Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
கள நண்பர்களே, அதிலும் குறிப்பாக இந்திய நண்பர்களே, உங்களிடம் ஒரு கேள்வி, இப்பொழுதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஒரு படம் வெளியானால் அந்த படம் வசூலில் சாதனை எண்டு வரும் செய்திகள்தான் அதிகம், ஆனால் படம் ஆக கூட 3 மாதங்களுக்கு மிஞ்சி ஓடாது, உதாரணத்துக்கு சந்திரமுகி படம் வந்தது அது வசூலில் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை எண்டு சொன்னார்கள், அதன் பிறகு விஜயின் படங்கள் திருப்பாச்சி, கஜினி, மன்மதன் என்று பல படங்கள் ஒவ்வொரு மாதமும் றிலிஸ் ஆகிக்கொண்டு இருக்க படமும் ஹிட் ஆகி, பணத்தை வாரி இறைக்கின்றது, இந்த பணம் எப்படி வருகினறது? இந்தியாவில் இருப்பவர்கள் சினிமாவை நம்பி வாழ்கின்றார்களா? அல்லது அவர்கள் சினிமாவுக்கு அடிமையாகிவிட்டார்களா? இதைப்பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்,,
மு.கு: இந்த கருத்துப்பிரிவு வீன் சச்சரவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கவில்லை...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நல்ல கேள்வி.....
இப்போது இந்தியாவில், குறிப்பாக 1996க்கு பின் தனி நபர் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.... எனவே வாழ்க்கைத்தரமும் அதனுடன் சேர்ந்தே உயர்ந்திருக்கிறது... பொழுது போக்குக்காக நிறைய செலவு செய்யப்படுகிறது.... என் தந்தை காலத்தில் எல்லாம் 10,000 ரூபாய் சம்பளம் என்பது எட்டாக் கனியாக இருந்தது.... கிடைத்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவதே அவர்களுக்கு எல்லாம் சவாலாக இருந்தது.... எனவே வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் தான் அவர் குடும்பத்துடன் பார்ப்பார்....
இப்போது அப்படி அல்ல.... எங்களுக்கெல்லாம் எடுத்தவுடனே 5 டிஜிட் சேலரி கிடைக்கிறது.... பொழுதுபோக்குகளுக்கு நிறைய செலவிட முடிகிறது.... வாரம் ஒரு சினிமா, தீம் பார்க் என்று செலவு செய்கிறோம்....
இப்போ இங்கே "பரமசிவன்" பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
இந்தியாவில் சினிமாவும் இப்போது பணம் கொழிக்கும் தொழிலாகி இருக்கிறது.... இந்திய சினிமாக்களுக்கு உலகளாவிய வரவேற்பு கிடைக்கிறது.... நம்ம ஊர் இந்தியன் பாகிஸ்தானிலும் சக்கை போடு போட்டது....
பன்டி அவுர் பப்ளி என்ற சமீபத்தில் வந்த இந்தி திரைப்படம் யு.கே. டாப் 10ல் இடம் பெற்று அசத்தியது....
அரசுக்கும் நல்ல வருவாய்.... அப்புறம் என்ன?
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
<b>நண்பர் Danklas நல்ல முயற்ச்சி!!
தற்கால தமிழக இளைய சமுதாயம் வளர்ச்சி பாதையில் உள்ளது.இங்கு சினிமா பைத்தியங்கள் அதிகம் என்றாலும் அது பொழுது போக்கு என்ற நிலையில் தான் உள்ளது. முன்னொரு காலத்தில் சினிமாவில்ருந்து முதல்வர் நாற்காலி என்ற போக்கு மாறி விட்டது. தற்போது விஜயகாந்து அவ்வாரே முயன்ரு தற்போது ஆதரு இல்லாமல் இரூப்பது ஒரு உதாரணம்.
அமெரிக்க கம்பெனிகளின் படியெடுபால் தற்கால இளைய சமுதாயம் 5 இலக்க சம்பளத்தை வெகு விரைவாக தொட்டு விட்கிறது. சென்னையில் கார் தயாரிப்பு நிறுவனங்களும்,கண்ணி சார் நிறுவணங்களும் பணத்தை அள்ளி கொட்டுகிறது. நம் கலாசர படி சென்னை மக்கள் வாழ்வதால் அவர்களுக்கு தேவை இல்ல்லாத செலவு இல்லை. சினிமா மட்டுமே ஒரே பொழுது போக்கு.
சில நேரம் கிராம பகுதியில் இன்னும் ரசிகர் மன்றம் போன்ற அபத்தம் இருந்தாலும் அது விடை பெற நீண்ட நாள் ஆகாது.
</b>
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
கன்னத்தில் முத்தமிட்டால் படம் உலக திரைபல விழா பலவற்றில் திரையிட பட்டு நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
ஒரு கேள்வி, இலங்கை தமிழர்கள் விஜய்க்கு அதிகமாக ஆதரவு தருகிறார்களே, என்ன காரணம்??
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ஒரு காலத்தில் 200 படங்கள் ஆண்டுக்கு வெளிவந்து கொண்டிருதது தமிழ் நாட்டில்.... இப்போது 70 படங்கள் தான் வெளிவருகிறது....
எனக்கு தெரிந்து இப்போது சினிமா மோகம் ஒழிந்து கொண்டு தான் வருகிறது.....
,
......
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
விஜய்க்கு ஆதரவு தரக்காரணம் அவரின் திருமணம்.....
[size=18]<b> ..
.</b>
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அவர் இலங்கை தமிழ் பெண்ணையா மணந்திருக்கிறார்?
எனக்கு தெரிந்து அவருடன் பள்ளியில் படித்த சங்கீதாவை பல வருடம் காதலித்தே மணந்திருக்கிறார்.... ஆனால் அந்த காதலை மீடியாவுக்கு இன்று வரை மறைத்தே வருகிறார்.....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வசூல் என்று டன் கூறியதும், ஒரு சுவையான சென்னை பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விவரம் தருகிறேன்....
ஓபனிங் எனப்படும் முதல் நாள் வசூலில் 20 லட்சம் வாரி சாதனை படைத்தது சந்திரமுகி.... அதன் சாதனையை முறியடித்தது கஜினி (22 லட்சம்).....
இப்போது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல பரமசிவன் 30 லட்சம் சம்பாதித்து இமாலய சாதனை படைத்திருக்கிறது....
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஈழமகன் Wrote:விஜய்க்கு ஆதரவு தரக்காரணம் அவரின் திருமணம்.....
அதற்கு முன்பும் ஆதரவு இருந்தது. இப்போது சூர்யாவிலும் மதிப்பு வைத்திருக்கின்றார்கள்.
இருவரும் தமிழர்கள், நல்ல படங்களைத் தருகின்றமை தான் காரணமாக இருக்குமோ?
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Luckyluke Wrote:அவர் இலங்கை தமிழ் பெண்ணையா மணந்திருக்கிறார்?
எனக்கு தெரிந்து அவருடன் பள்ளியில் படித்த சங்கீதாவை பல வருடம் காதலித்தே மணந்திருக்கிறார்.... ஆனால் அந்த காதலை மீடியாவுக்கு இன்று வரை மறைத்தே வருகிறார்.....
சங்கீதா யாழ் புத்தூர் பெண் என்று அறிந்திருக்கின்றேன்
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
எது எப்படியோ, தமிழ் நாட்டுக்கு நல்ல மருமகளாகவே அவர் இருக்கிறார்....
எங்கள் ஊர் பெண்ணை முத்தையா முரளிதரனுக்கு கொடுத்திருக்கிறோமே.... அவர் எப்படி இருக்கிறார்?
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Luckyluke Wrote:எங்கள் ஊர் பெண்ணை முத்தையா முரளிதரனுக்கு கொடுத்திருக்கிறோமே.... அவர் எப்படி இருக்கிறார்?
முரளிதரனுக்கு மனைவியாக இருக்கின்றார். :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
விஜய் சங்கீதாவை காதல் திருமணம் செய்தார். சங்கீதா பள்ளி படிப்பை முடித்த பின் லன்டன் சென்று விட்டதாக அறிந்தேன்.
.
.
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
தூயவன்,
விஜய் நல்ல படங்கள் தாறதாலதான் ஈழத்தவர் ஆதரிக்கினம் எண்டு சொன்னதில ஒரு நகைக்குறி போட்டிருந்தாப் பிரச்சினையில்லையெல்லோ? மற்றாக்கள் சீரியசா எடுத்துப்போட்டு பிறகு அதைவைச்சே நாலு பக்கத்தை நிரப்பிறதைத் தவிர்க்கலாமே
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
rajathiraja Wrote:விஜய் சங்கீதாவை காதல் திருமணம் செய்தார். சங்கீதா பள்ளி படிப்பை முடித்த பின் லன்டன் சென்று விட்டதாக அறிந்தேன்.
ஆமாம்.... சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் இருவரும் சந்தித்து மணிக்கனக்காக பேசுவார்கள் என்று குங்குமம் இதழில் ஒரு முறை செய்தி போட்டிருந்தார்கள்.....
,
......
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
யுவன்சங்கர் ராஜாவும் லண்டனில் வசித்த இலங்கைப்பெண்ணான சுயா வினை மணமுடித்தார். சன்ரைஸ் கானக்குயில் போட்டியில் முதலாம் இடத்தினை சுயா பெற்றார். விஜய்யின் மனைவி சங்கீதாவும் லண்டனில் தான் வசித்து வந்தார். ஜெய் ஆகாஸ் என்ற நடிகரும் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவர். இவரும் லண்டனில் வசித்தவர். யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்தவர் தான் நடிகர் மோகனைத்திருமணம் செய்தார். அவர் ஜரோப்பா நாடுகளில் ( நோர்வே அல்லது பிரான்ஸ்) ஒன்றில் வசித்தவர். முதல்மரியாதை படத்தில் நடித்த ரஞ்சனியும் லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழரினைத்தான் மணம்செய்தார். உப்பு படத்தில் ரோஜாவுக்கு ஜோடியாக நடித்த வேந்தனும் லண்டன் வாழ் ஈழத்தமிழர். பாலுமகேந்திரா மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழர்
! ?
'' .. ?
! ?.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
nallavan Wrote:தூயவன்,
விஜய் நல்ல படங்கள் தாறதாலதான் ஈழத்தவர் ஆதரிக்கினம் எண்டு சொன்னதில ஒரு நகைக்குறி போட்டிருந்தாப் பிரச்சினையில்லையெல்லோ? மற்றாக்கள் சீரியசா எடுத்துப்போட்டு பிறகு அதைவைச்சே நாலு பக்கத்தை நிரப்பிறதைத் தவிர்க்கலாமே
நீங்கள் தான் அதை சீரியஸ் ஆக்கின்றீர்கள். ராஜாதிராஜாயோ, அல்லது லக்கிலுக்கோ அதை நகைச்சுவையாகத் தான் ஏற்றுக் கொண்டிருள்ளபோது. பிறகேன் இந்த சந்தேகம்
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தகவல்களுக்கு நன்றி கந்தப்பு அவர்களே.....
இவ்வளவு பேர் தமிழ் திரையுலகுடன் இணைந்திருக்கும் போது, பிறகு ஏன் ஈழத்தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் கூட வரவில்லை... பாலுமகேந்திரா முயற்சிக்கலாமே....
தெனாலியில் ஓரிரு காட்சிகளில் ஈழத்தமிழரின் இன்னல்களை கே.எஸ். ரவிக்குமார் காட்டியிருந்தார்.... கமலும் மிகச்சிறப்பாகவே ஈழத்தமிழராய் வாழ்ந்திருந்தார்....
மணிரத்னம் அதுபோல் ஒரு முயற்சி எடுத்தார்.... ஆனால் அது நடு நிலையாக இருக்குமா என்பது சந்தேகமே?
,
......
|