Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடிய தேர்தல் - 2006
#1
<img src='http://www.thestar.com/images/thestar/img/2006_election_header.jpg' border='0' alt='user posted image'>
கனடாவின் பாரளுமன்ற தேர்தல் இன்று காலையிலிருந்து இரவு 8.30 வரை நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கருத்துக்கணிப்புக்களில் கன்சவேசிட்டி கட்சியினர் முண்ணனியில் இருந்தாலும் இதுவரை கிடைக்கப்பட்ட முடிவுகளின் படி லிபரல் கட்சி முண்ணனியில் இருக்கின்றது. அதனைத்தொடர்ந்து கன்சவேசிட்டி கட்சியினர் இரண்டாம் நிலையிலும் மூன்றாவது இடத்தில் புதிய ஜனநாயகக்கட்சியும் நான்காவது இடத்தில் கீயூபக்குவா கட்சியும் இருக்கின்றன. வெற்றி தோல்விகள் இன்னும் முடிவாகத நிலையில்... தொடர்ந்து தேர்தல் முடிவுகளுக்கு இணைந்திருங்கள்....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<img src='http://www.cbc.ca/canadavotes/images/election_heads.jpg' border='0' alt='user posted image'>
படி கன்சவேசிட்டி கட்சி முண்ணனியில் இருக்கின்றது. அதனைத்தொடர்ந்து லிபரல் கட்சியினர் இரண்டாம் நிலையிலும் மூன்றாவது இடத்தில் புதிய கியூபக்குவாக்கட்சியும் நான்காவது இடத்தில் புதிய ஜனநாயகக் கட்சியும் ஐந்தாவதிடமாக சுயற்சைக்குழு ஒன்றும் இருக்கின்றன

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<b>இறுதியான தேர்தல் முடீவுகள்
<span style='color:blue'>கன்சவேசிட்டி கட்சி-122 ஆசனங்கள்
லிபரல் கட்சி-102 ஆசனங்கள்
கியூபக்குவா கட்சி-50 ஆசனங்கள்
புதிய ஜனநாயக கட்சி-32 ஆசனங்கள்
சுயேற்சைக்குழு -1 ஆசனம்

</span></b>
<i>தகவல் மூலம்: கனடிய தேசிய தொலைக்காட்சி -சீ.பி.சி</i>

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<img src='http://images.townhall.com/images/ap/2006/01/CANADA_ELECTIONS/CONTH11701190132.jpg' border='0' alt='user posted image'>
தற்போதைய நிலவரப்படி கனடாவின் 27 வது பிரதமராகக் கூடிய வாய்வு Stephen Harper அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. எது எப்படியாயினும் எந்த ஒரு கட்சியாலும் நிலையான. அதாவது முழுப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க முடியாது. என்பது குறிப்பிடத்தக்கது. மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கனசவேசிட்டி கட்சியினர் முண்ணினியில் நிற்க்கின்றனர். பலமான ஒரு ஆட்சியை அவர்கள் அமைக்க வேண்டுமெனில், புதிய ஜனநாயகக்கட்டியுடன் அல்லது கியூபக்குவா கட்சியுடன் கூட்டு சேரவேண்டும். ஆனால் கியூபக்குவா பரிவினைவாதக் கொள்ளையுடையது. அவர்கள் பிராஞ்ச் மக்களுக்கு கியூபெக் மாநிலம் சொந்தமானதுஇ எனவே தாம் பிரிந்து செல்ல அனுமதிக்குமாறு குரல் கொடுத்து வருகின்றனர். எனவே இவர்களுடன் கூட்டமைப்பை ஏற்ப்படுத்தினால் கனசவேசிட்டியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதே நேரம் புதிய ஜனநாயகக்கட்சியுடன் கூட்டு சேருவதென்பது முடியுமா என்பது தெரியவில்லை. எது எப்படியோ லிபரல் ஆட்சி என்பது இல்லை என்று ஆகிவிட்டது எனலாம்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41249000/jpg/_41249260_ap_sharper203.jpg' border='0' alt='user posted image'>
<b>கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும் அடுத்த பிரதமர் பதவியை எதிர்நோக்கியிருப்பவருமான Stephen Harper</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41249000/gif/_41249766_can_parl2_gra203.gif' border='0' alt='user posted image'>
<b>கனடிய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரம்</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41249000/gif/_41249658_con_parliament5_gra416.gif' border='0' alt='user posted image'>
<b>கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற ஆசனங்களின் விபரத்தை இந்த படம் காட்டுகின்றது</b>

படங்கள் மற்றும் வரைபடம் நன்றி - பிபிசி

12 வருட லிபரல் ஆட்சி கைமாறியதற்கான காரணம் அந்த ஆட்சியின் மீதான் ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று கூறப்படுகின்றது. கனடாவில் அதிக மக்கள் வாழும் பிரதேசமான ஒன்ராரியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக வெற்றிகளை பெற்றிருக்கின்றது. போல் மார்ட்டின் தலைமையிலான லிபரலின் ஆட்சிகாலத்தில் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவு அவ்வளவு நல்ல நிலையில் இருக்கவில்லை. இந்த புதிய தலைமைத்துவம் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த விரும்புவது குறிப்பிடத்தக்கது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
கனடா நாட்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி

கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஸ்டீபன் ஹார்பருக்கு வெற்றியை வழங்கிய அந்நாட்டு வாக்காளர்கள், 12 வருட கால விபரல் கட்சி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, ஹார்பர் அவர்களை நாட்டின் அடுத்த பிரதமராக்கியுள்ளனர்.

ஊழலை ஒழித்து, வரிகளைக் குறைத்து, சிறிய அமைச்சரவையைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்குவேன் என்ற வாக்குறுதிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹார்பர் அவர்கள், ஒரு சிறுபான்மை அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று தனது வெற்றி உரையின் போது ஹார்பர் உறுதியளித்தார்.

தனது போட்டியாளருக்கு வாழ்த்து தெரிவித்த பதவி விலகும் பிரதமர்போல் மார்ட்டின் அவர்கள், தான் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகப் போவதாகவும் கூறியுள்ளார்.

பொருளாதாரத் திட்டங்களில் பலமான நல்லெண்ணத்தைப் பெற்றிருந்த லிபரல் கட்சி, தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாதிக்கப்பட்டிருந்தது.

BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கைகள் தமிழர் நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடியவை என்று கள நண்பர் ஒருவர் சொன்னார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டதாகவும் அறிந்தேன். இது குறித்த மேலதிக தகவல்களை கனடிய நண்பர்கள் தாருங்களேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
நன்றி நிதர்சன் மதன் தகவல்களுக்கு.
கன்சர்வேட்டிங் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பலான தமிழர்கள் வசிக்கும் ரொன்ரோ பகுதியில் அவர்களுக்கு எந்த தொகுதியிலும் வாக்கு கிடைக்க வில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் போடப்போடுவதாக அறிவித்து இருந்தார்கள். லிப்ரல் கட்சிக்கே ரொன்ரோ மக்களின் வாக்கு சென்றுள்ளது. ஆகவே இப்போது அரசாங்கத்தை அமைக்கும் கன்சர்வேட்டிங் கட்சி ரொன்றோ மக்களின் தேவைகளை புர்த்தி செய்வார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது?
தமிழர்கள் சர்பாக போட்டியிட்டா யாருமே வெற்றி பெறவில்லை. கிறீன்பார்ட்டி என்று சொல்லப்படும் கட்சியில் மிசிசக்கா என்ற பகுதியில் போட்டியிட்டவர் ஒரு தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Reply
#9
RaMa Wrote:நன்றி நிதர்சன் மதன் தகவல்களுக்கு.

ஆனால் நிதர்சனத்தில் கொன்சவேட்டிவ் கட்சியின் கருத்து சிங்களக்கைகூலிகளினால் மிகைப்படுத்தி வந்ததாகக்கூறப்படுகிறதே?. எது உண்மை?
http://www.nitharsanam.com/?art=14785
,
,
Reply
#10
Mathan Wrote:<b>கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கைகள் தமிழர் நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடியவை </b>
என்று கள நண்பர் ஒருவர் சொன்னார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டதாகவும் அறிந்தேன். இது குறித்த மேலதிக தகவல்களை கனடிய நண்பர்கள் தாருங்களேன்

அப்பிடி ஒண்ணும் ஆகிவிடாது-
எந்த ஒரு நாட்டிற்கும்- வெளிதெரியா-வெளியுறவு கொள்கை ஒன்று இருக்கு- அதன் மீது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் செல்வாக்கு செலுத்த முடியாது!

புஷ் ஆட்சிக்கு வந்ததால்தான்- நெருக்கடி- உலக போராட்ட இயக்கங்களூக்கு வந்தது- என்று நினைப்பவர்கள்-அதை ஆரம்பித்துவைத்ததே கிளிங்டன் என்று புரிந்துகொண்டால் உண்மை புரியலாம்!

லிபரல் ஆட்சியில் இருந்தால் நல்லம்-
கொன்செவேர்டிவ்- வென்றால் - எமக்கு பாதகம் என்று நினைப்பவர்கள்- ஒன்றை நினைவு வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

அது-இந்த கடும்போக்கு கட்சியின் மீது மாநிலங்கள் அளவில் பெரியதொரு வெறுப்பு உண்டாகி இருக்கிறது-

ப்ளொக்-கியுபெக்குவா- எனும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருக்கிறது- ஆகவே- கியுபெக் மாநிலம்- மீண்டும் தன் பிரிந்து போகும் - கொள்கையை தீவிரபடுத்தும்- இதன் மூலம் உள் நாட்டு நெருக்கடி மோசமாகலாம்-
இதுக்குள்ள எங்கட பிரைச்சினை எல்லாம் கவனம் எடுக்க அவர்களூக்கு நேரம் வராது- வெயிட் அண்ட் சீ! 8)
-!
!
Reply
#11
கன்சவேட்டிவ் கட்சியின் கொள்ளை..அதன் கருத்து போ பழமை வாதமே!... அகதி அந்தஸ்து.. முதல் பல கொள்ளைகள் கன்சவேட்டிவ் கட்சியின் கறைமுகமாக கொள்டகைகளாக இருக்கின்றது. வெறும் புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே கொண்ட கனடாவில் அவர்களுக்கு எதிரான கொள்ளையுடைய கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தொடர்ந்து இன்றை ரொரன்ரோவில் பேசப்பட்ட சில விடையங்கள்... கன்சவேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் பலர் (குறிப்பாக தமிழர்கள்) திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. அத்தோடு சுகாதார அட்டை () இல்லாமல் செய்யப்படுமெனவும் சிலர் அச்சம் தெரிவித்தனர். தற்போது ஆர்.சி.எம்.பியினரால் சிலரது (அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளவர்கள்) கைத்தொலைபேசிகள் இடைமறித்து கேட்க்கப்படுவதாகவும்., சிலர் அழைக்கப்பட்டு அவர்களை நாட்டை விட்டு அனுப்புவது என்று முடிவாகியுள்ளதாகவும்..அறியப்படுகின்றது.. (இதை உறுதிப்படுத்த முடியவி;ல்லை)

தமிழர்களது தமிழீழத்திற்கான ஆதரவை மழுங்கடிக்கும் முயற்ச்சி இவர்கள் ஆட்சிக்காலத்தில் எப்படி அமையும் என்பதே பல தமிழர்களது கவலையாக உள்ளது.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
அத்தோடு மதன் கூறியது போல ஸ்hPபன் கார்பர் ஒரு அமெரிக்க பிரியர் என்பதை விட அமேரி;க்காவின் கைப்பொம்மை என்று சொல்லலாம். அமெரிக்கா எதை செய்கிறதோ அதை செய்ய ஸ்hPபன் காபர் தயங்கமாட்டார்... அப்படிப்பட்டவர் ஈழத்தமிழர் விடையத்தில் அமெரிக்காவுக்கு அப்பால் சென்று அதரவு வழங்குவார்களா?... என்பது கேள்விக்குரிய விடையம்... வர்னன் சொன்னது போல கியுபக்குவா கட்சியினர் அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் லிபல் ஆட்சியை கலைத்து ஒரு தேர்தல் நடத்த வேண்டிய சுூழலை போல் மார்டீனுக்கு உருவாக்கியது கன்சவேட்டிவ் கட்சி மற்றும் கியுூபக்குவா கட்சிகள் தான். எனவே ஆட்சி கலைப்பில் மறைமுகமாக உருவான ஒப்பந்தம் மறைமுகமாகவே தொடர வாய்ப்பிருக்கின்றது. அதாவது கூட்டமைப்பு என்றில்லாமல் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலையில் தான் கியுூபக்குவா இருக்கின்றது. ஆதனால் இவர்களது ஆட்சியில் அவர்களது பிரிவினை வாத கொள்ளையை கடுமையாக்குவார்கள் என்று சொல்ல முடியாது. எது எப்படியோ அடுத்தடுத்த வருடங்களில் மீண்டுமொரு தேர்தலை கனடா எதிர்கொள்ள வேண்டிவரும் என்று நினைக்கிறேன்.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
ரமா நீங்கள் சொல்வதன் படி, பெரும்பலான தமிழர்கள் லிபரல் கட்சிக்கே வாக்களத்துள்ள அதேவேளை கணிசமானோர் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர்.

ஆனால் கொன்சர்வேட்டிவ் கட்சி விடுதலைப் புலிகளை தடை செய்யப்பேவதாக அறிவித்ததார்கள் என்பதற்காக அவர்கள் ரொறன்ரோவில் தோல்வியடையவில்லை.

கனடாவின் அனைத்து நகர்புற தேர்தல் தொகுதிகள் எவற்றிலும் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறவில்லை, மாறக லிபரலும், என்.டி.பியுமே வென்றுள்ளன.

கடந்த சில தேர்தல்களில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எந்தவொரு தேர்தல் தொகுதியிலும் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறவில்லை.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#14
மின்னல் Wrote:ரமா நீங்கள் சொல்வதன் படி, பெரும்பலான தமிழர்கள் லிபரல் கட்சிக்கே வாக்களத்துள்ள அதேவேளை கணிசமானோர் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர்.

ஆனால் கொன்சர்வேட்டிவ் கட்சி விடுதலைப் புலிகளை தடை செய்யப்பேவதாக அறிவித்ததார்கள் என்பதற்காக அவர்கள் ரொறன்ரோவில் தோல்வியடையவில்லை.

கனடாவின் அனைத்து நகர்புற தேர்தல் தொகுதிகள் எவற்றிலும் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறவில்லை, மாறக லிபரலும், என்.டி.பியுமே வென்றுள்ளன.

கடந்த சில தேர்தல்களில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எந்தவொரு தேர்தல் தொகுதியிலும் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறவில்லை.

பொதுவாகப் பார்த்தால் கனடாவின் கிழக்குப்பகுதியில் லிபரல் கட்சியும் மேற்குப்பகுதியில் கன்சேர்வேட்டிவ் கட்சியும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.
கனடாவின் கிழக்குபகுதி குறிப்பாக ஒன்ராரியோ மாநிலம் அதிகளவு குடிவரவாளர்களைக் கொண்ட பகுதி. குறிப்பாக ரொறன்ரோ பெரும் பாகத்தில் எந்தவொரு பகுதியிலும் கனசர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற முடியாது போனதற்கு தமிழர்கள் மட்டும் காரணமல்ல, ஒட்டுமொத்த ரொறன்ரோ பெரும்பாக வாக்காளர்களுமே காரணம். இப்பிரதேசமே கனடாவில் அதிகளவு குடிவரவாளர்களைக் கொண்ட பிரதேசமாகும். இதில் லிபரல் கட்சியும் புதிய ஜனநாயகக் கட்சியும் வென்றிருந்தார்கள். ரொறன்ரோ, மொன்றியல், வன்குவர் ஆகிய குடிவரவாளரின் தெரிவாக உள்ளதும் கனடாவின் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இம் மூன்று முக்கிய நகரங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சியினால் ஒரு ஆசனத்தைத்தானும் பெற முடியவில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#15
Aravinthan Wrote:
RaMa Wrote:நன்றி நிதர்சன் மதன் தகவல்களுக்கு.
கன்சர்வேட்டிங் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பலான தமிழர்கள் வசிக்கும் ரொன்ரோ பகுதியில் அவர்களுக்கு எந்த தொகுதியிலும் வாக்கு கிடைக்க வில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் போடப்போடுவதாக அறிவித்து இருந்தார்கள். லிப்ரல் கட்சிக்கே ரொன்ரோ மக்களின் வாக்கு சென்றுள்ளது. ஆகவே இப்போது அரசாங்கத்தை அமைக்கும் கன்சர்வேட்டிங் கட்சி ரொன்றோ மக்களின் தேவைகளை புர்த்தி செய்வார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது?
தமிழர்கள் சர்பாக போட்டியிட்டா யாருமே வெற்றி பெறவில்லை. கிறீன்பார்ட்டி என்று சொல்லப்படும் கட்சியில் மிசிசக்கா என்ற பகுதியில் போட்டியிட்டவர் ஒரு தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நிதர்சனத்தில் கொன்சவேட்டிவ் கட்சியின் கருத்து சிங்களக்கைகூலிகளினால் மிகைப்படுத்தி வந்ததாகக்கூறப்படுகிறதே?. எது உண்மை?http://www.nitharsanam.com/?art=14785

அச்செய்தி வந்த கனடாவின் தேசிய செய்தித்தாளில் இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவரும் தொழில் புரிகிறார். 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#16
varnan Wrote:
Mathan Wrote:<b>கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கைகள் தமிழர் நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடியவை </b>
என்று கள நண்பர் ஒருவர் சொன்னார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டதாகவும் அறிந்தேன். இது குறித்த மேலதிக தகவல்களை கனடிய நண்பர்கள் தாருங்களேன்

அப்பிடி ஒண்ணும் ஆகிவிடாது-
எந்த ஒரு நாட்டிற்கும்- வெளிதெரியா-வெளியுறவு கொள்கை ஒன்று இருக்கு- அதன் மீது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் செல்வாக்கு செலுத்த முடியாது!

புஷ் ஆட்சிக்கு வந்ததால்தான்- நெருக்கடி- உலக போராட்ட இயக்கங்களூக்கு வந்தது- என்று நினைப்பவர்கள்-அதை ஆரம்பித்துவைத்ததே கிளிங்டன் என்று புரிந்துகொண்டால் உண்மை புரியலாம்!

லிபரல் ஆட்சியில் இருந்தால் நல்லம்-
கொன்செவேர்டிவ்- வென்றால் - எமக்கு பாதகம் என்று நினைப்பவர்கள்- ஒன்றை நினைவு வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

அது-இந்த கடும்போக்கு கட்சியின் மீது மாநிலங்கள் அளவில் பெரியதொரு வெறுப்பு உண்டாகி இருக்கிறது-

ப்ளொக்-கியுபெக்குவா- எனும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருக்கிறது- ஆகவே- கியுபெக் மாநிலம்- மீண்டும் தன் பிரிந்து போகும் - கொள்கையை தீவிரபடுத்தும்- இதன் மூலம் உள் நாட்டு நெருக்கடி மோசமாகலாம்-
இதுக்குள்ள எங்கட பிரைச்சினை எல்லாம் கவனம் எடுக்க அவர்களூக்கு நேரம் வராது- வெயிட் அண்ட் சீ! 8)

கியூபெக் மாநிலம் உடனடியாக பிரிந்து போவதற்கு கோருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் இதுவொரு நீறுபூத்த நெருப்பு. இவ்வருடம் இத்தேர்தல் வருவதற்கு முக்கிய காரணங்களில் அன்று கியூபெக் மாநிலம் பிரிந்து போவதை தடுப்பதற்கு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஊழல் இடம்பெற்றுஅதனை விசாரித்ததும் ஒரு காரணம். அதன் மூலம் லிபரல் அரசின் மீது மக்களை வெறுப்படைய வைத்து அதை தமக்கு சாதகமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தின.

அடுத்து இன்றைய நெருக்கடியான அரசியல் சூழலில் தனிப்பெரும்பான்மை இல்லாத அரசு ஒரு முக்கியமான விடயத்தில் தன்னை ஈடுபடுத்தி ஒரு இக்கட்டுக்குள் மாட்ட விரும்பாது என்றே எதிர்பார்க்கிறேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#17
அச்செய்தி வந்த கனடாவின் தேசிய செய்தித்தாளில் இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவரும் தொழில் புரிகிறார்

செய்தித்தாளில் மட்டுமல்ல தேசிய தொலைக்காட்சியான சி.பி.டி ()யிலும் சிங்களவர்கள் பலர் பணிபுரிகின்றார். இலங்கைக்கான செய்தியாளர் கூட ஒரு சிங்களவர் தான். ஆனால் கன்சவேட்டிவ் கட்சியின் கருத்து எவ்வளவுக்கு மிகைப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சிங்களவர்கள் போல மேற்கில் ஒன்றையும் கிழக்கில் ஒன்றையும் சொன்னார்கள் (தமிழர்கள் விடையத்தில்) என்பது சரியே... கன்சவேட்டிவ் கட்சி தமிழர்களது நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கொள்ளை உடையது என்பதை நிதர்சனமோ அல்லது இதர ஊடகங்களோ கனடிய தமிழர்கள் மத்தியில் இருந்து மாற்ற முடியாது....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41266000/jpg/_41266526_jacks.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரஞ்ச் தலைவர் சிராக்</b>

நேற்று கனடிய வானொலி நிலையமான CKOI இலிருந்து பிரஞ்ச் தலைவர் Jacques Chirac ஐ போனில் தொடர்பு கொண்டு புதிய கனடிய பிரதமர் போல் பேசியுள்ளனர். இந்த உண்மையை அறியாத பிரஞ்ச் தலைவர் புதிய கனடிய பிரதமர் Stephen Harper உடன் பேசுவதாக நினைத்து கொண்டு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தது சிறிது நேரம் பேசிய பின்பு பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பின்பு தொலைபேசியில் பேசியவர் நான் கனடிய பிரதமர் அல்ல என்றும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்காக கனடிய வானொலி நிலையத்தில் இருந்து போன் செய்ததாகவும் கூற அதை கேட்டு சிரித்தாராம் பிரஞ்ச் தலைவர்.

மூலம் - பிபிசி இணையம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)