ஹரினி.. உங்களுக்கும் உங்கள் போன்றோருக்குமாக..
நீங்கள் EU மாணவர் என்றால் பிரித்தானியாவில் எந்தச் சிக்கலும் இன்றி கல்வியைத் தொடரலாம். பிரித்தானிய மாணவர்களுக்குரிய நிதிச் சலுகைகள் எல்லாம் உங்களுக்கும் இருக்கும். உங்களிடம் ஏற்கனவே உள்ள கல்வித் தகமைகளைப் பாவித்தும் பிரித்தானியாவில் எங்கும் கல்வியைத் தொடரலாம். ஆங்கிலம் பிரச்சனை என்றால் உங்கள் தற்போதிய ஆங்கில அறிவின் அடிப்படையில் குறைந்தது 3 - 6 மாத காலம் IELTS பயில்விப்பதன் மூலம் வழி காட்டுவார்கள். உங்களிடம் உயர்கல்விக்கான ( பல்கலைக்கழகக் கல்விக்கான) தகமைகள் எதுவும் இல்லை என்றால் கூட வயதுக் கட்டுப்பாடுகள் (Mature students ஆக -அனுமதியின் போது 20 வயதைப் பூர்த்தி செய்யின்) ஏதும் இன்றி college களில் Access courses கற்கை நெறிகளைப்
http://www.ucas.co.uk/ucc/access/ewni/questions.html பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்துக்கு நுழையலாம்.
இல்லை நேரடியாக பல்கலைக்கலைக்கழகத்திற்கு நீங்கள் குறைந்த கல்வித் தகமையோடு ( இதுதான் என்று ஒரு தகமை அங்கு அனுமதிக்கு கோரப்படுவதில்லை) விண்ணப்பிக்க விரும்பின் Foundation degree course
http://develop.ucas.com/FDCourseSearch/About.htm வழங்கும் பல்கலைக்கழகங்களை அல்லது college களைத் தெரிவு செய்து அதற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 4 வருடக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து நீங்கள் விரும்பிய துறையில் சிறப்புப் பட்டம் பெறலாம்..! இவை எதற்கும் வயதுக் கட்டுப்பாடில்லை.
மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு செல்ல அடிப்படைக்கல்வித் தகமைகளுடன் சில பல்கலைக்கழகங்களில் அனுமதிப் பரீட்சைக்கும் தோற்ற வேண்டும்..
http://www.ucas.co.uk/tests/msat.html http://www.ucas.co.uk/tests/bmat.html
மேலும் உங்களிடம் பிரான்ஸ் உயர்கல்விக்கான தகுதி இருப்பின்
http://www.ucas.co.uk/candq/index.html இவ்விணையத்தளத்திற்கு சென்று உங்கள் தகமைப்படி பிரித்தானியாவில் பல்கலைக்கழகளில் அல்லது கொலிஜ்களில் அனுமதிக்கான நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் உயர்கல்வித் தகமை இருப்பின் மேலே கூறியபடி Access or Foundation degree க்கு விண்ணப்பிப்பது வீண் காலதாமதத்தை உண்டு பண்ணும்.
பட்டப் பின் படிப்புத் (postgraduate) தவிர்ந்த ஏனைய உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டின் பிரித்தானியாவில் UCAS-
http://www.ucas.co.uk (இதில் அனைத்து விபரங்களும் உண்டு. நீங்கள் நேரடியாக தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்..!) மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பிரித்தானிய கல்வி நடைமுறைகள் பற்றி அறிய இங்கு செல்லுங்கள்..
http://www.ucas.co.uk/candq/curr2000/changes_14_19.pdf
நாமறிந்த வகையில் இவற்றை தந்தோம். வேறு மார்க்கங்கள் இருந்தால் இங்கு பிரித்தானியாவில் வாழும் பலர் இருக்கிறார்கள்..அவர்களும் உதவுவார்கள் என்று நம்புகின்றோம்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>