Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகுத்தறிவு.....
#1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>பகுத்தறிவு
-------------------</span>

கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் !
அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.!
மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் !
பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் !

பசி
பசியென்றழுதிருக்கமாட்டோம் !
பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் !

விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்!
வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்!
கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் !
காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் !

பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே..........
நிமிடத்துக்கு நிமிடம் அழுகையின் மடியில் தலை சாய்த்தே உயிர் துறக்கிறோம் !
ஒவ்வொன்றை நினைத்து......... அழுது....
இல்லை எல்லாமே எனக்காய் வேணும் என்று அழுதழுது.!!
<b> .. .. !!</b>
Reply
#2
[quote=Rasikai][b]<span style='font-size:25pt;line-height:100%'>பகுத்தறிவு
-------------------</span>

கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் !
அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.!
மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் !
பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் !

பசி
பசியென்றழுதிருக்கமாட்டோம் !
பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் !

விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்!
வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்!
கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் !
காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் !

பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே..........
நிமிடத்துக்கு நிமிடம் அழுகையின் மடியில் தலை சாய்த்தே உயிர் துறக்கிறோம் !
ஒவ்வொன்றை நினைத்து......... அழுது....
இல்லை எல்லாமே எனக்காய் வேணும் என்று அழுதழுது.!!

ரசிகை. கவிதை நல்லாய் இருக்கு.
ஆமாம் அண்மையில் வந்த உங்கள் எல்லா கவிதைகளும் நிஐ வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது. ஏமாற்றங்கள் தூக்கங்கள் எல்லாவற்றையும் உங்கள் கவி வடிவில் எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#3
ம்ம்ம்ம்.... பகுத்தறிவை தராமலே விட்டு இருக்கலாம் என்று நினைக்கிறிங்களா??? கூடவே ஆசை பாசம் கனவுகள் இலக்குகளையும் தராமால் விட்டு இருக்கலாம்.

கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Quote:காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் !

ம்ம்..கடவுள் கேட்காமல் தருவதில் என்னவோ வள்ளல் தன்..கேட்டால் மட்டும் தருவதில்லை..
உண்மையாகவே அழகான கவி ரசி அக்கா...உங்கள் கவிகளை வாசிக்க எனக்கு மறுபடியும் கவிதை எழுத ஆர்வம் வருதா என்று பார்க்கிறேன்.. :roll: :roll:
..
....
..!
Reply
#5
அன்புத் தோழி இரசிகை...

தலைப்பும், விடயமும் நல்லதாக இருந்தாலும், நீங்கள்
எழுதியதில் கவித்துவம் இல்லை. உங்கள் முன்னைய
கவிதைகளோடு ஒப்பிடும்பொழுது இதை கவிதையாக
பார்க்க முடியவில்லை. வழமையான சாதாரணர்களின்
புலம்பலாகவே இந்த வரிகளையும் பார்க்கமுடிகிறது.
கவிதைக்குரிய மாறுபட்ட பார்வையும், உணர்வுகளின்
வெளிப்பாடும் காணப்படவில்லை.

முடிந்தால் மறுபடி இதே தலைப்பில் கவிதை எழுதுங்கள்.
எதிர்வினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடம்
இருப்பதை அறிந்ததால் மட்டுமே இந்த கருத்து இங்கே
இடப்பட்டுள்ளது.

நன்றி.

Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)