Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகத்தார் வீடு
சின்னப்பு இது ரொம்ப ஜாஸ்தி; ஆமா............. சின்னனுகள் என்னை வைச்சிருக்கிற மதிப்பை குறைக்கிறதுக்கெண்டே வெளிக்கிட்டிருக்கிறாய்போல கிடக்கு.............பிறகு நான் உன்ரை விசயங்களையும் எடுத்து விடவேண்டி வரும் (ம்.. . .ம்.. .வீட்டிலை ரொம்பதான் ஓவராபோயிட்டமோ.............)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
sinnappu Wrote:<b>முகத்தார்: எடியே பொண்ணம்மா ஏனடியப்பா வேலைக்காறியின்ர சாறியை கட்டியிருக்கிறாய்</b>

<b>பொன்னம்மா : அதைக்கட்டினா தானே நீர் எனக்கு பின்னாலை வாறீர்</b>

முகத்தார் : :oops: :oops: :oops:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு - அங்கம் 17</b></span>


<i>(9 மணியாகியும் பொண்ணம்மாக்கா நித்திரையாலை எழும்பவில்லை தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வந்து எழுப்புகிறார் முகத்தார் )</i>

முகத்தார் : இஞ்சரும் எழும்புமன் தேத்தண்ணி ஆறப்போகுது

பொண்ணம்மா: (கண்ணை மூடியபடியே) இப்ப எத்தினை மணி வேளைக்கு என்னத்துக்கு எழுப்பிறீயள்

முகத்தார் : இல்லை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் படுமன்

பொண்ணம்மா: பெரிய கரைச்சலப்பா உங்களாலை (தலையணைக்கு கீழை கையை விட்டு ஒரு போட்டோவை எடுத்து கண்ணிலை ஒத்துகிறா)

முகத்தார் : (சிரித்துக் கொண்டு) என்னதான் சொன்னாலும் உனக்கடி என்னிலை அன்;புதான் அல்லது எழும்பினவுடனை என்ரைபோட்டோவை கும்பிடுவியோ?

பொண்ணம்மா: லூசாப்பா நீங்க பாருங்கோ இது என்ன போட்டோ எண்டு

முகத்தார் : அட இது எங்கடை நாய் லசி இதை ஏனப்பா கும்பிடுறீர்?

பொண்ணம்மா: உங்கடை அம்மா எப்பிடி செத்தவ இந்த நாய் கடிச்சு ஏற்பாக்கித்தானே என்னை பெரிய கஷ்டத்திலை இருந்து காப்பாத்திய தெய்வத்தை நான் கும்பிடக்கூடாதோ?

முகத்தார் : நல்லா இருக்கடியம்மா உன்ரை பக்தி;

பொண்ணம்மா: சும்மா காலேலையே தொடங்காமல் பேஸ்ட்டை எடுத்து வையுங்கோ

முகத்தார் : அந்தக் கஷ்டம் உமக்கு வேண்டாம் எண்டுதான் நானே பல்செட்டை பிறஸ் பண்ணி வைச்சிருக்கன் எடுத்து மாட்டும்

<i>(அந்த நேரம் படலையைத் திறந்து கொண்டு சின்னப்பு வாறது தெரிகிறது)</i>

பொண்ணம்மா: இஞ்சை கூட்டாளி வாறர் வெளிலை வைச்சு கதைச்சுப் போட்டு அனுப்பி விடுங்கோ

முகத்தார் : (சா. . .இவள் படுத்தமாதிரியே விட்டிருக்கலாம் ) வா சின்னப்பு என்ன காலேலை இஞ்சாலிப் பக்கம்

சின்னப்பு : ஒரு சிக்கல் அதுதான் உன்னட்டை கேட்டுப் பாப்பம் எண்டு வந்தனான்

முகத்தார் : சொல்லு பாப்பம் ஏலுமெண்டா செய்யிறன்

சின்னப்பு : இல்லை மனுசிக்கு கோல் எடுக்க வேணும் ஒரு 200ரூபா கைமாத்தா எடுக்கேலுமோ.

முகத்தார் : ம். . .ம் ..மனுசியைச் சாட்டி இண்டையான் பொழுதைப் போக்கப் போறாய் கொஞ்சம் இதிலை இரன் மனுசி கிணத்தடியிலை நிக்கிறா வந்தவுடனை கேட்டு வாங்கித்தாறன் அது சரி இப்ப என்னதுக்கு சின்னாச்சி கொழும்புக்கு போனவா?

சின்னப்பு : அதையேன் கேக்கிறாய் இவள் கனகத்தின்ரை பெடிச்சி வெளிநாட்டுக்கு போக வெளிக்கிட்டது இவ தனக்கு எல்லாம் தெரியும் கூட்டிக் கொண்டு போறன் எண்டு போட்டு போயிட்டா நான் இஞ்சை நாயாகிறன்

முகத்தார் : எந்த நாட்டுக்காம் பெடிச்சி போகுது

சின்னப்பு : இந்த குவைத்துக்கு ஹவுஸ்மேட் ஆகப் போகப்போகுதாம்

முகத்தார் : கிழிஞ்சுது சனத்தைத் திருத்தேலாது என்ன பெரிய ஹவுஸ்மேட். . . வீட்டுவேலைக்காரியா போற தெண்டு சொல்லுறதுதானே வீட்டிலை அதிலை கிடக்கிற கிண்ணத்தை எடுக்க மாட்டினம் வெளிநாட்டிலை போய் எல்லாம் வெட்டிப் புடுங்கப் போயினம்

சின்னப்பு : ஏன் முகத்தான் இப்பிடி சொல்லுறாய்?;

முகத்தார் : சின்னப்பு அங்கை போற பிள்ளையள் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகினம் எண்டு எனக்குத் தெரியும் ஏன்தான் இப்பிடி பணத்தாசையிலை போய் சீரழிஞ்சு போகுதுகள் எண்டு நினைக்கேக்கை கவலையாக் கிடக்கு

சின்னப்பு : கொஞ்சம் விளக்கமா சொல்லு பாப்பம்

முகத்தார் : இஞ்சை பார் இப்ப மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைஞ்ச சம்பளத்துக்கு ஆட்களை அனுப்பிறதெண்டால் எங்கடை ஆசியா நாடுகள்தான் (இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ்) அதிலும் இலங்கை தவிர மற்ற நாடுகள் ஹவுஸ்மேட்டுகளை அனுப்ப மாட்டாங்கள்; இந்தியா நேர்ஸ் மாதிரி நல்ல வேலைக்குத்தான் பெண்களை அனுப்புவாங்கள்;;

சின்னப்பு : பார் எங்களைவிட பிச்சைகார நாடான பங்களாதேஷ் கூட பெண்களுக்கு மதிப்பளிச்சு அனுப்புதில்லை ஆனா இலங்கை. . . அதுசரி முகத்தான் ஏன் இந்த பிள்ளையளுக்கு அப்பிடி என்ன கொடுமை செய்யிறாங்கள்?

முகத்தார் : இந்த அரபி நாட்டுக்காரங்கள் இவங்களை அடிமைகள் போலத்தான் நடத்துறாங்கள் கண்டியோ . . 18மணிநேர வேலை சரியான சாப்பாடு இல்லை வெறும் 10000 ரூபாதான் மாதச்சம்பளம் அதுவும் சில இடங்களிலை ஒழுங்கில்லை இதோடை பாலியல் தொல்லைகள் வேறை பாவமடா. . .

சின்னப்பு : அட இந்த கூத்து வேறை நடக்குதோ?

முகத்தார் : உவங்களுக்கு பெம்பிளை எடுக்கிறது கடையிலை சாமான் வாங்கிற மாதிரி கையிலை காசு இருந்தா பெண்ணின் அப்பாட்டை கொண்டு போய் குடுத்திட்டு கூட்டி வந்திடுவங்கள் அவங்கடை சமயத்திலையே இதுக்கு அனுமதியிருக்கிறதாலை பெண்சாதிமாருக்கு ஒண்டும் செய்யேலாது அப்ப இதைத்தடுக்கிறதெண்டால் புருஷனை வெளியிலை போக விடாமல் பாக்கவேண்டும் இதுக்காண்டி இந்த அரபிப் பெம்பிளையள் வீட்டுக்கு வரும் ஹவுஸ்மேட்டுகளை புருஷனோடை அயஸ்பண்ணி போகச் சொல்லுவளவையாம் இப்பிடி நிறையக் கதையள் இருக்கு.

சின்னப்பு : அப்பிடி மாட்டன் எண்டாத்தான் கொடுமையள் நடக்கும் போல என்ன

முகத்தார் : சில கதையளைக் கேட்டா அழுகைதான் வரும் இதெல்லாம் தெரிஞ்சு கொண்டு போற சனத்தை என்ன செய்யுறது

சின்னப்பு : இப்ப முகத்தான் எங்கடை தமிழ் பெம்பிளையள் பெரிசா உங்காலை போறேலைத்தானே

முகத்தார் : எங்கடை யாழ்ப்பாணத்துச்சனம் பெரிசா போறேலைதான் ஆனா கிழக்கு மாகாணத்து தமிழ் சனங்கள் அங்கையிருக்கிற முஸ்லீம் ஏஜென்சிகளை நம்பி பேரை மாத்தி போறது என்னவோ நடந்தபடிதான் இருக்கு

சின்னப்பு : இப்படியான பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கம் எதன் நடவடிக்கை எடுக்கேலாதோ?

முகத்தார் : அவை எப்பிடி எடுப்பினம் இந்த வெளிநாட்டு காசுகளை வைச்சுத்தானே அரசாங்கத்தை நடத்திக் கொண்டு போகினம் ஆனா சின்னப்பு உப்பிடியான வாழ்க்கையை விரும்பி போற சிங்களப் பெட்டையள் இல்லாமல் இல்லை

சின்னப்பு : என்னண்டு சொல்லுறாய்?

முகத்தார் : சவுதிலை நான் பாத்த ஒரு சில வீடுகளிலை இருக்கும் சிங்கள ஹவுஸ்மேட் பெட்டையள் வீட்டு எஜமானிகள் மாதிரி நடக்கினம் எண்டால் என்ன அர்த்தம் வீட்டிலை இருக்கிற தகப்பன் மகன் கார் டிரைவர் எல்லாரையும் கையுக்கை வைச்சிருக்கிறா எண்டுதானே

சின்னப்பு : நாசமாப் போச்சு பிறகேன் இவளவை நாட்டுப்பக்கம் வரப் போறலாவை

முகத்தார் : என்னதான் சிங்களப் பெட்டையள் எண்டாலும் நாங்கள் ஒரு பெண்னினமெண்டு பாக்க வேண்டாமோ

சின்னப்பு : எல்லாம் இந்த பகட்டுவாழ்க்கைக்;கு ஆசைப்பட்டுத்தான் முகத்தான் தெரியாம கேக்கிறன் இப்பிடி சிலவேளை சீரழிஞ்சு போய் வாற பிள்ளைகளின்ரை நிலை என்ன?

முகத்தார் : வீட்டிலை தெரியாத மட்டும் பிரச்சனையில்லை வீட்டுக்கோ அல்லது புருஷனுக்கோ தெரிய வரேக்கை வீட்டாலை கலைக்கப்படுகினம்; இப்பிடி போற சனம் வயித்துப்பாட்டுக்காக விபச்சார தொழிலில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது மருதானை லொஜ்சுகள் சிலதிலை இருக்கிற விலைமாதர் அனேகரின் பிண்ணனி வெளிநாட்டு வாழ்க்கையாம் இது எனக்கெப்பிடித் தெரியும் எண்டு கேக்காதை கேள்விப்பட்டதைச் சொல்லறன்;

சின்னப்பு : சா. . இவன் சின்னாச்சிக்கு தேவையில்லாத வேலை அந்தபிள்ளையை இஞ்சை கூலிவேலை செய்ய விட்டாலும் பரவாயில்லை. . . பொறு கோல் எடுத்து கிழிக்கிறன் பார். . .

பொண்ணம்மா : என்ன காலேலையே குந்திட்டியள் சின்னப்புக்குத்தான் வேலையில்லை எண்டா உங்களுக்குமோ?

முகத்தார் : உம்மைப் பாக்கத்தான்; இருக்கிறார் ஒரு 200 ரூபா காசிருந்தா குடும் மனுசிக்கு கோல் எடுக்கவேணுமாம்

பொண்ணம்மா : என்ன சின்னப்பு உண்மையோ. . . பிறகு மனுசி வர கேப்பன்

சின்னப்பு

(அண்மையில் கிழக்கு மாகாண தமிழ் 1வுஸ் மேட்டின் கதை ஒண்றை கேட்க முடிந்தது குடும்ப வறுமை சூழ்நிலை வெளிநாடு வரத் தூண்டியது வேலைக்கு அமர்ந்த வீட்டில் கிடைத்த பல இன்னல்களை பொறுத்து பார்த்து முடியாத கட்டத்தில் அந்த வீட்டிலிருந்து தப்பித்து இலங்கைத் தூதரகத்தில் போய் தஞ்சமடைந்திருக்கிறார் நாட்டுக்கு போனதும் குடும்பத்தினர் அவரை ஏற்பார்களா .விலக்கி வைப்பார்களா என்பது கேள்விகுறிதான் அவரின் முழுக்கதையும் எழுத முடியாது நீங்க படித்தனீங்கள் எப்பிடியான கஷ்டம் அந்த பெண்ணுக்கு கிடைத்திருக்கும் என ஊகித்திருப்பீர்கள் வெளிநாடு மோகத்தில் அரபி நாட்டுக்கு மட்டும் பெண்களை வேலைக்கு அனுப்பிப் போடாதைங்கோ. . . .)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
பார்த்த உண்மையைப் பதிவாக்கி இருக்கின்றீர்கள் போல, உண்மை தான் முகத்தார். வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பலர் அரைவாசியிலே திரும்பி வருவதற்கு இந்த ஏஜன்சிகளும் காரணம். ஆனால் இலங்கைச் சட்டம் அவர்களைக் கண்டிக்காதே!

ஏனென்றால் அதை நடத்துபவன் தமிழனில்லையே!
[size=14] ' '
Reply
தெரியாத ஊர் தெரியாத பாசை என்ன கொடுமையாய் இருக்கும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நல்ல இருக்கு வாழ்த்துக்கள் மு.தார்
Reply
Quote:முகத்தார் : இந்த அரபி நாட்டுக்காரங்கள் இவங்களை அடிமைகள் போலத்தான் நடத்துறாங்கள் கண்டியோ . . 18மணிநேர வேலை சரியான சாப்பாடு இல்லை வெறும் 10000 ரூபாதான் மாதச்சம்பளம் அதுவும் சில இடங்களிலை ஒழுங்கில்லை இதோடை பாலியல் தொல்லைகள் வேறை பாவமடா. . .
மத்திய கிழக்கில் இருந்து திரும்பிய பல பெண்களின் கண்ணீர் கதைகள் இவ்வாறே இருக்கின்றன. முதலில் ஒப்பந்தம் செய்யும் போது தங்குமிடம், உணவு, போக்குவரத்து என்பவை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறுவார்கள். பின் பணிப்பெண்களிற்கான சம்பளமும் ஒழுங்காக வழங்காமல் பல வேலைச் சுமைகளையும் வழங்கி உணவு கூட வழங்காமல் அவர்களை வைத்திருந்து திருப்பி அனுப்புகிறார்கள்.

Quote:முகத்தார் : எங்கடை யாழ்ப்பாணத்துச்சனம் பெரிசா போறேலைதான் ஆனா கிழக்கு மாகாணத்து தமிழ் சனங்கள் அங்கையிருக்கிற முஸ்லீம் ஏஜென்சிகளை நம்பி பேரை மாத்தி போறது என்னவோ நடந்தபடிதான் இருக்கு

யாழ்ப்பாண மக்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு போகாததற்கு பல காரணங்கள். ஆரம்ப காலங்களில் யாழ்சமூகம் கல்வியுடன் தன்னை இணைத்திருந்தது. இதற்காக மற்றைய மாவட்ட மக்கள் கல்வியறிவு பெறவில்லை என்பதல்ல. ஒரு காலப்பகுதியில் முழு இலங்கைத்தீவிலும் யாழ்மாவட்டம் கல்வியில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தது. அதன் பின் இன்று புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் இருக்கும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் யாழ்பாணத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களிற்கு தம் பொருளாதாரத்தினை வளப்படுத்த மேற்குலகில் யாராவது ஒரு உறவு இருக்கிறார். ஆனால் கிழக்கு மாகாண மக்களையோ அல்லது மலையக மக்களையோ எடுத்துப் பார்ப்போமானால் இம்மக்களிற்கு யாழ்மக்களைப் போல் மேற்கு நாடுகளை அடைவதற்கு பொருளாதாரம் இடம்கொடுப்பதில்லை. இருந்தபோதிலும் அனைவரிற்கும் இருப்பது போன்ற தம் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஆவல் அவர்களிற்கும் இருக்கிறது. இதனை மிக இலகுவாக வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி இயங்கும் நிறுவனங்கள் தமக்கு சாதகமாக மாற்றி விளம்பரங்களின் மூலம் இவர்களைக் கவர்கிறார்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களின் கவர்ச்சியில் இவர்கள் மயங்குவது ஒன்றும் வியப்பில்லை. காரணம் மிக குறைந்த செலவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதுவே அப்போது அவர்களிற்கு தெரிகிறது.

Quote:சின்னப்பு : எல்லாம் இந்த பகட்டுவாழ்க்கைக்;கு ஆசைப்பட்டுத்தான் முகத்தான் தெரியாம கேக்கிறன் இப்பிடி சிலவேளை சீரழிஞ்சு போய் வாற பிள்ளைகளின்ரை நிலை என்ன?
சீரழிஞ்சு போய் வரும் பிள்ளைகளின் நிலமை என்பது மிகவும் இக்கட்டான நிலமை. வீட்டாரிடமும் சொல்ல முடியாது மனவேதனை. சொன்னால் தம்மை வீட்டாரும் இச்சமூகம் ஏற்குமா என்னும் அச்சம். இதற்குப் பயந்து தமக்கு நடந்தவற்றை வெளிச்சம்போட பலர் முன்வருவதில்லை. தம் மனத்தினுள்ளே தம் சுமைகளை சுமந்து வாழ்வில் ஒருவித பற்றின்றி வாழ்கிறார்கள்.

அடுத்த ஒரு விடயம் எல்லோரும் இந்த பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போவதில்லை. இவ்வாறு மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாகச் செல்லும் பல பெண்களின் குடும்பங்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது. அவர்களில் பலரிற்கு வீட்டில் எமது சமூக்கட்டமைப்பில் குடும்ப வருவாய்க்கு மூலகாரணமாக இருக்கும் ஆண் இருக்கமாட்டார். அல்லது அப்படி இருப்பவர்களும் தொழில் செய்யாதவர்களாக சோம்பேறிகளாக வீட்டிலே இருப்பவர்களாக இருக்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் பெண்கள் தம் குடும்பத்தைக் காப்பாற்ற தாம் உழைக்க புறப்படுகிறார்கள். இப்பெண்களிற்கு தம் தாய் நாட்டில் 10,000 உரூபாவிற்கு வேலைபெறுவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. ஆதலால் அவர்கள் விளம்பரங்களில் காணப்படும் பெரும் சம்பளம், இலவச தங்குமிடம், இலவச போக்குவரத்து என்பவற்றை பார்த்து அதனைத் தம் தெரிவாகக் கொள்கிறார்கள்.

Quote:முகத்தார் : வீட்டிலை தெரியாத மட்டும் பிரச்சனையில்லை வீட்டுக்கோ அல்லது புருஷனுக்கோ தெரிய வரேக்கை வீட்டாலை கலைக்கப்படுகினம்; இப்பிடி போற சனம் வயித்துப்பாட்டுக்காக விபச்சார தொழிலில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது மருதானை லொஜ்சுகள் சிலதிலை இருக்கிற விலைமாதர் அனேகரின் பிண்ணனி வெளிநாட்டு வாழ்க்கையாம் இது எனக்கெப்பிடித் தெரியும் எண்டு கேக்காதை கேள்விப்பட்டதைச் சொல்லறன்

இது மத்திய கிழக்கிற்கு போகும் பெண்களிற்கு மட்டுமில்லை, அவ்வாறு போக எண்ணி முகவர்களிடம் தம் பணத்தைப் பறிகொடுத்த பெண்களிற்கும் பொருந்தும். சிறுகச் சிறுக சேமித்த பணம், இது போனால் கூட பரவாயில்லை. கடன்வாங்கி கொடுத்த பணம். அதற்காக கொடுக்கவேண்டிய வட்டி. மீண்டும் ஊர் போக முடியாமை. இப்படி பல காரணங்கள் இப்பெண்களை இங்கு கொண்டுவந்து விடுகிறது. அதனைவிட தொழில்முகவர்களாக தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் அப்பெண்களை இங்கு அழைத்துவந்து வெருட்டி பயம்காட்டி அவர்களை அடைத்து வைத்து இத்தொழிலில் ஈடுபடுத்தி அதன் மூலம் தாம் பணம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு பாதாள உலகக்குழுக்களினதும், இலங்கைக் காவற்றுறையினதும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. இப்படியான நிலையை ஒருபெண் அதிலிருந்து தப்பி துணிந்து வெளியே கூறினாலும் அவளை அழித்து விடுவதற்கு பலர் வெளியே இருக்கிறார்கள்.
<b>
...</b>
Reply
முகம்ஸ் நல்ல விசயம் பேசியிருக்கிறியள். கொழும்பில் இப்படி வீட்டு வேலைக்கு சென்று கஸ்டப்பட்ட ஒரு சிங்கள பெண்மணியோடு கதைக்கும் போது கன கஸ்டங்களைப்பகிர்ந்தார். பரிதாபமாய் இருந்தது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
வெளிநாட்டு பண வருவாய்க்காகவும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்க பெண்களை வீட்டுப்பணிப் பெண்களாக அனுப்பி வைக்கிறார்கள்..! அதனால் இலங்கையில் பல சமூகச் சீரழிவுகள் உள்ளடங்களாக போறவர்களும் போற இடங்களில் சீரழிக்கப்படுகின்றனர்..!

தமிழர்கள் அகதிகளாக மேற்குலகம் நோக்கி படையெடுத்ததனால்... தமிழ் பெண்கள் மேற்குலகிற்கு தாலிகட்டி வீட்டுக்கு வேலைக்காரிகளாக இறக்கப்படுகின்றனர்..! அப்புறம் அவையே வேலைக்கும் போயும் உழைக்கிறார்கள்..! சிலர் அரச பணத்தில் வாழ்கின்றனர். அதனால் தமிழர்களில் பொருளாதார அகதி நிலை மறைக்கப்படுகிறது..! உண்மையில் போர் தந்த நன்மைளில் இதுவும் ஒன்று..! அதை தமிழர்களில் பலரும் அனுபவிப்பதால் இப்படியான பிரச்சனைகள் பெரிதாக எழவில்லை..! ஆனால் சிங்களவர்களும் முஸ்லீம்களும் பெருமளவில் வீட்டுப்பணிப் பெண்களாகச் சென்று பாதிக்கப்பட்டுள்ளனர்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ம்ம் முகம் உண்மையான விடயத்தை எழுதி இருக்கிறியள் நானும் இப்படி பிரச்சினைகளை கேள்விப்பட்டன்.
<b> .. .. !!</b>
Reply
<b>உண்மைச் சம்பவம்</b>

சவுதியில் . . . .(இடத்தை சொல்லவில்லை) என்ற பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண்களின் விபச்சாரம் செய்யும் இடமொண்டு இருக்கிறது இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ள ஒரு நாட்டில் இது எப்பிடி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம் இலங்கையில் இருந்த சில காமெண்ட்(தையல் நிலையம்) நிலையத்துக்கு என கூட்டிவரப்பட்டவர்கள் ஒரு இடத்தில் தையல் தொழிலை சட்டரீதியாக செய்து கொண்டு மறைமுகமாக அங்கு விபச்சார தொழிலையும் செய்கிறார்கள் காமெண்ட் தொழில் எண்டு கூட்டி வந்து இப்படியான தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதால் அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான் அப்படி எதிர்ப்பு தெரிவித்தாப் போல திருப்பி அனுப்பிவிடவா போகிறான் கொடுமைதான் கூடும் ஆனால் வரும் கஸ்டமரில் அரைவாசிக்காசு நடத்திறவருக்கும் மிகுதி அரைவாசி தொழில் செய்யும் பெண்ணுக்கும் கிடைக்கிறது குறுகிய காலத்தில் உழைத்து விட்டு போய் விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இதுக்கு சம்மதிக்கிறார்கள் போல கிடக்கு . . . .அப்பிடியான இடத்தில் எங்கள் இன தமிழ் பெண்கள் இருவர் இருக்கிறார் என அறிந்த போது எனக்கும் லேசாக நெஞ்சு வலித்தது வாழ்க்கையில் வறுமை சரியான வழிநடத்தல் இல்லாமை ஒரு பெண் வேலைதேடி தனிய வெளிநாடு போகும் போது எப்படி அவளின் எதிர் காலத்தை மாற்றியமைக்கிறது பாருங்கள். . . .இந்த சம்பவத்தை கருத்தில் வைத்துத்தான் முகத்தார் வீட்டை எழுதினேன் தயவு செய்து உங்களுக்கு தெரிந்த தமிழ் பெண்கள் யாராவது உழைக்கவென அரபு நாடுகளுக்கு வெளிக்கிட்டால் அவர்களை தடுத்து நிறுத்தப் பாருங்கள்

<i>(இப்பெண்களின் ஆதங்கத்தைப் பாருங்கோ எங்களிடம் கஸ்டமரா வரும் ஆண்களில் இலங்கையர் வந்தா எங்களுக்கு விருப்பமேயில்லை சும்மா பேரம் பேசிட்டு நிப்பாங்க பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டாக்கள் வநதால் கேட்டதுக்கு மேலாக குடுத்திட்டு போவாங்கள் . . .என்ன உலகமடா சாமி. . . . . .)</i>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
MUGATHTHAR Wrote:<i>(<b>இப்பெண்களின் ஆதங்கத்தைப் பாருங்கோ எங்களிடம் கஸ்டமரா வரும் ஆண்களில் இலங்கையர் வந்தா எங்களுக்கு விருப்பமேயில்லை சும்மா பேரம் பேசிட்டு நிப்பாங்க பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டாக்கள் வநதால் கேட்டதுக்கு மேலாக குடுத்திட்டு போவாங்கள் . . .என்ன உலகமடா சாமி. . . . . </b>.)</i>

பெண்கள் விபச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள் சழுகச்சீரழிவு பற்றி பேசுகிறோம் அதில் இவ்வாண்களையும் வெளிச்சம் போட மறந்திட்டீங்களே. சரிசரி இப்பிடியாவது தெரிவிச்சீங்களே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
முகத்தார் அங்கிள் வாசிக்கும் போது கஸ்டமாக இருந்தது

மத்திய கிழக்குக்கு வேலைக்கு போற பெண்கள் இதெல்லாம் தெரிஞ்சு போறேல்லைதானே இங்க நீங்க எழுதினதை இலங்கையில வாற பத்திரிகைகளில போட்டா இனியாவது இப்படி பெண்கள் போய் ஏமாறாமல் இருப்பினம் தானே

சிங்களப் பெண்ணோ முஸ்லீம் பெண்ணோ யாராயிருப்பினும் வீட்டு கஸ்டத்துக்காக உழைக்கப் போய் இப்படி மாட்டுப்படுவது எவ்வளவு பாவம்
. .
.
Reply
Niththila Wrote:முகத்தார் அங்கிள் வாசிக்கும் போது கஸ்டமாக இருந்தது

மத்திய கிழக்குக்கு வேலைக்கு போற பெண்கள் இதெல்லாம் தெரிஞ்சு போறேல்லைதானே இங்க நீங்க எழுதினதை இலங்கையில வாற பத்திரிகைகளில போட்டா இனியாவது இப்படி பெண்கள் போய் ஏமாறாமல் இருப்பினம் தானே

சிங்களப் பெண்ணோ முஸ்லீம் பெண்ணோ யாராயிருப்பினும் வீட்டு கஸ்டத்துக்காக உழைக்கப் போய் இப்படி மாட்டுப்படுவது எவ்வளவு பாவம்

இப்படி நிறையவே போடுறாங்க.. பேப்பரில...இருந்தும் போறாங்க...குடும்பச் சூழல்...நாட்டின் பொருளாதாரக் காரணிகள் என்று பல அவர்களை இப்படி போகத் தூண்டுது..ஆசை அதுவே அவங்களை மோசமாக்கிறது. மேற்கு நாடுகளில் ஜீவியத்துக்கு அரசு காசு கொடுத்தும் பெண்கள் தாங்களாகவும் சீரழியினம்.அங்கோ அரசுகளின் பஞ்சத்தால் பெண்கள் சீரழிகிறார்கள்..! ஏன் ஆண்கள் கூட திட்டமுட்ட முறையில் விபத்துக்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஏன் எமது நாட்டிலிருந்து போகிறவர்களுக்கு மட்டும் இந்த நிலமை?
ஒரு சமயம் தாயகம் போகும்போது டோகா விமான நிலையத்தில் பல பெண்கள் அழுதபடி நின்றார்கள். காரணம் கேட்ட போது அவர்கள் டோகாவிற்கு வந்து 3 கிழமைகள் தான் ஆனால் ஏதோ விசா பிரச்சனையால் அவர்கள் திரும்பி போக சொல்லிவிட்டார்களாம். ஆகவே அவர்களுக்கு கொழும்பு விமான நிலையத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு போக கூட காசு இல்லை என்று சொல்லி அழும்போது நமக்கே கண்ணீர் வந்தது. எத்தனையோ கனவுகளுடன் கடன் வாங்கி காசு கட்டி அங்கு போய் 3 கிழமைக்குள் ஒன்றும் இல்லமால் திருப்பி போவது என்றால் எவ்வளவு வேதனைக்குரிய விடயம்?
மனத உரிமைகள் மனத நேயம் என வாய் நோக கத்தும் மக்கள் நலன்புரி சங்கங்கள் மாதர் சங்கங்கள் இதற்கு ஓரு நடவடிக்கையும் எடுக்கமாட்டதா? Cry

நன்றி அங்கிள். மீண்டும் ஓரு உண்மை சம்பவத்தை உங்கள் பாணியில் தந்து இருக்கிறீர்கள்.

Reply
மு.அங்கிள்..நீங்கள் சொன்ன உண்மை சம்பவம் உண்மையாகவே..மனசுக்கு கஷ்டமாக இருக்கின்றது..நாமெல்லாம் இப்படியான கஷ்டங்களை அனுபவிக்கவில்லை..அதனால் அறியவும் வாய்ப்பிருக்கவில்லை..ஆனால் வேறு நாட்டோ இல்லை நம்ம நாட்டு பெண்களோ இப்படி கஷ்டப்படுகிறார்கள் என அறியும் போது....ரொம்பவே கஷ்டம்..பாவம் அவர்கள்.. Cry Cry Cry

அத்தோடு உங்கள் கதையில் உண்மை சம்பவத்தை சொல்லிய விதம்..நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்..தொடருங்கள்
..
....
..!
Reply
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு - 18</b></span>

<i><b>புது மாப்பிளைக்கு பப் . .பப் . பப்ரி</b></i>

<b>சின்னப்பு எவ்வளவு பகிடி விட்டாலும் சண்டைக்கு வரமாட்டார் எண்ட நம்பிக்கையில்தான் </b>

<i>(முகத்தார் வீட்டில் பே;பர் பாத்துத்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் சின்னப்பு மிகுந்த சோர்வுடன் அங்கு வருகிறார்)</i>

முகத்தார் : அட . . சின்னப்பு என்ன காணக்கிடைக்குதில்லை உடம்புக்கு எதைவது வருத்தங்களோ ? ? ஆளும் சரியா வாடின மாதிரிக் கிடக்கு

சின்னப்பு : சா . . அப்பிடியொண்டுமில்லையடா . . மனுசிக்காரி கொழும்புக்குப் போய் 10 மாதமாகுது என்னைப் பற்றியொரு சிந்தனையிருக்கோ பார் நானும் எத்தனை நாளுக்குத்தான் அங்கை இங்கை எண்டு திண்டு திரியிறது .

முகத்தார் : உன்ரை பிரச்சனை எனக்கு விளங்குது சின்னாச்சிக்கு விளங்கலையே என்ன செய்வம் நானும் உன்னை நெடுக கூப்பிட்டு எப்பிடி சாப்பாடு தாறது மனுசிக்காரி நான் சாப்பிடேக்கையே முறைச்சுப் பாக்கிறாள்

சின்னப்பு : எனக்கும் ஒருதரிடமும் கடமைப்பட விருப்பமில்லை முகத்தான் சின்னாச்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணுமெண்டு நினைச்சுக் கொண்டுதான் உன்னட்டை வந்தனான் பொண்ணம்மா எங்கை வீட்டிலையோ? ? ?

முகத்தார் : அவள் அடி வளவுக்கைத்தான் நிக்கிறாள் நீ சொல்ல வந்ததைச் சொல்லு பாப்பம்

சின்னப்பு : முகத்தான் எனக்கு அவசரமா ஒரு பெம்பிளை தேவை கலியாணத்துக்கு வந்த எதாவது குறிப்புகள் இருந்தா பார் பாப்பம்

முகத்தார் : சின்னப்பு நான் கலியாண புரோக்கர் என்ரை பேரை மாத்திப் போடாதை .

சின்னப்பு : இப்ப நான் என்ன சும்மா வைச்சுக்கவே கேக்கிறன் சட்டப்படி கலியாண கட்டத்தானே

முகத்தார் : சின்னப்பு உனக்கென்ன தலைகிலை எதாவது கழண்டு போச்சே . .இந்த வயசிலை போய் கலியாணம் எண்டு கொண்டு ஊருக்கை எவ்வளவு வெட்கம் அதோடை சின்னாச்சி வேறை உயிரோடை இருக்குது . .

சின்னப்பு : எனக்கு ஒருதரைப் பற்றியும் கவலையில்லை ஒரு நேர சோறு தராத சனங்கள் வேலைகாரி ஒண்டை வீட்டிலை வைச்சிருந்தாலும் வீண் கதைதான் கதைக்குங்கள் அதிலும் பார்க்க சட்டப்படி கட்டி கூட்டி வந்தால் பிரச்சனையில்லை தானே . . என்ன உனக்கு கொமிசன் கிடைக்காது எண்டு பயப்பிடுகிறியோ. . அதுவும்தாறன்

முகத்தார் : என்ரை கதையை விடு இந்த விசயம் நம்மடை மனுசிக்குத் தெரிஞ்சால் எனக்கும் திண்ணேலைதான் வாழ்வு நல்லா யோசிச்சு முடிவெடு சின்னப்பு . .

சின்னப்பு : இஞ்சை பார் காசு எவ்வளவு குடுக்கிறத்துக்கும் நான் ரெடி வீட்டிலை புருஷன்மாரை தனிய விட்டுட்டு ஆடப் போற பொம்பிளையளுக்கு என்ரை முடீவு படிப்பனையாக இருக்கவேணும் கண்டியோ . .நீயும் கையை விட்டுட்டால் இப்பிடியே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் வேறை வழியில்லை . .

முகத்தார் சரி இஞ்சையில்லை . . . . .லை ஒரு பகுதியிருக்கு கூட்டிப்போறன் ஆனா நான்தான் ஒழுங்கு செய்ததெண்டு வெளியிலை மூச்சுக் கூட விடப்பிடாது சரியோ ? ? ?

சின்னப்பு : வாயே திறக்கமாட்டன் எப்ப . . எப்ப . . போறது ? ?

முகத்தார் : பாத்தியோ நீ வயித்துப் பசிலை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை எதுக்கும் அந்த பகுதியோடை ஒருக்கா கதைச்சுப் போட்டு உன்னைக் கூட்டிட்டுப் போறன் அப்ப இண்டைக்கு இஞ்சை சாப்பிட்டுப் போவன்

சின்னப்பு : முகத்தான் எனக்கு இப்ப பசியில்லை வாறன் போட்டு . . .

முகத்தார் : (இந்த சின்னப்புவை புரிஞ்சு கொள்ள முடியலையே இந்த வயசிலை போய் கலியாணம் . . கடவுளே இது எங்கை கொண்டு போய் முடியுமோ ? ? )

<i>(ஒரு நல்லநாள் மம்மல் பொழுது சின்னப்புவைக் கூட்டிக் கொண்டு பெண் பாக்கிறத்துக்கு வந்தார் முகத்தார்)</i>

வீ .காரர் : வாங்க . . வாங்க . . இருட்டுக்கை வாறீயள் அது சரி மாப்பிளையை ஏன் கூட்டி வரேலை ? ?

முகத்தார் : ஜயா இவர்தான் மாப்பிளை உங்களுக்கு முன்னமே சொன்னான் தானே

வீ .காரர் : இல்லை நீங்க கொஞ்சம் வயசு எண்டு சொன்னீங்கள் நான் இந்தளவு வயசா இருக்கும் எண்டு நினைக்கலை . .

முகத்தார் : சரி ஜயா சுனங்கேலாது பெண்ணை கூப்பிடுங்கோ பாத்திட்டு போயிறம்

வீ .காரர் : அம்மா . .அன்னம் இஞ்சை புரோக்கர் முகத்தார் வந்திருகாக. . .மற்றும் அவர் . .

முகத்தார் : வோய் என்ன இது நாங்களும் வடிவேலின்ரை படம் பாத்திருக்கிறம் சும்மா ஆளைக் கூப்பிடுங்க

சின்னப்பு : (ரகசியமாக) முகத்தான் சின்ன பெண்ணு எண்டு சொன்னாய் பாத்தா தலை எல்லாம் நரைச்ச மாதிரி தெரியுது

வீ .காரர் : என்ன . .பெரியவர் . . சா . . மாப்பிளை சொல்லுறார் ? ?

முகத்தார் : இல்லை பெண்ணு கொஞ்சம் வயசாக்கிடக்கிற மாதிரி தெரியுது என்கிறார்

வீ .காரர் : வோய் அது என்ரை பெண்டாட்டி ஜயா . .நல்ல காலம் . . உங்களுக்கு அந்த பக்கத்திலை நிக்கிறதுதான் பெண்ணு

முகத்தார் : அடடா . .இருட்டோடை கலந்து நிக்கிறதாலை தெரியலை பிள்ளை இஞ்சாலை கொஞ்சம் வாங்கோவன்

முகத்தார் : (ரகசியமாக) சின்னப்பு கண் தெரியுதோ வடிவாப் பாத்துக் கொள் பிறகு என்னைப் பேசப்பிடாது

சின்னப்பு : முகத்தான் உண்மேலை நீ என்ரை தெய்வமடா இப்பிடியொரு பெம்பிளையை எனக்கு செட் பண்ணுவாய் . . சா . . காட்டுவாய் எண்டு நினைச்சுக் கூடப் பாக்கேலை

முகத்தார் : சரி . . சரி . . உணர்ச்சிவசப்படாதை . .இதுவெல்லாம் ஒரு தேசத் தொண்டு மாதிரி . . .(பொண்ணம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது முதுகிலை டிண் தான்)

முகத்தார் : அப்ப ஜயா மற்ற விசயங்களைப் பற்றி கதைப்பம் என்ன . .அது சரி இது ஆரு சின்னப் பையன் ? ?

வீ .காரர் : என்ரை பேரன்தான் மகளின்ரை பையன்

முகத்தார் : எங்கை மகளை காணேலை உள்ளுக்கை நிக்கிறாவோ ? ?

வீ .காரர் : இப்ப இவ்வளவு நேரம் பாத்தீங்களே அந்த மகளோடை பையன்தான்

முகத்தார் : அட . . அப்ப கலியாணம் கட்டாத மகள் இருக்கோ எண்டு கேக்க ஓம் எண்டு மண்டையை மண்டையை ஆட்டினீங்கள் ? ?

வீ .காரர் : இப்பவும் சொல்லுறன் இது என்ரை மகள்தான் இது என்ரை பேரன்தான் ஆனா என்ரை மகள் கலியாணம் கட்டேலை

முகத்தார் : என்னங்க ஒரே குழப்பமா கிடக்கே . .

வீ .காரர் : என்னங்க இதிலை குழப்பம் கலியாணம் கட்டாம குழந்தைபெறக் கூடாதா?

முகத்தார் : சின்னப்பு எழும்பு எங்களுக்கு இது சரிபட்டு வராது வேறை இடம் பாப்பம்

சின்னப்பு : (ரகசியமாக) முகத்தான் அமைதியா இரு நானே டென்சன் ஆகாமல் இருக்கிறன் குழந்தை இருந்தா இருந்திட்டு போகட்டும் நமக்கென்ன இப்படியொரு பெம்பிளை என்ரை மூஞ்சைக்கு கிடைக்கிறதே பெரிய விசயம் குழப்பிப் போடாதை இண்டைக்கே கூட்டிட்டு போகலாமோ எண்டு கேள்

வீ .காரர் : என்ன மாப்பிளை குசுகுசுக்கிறார் ? ? ?

முகத்தார் : வேறை என்ன அவருக்கு பிரச்சனையில்லையாம் இப்பவே காசை தந்திட்டு கூட்டிட்டு போகலாமோ எண்டு கேக்கிறார்

வீ .காரர் : காசை வேணுமெண்டால் தாங்கோ . ஆனா அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நேரம் வந்தீங்கள் எண்டால் தாலியை கட்டி கூட்டிட்டுப் போகலாம்

சின்னப்பு : ஏன் அவ்வளவு நாள் அதுக்கு முன்னம் ஏலாதோ ? ?

வீ .காரர் : அப்பிடியில்லைங்க ஞாயிற்று கிழமைதான் மகளோடை குடும்பம் நடத்திறவர் தொழில் அலுவலாக கொழும்புக்கு போறார் அதோடை முழு அமாவாசை நாள் நீங்க மகளை கூட்டிக் கொண்டு போறதும் ஒரு சனத்துக்கும் தெரியாது

முகத்தார் : அப்ப வீட்டிலை ஒரு ஆள் ஏற்கனவே புக் ஆகி இருக்குதா. . நல்ல பமிலி இதுக்குப் பிறகும் சின்னப்பு உனக்கு தேவையா ? ?

சின்னப்பு : முகத்தான் நீ இடத்தைக் காட்டினதோடை உன்ரை வேலை முடிஞ்சுது இனி நான் பாத்துக் கொள்ளுறன் வெளியிலை போய் நில் . . .

<i>(அடுத்த ஞாயிறு வாறது எண்டு சொல்லியிட்டு திரும்பினார்கள் இருவரும்)</i>

<i>ஞாயிற்றுக் கிழமை காலை சின்னப்பு வீடு
சின்னப்பு காலேலையே குளிச்சு வலு உற்சாகத்துடன் இருக்கிறார் றேடியோவும் பெரிதாகப் பாடுகிறது அதில் "<b>முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் மறந்தேன் என்னை"</b> என்ற பாடல் போய்க் கொண்டிருந்தது சின்னப்பு கண்களை மூடி பாடலை முணுமுணுத்தபடி சாய்கதிரையில் படுத்திருக்கிறார் வாசலில் ஓட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேக்கிறது யாரோ படலைத்திறந்து கொண்டு வாறது தெரிய சின்னப்பு மெல்ல எழும்பிப் பாக்கிறார் </i>. <b>.சி . . ன் . . னா . .ச் . சி </b>

சின்னப்பு : (மனசுக்குள்) இவள் எங்கை இங்கை . . முகத்தான் எனக்கு ஆப்பு வைச்சிட்டான் போலக் கிடக்கு

சின்னாச்சி : என்னப்பா காலேலையே குளிச்சு வலு சந்தோஷமாக இருக்கிற மாதிரி கிடக்கு

சின்னப்பு : இப்ப என்னத்துக்கு இஞ்சை வந்தனீர் ? ?

சின்னாச்சி : அட . .நாசமே . .மனுசன் என்னபாடோ எண்டு விழுந்தடிச்சு ஓடி வாறன் வாசலை வைச்சு கேக்கிற கேள்வியைப் பார்

சின்னப்பு : இல்லை அறிவிச்சுப் போட்டு வந்திருந்தீர் எண்டால் வசதியா இருந்திருக்கும் இப்ப எல்லாம் பிழைச்சுப் போச்சு. . .

சின்னாச்சி : என்ன பிழைச்சுப் போச்சு . எண்டு கேக்கிறன் நான் கொழும்பிலை இருந்தாலும் எந்த நாளும் உங்கடை நினைப்புத் தானப்பா தனிய கஷ்டப்படுவீயளே எண்டு அதோடை பேப்பரிலையும் ஒரு கதையை படிச்சன் அதுக்கு பிறகு அங்கை நிக்க மனமே பிடிக்கலை ஓடி வந்திட்டன்

சின்னப்பு : அப்பிடி என்ன பேப்பரிலை பெரிசா போட்டுட்டாங்கள் நீர் ஓடி வாறதுக்கு .

சின்னாச்சி : ஒரு வயசான மனுசனாம் மனுசியை கொழும்புக்கு அனுப்பிப் போட்டு ஒரு சின்னப் பிள்ளையை இரண்டாம் தாரமா கலியாணம் கட்டிப்போட்டுதாம் எவ்வளவு வெட்கம் கெட்ட செயல் பாத்தீங்களே . .என்னவோ தெரியலை இதை வாசிச்ச பிறகு எனக்கு அங்கை நிக்கப் பிடிக்கலை

சின்னப்பு : (மனசுக்குள்) நாசமாப் போண முகத்தான் அதுக்குள்ளை பேப்பரிலை வேறை எழுதிப் போட்டுட்டான் போல கிடக்கு மகனே. .இரடி உனக்கு வைச்சுக்கிறன்

சின்னாச்சி : அது சரியப்பா ஏன் உங்களுக்கு இப்பிடி வேர்க்குது உடம்புக்கு எதாவது . ? ? ?

சின்னப்பு : சா . அப்பிடியில்லை சாதுவா வயித்தை கலக்கிற மாதிரி இருக்கு இரும் வாறன்

<i>(சின்னப்பு பாத்துறூம் நோக்கி பறக்கிறார்)</i>

<b>(சின்னப்பு வெறி சொறி உண்மைக் கதையை இஞ்சை எழுதினதுக்கு )</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
ஐயோ ஐயையோ.. சின்னப்பு இப்படி எல்லாம் நடக்கிதா..?? சின்னாச்சிக்கு இன்னொரு சின்னப்பு கிடைக்கமாட்டாரா என்ன..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது சரி போன மனைவி அலுவல் முடிஞ்சு வாறதுக்க ஒரு புது குடும்பமே தொடக்க நிக்கிறார்களா..?? என்ன முகம்ஸ் கதை இப்படிப்போகுது.. பாவம் சின்னப்பு யென்டில் அப்பு என்று எல்லொ நினைச்சன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஆகா சித்தப்பு சூப்பர் ஆனால் சின்னப்பு பாவம் சின்னாச்சியிடம் இப்படி மாட்டிவிட்டீங்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
>>>>******<<<<
Reply
என்ன முகத்தார் பகிடி ஒரு மாதிரியா போகுது...?! பாவம் சின்னப்பு...எவ்வளவு நல்ல மனிசன்...இப்படி ஆக்கிட்டேள்..! அதுக்க சின்னாச்சிக்கு இன்னொரு சின்னப்பு தேடுது சனம் பாருங்க...! :evil: Confusedhock: :twisted:

வடிவேல் சொன்னது போல ஊரே கெட்டுக்கிடக்கு...அவன் பொண்டாட்டிய இவன்..இவன் பொண்டாட்டிய அவன்..இப்படித்தான் எல்லாம் நகருது...களத்திலும்..! Confusedhock: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சந்தியா Wrote:ஆகா சித்தப்பு சூப்பர் ஆனால் சின்னப்பு பாவம் சின்னாச்சியிடம் இப்படி மாட்டிவிட்டீங்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)