01-15-2004, 12:21 PM
தனித்தழிழ் ஈழம் தேடிய தமிழர் நம் வரலாற்றுப்பாதையிலே நாம் கடந்து வந்த காலத்தின் பதிவுகள் கனதியானவை. கண்ணீரும் சோகமும் கலந்து நிற்பவை. வீரமும் தீரமும் தியாகமும் நிறைந்து வழியும் இந்தப் பாதையின் வழி நெடுங்கே காணப்படும் கல்லறைகள் கால ஒட்டத்தின் மைல்க்கற்கள். தி;டமும் திண்மையும் கொண்ட இந்த விடுதலை வேள்விக்கு இன்று விடிவு கிட்டும் போன்ற தொரு தோற்றம். ஆம் சமாதானப்புறா சிறகடிக்க முயல்கிறது. சமாதானத்திற்கான பாதைகள் திறக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. வேட்டொலிகளை மட்டுமே கேட்ட நாம் இன்று வெடி கொளுத்தி விளையாட முடிகிறது. காரணம் சமாதானம். ஆயினும் கடந்த இரு தசாப்த காலமாக புரையோடிப்போன இந்த யுத்தத்தில் புண்ணாகிப் போன நம் தேசம் தன் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றது என்பது நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இனவெறி பிடித்த சில சிங்களப் பேரினவாதிகளின் சிற்றத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்ட உண்மையின் பதிவுகள் பிஞ்சு மனங்களால் என்றுமே மறக்க முடியாதவை. வாழ்வா?சாவா?என்ற கோட்டில் நின்று கொண்டு நாளை என்ன நடக்குமோ என்ற கேள்விக் குறியோடு வாழ்ந்த அந்த நாட்களை இன்று நினைக்கும் போது நெஞ்சம் குமுறுகின்றது. அன்று நாம் பயணிகள் விமானம் பார்த்ததில்லை. ஆயினும் குண்டு வீச்சு விமானங்களே எமக்கு காலைச் சூரியன். ஆட்லறி நம் அன்றாட வாழ்வின் அங்கமாய்ப் போனது வேட்டோசை கேட்கா விடின் நித்திரையே கொள்ள முடியாது போனது . பதுங்கு குழிகளேநாம் அனைவரும் ஒன்று கூடும் பொது இடம் ஆனது. கல்வி கற்க வேண்டிய வயதில் கையிலே துப்பாக்கி ஏந்திய சிறுவர்களுமஇ; கோரப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்களைத் தாங்கியபடி தாயின்றித் தந்தையின்றித். தனயனின்றி விரக்தியுடன் வாழும் விடலைகளையும்; இன்று வந்து போவோர் அறிவார்களா?.
இத்தனை இம்சைகளுக்கு மத்தியிலும் அன்று நாம் நாமாகவே வாழ்ந்தோம். நம்மை நாமே கட்டியெழுப்பினோம். ஜெயிக்க வேண்டுமென்ற வெறியோடு தொடர்ச்சியாக முன்னேறினோம் மேசை விளக்கிலிருந்தே படித்து நல்ல பெறுபேறுகளைப் பெற்றோம.; எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்மை நாமே இழக்கத் துணியவில்லை.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை சமாதானம். சகல விதமான ஆடம்பரப் பொருட்களும் சந்தைக்கு வநததுவிட்டது. வெளிநாட்டிலிருந்தெல்லாம் நம்மவர்கள் வந்துபோகிறார்கள். கூடவே பல அம்சங் களையும் கூட்;டி வருகிறார்கள் அன்றாட வாழ்வில் அடங்கிப் போயிருந்த நம் வாழ்க்கை இன்று ஆட்டம் காண்கிறது.அநியாய ஆசைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. கொலைகளும் கற்பழிப்புகளும் கூடிக் கொண்டே போகிறது.
கட்டுப்படுத்தக் கூடிய இந்தச் சீரழிவுகளை விட கட்டவிழ்த்து விடப்பட்ட கலாச்சாரச் சீரழிவுகள் தான் எத்தனை எத்தனை. அடக்க ஒடுக்கமாய் ஆடை அணிந்தது போய் அரை குறையாய் தெரிய அணிவது இன்று அத்தியாவசியமாகி விட்டது போற்தோன்றுகின்றது. அன்று மூடிக் கட்டிக் கொண்டு களை பிடிங்கிய நம்மவர்கள் அகதிகளாய் வெளிநாடு சென்று இப் போது அரை குறையோடு இங்கு வந்து ஆசை காட்;டினால் இங்குள்ளோர் நிலை என்னாhவது ? போதைப் பொருட்களும் நீலப் படங்களும் இன்று பொழுது போக்கு அம் சங்களாக மாறிப் போய் விட்;டது. மேசை விளக்கு மறைந்து மின்சாரம் வந்த போதும் கல்வித்தரம் மட்டமாகிப் போய் விட்டது.
இத்தனை காலமும் நாம் பட்ட கஸ்ரங்களின் மூலம் அடைய நினைத்து இதைத் தானா ? இந்தரச் சீரழிந்து போகும் கலாச்சாரத்துக்காகவா நாம் எம் சொத்துகளையும் சொந்தங்களையும்; பறி கொடுத்தோம் ? எந்த நோக்கத்துக்காக போராடத் தொடங்கினோமோ அந்த நோக்கத்தை மறந்து எம்மையே நாம் இழந்து எம் பண்பாடு கலாச்சாhரத்தை சீரழித்து இன்று கூனிக் குறுகிப்போய் நிற்கின்றோம். காலத்தின் கோலத்திற்கேற்ப நாம் மாறுவது வழவல ஆயினும் நாம் காத்து வந்த, ஏற்று வந்ந, நாகரீக உலகங்கள் யாவும் உயர்ந்த போற்றிய நம் விழிமியங்களை விட்டு நாம் ஒரு போதும் விலகிவிடக் கூடாது. வீரம் மட்டும் என்றுமே விலை போகாது, விவேகமுகம் கூட வராhவிட்டால்... எனவே சிந்தித்து செயற்படுவோம். மூன்றாம் ஈழப்போரை அறிவினாற்; தொடுப்போம். புதியதொருதேசம் படைப்போம், ஒன்று பட்ட இலங்கைக்குள்....
இப்படிக்கு...............கெளஷிகன்[/b]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
hock: