Quote:அதெப்பிடி ஒராள மட்டும் பொறுப்புள்ளவரெண்டு சொல்ல முடியும்????? இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க????? எங்கட அணில இதுவரைக்கும் வாதாடின ஒருத்தருக்கும் பொறுப்பில்லையெண்டுறீங்களா??????கடைசி கருத்து வைக்கிறவரும் மற்றாக்கள மாதிரி தன்ர கருத்த வச்சா போதுமே.....அணித்தலைவர்தானே பிறகு எல்லாத்தையும் தொகுத்து தன்ர கருத்து வைப்பாார்????? அணித்தலைவரின் கடைசிக் கருத்துதானே முக்கியம்......அனுபவசாலியெண்டு எதவச்சு சொல்லுறீங்க?????? உணர்ச்சிவசப்பட்டு எழுதுறவையையெல்லாம் அனுபவசாலியெண்டா அனுபவசாலியளுக்கு வேற சொல்லெல்லோ தேடவேணும்?????? சரி அப்ப எங்கட அணில வாதாடின தல அண்ணன் அனுபவசாலியில்லயா முகத்தார் மாமா அனுபவசாலியில்லயா????? எத வச்சு அனுபவசாலியெண்டு தீர்மானிக்கிறீங்க???? பல தரப்பட்ட கருத்து வச்சதெண்டா அனுபவசாலியாகலாமோ???????? நான்கூடத்தான் பலதரப்பட்ட கருத்து வச்சன்?????? நானென்ன அனுபவசாலியோ?????? வேடிக்கையா இருக்கண்ணா.......சரி நீங்க அணித்தலைவரெண்டுற முறைல சொல்லுங்கோ அணித்தலைவரின்ர சொல்லக் கேக்க வேண்டிய கடமை எங்களுக்கிருக்கு....அத மதிக்கிறன்.....அணிய கொண்டு நடத்தி வெற்றிய சந்திக்கவேண்டிய பொறுப்பிருக்கு உங்களுக்கண்ணா....அதுக்கு நான் ஒத்துழைப்பத் தரத்தான் வேணும்......மற்றாக்ககெல்லாம் ஒழுங்கு மாறேக்க பேசாம இருந்த தலைவர் பூனைக்குட்டி மாறேக்க மட்டும் ஏன்.....????????? அதெல்லாம் எதுகஇகெனக்கு திங்கள் என்ர கருத்த வைக்கிறன் இல்லாட்டி ஞாயிறு அதுவரைக்கும் பொறுத்துக்கோங்கையாமாரே.........
வணக்கம் பூனைக்குட்டி அவர்களே! களத்திலே எவரையும் குறைத்து மதிப்பிடுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அல்லது இயல்பில் திறமைசாலிகளாகவே இருப்பார்கள். ஆகவே.. ஒன்றை வைத்து ஒருவரை குறைத்து மதிப்பிட முடியாது. எனினும், ஒருவரின் சில இயல்புகளை வைத்து இவரால் இதைச் செய்ய முடியும் என ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும். அந்த தீர்மானம் சிலசமயம் பிழையாகலாம். எனினும் ஒரு நம்பிக்கை. அவளவுதான்.
யாழ் பழைய கருத்து களத்தில் இருந்து இளைஞன், குருவிகள் போன்றவர்களின் கருத்துகளுடன் வாசிப்பு பழக்கம் உள்ளவன் என்ற ரீதியிலே, அவருடைய விவாதத் திறனில் ஒரு நம்பிக்கை எனக்குள் உண்டு. அத்துடன் கவிதை, அறிவியல் கட்டுரைகள் என அவர் எழுத்துவன்மையிலும் நம்பிக்கை உண்டு.
நீங்கள் இதுவரை 525 கருத்தகளை முன் வைத்துள்ளீர்கள். ஆனால் தங்களது கருத்துகளை ஒன்றாக திரட்டியபோது.. 473 கருத்துகளை வாசிக்க முடிந்தது. அத்தனை கருத்துகளிலும்.. உங்களுடைய எந்தவொரு சொந்த ஆக்கமும் இல்லை. புதிய தலைப்பிலே தாங்கள் எந்தவொரு கருத்தையுமே எழுதவுமில்லை.. அதற்காக பட்டிமன்றத்தில் கருத்து வைக்கும் திறமை இல்லையோ என தாங்கள் கேட்கலாம். அது நியாயமானதே!
தங்களது திறமையையும், ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் வரவேற்கிறேன்.
ஆனாலும், என்னைப் பொறுத்தளவில், குருவிகளின் எழுத்துகள் என்னுள் ஏற்படுத்திய நம்பிக்கையை, தங்களது எழுத்துகள் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் தாங்கள் கருத்தாட வந்த காலம் குறைவாகவும் இருக்கலாம்.
மற்றும்படி, தங்களை உசாதீனப்படுத்தவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ நான் செயற்படவில்லை என்பதை பணிவன்புடன் தங்களுக்கு கூறுகிறேன்.
தாங்கள் தங்களது கருத்தை திங்கள் கிழமைக்கிடையில் பதிவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
அடுத்ததாக தூயவன் கருத்தை முன்வைத்தால், அதற்கு பின் வரும் முறையில் தங்களுடைய கருத்தை பதியுங்கள்.
வணக்கம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.