Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார்
#1
சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார்
உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் ஆர்யா.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடிப்பில் வெளிவந்த `அறிந்தும் அறியாமலும்' படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

`ஒரு கல்லூரியின் கதை'யில் வித்தியாசமான வேடம் ஏற்றார். அடுத்து `கலாபக்காதலன்', `பட்டியல்', படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. கவுதம் மேனன், ஜீவா போன்ற பிரபல டைரக்டர்களே இவரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ்ப்பட உலகின் முக்கிய கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஆர்யாவிடம் அவர் கடந்து வந்த பாதை பற்றி கேட்டபோது...

"என் அப்பா ஓட்டல் வைத்து நடத்துகிறார். படிப்பதற்காக கேரளாவில் இருந்து வந்தேன். ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாது. உலகம் அறியும் விளையாட்டு வீரனாக பெயர் வாங்கவேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது.

விளையாட்டில் நான் காட்டிய ஆர்வம் காரணமாக இத்தாலியில் நடந்த `அதலெட்டிக்' பயிற்சியில் கலந்து கொள்ள தேர்ந்து எடுக்கப்பட்டேன். 10-வது வகுப்பு படிக்கும் போதே, `பாக்கெட் மணி'க்காக மாடலிங் செய்யத் தொடங்கி னேன்.

கல்லூரியில் படித்தபோது, `மாடலிங்'கில் தனி கவனம் செலுத்தினேன். என்றாலும், அப்போது எனக்கு சினிமா பற்றி எந்த எண்ணமும் இல்லை. என்னுடன் `மாடலிங்' செய்த பெண்கள் அனைவரும் சினிமா கனவுகளுடனேயே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால் எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.

இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஒரு `சாப்ட்வேர்' நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது இடை இடையே சினிமா கம்பெனிகளுக்கு சென்று நடிக்க சான்ஸ் கேட்டேன். டைரக்டர் ஜீவாவை சந்தித்தேன். அவர் 100 பேருக்கு `ஸ்கரீன் டெஸ்ட்' நடத்தினார். அதில் நான் தேர்வு பெற்றேன்.

6 மாதத்தில் முடிய வேண்டிய எனது முதல் படம் 3 வருடங்களாக வெளி வரவில்லை. இந்த நேரத்தில், எனக்கு வேலைக்காக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் நான் நடித்த படத்தை முடித்து கொடுக்காவிட்டால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அமெரிக்கா போகவில்லை.

கல்லூரியில் படித்தபோது எனக்கும் காதல் அனுபவம் ஏற்பட்டது. என்னை ஒரு பெண் விரும்பினாள். நானும் காதலித்தேன். படிப்பு முடிந்த பிறகு கிடைத்த வேலைக்கு சரியாக செல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் தள்ளி வைத்து விட்டு முதல் படம் வெளிவருவதை எதிர்பார்த்து அந்த கனவிலேயே இருந்தேன். எத்தனை வருடங்கள்தான் அவள் எனக்காக காத்திருப்பாள். என் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். காதலையும், காதலியையும் தியாகம் செய்து விட்டு சினிமாவில் நல்ல நேரத்துக்காக காத்திருந்தேன். அது வீண் போகவில்லை.

`கலாபக் காதலன்' படப்பிடிப்பின்போது, நடிகர் விக்ரம் தனது குழந்தைகளுடன் அங்கு வந்தார். `என் குழந்தைகள் உங்கள் விசிறிகள்' என்று சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எனக்கு கொஞ்சம் கடன் இருந்தது. இப்போது அதை கொடுத்து விட்டேன். பழைய வீட்டில் தான் வசிக் கிறேன். இன்றும் என் நண்பர் களை மறக்கவில்லை. இப் பொழுதும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் `புட்பால்' ஆடுகிறேன். தியேட்டரில் நண்பர்களுடன் சென்று படம் பார்க்கிறேன்.

ரசிகர்களிடம் நல்ல நடிகன் என்று பெயர் வாங்க முடிந்த வரை உழைக்கிறேன். நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ...என்றார் ஆர்யா.
maalaimalar.com
Reply
#2
அதனாலென்ன......... சினிமாவில் இல்லாததா ?
Reply
#3
நர்மதா Wrote:கல்லூரியில் படித்தபோது எனக்கும் காதல் அனுபவம் ஏற்பட்டது. என்னை ஒரு பெண் விரும்பினாள். நானும் காதலித்தேன். படிப்பு முடிந்த பிறகு கிடைத்த வேலைக்கு சரியாக செல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் தள்ளி வைத்து விட்டு முதல் படம் வெளிவருவதை எதிர்பார்த்து அந்த கனவிலேயே இருந்தேன். எத்தனை வருடங்கள்தான் அவள் எனக்காக காத்திருப்பாள். என் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். காதலையும், காதலியையும் தியாகம் செய்து விட்டு சினிமாவில் நல்ல நேரத்துக்காக காத்திருந்தேன்.

அடபாவமே ... கவலை வேண்டாம் ஆர்யா உங்கள் ரசிகைகள் இனி உங்கள் திருமணம் செய்ய தேடி வருவார்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)