Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழன் ............
#1
<b>தமிழன் - யாரோ?
கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் -
ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு
பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்!

தமிழன் என்றால் யாரோ- ?
முயற்சி செய்பவருக்கு தடையாய்-
இலாபம் இல்லை என்று தெரிந்தும்.....
ஏட்டிக்கு போட்டியாய்
ஏதும் செய்ய நினைப்பவன்!

தமிழன் எவரோ-
தாயை தவிக்க விட்டு -
பாயை சுருட்டி கொண்டு
பரதேசம் ஓடுபவன்!

தமிழன் என்ன செய்வானோ?
உப்பு யாரும் அள்ளினால்-
சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்!
உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்!

தமிழன் இன்னும் என்ன செய்வானோ-?
கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் எழுதுவான் -
கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் மூக்கை இடையில் நீட்டுவான்!

தமிழனுக்கு வீரம் உண்டு-
அவனுக்கு விவேகம் உண்டு-
தமிழனுக்கு வேகமும் உண்டு-


இருந்தும் என்ன...
தமிழனுக்கு பல இடங்களில்
விவஸ்தை மட்டும் தான் இல்லை!!!</b>
-!
!
Reply
#2
தமிழனுக்கு வீரம் உண்டு-
அவனுக்கு விவேகம் உண்டு-
தமிழனுக்கு வேகமும் உண்டு-


இருந்தும் என்ன...
தமிழனுக்கு பல இடங்களில்
விவஸ்தை மட்டும் தான் இல்லை!!!
*****************************

வர்ணன் தமிழின் விவஸ்தை அற்ற குணங்களில் சிலவற்றை தான் உங்கள் கவி வடிவில் தந்து இருக்கிறீர்கள். உங்களின் கோபங்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
கவிதை யோசிக்க வைக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#3
[b]புரட்சித் தமிழன்

மற்றவன் ஏற தன் முதுகைத் தருபவனும் இவன்
தான் ஏற பிறரை கவிழ்பவனும் இவன்

பிறர் தாகம் தீர்ப்பவனும் இவன்
தன் நிலை மறக்கும் 'குடி' மகனும் இவன்

தமிழை வாழ வைக்க 'நினைப்பவனும்' இவன்
தமிழ் என்றால் வெட்கிப்போவானும் இவன்

சுத்தம் சோறுபோடும் என்பவனும் இவன்
அதை அசுத்தம் செய்பவனும் இவன்

பெரியோரை மதிப்பவனும் இவன்
பெரியோரை மிதிப்பவனும் இவன்

துன்பம் வந்தால் இன்பம் தருபவனும் இவன்
இன்பம் வந்தால் துன்பம் தருபவனும் இவன்

புரட்சித் தமிழன் நீயடா எனில்
இல்லை இல்லை விஜயகாந்த் என்பானும்
இவன்..
Reply
#4
அடடா தமிழனை பற்றி புட்டு புட்டு வைக்கிறீங்களே எல்லாரும். கவிதை நன்றாக உள்ளது வர்ணன் , ஸ்டார் விஜே.
<b> .. .. !!</b>
Reply
#5
தமிழனின் நல்ல அன்ட் கெட்ட குணங்களை கவிதையில் இருவரும் சொல்லி இருக்கின்றீர்கள்..
வர்ணன்: 4 வரிகளில் சொற்களை நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்..உண்மையாகவே பாராட்டுக்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

விஜய்: திருக்குறள் போல..2 வரிகளில் வித்யாசமாக எழுதி இருக்கின்றீர்கள்..வாழ்த்துக்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)