01-22-2006, 12:13 PM
<b>ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்தியா "பல்டி" அடிக்குமா?</b>
<img src='http://www.yarl.com/other/uploads/vaiko1.jpg' border='0' alt='user posted image'>
தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளின் புதிய வியூகங்கள் தொடர்பான செய்திகள் எல்லாம் "அரசியலில் எதிரியும் இல்லை..நண்பனும் இல்லை" என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
தமிழகத் தேர்தல் களம் இரண்டு அணிகளைக் கொண்டது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான 7 கட்சி கூட்டணி. இதில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பிரதான கட்சிகள்.
இவர்களுக்கு எதிர் அணியான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். பிரதான கட்சிகளின் கூட்டணி இல்லாமல் இதுவரை தனித்தே நிற்கிறது.
இவர்களைத் தவிர தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், விஜயகாந்தின் கட்சி, கார்த்திக்கைத் தலைவராகக் கொண்டுள்ள பார்வார்டு பிளாக் என சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பல தேர்தல்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையானது தமிழகத் தேர்தல் களத்தில் இம்முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஈழத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டு தமிழகம் கொதித்து எழுந்தது.
தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, ராமதாஸ் கண்டனக் கூட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து கூட்டணியின் தலைவரான கலைஞர் கருணாநிதியும் தமது கூட்டணிக் கட்சியினரது கருத்தே தமது கருத்து என்று கூறினார்.
ஒரு திருப்பமாக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சென்னையில் சந்திக்க மறுத்தார்.
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவுக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு உலகம் அறிந்தது. இருவரும் இன்னொரு உடன்பிறவா சகோதரிகளாகவே அடையாளம் காணப்பட்டு வந்தனர்.
தமிழகத் தேர்தல் களத்தை மனதில் கொண்டு மகிந்த ராஜபக்சவை ஜெயலலிதா தவிர்த்தாரா, சந்திரிகாவின் வேண்டுகோளை ஏற்று மகிந்த ராஜபக்சவின் மூக்கை உடைத்தாரா என்பது ஜெயலலிதா ஜெயராமுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
சரி இப்போது..தேர்தல் களத்துக்கு வருவோம்.
இந்திய மத்திய அரசில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய கட்சிகள் ஒன்றாக இடம்பெற்றிருப்பதன் மூலமே இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் வழமையான வல்லாதிக்கப் போக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை.
சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் உதவக் கூடும் என்று ஒவ்வொரு முறையும் செய்திகள் வெளியான போதெல்லாம் புதுடில்லிக்கு ஓடோடிச் சென்ற வைகோ, ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு அங்குலத்தையுமே தடுத்தார் என்றால் மிகையில்லை. மகிந்த ராஜபக்சவின் அண்மைய இந்திய வருகையின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூட, இந்தியா-சிறிலங்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் கைவிடப்பட்டமைக்கு வைகோவின் பங்கு பாரியதானது.
இந்திய அரசாங்கத்தில் வைகோவின் கட்சி கூட்டணிக் கட்சியாக நீடிக்கும் வரையில் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் கால்களும் கைகளும் கட்டப்பட்டுத்தான் இருக்கும். அதற்கு காரணம் வைகோவின் செயற்பாடுகளை அந்தக் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகள் எதுவும் எதிர்க்கப்போவதில்லை. இதனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்- இந்திய அரசின் பிரதான கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடமையும் நெருக்கடியும் இந்திய அரசின் இறுதிநாள் வரை நீடிக்கும்.
ஆனால் இதுநாள் வரை ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொள்கையோடுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயற்பட்டு வருகிறார். உச்சகட்டமாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.
தமிழகத்தில் ஈழ விடுதலைப் புலிகளின் கொட்டத்தை ஒடுக்கிய ஒரே முதல்வர் நானே என்றும் கருணாநிதிதான் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர் என்றும் யார் சொல்வார்கள் என்று கேட்டால் அது ஜெயலலிதாதான் என்று எல்லோரும் சொல்லிவிடலாம்.
எதற்காக இந்தப் பீடிகை என்று கேட்கிறீர்களா?
ஆம். நீங்கள் ஊகிப்பதும் நம்ப முடியாத ஒன்றும் இப்போது அரங்கேறப் போவதாக தமிழகத்திலிருந்து உறுதிப்படுத்தப்படுகிற தகவல்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஆம்.
ஜெயலலிதாவின் அணியில் வைகோ இணைகிறார் என்பதுதான் அது.
பொடா சட்டத்தின் கீழ் தம்மை சிறையிலடைத்த அதே ஜெயலலிதாவுடன் வைகோ இணையக் கூடுமாம்.
தமிழ்நாட்டில் தாம் எப்போதும் கருணாநிதி தலைமையிலான கூட்டணியிலே நீடிப்பதாகவும் கருணாநிதிதான் முதல்வராக பதவியேற்பார் என்றும் வீர முழக்கமிட்டு வந்த வைகோ, அண்மைக்கலமாக இந்த சுருதியை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 21 ஆசனங்களுடன் போட்டியிட்டது மறுமலர்ச்சி தி.மு.க. இம்முறை ஆகக் கூடிய அளவில் ஏறக்குறைய 60 ஆசனங்களை தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கருத்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் வைகோவுக்கு 60 ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்பது நடக்கவே நடக்காத ஒன்று.
ஏனெனில் தமிழகத்தில் உள்ள மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 234.
இதில் தனிப்பெரும்பான்மை பெற திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடக் கூடிய தொகுதிகள் 130-140 வரையாகும். இதர 100 தொகுதிகளை காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., 2 கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு 40-45, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 25 முதல் 27 வரை, மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு 20-22, கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 15-18 என்றுதான் அனேகம் ஒதுக்கீடு செய்ய முடியும்.
ஆகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் அளவில்தான் இந்த முறையும் போட்டியிட முடியும்.
ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அணியில் அக்கட்சி தனியாக இருப்பதால் தன்னுடன் வரும் ஏதோ ஒரு கூட்டணிக் கட்சிக்கு ஆகக் கூடிய ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
அந்த ஆகக் கூடிய ஆசனங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உள்ளது.
ஏனெனில் இந்திய மைய ஆட்சி நடத்தும் காங்கிரசின் பிரதான கூட்டணிக் கட்சி தி.மு.க.. அதனால் காங்கிரசு கட்சி, அணி மாறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
பாட்டாளி மக்கள் கட்சிக்கான கதவை முதலிலே மூடிவிட்டதாகக் கூறுவதுபோல் அந்தக் கட்சியின் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை அண்மையில் ஜெயலலிதா தன் பக்கம் இணைத்துக் கொண்டுள்ளார்.
அதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான சந்தர்ப்பம் இது என்று சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா ஜெயராமின் கணக்கு சரியாகிவிடும் என்பதைப் போல் தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் வைகோ மற்றும் அவர்களது கட்சியினரது செயற்பாடுகள் இருப்பதாக தமிழக பத்திரிகைகளும் சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் தெரிவிக்கின்றன.
அதுவும் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தொடங்கிய முதல் பிரச்சார இயக்கத்தில் வைகோவின் பேச்சுதான் இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதா ஆட்சியை அகற்ற வலியுறுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தினர்.
விருதுநகரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் காலத்துக்கு முன்பெல்லாம் நான் தி.மு.க. கூட்டணியில்தான் இருப்போம்; கருணாநிதிதான் முதல்வர் என்றெல்லாம் கூறி வந்த வைகோ, விருதுநகர் கூட்டத்தில் அதுகுறித்து எதுவும் பேசாததோடு ஜெயலலிதா எதிர்ப்பு முழக்கத்தை மட்டுப்படுத்தியிருப்பதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேபோல் அண்மைக்காலங்களில் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும், ஆகக் கூடிய ஆசனங்களை அளிக்காவிட்டால் கூட்டணி மாறுவோம் என்று பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக பேசி வருகிறார் என்றும் இதை வைகோ கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன என்றும் தமிழக ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க வைகோ தயாராகிவிட்டார் போல்; அதனால்தான் தி.மு.க. மீதான விமர்சனங்களை வைகோ சுட்டிக்காட்டாமல் மவுனமாக இருக்கிறார் என்று தி.மு.க. தரப்பினர் குமுறுகின்றனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டங்களிலும் கூட அனைத்து நிர்வாகிகளும் தாங்கள் வகிக்கிற தி.மு.க.வை சாடி வருவதும் அதற்கான காரணங்களை பட்டியலிடுவதுமாகவும் இருந்து வருகின்றனர். அதையும் வைகோ கண்டுகொள்ளுவதில்லை என்றும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதால்தான் அவர்களை வைகோ பேச அனுமதிக்கிறார் என்றும் தி.மு.க. தரப்பு கூறி வருகின்றனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊசலாட்ட நிலையை உள்வாங்கிக் கொண்ட தமிழக உளவுத் துறையும் ஜெயலலிதாவின் நிழல் ஆலோசகர் சசிகலா நடராசனும் இது தொடர்பிலான பேச்சுகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அணியில் வைகோ இணைந்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.
என்றைக்கும் ஈழத் தமிழர் பிரச்சனையில் வைகோ ஆதரவானவராகத்தான் இருக்கிறார்.
ஒரு சிக்கலான காலகட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சனையானது இறுதி காலகட்டத்தில் இருக்கும்போது தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு எதிர்நிலை எடுப்பதைத் தடுக்க வைகோவின் கட்சி இந்திய அரசாங்கத்தில் இருக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்பது ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் விருப்பம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த விடயத்தில் வெளிப்படையாக வைகோவைப் போல் செயற்படாவிட்டாலும் எதிர்க்காமல் இருந்துவருவதால் இந்திய அரசினது நிலைப்பாடானது தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
கடந்த காலத்தில் வைகோ, ஜெயலலிதா அணியில் இருந்த போதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா தன் கருத்துகளை மாற்றிக்கொண்டுவிடவில்லை. வைகோதான் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேரிட்டது என்பதையும் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அணி மாற்றத்துக்காக வைகோ தரப்பிலிருந்து ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் மீண்டும் ஜெயலலிதாவை விட்டு வைகோ விலகவும் செய்யலாம்.
ஆனால் கருணாநிதி நல்லவரா? ஜெயலலிதா பரவாயில்லையா? என்பதன் அடிப்படையில் தனது கட்சி நலனைக் கருத்தில் கொண்டு வைகோ எடுக்கப் போகும் முடிவு, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே விடயம் முகப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது