்படியானவர்களின் பக்களிப்பால் தான் மிளிரவும் போகிறது..! மிச்சம்..ஒட்டுண்ணிக் கூட்டம்..நாமும் தான்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
வணக்கம்!
இதில் தலைப்பு "தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்"!!!
பின்பு ஏன் தேவையற்ற விவாதங்களைத் தொடக்குகிறீர்கள்!! ஏதோ இப்படியெல்லாம் எழுதினால் இயக்கத்தைப் பற்றி கூடத் தெரியும் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்!! உங்களது அறியாமைகளால் எதிரி/துரோகிகளுக்கு தீனி போடுகிறீர்கள்!! உங்களை அறியாமலேயே பலவற்றைக் காட்டிக் கொடுக்க முற்படுகிறீர்கள்!!
தயவுசெய்து பலதரம் யோசித்து விட்டு கருத்தெழுதுங்கள்!! தலைப்பிற்குள் நில்லுங்கள்!!!
"
"
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன். இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.
எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது.
நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.[/quote]
ஊமை அவர்களே உங்கள் கவலை புரிகிறது
ஆனால் தாய் மண்ணை வெறுக்கிறதோ அதை வேண்டாம் என்று சொல்வது பெற்ற தாயை சொல்வதாக சொல்வார்கள்
சத்தியமாய் நான் சொல்லவில்லை நம் முன்னோர்கள் சொன்னது
>>>>******<<<<