Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அளவளாவ....
#1
யாழில் முதல் விடுகு,
விசும்பளவு எண்ணம்,
பிண்டமளவு உவகை,
நாவசைக்கும் நற்றமிழ் ஐயைக்கு முதலில் சென்னிதாழ்த்தி,
வண்டமிழில் சொல்லாடும் வல்லியங்களுக்கு இருஇறை உயர்த்தி,

"செய்கதவம் செய்கதவம் நன்னெஞ்சே தவம்செய்தால்
எய்தவிரும்பிய தனைத்தும் எய்தலாம்-வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இனிது"-அவ்வைமொழியை சிந்தையில் நிறுத்தி

இந்த சிறியவனும் தகைத்தமிழரோடு அளவளாவ வருகின்றேன்.
Reply
#2
வருக வருக
பொழிலே வருக
நற்றமிழை நாவிசைக்க எம் செவிகுளிர பதிந்து வைத்த உங்களை வருக வருக என வரவேற்பதில் களத்தின் அங்கத்தவனில் ஓருவனாய் நான் பெருமகிழ்வடைகின்றேன்.

உம் தமிழ் கண்டு நான் மெய்சிலிர்தது நிற்கின்றேன்.

நன்றி வணக்கம்
[b] ?
Reply
#3
வருக பொழில். பண்(டைத்) தமிழுடன் புகுந்துள்ள நண்ப, உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.
.
Reply
#4
Confusedhock: Confusedhock: Confusedhock:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
வணக்கம் வணக்கம்... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சொல்லுங்கோ..... :mrgreen:
Reply
#6
தமிழை உயிரென ஒழுகும் தண்டமிழர் எல்லீர்கும்
எந்தன் "உழவர் திருநாள்" மற்றும் "திருவள்ளுவ புத்தாண்டு 2035"
வணக்கங்கள் உரித்தாகட்டும்!

ஒலிக்கட்டும் வாழ்துக்கள்;
ஊதட்டும் வெண்சங்கம்;
முழங்கட்டும் பேரிகைகள்;
திக்கெட்டும் புகழ் மணக்க ,
எஞ்ஞான்றும் நந்தமிழும் நற்றமிழரும்

"வாழ்க வாழ்க" என்று .
------------------------------------------------------
"காக்கை குருவி எங்கள் சாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசைஎலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்"
--------------------------------------------
Reply
#7
சித்திரமும் கைப்பழக்கம்

செந்தமிழும் நாப்பழக்கம்
சித்தனே வருக வருக
Reply
#8
எனது கிளவி நோக்கி சிலிர்க்க யாதுளது?
பரவையுள்ளத்தோடு பாங்காய் எனை வரவேற்ற கிளைஞரே,
தாய்மொழியை செவிலியாக்கும் தேயத்தில் வாழ்பவன் நான்,
உங்கள் சிரத்துள் சிந்தையும்,ஆகத்தகதகமும் தமிழால் மட்டுமே பனிப்பதுகண்டு பரவசம் எனக்கல்லோ?
Reply
#9
<img src='http://skins.hotbar.com/skins/mailskins/em/110103/110103_zakatandruki_prv.gif' border='0' alt='user posted image'> <img src='http://skins.hotbar.com/skins/mailskins/em/110103/110103_zakatandruki_prv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
குறை நிநைக்காதீர்கள் phozhil
நல்ல வித்தியாயமான எந்த நூற்றாண்டு தமிழ் பலமுறை திருப்பிதிருப்பி வாசிக்க வேண்டி உள்ளது சிலது விளங்குது சிலது ஒரே குளாப்ஸ் ஆக உள்ளது.... :roll: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen:
Reply
#11
திருவாளர் பொழிலவர் கூறியது:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழை உயிரென ஒழுகும் தண்டமிழர் எல்லீர்கும்  
எந்தன் \"உழவர் திருநாள்\" மற்றும் \"திருவள்ளுவ புத்தாண்டு 2035\"  
வணக்கங்கள் உரித்தாகட்டும்!  

ஒலிக்கட்டும் வாழ்துக்கள்;  
ஊதட்டும் வெண்சங்கம்;  
முழங்கட்டும் பேரிகைகள்;  
திக்கெட்டும் புகழ் மணக்க ,  
எஞ்ஞான்றும் நந்தமிழும் நற்றமிழரும்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமான் பெருந்தகை வாழ்ந்த தகடூர்த் தமிழரே வருக வருக!!!<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பொழிலவரே எனக்கொரு ஐயம்,
(நெடுஞ்சாலையில்) வழிகாட்டும் பலகையும், உங்கள் ஊரெல்லையில் நிறுவியிருக்கும் பலகையும் "தகடூர்" எனப் பறைசாற்றுமா இல்லை "தர்மபுரி" (தகடூரை இப்பொழுது தர்மபுரி என அழைப்பர் எனப் பாணிக்கிறேன்!?) என்று தான் சொல்லுமா?

-
Reply
#12
நெடுஞ்செழியனின் ஐயம் தீர்த்த சங்கவிபுதன் கீரணின் பிதாவின் நாமம் புனைந்திட்ட வையத்து கணக்காயனாரே!
வணக்கம்
வழிகாட்டி எழினியின்காலத்தில் தகடூர் என்றும் எனதுகாலத்தில் தர்மபுரி (அ)தருமபுரி என்றும் குறிக்கின்றது. இன்றும் கர்நாடகமாநிலத்தில் தகடூர் என்று வேறோர் சிற்றூர் உண்டு.
இருப்பினும் தகடூர் என்று செருக்குறுவதில் எனக்கோர் சிறிய ஆனந்தம்
Reply
#13
ஒளவைத்தமிழ் சரசமாட பைந்தமிழ் மேனிமினிக்கி பொழில் என் காதலன் என செப்பி நிக்கிறதே...பொழிலரே தமிழ் சுமக்கும் 'தமிழ்'நாடு அந்நிய மொழி கலந்து கறுமமாகினும் உம் தமிழ் கண்டு ஒளவை வந்தாள் மீண்டும் எம் களமதில் கருத்தாடவோ என்று சிந்தை சிறகடிக்கிறது.....!

பைந்தமிழ் எழில் செப்பும் பொழிலரே தடங்கலின்றி பகரும் உம் செந்தமிழ்.... எம் விழி வழி சிந்தை இனித்திடவே......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
கடவுளே.. Cry
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
என்ன பறையினம் இங்கால எமக்கும் கொஞ்சம் எடுத்தியம்பலாமே... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
Reply
#16
கடவுளே,

எனக்கு புரியவில்லை. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)