Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர்
#1
வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை.

கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள்

நானும் அறிந்தால் போடுகின்றேன்
>>>>******<<<<
Reply
#2
ம்ம் இன்னும் சில நாட்களில் சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு சரியான பதில் கிடைக்கும்.

சந்தியா சரியான நேரத்தில் தகவலைத்தந்தீர்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
<b>வவுனியாவில் வைரவரவர்புளியங்குளம் பகுதியில் சிறுவர் பூங்காவுக்கு அண்மையாக அமைந்திருக்கும் வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் புகழ்பெற்று விளங்கும் "வீனஸ் கல்வி நிறுவணம்" இயக்குனர் & வர்த்தக பாட ஆசிரியரான சந்திரன் சேர் எண்டு அனைவராலும் அழைக்கப்படும் கமலச்சந்திரன் ஆசிரியர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன், காரணம் 1999ம் ஆண்டு O/L வர்த்தகம் அவரிடம் படித்தேன், பாட நேரத்தில் கண்டிப்பான ஆசிரியராகவும், பாட நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் நண்பனாராகவும் பழகுமொரு ஆசிரியர், சரியாக 6 வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை இங்கே கூறினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்,

1999ம் ஆண்டு அங்கே கல்வி கற்றுக்கொண்டு இருக்கும்பொழுது எமக்கு வயசு 15, அந்த நேரத்தில் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் கிரிக்கட் பைத்தியம், அந்த வேளையில் O/L பரீட்சை நேரம், அப்பொழுது சந்திரன் சேர் சொல்லுவார், கிரிக்கட் விளையாடுங்க, ஆதே நேரம் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று, ஒரு முறை எங்கள் வகுப்பில் உள்ள சில குசும்பு நண்பர்கள், வவுனியா பஸ்ராண்டிற்கு நேரே இருக்கும் கிரிக்கட் கடை ஒன்றிற்கு சென்று அங்கே துடுப்பாட்ட மட்டைகளை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அப்பொழுது எங்கள் நண்பர்களில் ஒருத்தன் கிரிக்கட் பற் ஒன்றை சுட எத்தனித்தபொழுது கையும் மையுமாக மாட்டிவிட்டார் (கொக்கபுறா பட் விலை 400 ரூபா) அவரை கடையில் வைத்து கடை உரிமையாளர்கள் அதட்டி கேட்டபொழுது அவன் நான் வீனஸ் கல்வி நிறுவனத்தில் படிக்கிறேன் எண்டு சொல்லிட்டான், அப்பொழுது இந்த விடயம் சந்திரன் சேரின் காதுக்கு போய்விட்டது, உடனடியாக அவர் அந்த கடைக்கு சென்று அவர்களிடம் இவர்கள் என்னுடைய மாணவர்கள்தான், விளையாட்டு வயசு என்று கூறிவிட்டு அவர்களிடம் இவர்கள் செய்த இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார், அப்படியே அந்த துடுப்பாட்ட மட்டையையும், என்னொரு விலை உயர்ந்த மட்டையையும் தான் காசு குடுத்து வாங்கிக்கொண்டு வந்து தந்தார், தரும்பொழுது ஆசிரியர் எண்ட வகையில் அந்த சம்பவத்தோடு சம்பத்தப்பட்ட மாணவர்களை தண்டிக்கவும் தவறவில்லை, (அதில் ஈடுபட்ட அனைவருக்கு பூசை விழுந்தது), தண்டிக்கு பொழுது (தடியால் அடிக்கிறது) சொன்னார், என்னட்ட கேட்டிருந்தால் வேண்டி தந்திருக்கமாட்டனோ என கேட்டார், இப்பொழுதும் அந்த நிகழ்வு என் மனதில் இருக்கின்றது,

மீண்டும் ஒரு புத்திஜீவி, பண்பான, ஒருவரை இழந்துவிட்டோம், என்னுடன் சந்திரன் சேரிடம் ஒன்றாக படித்த களத்தில் இருக்கும் என்னொரு உறுப்பினர் SHAN XP மாணவரும் இப்பொழுது புலத்திலே இருக்கிறோம். எங்கள் அன்பு ஆசிரியரின் குடும்பத்துக்கு அனுதபம் தெரிவிக்கிறோம், அத்துடன் சந்திரன் ஆசிரியரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். Cry Cry Cry</b>

அடிகடி என்னை செல்வா செல்வா என்று அவர் அழைக்கும் முறை இப்பொழுதும் எனது மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது,,, Cry Cry
[b]

,,,,.
Reply
#4
வாசிக்கும் போதே கண் கலங்கிறது செல்வன்!

சந்திரன் மாஸ்ரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-!
!
Reply
#5
செல்வன் நன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
<b> .. .. !!</b>
Reply
#6
செல்வனுக்கும் அவருடைய ஆசிரியர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
செல்வன் அண்ணாநன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்

எனக்கு அவருடைய குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது அவர்கள் மூலம் தான் இச்செய்தியை அறிந்தேன்
>>>>******<<<<
Reply
#8
கைக்கூலிகள் அநியாயமாக ஒரு ஆசிரியரின்; உயிரை எடுத்துவிட்டார்களே. எத்தனை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படப்போகின்றார்கள். கைக்கூலிகளை விட்டுவைத்தது நாம் செய்த பெரிய தவறு.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)