Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை
[புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார்.
நன்றி: புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Quote:அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளர்
யார் அதிக விருப்புவாக்கு வாங்கியவர்? :roll: :roll: :roll:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>பரராஜசிங்கம் எம்.பி வெற்றிடம் நாளை கூட்டமைப்பு தீர்மானிக்கும் </b>
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை அடுத்து அவரது இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஆராயப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக யாரை நியமிப்பது என்பது குறித்து நாளை 31ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்து தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Posts: 114
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
மாமனிதர் பராஜசிங்கம் ஐயா அவர்கள் தேசியப்பட்டியல் மூலம் அல்லவா பாராளுமன்றத்திறற்கு தெரிவு செய்யப்பட்டார். யாாராவது அறியத்தரவும்.
<b>
...</b>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[size=18]எனது நினைவில் உள்ள தகவலின் படி
தேசியப் பட்டியலில் இருப்பவர்
மா.க.ஈழவேந்தன் அவர்கள்...
மாமனிதர் ஜோஸப் பரராஜசிங்கம் அவர்கள்
மட்டக்களப்பில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப்
பெற்ற(?) "இராசநாயகம்" அவர்களின் மறைவின் பின்
(இனந் தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செயப்பட்டார்) அவ் இடத்திற்கு பிரேரிக்கப்பட்டவர்
(விருப்பு வாக்கினை அடிப்படையாகக் கொண்டு).
இதன்படி அடுக்த நிலையில் உள்ளவர் யார் என்பது நினைவுக்கு வரவில்லை..
வேறு யரும் தெரிந்தால் சொலுங்கோ...
"
"
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
தெரிவு செய்யப்படுபவர் கிழக்கைப் பிரதிநிதிப்படுத்துவது நல்லதாக இருக்க கூடும். ஆனாலும் தேசியத்தினை பலப்படுத்தக் கூடிய திறமையாளராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
[size=14] ' '
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<b>தேசியப் பட்டியல் எம்.பி. பதவி</b>
[i]அம்பாறைக்கு வழங்க முடிவு?
திருமலை விக்னேஸ்வரனின் பெயரும் சிபாரிசு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மறை வினால் ஏற்பட்டிருக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பி னர் பதவி வெற்றிடத்துக்கு கிழக் கில் அம்பாறை மட்டக்களப்பு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தீர்மானித்துள்னர்.
கிளிநொச்சியில் நேற்று அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்துக்கு யாரை நியமிப்ப தென்பது தொடர்பாக அடுத்த மூன்று தினங்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் எம்.பி. பதவி வெற்றிடத்துக்கு ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் மற்றும் திருமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் உட்பட பலரது பெயர்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன எனத் தெரிகிறது. எனினும் அம்பாறை பிரதேசத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.
<b>உதயன்</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>