Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்
#1
<span style='color:brown'>தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்


நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார் படத்திற்கான தமிழீழ தேசியத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் அணிவித்தார்கள் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவான போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர் இவரின் இறுதிச் சடங்குகள் நாளையதினம் கொழுபில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. </span>

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#2
<span style='color:darkblue'>மறைந்த தாயக மூத்த படைப்பாளி <b>ஞானரதன் </b>அவர்களுக்கு சிரந்தாழ்த்தி அக வணக்கம் செலுத்துகிறோம்...

[b]கள உறவுகள் யாரேனும்
இவரது \"நேர்காணல்களை\"
இங்கு இணைக்கலாமே....
"ஞாயிரு தினக்குரல்" மற்றும்
"எரிமலை" இல் இவரது பக்குவப்பட்ட,
தேர்ந்த நேர்காணல்களைப் படித்ததாக நினைவு..</span>
"
"
Reply
#3
[size=18]<b>மூத்த படைப்பாளி ஞானரதன் சாவு - வன்னியில் வணக்க நிகழ்வு </b>

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தின் பல்வேறு படைப்புக்களிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு. ஞானரதன் அவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று முந்நாள் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரின் வணக்க நிகழ்வு நிதர்சனம் நிறுவனத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
சாவடைந்த இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வீர வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00ம ணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளீர் பொறுப்பாளப்பாளர் பிரேமிலா அவர்கள் ஏற்றிவைத்தார்.

தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் திரு.சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார். திரு. ஞானரதன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை ஊடகவியலாளர் திரு.விவேக் ஏற்றிவைத்தார்.

திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ தேசியத்தொலைக் காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

யாழ். அளவெட்டியைச் சேர்ந்த திரு. ஞானரதன் அவர்கள் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளியாவார்.

இவரது சிறந்த படைப்புக்களிற்காக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பலமுறை பரிசில்களை வழங்கி மதிப்பளித்துள்ளார்.

இவரிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலாகீர்த்தி என்ற விருதினை வழங்க அழைத்தபோது திரு. ஞானரதன் அவர்கள் அதனை வாங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#4
மறைந்த தாயக மூத்த படைப்பாளி ஞானரதன் அவர்களுக்கு சிரந்தாழ்த்தி அக வணக்கம் செலுத்துகிறோம்...
" "
Reply
#5
படைப்பாளி ஞானரதன் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
படைப்பாளி ஞானரதன் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது குடும்பம் சார்பாகவும் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன்.
<i><b> </b>


</i>
Reply
#7
புலிகளின் குரல் மூத்த நிகழ்சி ஒருங்கினைப்பாளரும் நிதர்சனத்தின்(இவர் நுாற்றிற்கு மேற்பட்ட ஒளிவீச்சு வீடியோ
சஞ்சிகைகளையும் பல திபை்படங்களையும் தானே கதை எழதி தயாரித்து வெளியிட்டவர் இவரது திரைப்பட பாடல் ஒன்று BBCயின் 10 பாடல்களில் 5வது இடத்தை பிடித்தது) திரைப்பட இயக்குனருமான ஞானரதன்
பிரிவால் துயருற்றிருக்கும் தமிழிழ மக்களுக்கும் அண்ணாரின் குடும்பத்தவருக்கும் என் அஞ்சலிகள்
Reply
#8
படைப்பாளி ஞானரதன் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது சார்பாகவும் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன்.
<b> .. .. !!</b>
Reply
#9
படைப்பாளி ஞானரதன் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்..
Reply
#10
திரு ஞானதரன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

Reply
#11
திரு.படைப்பளி அவர்களுக்கு அஞ்சலிகள்
[b][size=15]
..


Reply
#12
யாராவது அவர் இயக்கிய படங்களின் பட்டியலைத் தர முடியுமா?
Reply
#13
<span style='color:darkred'><b>படைப்பாளர் ஞானரதனுக்கு மாமனிதர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் கெளரவம்</b>

தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளரும், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளியும், சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளரும் சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தியவருமான மறைந்த ஞானரதனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருது வழங்கி கெளரவித்தள்ளார்.


விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும், விடுதலைக்காகவும், அயராது பாடுபட்ட ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்து விட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலில் மூழ்கிப் போய்க்கிடக்கிறது.

ஞானதரன் அண்ணன் என அனைவரும் அன்போடு அழைக்கும் திரு.வை.சச்சிதானந்தசிவம் ஒரு நல்ல மனிதர். நெஞ்சத்தில் நேர்மையும் உள்ளத்தில் உயர்ந்த எண்ணமும் கொண்டவர். எளிமை அவரோடு கூடப்பிறந்தது. அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார். அனைவரையும் கவர்ந்து கொண்ட உயரிய பண்பாளர்.

இவர் ஒருதேச பக்தர் எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும், போராளிகளோடு இணைந்து நின்று தாய விடுதலைப் போரில் பெரும் பழுக்களைத் தாமும் சுமந்து கொண்டார்.

நீண்டகாலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களில் சுமந்து தனது முமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார் தனது அறிவாற்றலினாலும், கடும் உழைப்பாலும், தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியபணி என்றுமே பாராட்டுக்குரியது. இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி, சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளர், சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார்.

பத்திரிகைகளிலும், சஞ்சிகைளிலும் ஓய்வில்லாது எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும், தேசப்பற்றையும் தட்டி எழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைக்கு சாட்டையடி கொடுத்து எமது தேசத்தில் உண்மை நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்

எல்லாவற்றுக்கும் மேலாக இவர் எமது விடுதலை இயக்கம் ஒளிப்படத்துறையில் இன்று நிகழ்த்தியுள்ள பெரும் பாய்ச்சலுக்கு நடு நாயமாக நின்று செயற்பட்டார். நிதர்சன நிறுவனம் தோன்றிய காலம் முதல் இற்றைவரை அதன் வேராகவும், விழுதாகவும் அதனைத் தாங்கி நின்று செயற்பட்டார். எமது விடுதலைப் போராளிகளை ஒளிப்படத்துறையில் பயிற்றுவித்து அவர்களைச் சிறப்பாக வழிப்படுத்தி நெறிப்படுத்தி, ஒரு தேசிய தொலைக் காட்சியை உலகம் பூராகவும் ஒளிபரப்புகின்ற அளவுக்கு வளர்த்தெடுப்பதில் அச்சாணியாக இருந்து செயற்பட்டார்.

சிறிய குறும்படம் முதல் முழுநீளத் திரைப்படம் வரை பல்வேறு ஒளிப்பேழைகளை ஞானதரன் என்ற பேரில் தயாரித்து நெறிப்படுத்தினார். இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து எமது விடுதலை இயக்கம் களத்திலே படைத்த சாதனைகளையும், குவித்த வெற்றிகளையும் ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகைகளாகவும், விபரணங்களாகவும், தயாரித்து அவற்றை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்த உதவினார். இவர் ஆரவாரம் இன்றி அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி அளப்பெரியது.

வை.சச்சிதானந்தசிவம் (ஞானதரன்) அவர்களின் இனப்பற்றுக்கும், விடுதலை பற்றிக்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளை கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். சுய வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து தேச விடுதலை என்னும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் நீங்காத நினைவுகளாக காலமெல்லம் நிலைத்திருப்பார்கள்.</span>

puthinam.com
"
"
Reply
#14
<span style='font-size:25pt;line-height:100%'><b>மாமனிதர் ஞானரதன்(வை.சச்சிதானத்தசிவம்) அவர்கள்</b></span>





<img src='http://img39.imageshack.us/img39/592/gnarathan14vv.jpg' border='0' alt='user posted image'>

<i><b>பட மூலம்- ஈழநாதம்- மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#15
<b>கிளிநொச்சியில் மாமனிதர் ஞானரதனுக்கு வணக்க நிகழ்வு

மாமனிதர் ஞானதரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.


கிளிநொச்சியில் உள்ள பண்பாட்டு மண்டபத்தில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் சி.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

முதன்மைச் சுடரினை போராளி தமிழ்க்கவி ஏற்றிவைக்க, மாமனிதர் ஞானதரனின் உருவப்படத்திற்கான ஈகச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலளர் அ.பசுபதிப்பிள்ளை ஏற்றிவைக்க, மலர் மாலையினை செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் ஏற்றிவைத்தார்

நினைவுரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன், தமிழீழ கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, புலிகளின் குரல் பொறுப்பாளர் நா.தமிழ்ழன்பன், நிதர்சனப் பொறுப்பாளர் சேரலாதன், படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் போராளிகள், படைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

<i>[b]புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#16
<b>கிளிநொச்சியில் மாமனிதர் ஞானரதனுக்கு வணக்க நிகழ்வு

மாமனிதர் ஞானதரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.


கிளிநொச்சியில் உள்ள பண்பாட்டு மண்டபத்தில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் சி.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

முதன்மைச் சுடரினை போராளி தமிழ்க்கவி ஏற்றிவைக்க, மாமனிதர் ஞானதரனின் உருவப்படத்திற்கான ஈகச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலளர் அ.பசுபதிப்பிள்ளை ஏற்றிவைக்க, மலர் மாலையினை செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் ஏற்றிவைத்தார்

நினைவுரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன், தமிழீழ கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, புலிகளின் குரல் பொறுப்பாளர் நா.தமிழ்ழன்பன், நிதர்சனப் பொறுப்பாளர் சேரலாதன், படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் போராளிகள், படைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

<i>[b]புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#17
<b>இவர் ஒரு சிறந்த தேச பக்தன்</b>


தமிழர் தாயகத்தின் சிறந்ததொரு படைப்பாளியும்இ தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உரமூட்டிய யாழ் அளவெட்டியைச் சேர்ந்த ஞானரதன் என அழைக்கப்படும் வை.சச்சிதானந்தம் அவர்களின் சேவையைப் பாராட்டி தேசியத் தலைவர் அவர்கள் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர்நிலைப்படுத்தியுள்ளார்.

யாழ். அளவெட்டியைச் சேர்ந்த ஞானரதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சன நிறுவனத்தால் விபரணப் படங்கள் தயாரிப்பதற்கு மூல கர்த்தாவாகவிருந்தார். அதே போன்று குறும்படங்கள்இ முழு நீளப் படங்கள் என்பவற்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கர்த்தா. இவர் நிதர்சன நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘ஒளிவீச்சு|க்கு இவரது பங்களிப்பு அளப்பரியது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது பல்வேறு இடப்பெயர்வுகள் நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் மாமனிதர் ஞானரதன் அவர்களின் காத்திரமான பங்களிப்பும்இ அர்ப்பணிப்பும் இருந்துள்ளது.

தற்போது தமிழீழ தொலைக்காட்சி இன்று பரந்தளவில் தமது சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறான தமிழீழ தேசிய தொலைக்காட்சிச் சேவைக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஞானரதன். இவரின் சிறந்த படைப்புக்களுக்காக தேசியத் தலைவர் பலமுறை பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.

ஞானரதன் அவர்களின் மறைவின் பின் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ அதியுயர் விருதான மாமனிதர் விருது வழங்கி அவரை உயர் நிலைப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையில்:-

‘இவர் ஒரு சிறந்த தேசபக்தர். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாகக் கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் எனத் துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை எமது போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும் போராளிகளோடும் இணைந்து நின்று தாயக விடுதலைப் போரின் பெரும் பழுக்களைத் தானும் சுமந்து கொண்டார். நீண்ட காலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களைச் சுமந்துஇ தனது முதுமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார். தனது அறிவாற்றலாலும் கடும் உழைப்பாலும் தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணி என்றுமே பாராட்டுக்குரியது.

இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி. சிறந்த அரசியற் சிந்தனையாளர். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஓய்வில்லாமல் எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும் தேசப்பற்றையும் தட்டியெழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைகளுக்குச் சாட்டையடி கொடுத்துஇ எமது தேசத்தின் உண்மை நிலையை உலகிற்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்|| என தேசியத் தலைவர் சுட்டிக் காட்டுகிறார்.

இவர் மறைந்தாலும் இவரது சேவைகள்இ தமிழ்த் தேசியத்துக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அவரது படைப்புக்கள் என்பனவற்றை என்றும் தமிழீழம் நினைத்துக் கொண்டேயிருக்கும்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்- மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)