Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி
#1
<b>யாழிலிருந்து இன்று 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன </b>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 20:08 ஈழம்] [வி.நவராஜன்]
யாழ். குடா நாட்டிலிருந்து 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிக்குள் வந்துள்ளன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

யாழிலிருந்து இன்று காலை 8.00 மணியிலருந்து மாலை 5.00 மணிவரையிலுமாக 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்புப் பகுதிக்குள் வந்துள்ளன.

இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகமாலையிலுள்ள பிரதான பேரழிவு முகாமைத்துவப் பிரிவுப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களது விருப்பத்திற்கு அமைவான இடங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இடம்பெயர்ந்தோருக்கான விசேட போக்குவரத்துச் சேவைக்கூடாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அந்தந்த இடங்களில் அமைந்துள்ள நலன்பேணும் நிலையங்களிலும் உறவினர்கள் உள்ளவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகமே தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.

சமைத்த உணவு உட்பட உலர் உணவுப் பொருட்கள மற்றும் ஏனைய வகையிலான நிவாரண உதவிகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தும் மற்றும் ஏனைய இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களிலுள்ள நலன்பேணும் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குடுப்பங்களுக்கான நிவாரண உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

யாழ். குடாநாட்டிலிருந்து நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி நகர்ப் பகுதியை அண்மித்த உறவினர் வீடுகளிலும், நலன்பேணும் நிலையங்களிலும் தங்கிவாழ்கின்ற குடும்பங்களுள் 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான வீட்டு உபகரணங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனமான கிளிநொச்சி அபிவிருத்தி புனர்வாழ்வுக் கழக நிறுவன வளாகத்தில் வைத்து வழங்கியது.

இதனிடையே கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள நலன்பேணும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களில் பலவற்றுக்கும் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான விட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

<i><b>புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#2
<b>வன்னிக்கு இடம்பெயர்ந்தோரை அனுப்பி வைத்த தமிழ் வர்த்தகர் சுட்டுப் படுகொலை </b>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:27 ஈழம்] [ம.சேரமான்]
யாழ். தென்மராட்சியில் தமிழர் வர்த்தகரான இந்திரன் என்ற நடராஜா யோகேஸ்வரராஜ(வயது 30)வை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்தனர்.


கொடிகாமத்துக்கும் சாவகச்சேரிக்கும் இடையே ஏ௯ நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் வர்த்தகரான இந்திரன் என்ற நடராஜா யோகேஸ்வரராஜ, புத்தூர் சந்தியில் வீரசிங்கம் மகா வித்தியாலம் அருகே உணவகம் மற்றும் போக்குவரவு நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

இந்த சம்பவத்தில் நடராஜா யோகேஸ்வரராஜவின் உறவினரான நந்தகுமார்(வயது 23) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த சில நாள்களாக யாழிலிருந்து இடம்பெயர்ந்தோரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு முகமாலை சந்திய+டாக அனுப்பி வைக்கும் போக்குவரவு ஒழுங்குகளை இந்திரன் மேற்கொண்டிருந்தர்.

இந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதிக்கு அருகாமையில் சிறிலங்கா இராணுவ சோதனைச்சாவடி மற்றும் சிறிலங்கா இராணுவ முகாம் ஆகியவை அமைந்துள்ளது.

சம்பவம் நடந்த ஏ௯ நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பாதுகாப்புப் படையினர் நடமாட்டம் உள்ள அதிக போக்குவரவு உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து இடம்பெயருவதைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.


<i><b>புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#3
<b>ஈபிடிபினரால் ஊர்காவற்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை.</b>
ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.இவர் தனது வார்த்தக நிறுவனத்தைப் ப+ட்டிவிட்டு இரவு 8.00 மணியளவில் வீட்டுக்கு வரும் வேளையில் காத்திருந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியாகராசா ரவிச்சந்திரன் வயது 34 என்னும் இளம் குடும்பஸ்தரே துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி பலியாகியுள்ளார் இவரை அப் பகுதியில் நிலை கொண்டுள்ள ஈ.பி.டி.பி ஆயுதப்படையினரும் மற்றும் கடற்படையினரும் இனைந்தே கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை முகாமுக்கு அண்மையாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டக் கூடியதாக இருப்பதுடன் ஏற்கனவே இப் பகுதியில் இடம் பெற்ற பல கொலைகளின் பின்னால் கடற்படையினரும் ஈ.பி.டி.பி.யினரும் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1991ம் ஆண்டு முதல் ஈ.பி.டி.பி.யினர் இப் பகுதி பொது மக்களை அடக்கு முறைக்குள் வைத்து அவர்கள் மீது பல் வேறு பலாத்கார செயல்பாடுகளையும் மேற் கொண்டு வந்தார்கள் ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொது மக்கள் ஈ.பி.டி.பி.யினரின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்ததன் காரணமாக இத்தகைய படு கொலைகளை செய்வதில் கடற் படையினரும் ஈ.பி.டி.பி.யினரும் ஈடுபடுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்

<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
Reply
#4
ஏ9 பாதை போக்குவரத்துக்கள் மூடப்பட்டுள்ளன.

இன்று மாலை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக படைச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏ 9 வீதியின் ஊடாக 52 வது படைத்தரப்பினருக்கு குடிநீர் எடுத்து வருவதற்காக பவுசருடன் முகாமை விட்டு வெளியே வந்த பொழுது, முகாமிற்கு வெளியே மறைந்திருந்த துப்பாக்கிதாரிகளினாலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஏ 9 பாதையின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தகவல் மூலம்-பதிவு.கொம்
"
"
Reply
#5
<b>யாழ். குடாநாட்டில் இரு மாத காலத்திற்குள் அறுபத்தொரு இளைஞர்களைக் காணவில்லை </b>

கடந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியான கடந்த செவ்வாய் வரை யாழ். குடாநாட்டில் 61 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் இரு வாரப் பகுதியில் மட்டும் 26 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அதில் 14 பேர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் ஒருவர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் குடாநாட்டில் 35 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 19 பேரில் 12 பேர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டோ அல்லது சிறிலங்கா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டோ உள்ளனர்.

எனினும் ஒட்டுமொத்தமாக கடந்த ஆறுவார காலத்தினுள் 52 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த டிசம்பர் 20 ஆம் நாள் தென்மராட்சியின் நுணாவில் பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் சுமார் 25 நாட்களுக்குப் பின்னர் சாவகச்சேரியில் சிறிலங்கா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். முருகதாஸ் தீபரூபன் என்ற அந்த இளைஞர் தற்போது காங்கேசன்துறை சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மல்லாகத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு இளைஞரான இரத்தினம் ஆனந்தராஜா (33) என்பவர் மல்லாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே யாழ். நகரில் நடந்த மரண ஊர்வலம் ஒன்றில் தொடர்ச்சியாக சீனா வெடியை வெடித்துச் சென்றவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

யாழ். கோணாவளைப் பகுதியில் கடந்த செவ்வாயன்று நண்பகல் மரண ஊர்வலம் ஒன்றில் வெடி வெடித்துச் சென்றுள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள இராணுவக் காவலரண் மீது கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடந்ததால் பீதியடைந்த படையினர் மரண ஊர்வலத்தில் வெடி கொளுத்திச் சென்றவர்களைத் தாக்கியுள்ளனர்.

இராணுவத்தினரின் இத்தகைய தாக்குதலை சற்றும் எதிர்பாராத மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் மரண ஊர்வலம் தடைப்பட்டது. பின்னர் ஒரு சிலரோடு மரண ஊர்வலம் மயானத்தைச் சென்றடைந்தது.

மேலும் யாழ். குடாநாட்டின் தீவுகளில் ஒன்றான அனலைத்தீவுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் கடந்த செவ்வாய்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அனலைத் தீவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விநாயகமூர்த்தி விநாயகராசா (40) என்பவர் கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தியின் வீட்டிற்கு சிறிலங்கா கடற்படையினருடன் சென்ற ஈ.பி.டி.பியினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ஊர்காவல்துறை சிறிலங்கா நிலையத்தில் விநாயகமூர்த்தியின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்ய சென்ற போதும் அம்முறைப்பாட்டை பொலிசார் ஏற்க மறுத்து விட்டனர்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#6
<b>யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பினை பலப்படுத்துவதில் ஸ்ரீலங்கா இராணுவம் மும்முரம் </b>


யாழ்ப்பாணத்தில் தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்துவதில் தற்போது ஸ்ரீ லங்கா இராணுவம் முழுவீச்சுடன் மும்மரமாக செயற்பட்டுவருவதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், ஸ்ரீலங்கா கடற்படையினரும், இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தமது மினி முகாம்கள், மற்றும் காவலரண்கள். மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில், புதிய பதுங்குகுழிகள், மேலதிக காவலரண்களை அமைத்து வருகின்றனர்.

இதனிடையே யாழ்ப்பாண மாநகர எல்லையினையும். 2000 ஆம் அண்டு தமிழீழ விடுதலைப்புலிகள், கடல்வழி தரையிறக்கம் இடம்பெற்ற பகுதியான கிழக்கு அரியாலை முன்னரங்கப்பகுதிகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை படைத்தரப்பினர் மும்மரப்படுத்தியுள்ளனர்.

பலாலி பிரதான இராணுவத்தளத்திலிருந்து மேலதிகமாக இந்தப் பகுதிகளுக்கு மேலதிகமாக படைத்தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய பல மினி முகாம்களும் இப்பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன.

மறுபுறத்தே ஸ்ரீ லங்கா கடற்படையினர் மீன்பிடி இறங்குதுறைகள், மற்றும் படகு இறங்குதுறைகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை பொதுமக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் முற்றாகத்தடை விதித்துள்ளனர். குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மற்றும் வடமராட்சி வடகிழக்கு பகுதிகளிலும், இரவு மீன்பிடிக்க முற்றாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தவிர குறிகட்டுவான் இறங்குதுறை, நெடுந்தீவில் மாவலித்துறை, என்பவற்றையும் இரவு வேளைகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தரை வழித்தொடர்புகள் அற்ற தீவுப்பிரதேசங்களில் மேற்குறிப்பிட்ட இறங்குதுறைகளே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply
#7
<b>இருட்டை சாதகமாகப் பயன்படுத்தி பொது மக்களைத் தாக்கும் படையினர். </b>

யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நாளுக்கு நான் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு பொது மக்கள் உள்ளாகி வருகின்றார்கள். இலங்கை மின்சார சபையினர் இதற்கு ஒத்துப் போவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இராணுவத்தினர் பிரதாக வீதிகள் பலவற்றிலும் இரவு நேரத்தில் வீதிக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் இரவு நேரங்களில் வீதியில் உள்ள சந்திகளில் நிற்கும் போது மின் குமிழ்கள் இல்லாத பகுதியில் கடமையில் நிற்கும் இராணுவத்தின்க் ஒரு சிலர் இருட்டை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இரவு நேரத்தில் வரும் பொது மக்களை தாக்கி காயப்படுத்தி வருகின்றார்கள்

இலங்கை மின்சார சபையினர் இராணுவ முகாம்களுக்கு பாதுகாப்பு என்று கூறி அளவுக்கு அதிகமான மின்குமிழ்களைப் பொருத்திக் கொடுத்துள்ளதுடன் இராணுவத்தினர் திருட்டுத்தனமாகப் பெற்ற மின்சாரம் மூலமும் அதிக மின்குமிழ்களைப் பயன்படுத்தியும் வருகின்றார்கள்.

தற்போதைய யாழ் குடாநாட்டின் அவல நிலமையைக் கருத்தில் கொண்டேனும் குறிப்பாக மிகவும் முக்கியமான பிரதான வீதிகளில் போதிய மின் குமிழ்களைப் பொருத்தி பொது மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது அத்தியஅவசியமாகும்.வெறுமனே பொது மக்கள் பணத்தைப் பெற்று சேகரித்து வைப்பதினாலும் தென் பகுதிக்கு அனுப்புவதினாலும் எந்தப் பயனும் எற்படப் போவதில்லை இன்றைய நிலையில் பொது மக்களின் அவலங்களைத் தீர்க்கவும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியதும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மின்சார கபை உத்தியோகத்தர்களின் கடமையென்பதையும் சுற்று மனிதாபிமானத்துடன் மேற் கொள்ள வேண்டும் எள்பதையும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.


<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
Reply
#8
<b>சிறுப்பிட்டியில் வன்னியால் வந்தவர்கள் விபரம் சேகரிக்கும் படையினர் </b>

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் பொது மக்கள் மற்று கிராம அலுவலர்களிடம் வன்னியால் வந்தவர்கள் எனக் கூறி சிலருடைய பெயர்களை விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக சந்திக்குச் சந்தி நின்று இராணுவத்தினர் பொது மக்களிடமும் மற்றும் கிராம அலுவலர்களிடமும் வன்னியால் வந்தவர்கள் எனக் கூறி சிலருடைய பெயர்களை விசாரித்து வருகின்றார்கள் கல்வி மற்றும் மீள் குடியேற்றம் எனத் திரும்பி வந்தவர்களே இவர்களாவர்.இவர்கள் பற்றிய விபரங்களை இராணுவத்தினர் விசாரிப்பதனால் இம் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து மீண்டும் வன்னிக்குச் சென்றுள்ளார்கள்

இராணுவத்தினர் பொது மக்களை அநியாயமான முறையில் இத்தகைய தகவல்கள் மூலம் பெறப்பட்ட விபரங்களைக் கொண்டு அநியாயமான முறையில் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதினால் தமிழ் மக்கள் தொடர்ந்து நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் நாளாந்தம் இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள் தமிழ் மக்களுடைய அடிப்படை வாழ்வியல் உரிமையையே இராணுவத்தினர் அழித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தகைய சம்பவங்கள் சம்பந்தமாக இராணுவத்தின் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்
<b><i>
தகவல் மூலம்-பதிவு.கொம்</i></b>
"
"
Reply
#9
<b>நீதிமன்றக் கடமைகளை புறம் தள்ளியுள்ள அச்சுவேலிப் பொலிஸ்.</b>

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிசார் பொது மக்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புறம் தள்ளியுள்ளார்கள். தமக்குப் பாதுகாப்பு இல்லையெனக் கூறி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிலமையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அச்சுவேலிப் பொலிசார் நீதிமன்றக் கடமைகளுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளமையால் நீதிமன்றங்கள் செயல் இழுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

அச்சுவேலிப் பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் உள்ளதுடன் மேல் நீதிமன்றத்திலும் உள்ளன.

குறிப்பிட்ட வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்படகின்ற போதிலும் அச்சுவேலிப் பொலிசார் நீதிமன்றத்திற்கு சமூகம் கொடுக்காமையால் வழக்கை நடத்த முடியாத நிலமை காணப்படுகின்றது. வழக்காளிகள் எதிராளிகள் என பொது மக்கள் நீதிமன்றத்திற்கு சமூகம் கொடுக்கின்ற போதிலும் பொலிசார் வராமையால் பொது மக்கள் பாதிப்படைகின்றார்கள்.



அநியாயமாக பொது மக்கள் தொழிலை விட்டு வருவதுடன் சட்டத்தரனிகளுக்கு ஆயிரக் கணக்கில் பணத்தையும் அடிக்கடி கொடுக்க வேண்டிய அவல நிலமையும் காணப்படுகின்றது பொது மக்கள் விடயத்தில் பொலிசார் புறம் தள்ளி நடப்பதினால் பொது மக்கள் நீதிமன்ற செயல்பாட்டை புறம் தள்ளும் நிலமைக்கு செல்லக் கூடிய நிலமை உருவாகி வருவதாக நீதமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.

<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
Reply
#10
<b>யாழிலிருந்து இன்று 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன</b>
[ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2006, 21:25 ஈழம்] [வி.நவராஜன்]

யாழ். குடாநாட்டிலிருந்து 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்புப் பகுதிக்குள் வந்துள்ளன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

யாழ். குடாநாட்டிலிருந்து இராணுவ அச்சுறுத்தல்கள் காரணமாக நாளாந்தம் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேறுபடுகின்ற போதிலும் மக்களின் இடப்பெயர்வுகள் இன்று வரை தொடர்ந்த வண்ணமே இருந்து வருகின்றன.

இன்று காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரையிலுமாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள யாழ். குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்புத் தேடி வன்னிப் பெருநிலப் பரப்பிற்குள் சென்றுள்ளன.

வன்னிக்கு செல்கின்ற மக்களுக்கான சமைத்த உணவுகள் உட்பட போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேச மட்டங்களிலான நலன்பேணும் நிலையங்களிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே தொடர்நதும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

http://www.eelampage.com/?cn=23634

<i><b>புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#11
<b>சாவகச்சேரியில் ஒருவர் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயம் </b>


யாழ். சாவகச்சேரியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மீசாலை சந்தியில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவரான சந்திரகாசன் கிருஸ்ணகோபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது உணவகத்திற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சாவகச்சேரி சந்தைக்குச் சென்றவேளை அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்த யசோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுணாவில் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#12
<b>சாவகச்சேரியில் ஒருவர் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயம் </b>


யாழ். சாவகச்சேரியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மீசாலை சந்தியில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவரான சந்திரகாசன் கிருஸ்ணகோபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது உணவகத்திற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சாவகச்சேரி சந்தைக்குச் சென்றவேளை அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்த யசோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுணாவில் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#13
<b>யாழில் மாவீரர் குடும்ப உறுப்பினர் சுட்டுக்கொலை </b>

யாழ்ப்பாணத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த கந்தசாமி வைகுந்தன் (வயது 23) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மீசாலையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வகுப்புக்குச் சென்று விட்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கந்தசாமி வைகுந்தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அவரைத் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வரணி சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் முன்பாக கந்தசாமி வைகுந்தனை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

வரணி யாக்கலை பகுதியில் கந்தசாமி வைகுந்தன் குடும்பத்தினர் வசித்து வந்தனர். கந்தசாமி வைகுந்தனின் சகோதரர் மாவீரராக வீரச்சாவடைந்தவர்.

சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைகளையடுத்து வன்னிப் பகுதிக்கு அண்மையில் அக் குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர். தனது கல்விச் செயற்பாட்டுக்காக வரணியிலே கந்தசாமி வைகுந்தன் தங்கியிருந்த நிலையில் இன்று அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்


<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#14
<b>யாழில் பாதுகாப்பு நிலைகளை முழு வீச்சில் பலப்படுத்துகிறது சிறிலங்கா இராணுவம்!</b>

யாழ்ப்பாணத்தில் தமது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்துவதில் சிறிலங்கா இராணுவத்தினரும் கடற்படையினரும் தற்போது முழு வீச்சுடன் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது.


தமது மினி முகாம்கள், காவலரண்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் புதிய பதுங்குகுழிகள், மேலதிக காவலரண்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மாநகர எல்லையினையும், 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கடல்வழி தரையிறக்கம் நடந்த பகுதியான கிழக்கு அரியாலை முன்னரங்கப் பகுதிகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பலாலி பிரதான இராணுவத் தளத்திலிருந்து இந்தப் பகுதிக்குள் மேலதிகப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய பல மினி முகாம்களும் இப்பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன.

அதேபோல் மீன்பிடி இறங்குதுறைகளை பொதுமக்களும் கடற்றொழிலாளர்களும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா கடற்படையினர் முற்றாகத் தடைவிதித்துள்ளனர்.

குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் இரவு மீன்பிடிக்க முற்றாகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறிக்கட்டுவான் இறங்குதுறை, நெடுந்தீவில் மாவலித்துறை ஆகியவற்றையும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தரைவழித் தொடர்புகள் அற்ற தீவுப் பிரதேசங்களில் இந்த இறங்குதுறைகளே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவை தவிர யாழ். போதனா மருத்துவமனைக்கு முன்னால் வீதிக்கு நடுவே உள்ள வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை நிறுத்த சிறிலங்கா படையினர் தடை விதித்துள்ளனர்.

வாகனங்களுக்குள் குண்டுகள் மறைத்து வைக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இப்பகுதியில் வாகனங்களை யாரும் நிறுத்தக்கூடாது என்றும் படையினர் தடைவிதித்துள்ளனர்.

அப்பகுதியில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி படையினரால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை பொதுமக்களின் உரிமைகளை பறிப்பதாக யாழ். நலன்புரிச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புன்னாலைக்கட்டுவன் அச்செழுவில் உள்ள சிறிலங்காப் படைகளின் புலனாய்வாளர்கள் முகாமில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் செய்யப்படுகின்றன.

இப்பிரதேச மக்கள் படையினரது கொலை அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலாலி வீதியூடாக பயணம் செய்யும் மக்கள், அரச உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் வழிமறிக்கப்பட்டு விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் படைப் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வாகனப் பதிவிலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#15
<b>யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடரும் கொலைகள் </b>

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் கொக்குவில் கோண்டாவில் பகுதிகளில் இச்சம்பவம் இன்று நண்பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கோணாவளை ஒழுங்கையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் பலியாகியுள்ளார். இவர் அடையாளம் காணப்படவில்லை இதனைத் தொடர்ந்து மற்றும் ஒருவர் கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியில அதே நேரத்தில் சுடப்பட்டுள்ளார் இவரும் சையிக்கிளில் வரும் போது இனம் தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவி;கப்படுகின்றது.

இருவரும் இது வரையில் அடையாளம் காணப்படவில்லை இதே நேரம் ண்;மற்படி இறந்தவர்கள் சம்பந்தமாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோப்பாய் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் யாழ்மாவட்ட நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளார்கள்.

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply
#16
<b>யாழில் எப்போது முடிவுக்கு வரும் இராணுவ நெருக்குவாரங்கள்? </b>
[வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 18:38 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன.


யாழ்ப்பாண நிலைமையை விவரிக்கும் செய்திகளின் தொகுப்பு:

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் படையினரும் படைப் புலனாய்வாளர்களும் நடமாடுவதால் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மருத்துவமனையின் 24, 27 இலக்கங்களைக் கொண்ட விடுதிகள் படையினரால் கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவமனைக்குள்ளும், வாகன தரிப்பிடப் பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் ஆறு பேர் வரையிலானோர் ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மறைத்து வைத்த நிலையில் மருத்துவமனைக்கு வந்து செல்வோரை கண்காணிப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- அரியாலை கிழக்கில் உள்ள கடலோரக் காவலரண்களை பலப்படுத்த கோயிலாக்கண்டி தனங்கிளப்பு பகுதிகளில் இருந்து இரவு பகலாக பெருமளவான பனை மரங்கள் உழவு இயந்திரங்களிலும் கனரக வாகனங்களிலும் படையினரால் தறித்து எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இம் மரங்களை வீதியோரப் படையினரின் பாதுகாப்புடன் பிரதான பாதை வழியாக அரியாலைக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கும் மக்கள், கச்சாய் தொடக்கம் கோயிலாக்கண்டி, அரியாலை, கொழும்புத்துறை வரையிலான கடற்கரைப்பகுதிகளில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

- யாழ். குடாநாட்டிலிருந்து படையினரின் அச்சுறுத்தலால் வெளியேறி வன்னிக்கு வரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் படையினரது சுவரொட்டிகள் முகமாலை இராணுவ சோதனைச் சாவடியில் ஒட்டப்பட்டு உள்ளன.

அச்சுவரொட்டியில் மக்களை அச்சுறுத்தும் கடுமையான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் 'இச்சுவரொட்டிகளை படித்து விட்டு வன்னிக்குச் செல்' என பொதுமக்களை படையினர் நிர்பந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

- யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பேரூந்து நிலையப் பகுதிகளில் இரண்டிற்கு மேற்பட்டோர் கூடி நிற்பதையோ, கூட்டமாக நடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று சிறிலங்கா படையினர் எச்சரித்துள்ளனர்.

- சிறிலங்கா படையினரின் வாகனங்கள் வருகின்ற பொழுது மக்கள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை அந்த இடத்திலேயே நிறுத்தித் தமது வாகனங்கள் சென்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் படையினரின் வாகனங்களுக்கு அருகருகே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று படையினர் எச்சரித்துள்ளனர்.

படையினர் பல புதிய புதிய நடைமுறைகளை ஏற்படுத்தி வருவதாகவும் இந்நடைமுறைகளால் யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- யாழ். குடாநாட்டில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புக்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களால் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் தற்பொழுது ஏற்பட்டுள்ள இராணுவ நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடாநாட்டில் நாளாந்தம் தொடர்கின்ற அச்சம் கலந்த சூழ்நிலைகளால் வீடுகள் கட்டும் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் தொடர்வதாகவும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், இப்பகுதிகளுக்குச் சென்று வரக்கூடிய நிலை தற்பொழுது தொடர்கின்ற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#17
[size=18]<b>தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்: சிங்களப் படைகளுக்கு உயர்கல்வி மாணவர்கள் எச்சரிக்கை!</b>

தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று சிங்களப் படைகளுக்கு யாழ். உயர்கல்வி மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

வடக்கு, கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவமும் அதனோடு இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்டு வரும் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்று சிங்களக் ஆட்சிப் பீடம் கூறிக்கொண்டிருக்க மறுபுறம் சிங்கள இராணுவமும் அதன் ஒட்டுக்குழுக்களும் படுகொலைகளை மேற்கொண்டு வருவதிலிருந்து சிங்களப் பேரினவாதத்தின் உண்மைப் போக்கினை அறிந்து கொள்ள முடிகின்றது.

எமது அப்பாவி மக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் எனப் படுகொலை பட்டியல்கள் நீண்ட வண்ணம் உள்ளது. இத்தகைய இராணுவ அராஜகத்தால் மக்கள் பயப் பீதியுடன் வாழ்கின்றனர். எனவே இந்தக் கொலைகளை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் இப் படுகொலைகளை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

நாளுக்கு நாள் எமது உறவுகளை நாம் இழந்து கொண்டிருக்க முடியாது. வரணியில் சுட்டிபுரத்தில் எமது மாணவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்தோடு திருமலையில் சுடரொளி செய்தியாளரும் மூதூரில் குடும்பஸ்தர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே இத்தகைய இராணுவ காடைத்தனங்களானது தென்னிலங்கை பேரினவாதிகளின் ஆயுதமுனையினால் தமிழ் மக்களை அடக்குவதற்கான கபட நோக்கத்தையே புலப்படுத்தி நிற்கின்றது.

சிங்கள இராணுவத்தின் ஆயுதப் படுகொலை கலாச்சாரம் வளர்கின்ற போது எவ்வாறு பேச்சுக்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பது? எவ்வாறு பேச்சுக்கள் சாத்தியமாகும்?

இதுவே இன்றைய எமது மக்களின் மனங்களில் எழுந்து நிற்கின்ற விடை காணமுடியாத வினாவாகும்.

எனவே இத்தகைய படுகொலைகளை உயர்கல்வி மாணவர்கள் ஆகிய நாம் கண்டிக்கின்றோம். தமிழ் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று சிங்கள ஆட்சியர்களுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் எச்சரிக்கை விடுகின்றோம்.

பல்வேறு உரிமைகளை பற்றிக் கதைக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும், சிறிலங்கா இராணுவத்தினது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்?

ஒரு தலைப்பட்சமாக கண்டிக்க முற்படும் அமெரிக்காவுக்கு இப்படுகொலை அராஜகம் கண்களுக்கு புலப்படவில்லையா?

சர்வதேச சமூகம் விழித்தெழுந்து சிங்கள பேரினவாதப் போக்கினை நிறுத்தி தமிழர்களுக்கான நிரந்தர நியாயமான தீர்வினை எட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும்.

இல்லையேல் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமையை கையில் எடுப்பார்கள் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#18
<b>யாழில் அதிகரிக்கும் ஈ.பி.டி.பி.யினரின் அச்சுறுத்தல் </b>

யாழ். குடாவில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. குழுவினரது அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலிருந்து வீதியில் செல்லும் மக்களை வீடியோ புகைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நவீன வீடியோ கமராக்கள் மூலம் அலுவலகம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வீதியில் செல்வோர் நாளாந்தம் வீடியோ கமராக்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மற்றும் சிறீதர் திரையரங்கு அமைந்துள்ள பகுதிகளில் உயரமான மாடிக் கட்டடங்களிலும் ஈ.பி.டி.பியினர் காப்பரண் அமைத்து தமது அலுவலகத்தை படையினருடன் இணைந்து கண்காணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் பகல் வேளைகளில் ஈ.பி.டி.பி குழுவினர் சாதாரண உடைகளில் ஆயுதங்களுடன் சர்வசாதாரணமாக படையினருடன் நடமாடி வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாவகச்சேரி, நுணாவில், கம்புளியடி, வரணி, கொடிகாமம் பதிகளில் அவர்களின் அராஐக நடவடிக்கைகள் அதிகளவில் காணப்படுவதாக தேசப் பற்றாளர்கள் பலரை குறிவைத்து செயற்படுவதுடன் புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று பல இடங்களில் அவர்கள் எச்சரித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

<i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#19
<b>இராணுவ நடமாட்டத்தால் யாழ். மாணவர்களின் கல்வி செயற்பாட்டில் பாரிய தேக்கம் </b>

யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரது நடமாட்டத்தால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாரிய தேக்கம் அடைந்துள்ளன.


பாடசாலைகளின் நுழைவாயில் முன்பாக பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்சப்படும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்கின்றனர்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் நகரம் தொடக்கம் தெல்லிப்பழை நுழைவாயில் வரை சிறிலங்கா இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் வருகை மிகக் குறைவானதாக இருப்பதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் மகா வித்தியாலம், மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயம், சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலயம், இனுவில் மத்திய கல்லுரி, கொக்குவில் தமிழ் கலப்பு பாடசாலை, கொக்குவில் இந்து கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன.

இதனிடையே யாழ். சுன்னாகம், கல்வியங்காடு, தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

அப்பகுதிகளில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை அவர்களும் மேற்கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#20
<b>யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கு அஞ்சி வீடுகளிற்குள் முடங்கும் மாணவர்கள்
</b>

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட நெருக்கடியான சூழ் நிலமை காரணமாக பாடசாலைக்குச்; செல்ல பிள்ளைகள் மறுத்து வரும் ஓரு நிலமை எற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த காலத்தில் இராணுவத்தினராலும் மற்றும் இராணுவப்புனாய்வாளர்களாலும் பரவலான முறையில் வீடுகளிலும் மற்றும் வீதிகளிலும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் சுடப்பட்டும் தாக்கப்பட்டும் வந்ததையும் அவதானித்ததன் மூலம் பாதிப்படைந்த பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அருகாமையில் இராணுவத்தினர் இருப்பதினால் தமக்கும் அத்தகைய நிலமை ஏற்பட்டு விடும் எனக் கூறி பாடசாலைக்கு செல்ல மறுத்து வருவதாக தெரிய வருகின்றது. காலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்தாலும் கூட பாடசாலைக்கு அருகாமையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தகை; கண்டதும் வீட்டிற்குச் செல்லப் போவதாக அடம்பிடிக்கும் பிள்ளைகள் பெற்றோர்களை தங்களுடன் பாடசாலையில் நிற்கும் படி வேண்டுகின்ற நிலமையே யாழ்ப்பாணத்தில் இப்போது காணப்படுகின்றது.

குறிப்பாக பாடசாலைகள் அனைத்தின் வாசலிலும் இராணுவத்தினர் நிலைகொண்டு இருப்பதினால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு பயப்படுவதுடன் பெற்றோர்களும் கூடப் பயப்படும் நிலமையே காணப்படுகின்றது. இராணுவத்தினர் தற்போதைய சூழ் நிலையிலாவது பாடசாலைச் சுற்றாடலில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனப் பலரும் கோரிவருகிறார்கள்.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)