Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொதிக்கிறது திருமலை...
#81
<span style='color:darkred'><b>கடற்படையால் படுகொலை செய்யப்பட்டோரின் இறுதி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு </b>

சிறிலங்கா கடற்படையினரால் உப்புவெளிப் பகுதியில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரு பொதுமக்களினது இறுதி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.


திருகோணமலையில் வியாழக்கிழமை பிற்பகலில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இந்தச் சம்பவத்தையடுத்து பொதுமக்கள் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் செல்லத்துரை செல்வராஜா (வயது 25), செல்வநாயகபுரம் மற்றும் வில்சன் கிறிஸ்டோபர் ஜோர்ஜ் (வயது 35) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த வில்சன் கிறிஸ்டோபர் ஜோர்ஜ், நித்தியபுரி அல்லெஸ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர். 3 குழந்தைகளின் தந்தையாவார்.

இருவரது உடலையும் பிரேத பரிசோதனை செய்த திருகோணமலை அரச மருத்துவர் காமினி குலதுங்க, துப்பாக்கிச் சூட்டினாலேயே இருவரும் உயிரிழந்தனர் என்று அறிவித்தார். அதேபோல் மரண விசாரணை நடத்திய நீதிபதி இராமகமலனும் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகத் தீர்ப்பளித்தார்.

கொல்லப்பட்ட இருவரது உடல்களும் திருகோணமலை நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் வடபகுதியில் உள்ள உப்புவெளீ அல்லெஸ் தோட்ட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்</span>

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#82
<span style='color:green'><b>திருமலை கண்காணிப்புக் குழுகள் மீண்டும் தொடக்கம்</b>

திருகோணமலையில் இடை நிறுத்தப்பட்ட பேர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளன.


போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஆர்தர் டுவிட்டன் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட கண்காணிப்பாளர்கள் தங்கள் அலுவலகத்தில் இன்று மீண்டும் பணிகளைத் தொடங்கினர்.

இருப்பினும் அலுவலகத்திற்கு வெளியே சென்று எந்த விதமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை.

திருகோணமலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக 2 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது</span>.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#83
<b>திருமலை சேருநுவரப் பகுதியில் ஊர்காவல் படைவீரர் மற்றும் சிங்கள காடையரும் சுட்டுக்கொலை.</b>

திருக்கோணலையில் சேருநுவரப் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா ஊர்காவல்படை வீரர் ஒருவரும் சிங்கள காடையர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இன்று காலை 8.35 மணிக்கு சேருநுவரப் பிரதான வீதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்பொழுது கொல்லபட்டவர்கள் உர்காவல் படை வீரரான 26 அகவையுடைய நிலாந்த மடுகல,சிங்கள காடையரான 34 அகவையுடைய மகிந்த நவரட்ண என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் மாருவில நோக்கிச் சென்ற இருவரையும் வீதியில் வைத்து வழிமறித்த தாக்குதலாளிகள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

<i><b>பதிவு.கொம்</b></i>
"
"
Reply
#84
<b><span style='color:red'>திருமலை மாணவர்கள் படுகொலையில் பின்னணியில் யார்?:

திருகோணமலை மாணவர்கள் படுகொலையின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார்.


கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இரா.சம்பந்தன் அளித்த நேர்காணல் விவரம்:

தமிழர் பிரதேசங்களில் பல படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த சம்பவங்களில் தொடர்புடைய எவருமே நீதியின் முன்னாள் நிறுத்தப்பட்டதில்லை. இந்தப் படுகொலைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றில் வெறும் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் தரப்படுகின்றனவே தவிர எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படியான நடவடிக்கைகள் கூட கண்துடைப்புக்குரியனவாக இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லவே நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களை நாம் நடத்தினோம்.

பெருந்தொகையான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். எதுவித காரணமும் இல்லாமல் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் குறிப்பாக கொழும்பிலும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டைக் கண்டிக்கும் வகையில், எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில் நாம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம். இது தொடர்பிலான கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றில் விவாதிக்க அனுமதி கோரினோம். எமக்கு நீதி வழங்கப்படாத நிலையில் நாம் நாடாளுமன்றத்துக்குள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மூன்று நாட்களாக நடத்தினோம்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்குள்ளாகாமல் இருப்பதற்கான உறுதியான நடவடிக்கையையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இந்தச் செயற்பாடுகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையே அரசாங்கத்தினது உடனடி நடவடிக்கையாக நாம் எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் இந்த வன்முறைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதை ஏற்க வேண்டும்.

அரச படையினர் கொல்லப்படுதல் தொடர்பில் நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் இந்தக் கொலைகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பாக வேண்டும்.

திருகோணமலை மாணவர்களின் படுகொலைக்குப் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியினரது தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நாம் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை அரசியலாக்க விரும்பவில்லை.

இந்தப் படுகொலைகள் தொடர்பில் எம்மிடம் கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, இராணுவத்தினரது ஒரு பகுதியினர்தான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்றார். எந்த ஒரு படையினரும் சம்பவம் நடந்த பகுதியில் தாக்குதலுக்குள்ளாகாத நிலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை ஒரு திட்டமிட்ட படுகொலை. இந்தப் படுகொலை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். மாணவர்களின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டால் தடயவியல் நடவடிக்கை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட முடியும்.

எமது நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்கிற தகுதியும் அருகதையும் ஜே.வி.பிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இல்லை.

ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது இந்த இரு கட்சிகளும் மேற்கொண்ட செயற்பாடுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு கட்டமைப்பு அது. அவ்வளவுதான். நாங்கள் விடுதலைப் புலிகளின் நிழல் பிரதிகள் அல்ல. தமிழ் மக்களின் நலன்களுக்காக அவர்களது எதிர்காலத்துக்காக அமைதி முயற்சிகள் அர்த்தமுள்ள வகைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இணைந்து செயற்படுகிறோம். தற்போதைய அமைதி முயற்சிகள் பின்னடைந்துள்ளமைக்கு ஜே.வி.பி.தான் பொறுப்பேற்க வேண்டும்.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா காலத்திலும், ரணில் பிரதமராக இருந்த காலத்திலும் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இப்போதும் அமைதி முயற்சிகளுக்குத் தடை போடுகிறவர்கள் ஜே.வி.பி.யினர் என்பதால் அவர்களே இதற்குப் பொறுப்பு. அவர்கள்தான் நாட்டை இந்த ஆபத்தான நிலைக்குத் தள்ளியவர்கள்.

எம்மைப் பொறுத்தவரையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில் அரசாங்கங்களோடும் அரச தலைவர்கள் மற்றும் பிரதமர்களோடும் தொடர்பில்தான் இருந்து வருகிறோம். அமைதி முயற்சிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகிறோம். இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் நாம் விவாதித்துள்ளோம். நாம் எம்மாலான ஆகக் கூடிய பணிகளை சரியாகவே செய்துள்ளோம்.

நாம் ஒரு ஜனநாயக ரீதியான அரசியல் கட்சியினர். வடக்கு கிழக்கு மக்களினால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவர்கள். நாங்கள் எம்மால் முடிந்த ஆகக் கூடிய பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம். ஆனால் சிறிலங்க அரசானது நாடு விடுதலையடைந்த 1947ஆம் ஆண்டு முதல் எங்களைவிட சிறப்பாக செயற்பட்டிருக்கலாம். ஆனால் அப்படியாக எதும் நடைபெறவில்லை.

விடுதலைப் புலிகளை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆயுதக் குழுக்கள் தோன்றாத காலத்திலே தமிழ் அரசியல் தலைவர்கள் தீவிரமாக செயற்பட்ட காலத்திலே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆயுதக் குழுக்கள் உருவான பின்பும் கூட முன்பைப் போலவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இதுவே உண்மை. ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு நிராகரிப்பட்டமையும் சிறிலங்கா அரசாங்கம் எதுவும் செய்யாது என்பதற்கு உதாரணமாகும்.

அரசாங்கம் உடனே பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் அதற்கு உதவ தயாராக உள்ளோம் என்றார் இரா. சம்பந்தன்.</span>

<i>[b]தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#85
<b>திருக்கோணமலையில் பொதிகுண்டு வெடித்ததில் 3 படையினர் படுகாயம். </b>

திருமலையில் நேற்று சனிக்கிழமை இரவு பொதிகுண்டு வெடித்ததில் மூன்று சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் நேற்றிரவு 8.20 மணியளவில் திருக்கோணமலை மத்திய வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இந்த பொதிகுண்டு வெடித்துள்ளது.

வர்த்த வங்கிக்கு முன்பாக காணப்பட்ட பொதியை கண்ட சிறீலங்கா படையினர் அதனைப் பிரித்துப் பார்த்த போது பொதியினுள் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. இதன்போது 3 சிறீலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த மூன்று படையினரும் திருக்கோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த படையினரில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதிகுண்டானது தூரத்திலிருந்து தொலை இயக்கி மூலம் வெடிக்க வைக்கக்பட்டிருக்கலாம் என சிறீலங்கா படைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன

<i><b>பதிவு.கொம்</b></i>
"
"
Reply
#86
[size=18]<b>திருகோணமலையில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்! </b>

திருகோணமலை மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.


சிறிலங்கா இராணுவத்தினது வன்முறைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் தப்பி உயிர் பிழைப்பதற்காக கடந்த இருவாரங்களில் மட்டும் மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களிலிருந்து 1,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

கடந்த சனவரி 8 ஆம் நாள் மூதூர் 58 ஆவது மைல் கட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டமைக்காக இரு அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும் 50 ஆவது மைல் கட்டை இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 3 பேரைத் தவிர மற்ற அனைவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இராணுவத்தினரின் காவலில் இருந்த மூவரில் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி அலி ஒலுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

299 குடும்பங்களைச் சேர்ந்த 1216 பேர் விடுதலைப் புலிகளின் மூதூர் பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களில் 218 குடும்பங்களைச் சேர்ந்த 799 பேர் மூதூர் தங்கபுரம் பாடசாலையிலும் மூதூர் சின்னகுளம் பாடசாலையில் 437 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 154 குடும்பங்களைச் சேர்ந்த 549 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அகதிகளாக அடைக்கலமாகினர்.

இவர்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் செம்பஹா மகா வித்தியாலயத்திலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் புனர்வாழ்வுக் கழகத்தின் கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

245 குடும்பங்களைச் சேர்ந்த 1013 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாக மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மென்காமத்தைச் சேர்ந்த 76, சிவபுரத்திலிருந்து 47, பாரதிபுரத்திலிருந்து 190, கிளிவெட்டி மற்றும் குமாரபுரத்திலிருந்து 197 ஆகிய மொத்தம் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1836 பேர் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தமிழர் புனர் வாழ்வுக்கழகம், ரோட்டறி கிளப், விருட்சம், ஐ.ஓம்.எம், இசட்.ஓ.ஏ. உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இடம்பெயர்ந்தோருக்கு வழங்கி வருகின்றன

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#87
<b>திருகோணமலை மாவட்டத்தின் அரச சார்பற்ற திணைக்கள மேலாளர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் திருகோணமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</b>

திருக்கோணமலை நகரில் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அரச படைகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்விற்கும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்பதை கருத்தில் எடுத்து எமது ஒன்று பட்ட செயலின் மூலம் எமது சமூகத்தை பாதுகாப்பதோடு பேரினவாத அரசிற்கும் படைகளுக்கும் எதிரான எமது எதிர்ப்பினை அந்தந்த வேளையில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

எனவே கீழ்கண்ட விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தமிழ் பேசும் மக்களை அன்பு கலந்த எச்சரிக்கையுடன் வேண்டுகின்றோம்.

சகல அரச தனியார் அலுவலகங்கள் கடைகள் யாவும் மாலை 5.00 மணிக்கு முன்னதாக மூடப்பட்டு வீடுகளுக்கு திரும்பக் கூடியதாக உங்கள் கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.
பொய்வதந்திகள் பரப்புவோரும் தேவையற்ற விதத்தில் பதட்ட நிலையை உருவாக்குவோரும் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கதவடைப்பு போராட்டம் மற்றும் இறுக்கமான போராட்டம் ஏற்படும் போது பொருட்களை பதுக்குவதும் மற்றும் பன்மடங்கு கூட்டிவிற்பதும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
கசிப்பு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் விபச்சாரம், நீலப்படம் போன்றவற்றில் சம்பந்தப்படும் விற்பவர்கள் வாங்குபவர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது மண் எமது மக்கள் எமது தேசியம் என்ற எண்ணப்பாடின்றி சிறீலங்கா அரசிற்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விருந்துபசாரங்களிலும் பொது வைபவங்களிலும் சிறீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகளுடன் கொஞ்சிக் குலாவி மது அருந்துவோரும் பின்னர் தமிழ் மக்களுக்கு சேவை செய்வோர் போல் காட்டிக் கொள்ளும் பலரைப்பற்றி எமக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த வண்ணமே உள்ளது. இச் செயலில் ஈடுபடும் எந்த தமிழ் மகனும் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்கள் எக்காரணத்தாலும் காலை 6.00 மணிக்கு முன்னும் மாலை 6.00 மணிக்கு பின்னும் நடத்தப்படக்கூடாது. இதனை மீறுவோர் மீது தனியார் கல்வி நிறுவனம் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதிகளில் கூட்டமாக நிற்பதும் குடித்து கும்மாளம் போடுவதும் இரவு நேர கேளிக்கைகளில் ஈடுபடுவதும் பெண்களை நையாண்டி செய்வதும் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத குற்றமாக உரியவர்கள கருதுகிறார்கள். எனவே இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோருகின்றோம்.
இவற்றை மீறி நடப்பவர் மீது 01.02.2006ல் இருந்து எவ்வித ஈவிரக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

தமிழரின் தாகம் பண்பாடு மிக்க தமிழீழத் தாயகம்.

<b>பொங்கியெழும் மக்கள் எழுச்சிப் படையணி</b>


<b>தகவல்: சங்கதி</b>[/b]
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#88
<b>சிறிலங்காப் படையினரின் அச்சம் காரணமாக திருமலையிலிருந்து மக்கள் இடம்பெயர்வு! </b>

திருகோணமலை மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினது வன்முறைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் தப்பி உயிர் பிழைப்பதற்காக கடந்த இருவாரங்களில் மட்டும் மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களிலிருந்து 1,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

கடந்த ஜனவரி 8 ஆம் நாள் மூதூர் 58 ஆவது மைல் கட்டையில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டமைக்காக இரு அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 50வது மைல் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேரைத் தவிர மற்ற அனைவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இராணுவத்தினரின் காவலில் இருந்த மூவரில் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி அலிஒலுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். 299 குடும்பங்களைச் சேர்ந்த 1216 பேர் விடுதலைப் புலிகளின் மூதூர் பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களில் 218 குடும்பங்களைச் சேர்ந்த 799 பேர் மூதூர் தங்கபுரம் பாடசாலையிலும் மூதூர் சின்னக்குளம் பாடசாலையில் 437 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 154 குடும்பங்களைச் சேர்ந்த 549 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அகதிகளாக அடைக்கலமாகினர். இவர்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் செம்பஹா மகாவித்தியாலயத்திலும் 76 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் புனர்வாழ்வுக்கழகத்தின் கட்டிடத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

245 குடும்பங்களைச் சேர்ந்த 1013 பேர் விடுதலைப் புலிகளின் நிருவாக மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மென்காமத்தைச் சேர்ந்த 76, சிவபுரத்திலிருந்து 47, பாரதிபுரத்திலிருந்து 190, கிளிவெட்டி மற்றும் குமாரபுரத்திலிருந்து 197 ஆகிய மொத்தம் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1836 பேர் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம், ரோட்டறி கிளப், விருட்சம், ஐ.ஓம்.எம், இசட். ஓ. ஏ. உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இடம் பெயர்ந்தோருக்கு வழங்கி வருகின்றன.


<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#89
<b>சுடரொளி செய்தியாளர் திருமலையில் சுட்டுக்கொலை </b>


சுடரொளி நாளேட்டின் செய்தியாளரான எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்படும் சுந்தரராஜா(35) இன்று காலை திருகோணமலையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை இவர் தனது கடமைக்காக புறப்பட்டபோது, வீட்டிலிருந்து 75 மீட்டர் தொலைவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply
#90
[size=18]உவர்மலையில் இவரது வீட்டுக்கருகே வைத்தே
அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்....
இது அதி உயர் பாதுகாப்பு வலயம் ஆகும்...
இதற்கு அண்மையில்தான் சிங்களப் படையினரின் கட்டளைப் பீடமான "பிலான்டன் பொய்ன்ற்" தளம் உள்ளது..
மேலும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின்
பணியகமும் அருகாமையிலே உள்ளது...
திருமலை தொடர்பான பல்வேறு செய்திகளை மட்டுமன்றி, பல்வகைப்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதி வந்தார்...
தாயகத்தில் இருந்த காலங்களில் சுடரொளியில் இவரது கட்டுரைகள் பல "மறைக்கப்பட்ட" தகவல்களையும் வெளிக்கொண்டு வந்திருந்ததை வாசிக்க முடிந்தது...

"திருமலை" யில் "பொங்கு தமிழ்" முதன் முதலாக(2002 மார்ச்சில்) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பில் இதர பல்கலைக்கழக மாணவர்களும் இறங்கி திருமலைத் தமிழ் சமூகத்துடன் இணைந்து செய்த போது ,மிக நெருக்கமாக பணியாற்றியமை கண் முன் நிழலாடுகிறது...

தலைநகர் திருமலையின் "இருப்பு"க்காக எழுத்துக்களூடாக "விழிப்பு "ஊட்டிய "எஸ்.எஸ்.ஆர்."க்கு சிரந்தாழ்த்தி அக வணக்கம் செலுத்தும் அதே வேளை, அவ்ரது குடும்ப உறவுகளது துயரோடு உளப்பூர்வமாகப் பங்கெடுக்கின்றோம்
"
"
Reply
#91
<b>மூதூரில் கூட்டுறவுச்சங்க ஊழியர் சுட்டுக்கொலை. </b>


முதூரில் இன்றுகாலை 6.30 மணியளவில் தேவாலயவிதியில் வைத்து கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக வைத்து, கூட்டுறவுச்சங்க ஊழியரான இரமலிங்கம் சுந்தரலிங்கம் (அகவை 54) எனபவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் இன்றுகாலை தனது ஈருளியில் அப்பிரதேசத்தில் சென்று கொண்டிருக்கும் போதே இவர்மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply
#92
<b>திருமலையில் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை: விடுதலைப் புலிகள் கண்டனம் </b>

திருகோணமலையில் சுடரொளி ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி பத்திரிகையின் திருகோணமலை ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக் குழுக்களுமே காரணம்.

தமிழ் ஊடகவியலாளர்கள் நிர்மலராஜன், நடேசன், சிவராம் வரிசையில் சுப்ரமணியம் சுகிர்தராஜனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரச படைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில்தான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#93
<b>சுடரொளி நிருபர் படுகொலை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தல் </b>

சுடரொளி பத்திரிகையின் திருமலை மாவட்ட நிருபர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.


சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பாவுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுப்பிவைத்துள்ள மனு:

கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி பத்திரிகையின் திருமலை மாவட்ட நிருபர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் இன்று காலை திருமலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்விடயத்தை உடனடி நடவடிக்கைக்காக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம். தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் சுதந்திரமான முறையில் செயற்படுவதற்குமான உத்தரவாதத்தை தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சிறப்பு சந்திப்பின் போது தாங்கள் வழங்கி இரண்டு வார காலப் பகுதியிலேயே இந்த அவலமான சம்பவம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஒரு பகுதியில் நடைபெற்றுள்ளது என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கடந்த சில மாத காலமாக தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து ஆயுதப் படையினர் தாக்குதல்களையும், கெடுபிடிகளையும் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சுடரொளி பத்திரிகையின் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தமிழ் ஊடகத்துறையினருக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஊடகத்துறை மூலமாக சுகிர்தராஜன் மேற்கொண்டு வரும் பணிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் தமது பணியை மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவுமே நாம் இதனை கருதுகின்றோம்.

இது தொடர்பாக உடனடி நடவடிக்கையை வேண்டிநிற்கிறோம்.

இதற்கு முன்னர் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்ட போது விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவும் இல்லை. குற்றவாளிகள் நீதி மன்றத்தின் முன்பாக நிறுத்தப்படவும் இல்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். சிறிலங்கா அரசின் இத்தகைய அணுகுமுறை காரணமாகவே ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பலியாக்கப்படுகின்றார்கள்.

சுகிர்தராஜனின் படுகொலை விடயத்திலும் இதே போன்ற அணுகுமுறையைக் கையாளமல் துரித கதியில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன்பாக நிறுத்துவதை ஊடகத்துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

இது தொடர்பான வாக்குறுதிகளுக்கு அப்பால் செயலளவில் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சத்துடன் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதையும், ஊடகச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் என்ற முறையில் எவ்வாறான நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ளவுள்ளீர்கள் என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகின்றோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#94
<b>சுடரொளி ஊடகவியலாளர் படுகொலை: சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் </b>[/color

திருகோணமலையில் சுடரொளி ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் இன்று செவ்வாய்க்கிழமை காலை படுகொலை செய்யப்பட்டமை குறித்து நாம் மிகுந்த அதிர்ச்சியடைகிறோம்.

[color=red]தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். கடந்த 12 மாதங்களில் 4 முக்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அரச படைகளினால் தமிழ் நாளிதழ்களின் அலுவலகங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் பல தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

குறிப்பாக சுடரொளி நாளிதழ் பல அச்சுறுதல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் சுடரொளி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவு அலுவலகம் மீது இரு கைக்குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து ஓகஸ்ட் 29 ஆம் நாளன்று அதன் அச்சகப் பிரிவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டேவிட் செல்வரத்தினம் உயிரிழந்தார்.

விடுதலைப் புலிகளின் உளவாளி என்று குற்றம்சாட்டி தென்னிலங்கையின் அரசாங்க ஆதரவுக் கட்சியினால் சுடரொளியின் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது திருகோணமலையில் சுடரொளியின் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 வயது மற்றும் 2 வயது குழந்தைகளின் தந்தை அவர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராஜனுக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

சட்டத்தின் கடமையாக இந்தப் படுகொலையை நடத்தியவர்களைக் கைது செய்ய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் ஊடகச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல்களை நிறுத்தி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டியது அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>
தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#95
<b>மூதூரில் இடம்பெறும் கொலைகளுக்கு படையினரால் வழங்கப்படும் ஆயுதப் பயிற்சிகளே காரணம்

மூதூரில் இன்று இடம்பெற்ற கொலைக்கு அண்மை காலமாக சிறீலங்கா இராணுவத்தினர் ஊர்காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதபயிற்சிகளே காரணம் என தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் இது தொடர்பில் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்தநிலையானது திருகோணமலையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


<i>[b]தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
Reply
#96
<b>மூதூரில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை </b>

திருகோணமலை மூதூரில் தமிழ் வர்த்தகரான தம்பிபிள்ளை செல்வராஜா (வயது 48) நேற்று புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ள மூன்றாவது தமிழர் இவர்.

மூதூர் சந்தை அருகே தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தம்பிபிள்ளை செல்வராஜாவை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

சம்பவ இடத்துக்கு மூதூர் சிறிலங்கா காவல்துறையினர் சென்றனர். செல்வராஜாவின் உடல் மூதூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து மூதூர் நகர தமிழ்க் குடும்பங்கள் அங்குள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு தேடி அகதிகளாகச் சென்றுள்ளனர்.

மூதூர் தமிழர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அர படையினருக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ ஜயவர்த்தன, கிழக்குப் பிரதேச பிரதி காவல்துறை மா அதிபர் றோகான் அபயவர்த்தன, காவல்துறை அதிகாரி ஹெச்.என்.பி. அம்பனவெல ஆகியோருக்கு இந்த வேண்டுகோள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரில் தமிழ் ஊடகவியலாளர் எஸ். சுகிர்தராஜன் மற்றும் மூதூரில் சுந்தரலிங்கம் ஆகியோர் நேற்றுமுன் நாள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#97
<b>சுடரொளிப் செய்தியாளர் எஸ்.எஸ்.ஆரின் படுகொலைக்கு திருமலை தமிழ் மகளீர் பேரவை கண்டனம் </b>


சுடரொளி நாளேட்டின் செய்தியாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு, திருகோணமலை மாவட்ட தமிழ் மகளீர் பேரவை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. (அந்த அறிக்கை முழுமையாக உள்ளே)
செவ்வாய்க்கிழமை 6.50 மணியளவில் திருக்கோணமலை உவர்மலை லோவர் வீதியில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அரச ஒட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது. இவரை இவரது விட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த இரவரினால் தலையிலும் மார்பிலுமாக இரு வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையானது அதிஉயர் பாதுகாப்பு வலயமான வடக்கு கிழக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் ஸ்ரீ லங்காவின் இராணுவத்தினரும் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் துப்பாக்கிச் சத்தம்கெட்டிருந்தும் கொலையாளியைப் பிடிக்க எதவித முயற்சியும் எடுக்காது தப்பிச் செல்ல விடப்பட்டுள்ளனர். இதிலிருந்தே இப்படுகொலையானது ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவினராலும் அவர்களுடன் செர்ந்து செயற்படும் ஒட்டுப்படையினராலும் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்பத தௌ;ளத் தெளிவாக தெரிகின்றது.

ஊடகவியாளரான சுகிர்தராஜன் திருக்கோணமலையில் தனித்துவம் மிக்க உண்மைச் செய்திகளை கண்டறிந்து துணிவுடன் வெளிப்படுத்தியவர். ஆண்மையில் திருமலைக் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் துப்பாக்கிச் சூட்டினால்தான் உயிரிழந்தனர் என்பதை தௌ;ளத் தெளிவாக படம்பிடித்து காட்டியவர். திருக்கோணமலை மக்களின் உள்ளத்துணர்வுகளை அரச படைத்தரப்பின் அடாவடித்தனங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திய செயல்வீரன். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கும் திருக்கோணமலைத் தமிழ் பேசும் மக்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவரது நிறுவனத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அடுத்தடுத்து நடந்து வரும் ஊடகக் காரியாலயங்கள் தாக்கப்படுவததையும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும்;. விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுவதையும் பார்க்கையில் இன்று இந்த நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட அராஜகம், சர்வாதிகாரம் தலைதூக்கி இருப்பதைத்தான் உணரக்கூடியதாக இருக்கிறது. முப்பது வயது இளம் மனைவி, குழந்தைகளான மிதுஷா வயது 04, யதுர்சன் வயது 02 ஆகிய இரு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதனால் இன்று அந்தக் குடும்பத்தின் கதி என்ன? இளந் தாயினதும் பிள்ளைகளினதும் எதிர்காலம் என்ன? பெண்கள் என்ற வகையில் ஒரு பெண்ணின் நிர்க்கதியான நிலையை நாம் நன்கறிவோம்.

மனிதாபிமானமற்ற இப்படுகொலையால் கொலையாளிகள் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் என அவர்களையே கேட்க விரும்புகின்றோம். மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான இப்படுகொலையை திருக்கோணமலை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் குறிப்பாக அன்னையர். மகளீர் சார்பாகவும், மிக மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் துயரத்தையும் குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இனிய நண்பனை இழந்து தவிக்கும் பத்திரிகைச் சமூகத்தினருக்கும் தெரிவித்து கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

இத்தகைய பத்திரிகையாளர் படுகொலைகள் தொடர் கதையாகி விடாது இத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசையும், அரச படைகளையும் நிர்ப்பந்திக்குமாறு சர்வதேச சமூகத்தையும், கண்காணிப்புக் குழுவையும் மிக வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#98
<b>திருமலையில் மேலதிகமாக குவிக்கப்பட்ட சிங்கள படையினர் விலக்கப்பட வேண்டும் </b>

மேலதிகமாகக் குவிக்கப்பட்டுள்ள படையினரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அவர்கள் குறைக்கப்பட வேண்டுமென திருமலை சமாதானக் குழு உறுப்பினர் சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ நேற்று திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்டார். திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமாதான குழு உறுப்பினர்களையும் மதத் தலைவர்களையும் சந்தித்து திருகோணமலை நிலவரங்கள் பற்றி கேட்டறிந்து கொண்ட போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருகோணமலையில் படையினருடைய செயற்பாடு காரணமாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதோடு பலர் காயமடைந்து சொத்துக்களை இழக்கின்ற நிலமையும் தோன்றியுள்ளது. படையினர் மீது தாக்குதல் மேற்கொள்வோர் கண்டறியப்படாது பொதுமக்கள் மீதே அராஜகத்தை படையினர் மேற்கொள்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை அனுராதபுரச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் போது மூவினங்களையும் சேர்ந்தோர். படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

படையினரின் செயற்பாடு காரணமாக நாங்கள் அச்சம் கொண்டவர்களாகவுள்ளோம் இவை நீக்கப்பட வேண்டும். மக்கள் செறிந்துள்ள இடங்களில் உள்ளர். காவலரண்களை அமைத்தது எமக்குப் பலத்த அச்சத்தைத் தருகின்றது. எமது பகுதியில் அமைக்கப்பட்ட காவலரண்கள் அகற்றப்பட்டு பொலிசாரை சேவையில் அமர்த்த வேண்டும் என பொது மக்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரை அகற்றும் அதிகாரம் எமக்கு இல்லை ஆளுனருடனும், ஜனாதிபதியுடனும் தெரியப்படுத்தி இராணுவத்தினரைக் குறைக்கும் நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மூவினங்களையும் சேர்ந்த 42 பேர் கலந்து கொண்டனர்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#99
<b>சிறீலங்கா காவற்துறை மா அதிபர் நேற்று திருமலை வருகை </b>

<b>மக்களின் இயல்பு நிலை திரும்பவேண்டுமெனில் இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும் </b>

இதற்கு பதிலளித்த காவற்துறை மா அதிபர், படைத்தரப்பு குறைப்புப்பற்றி தான் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதேநேரம் திருமலையில் காவற்துறையினரின் தொகையினை கூட்டவுள்ளதாகவும், ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக தயங்காமல் காவற்துறையினரை அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
<img src='http://www.sankathi.org/images/stories/january2006/chandra_furnaando5.jpg' border='0' alt='user posted image'>
சங்கதி
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள லிங்கநகர் பகுதியில் உள்ள தனது வயலில் காவலுக்கு நின்ற விவசாயி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை பின்னிரவு வேளையில் தமது வயல்வெளிக்கு காவலுக்குச்சென்ற ஆறு பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜா (அகவை 50) எனபவரே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தினைத்தொடர்ந்து இப்பிரதேச விவசாயிகள் தமது வயல் வெளிகளை காப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதை இட்டு அச்சம் கொண்டுள்ளதுடன் அதனைத் தவிர்த்தும் வருகின்றனர்.

சங்கதி
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)