Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திமுகவில் சேருகிறாரா விஜய்?
#1
திமுகவில் சேருகிறாரா விஜய்?

<img src='http://img43.imageshack.us/img43/4866/vijayh4004cb.jpg' border='0' alt='user posted image'>

அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பொதுவாக தேசிய அளவில் பிரபலமான தமிழ்க் கலைஞர்கள்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஆனால் டெல்லிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஜய் கலந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் தயாநிதி மாறன் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தயாநிதி மாறனும், விஜய்யும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றும் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. வருமான வரி சோதனை, தயாநிதி மாறனுடன் டிவி பேட்டி, பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஆகியவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்து விஜய் திமுகவில் சேரப் போகிறார், வருமான வரி சோதனைகளிலிருந்து தப்பிக்க பேட்ச்அப் நடந்து விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.

மேலும், விஜய் நடித்த சச்சின் படத்தை வாங்குவது தொடர்பாக சன் டிவிக்கும், விஜய் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக சச்சின் படத்தையே சன் டிவி புறக்கணித்தது. சச்சின் படம் குறித்த விளம்பரமோ அல்லது பாடல் காட்சிகளோ, படக் காட்சிகளோ சன் டிவியில் இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு விஜய்யை ஒதுக்கி வைத்தது சன் டிவி.

இந் நிலையில் அத்தனைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தயாநிதி மாறன் மூலமாக சன் டிவியுடன் விஜய் சமரசம் பேசியிருக்கலாம், அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜய்யை தயாநிதி மாறன் அழைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டன.

ஆனால் இதையெல்லாம் விஜய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அரசியலில் ஏபிசிடி கூட தெரியாது. நான் பொங்கல் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எந்த விசேஷமும் இல்லை.

பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் கலந்து கொண்டேன். இதை பெருமையாகவே உணர்கிறேன். இதை வைத்து நான் திமுகவில் சேரப் போவதாக கூறுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் விஜய்.

Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
அவர் தந்தை திமுக ஆதரவாளர்.... இவர் திமுகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.....
,
......
Reply
#3
திமுகவுடன் தொடர்பு இல்லை: எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் நடிகர் விஜய் பேட்டி

அண்மையில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்பாடு செய்த விழாவில் விஜய் கலந்துகொண்டார். மேலும் தயாநிதி மாறன் - விஜய் உரையாடும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இதையடுத்து விஜய் திமுகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விஜய் கூறியதாவது:

என் அப்பா திமுக தலைவர் கருணாநிதி வசனத்தில் 4 படங்கள் தயாரித்து இயக்கி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த கட்சியைச் சார்ந்தவர் அல்ல. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. ஆனால் அந்த கட்சிக்கும் எனக்கும் என்த சம்பந்தமோ உறவோ கிடையாது.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு கலந்து கொண்ட டி.வி. நிகழ்ச்சி தற்செயலானது. அன்று மாலை நடக்க இருந்த தபால் வெளியீட்டு விழாவுக்காக காலையிலேயே நான் தில்லி சென்றுவிட்டேன்.

ஓய்வாக இருந்தபோது நானும் அவரும் தற்செயலாகச் சந்தித்து கொண்டோம். அப்போது இருவரும் உரையாடிய நிகழ்ச்சிதான் டி.வி.யில் ஒளிப்பரப்பானது. இதற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயம் அல்ல. சரியானதும் அல்ல.

இன்று மட்டுமல்ல என்றுமே எனக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றார்.

dinamani
Reply
#4
பொங்கல் தபால் தலையை இந்திய பிரதமர் விஜயிடம் வெளியிடும் அளவுக்கு அவருக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை. இது நிச்சயமாக திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் ஒழுங்கு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
<b>ஆனால் விஜய் புத்திசாலி. தற்போது சினிமாவில் எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்கும் அவர் அரசியலில் சேர்ந்து அதை பாழடிக்க விரும்பமாட்டார் என்றே நம்புகின்றேன். விரைவில் ரஜனியின் இடத்தைப் பிடிக்கப்போகும் அவர் அரசியலால் ரஜனியின் பாடத்தையும் புரிந்திருப்பார்.</b>
Reply
#6
வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்? எந்த எழுத்துருவில் எழுதுவது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு குறுகுறுப்பில் கேட்கின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்? எந்த எழுத்துருவில் எழுதுவது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு குறுகுறுப்பில் கேட்கின்றேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரியான கேள்வி! இதைப் பலரிடம் கண்டிருக்கின்றேன். சுகம் கேட்பதைக் கூட கண்குத்தும் அளவு சிவப்பு நிறத்தில் போடுவார்கள்
[size=14] ' '
Reply
#8
நல்ல கேள்வி மதன். நானும் முன்பு சாதரணமாகத்தான் எழுதி வந்தேன். ஆனால் எனக்குப் பிறகு கருத்தெழுதவரும் சிலர் தலையங்கத்திற்கு கருத்தெழுதுவதை விட்டுவிட்டு எனது கருத்திற்கு நான் என்ன எழுதியுள்ளேன் என்பதைக் கூட சரியாகக் கவனிக்காமல் தம் பாணியில் கருத்தெழுதினார்கள். பாவம் அவர்களுக்கு புரியட்டுமேயென்று தான் தடித்த எழுத்தில் சில முக்கியமானவற்றை எழுதுகின்றென். உங்களுக்கு இது புரியுமென்பதால் இங்கு அதை தவிர்த்திருக்கின்றேன்.
Reply
#9
வசம்பு தடித்து எழுதினாலும் சரி.... அல்லது அளவில் சிறியதாக எழுதினாலும் சரி..... அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....
,
......
Reply
#10
ஆம் அவர் கருத்துகள் எப்போதும் அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....
.
.
Reply
#11
அந்த கருத்துக்களை அவமானப்படுத்தவோ, அல்லது அவரை அவமானப்படுத்தவோ தான் பெரும்பாலும் உற்று நோக்கப்படுகிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.....
,
......
Reply
#12
என்ன நடக்குது இங்கே!!! :evil: :evil:

திமுகாவில் விஜய் இணைவதைக் கதைப்பதை விட்டு,
நீங்கள் பேசமால் வசம்புக்கு கட்சி அமைத்து, அதில் இணையலாமே!! :oops:
[size=14] ' '
Reply
#13
மதன் ஆரம்பித்தார்.... நீங்கள் தொடர்ந்தீர்கள்.... உங்கள் வழியில் நாங்களும்......
,
......
Reply
#14
அரோகராவெண்டானாம் ............

Quote:ஆனால் விஜய் புத்திசாலி.
:roll: :roll: :roll: Confusedhock:

Quote:வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்?

அவருக்கு எல்லாம் மரத்து/தடித்துப் போச்சு.. அதுதான் ..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Quote:வசம்பு தடித்து எழுதினாலும் சரி.... அல்லது அளவில் சிறியதாக எழுதினாலும் சரி..... அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....

ஐயோ........ இந்த ஜால்ராக்கள் என்று ஓயுமோ போடு போடு :evil: :evil:

Quote:ஆம் அவர் கருத்துகள் எப்போதும் அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....

இது அடுத்த ஜிஞ்சக் ஆஆஆஆஆ.......... அபாரம்... அற்புதம்.... :x :x :x :x :x :x

Quote:என்ன நடக்குது இங்கே!!!


அதே இண்டிய அறசியழ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#15
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் எதிலும் சேரலாம்தானே?
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
ஜெயதேவன் உங்கள் நகைச்சுவை உணர்வு........




சகிக்கவில்லை.....
,
......
Reply
#17
தூயவன் Wrote:என்ன நடக்குது இங்கே!!! :evil: :evil:

திமுகாவில் விஜய் இணைவதைக் கதைப்பதை விட்டு,
நீங்கள் பேசமால் வசம்புக்கு கட்சி அமைத்து, அதில் இணையலாமே!! :oops:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#18
சென்ற பொங்கலுக்கு சண் ரிவியில் விஜயின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது (பார்த்வர்களுக்கு தெரியும்)அவரின் புதிய படமான ஆதியின் சிறப்பு கண்னோட்டம் . கிராம மக்களுடன் பொங்கல் விழா . மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடன் விஜயின் சந்திப்பு என்று கிட்டத்தட்ட அரசியலுக்கு விஜயை இழுப்பதற்காக மக்கள் ஆதரவு என சண் ரிவி ஒளிபரப்பிக் காட்டியது............. இதையெல்லாம் பார்க்கையில் விஜய் திமுகவில் சேர்ந்தாலும் அதிசயமில்லை.........என்ன கொஞ்ச நஞ்ச மதிப்பிருக்கிற மனுஷன் அரசியலுக்கை போய் நாயாகப் போகுது என்னும் போது கவலையாகத் தான் இருக்கு..
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)