01-14-2006, 06:33 PM
<b>இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப இந்திய பிரதமர் விரும்பவில்லை</b> குமுதம் ரிப்போட்டரில்
இந்திய இராணுவத்தை ஈழத்து மண்ணில் இறங்க வைப்பதற்கு இலங்கை அரசு பெரும் பாடுபடுகிறது. அதற்காக கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்று கூறுகிறது. நியாயமாக நடந்து கொள்ளும் நோர்வேயை புறந்தள்ளிவிட்டு இந்தியாவை மோதவிடப் பார்க்கிறது. இலங்கையின் இந்த யோசனைகளை இந்திய பிரதமர் மன் மோகன்சிங் புறந்தள்ளியிருக்கிறார். இதனை ஈழத்த தமிழர்களோடு இரத்த உறவுள்ள இந்தியாவில் உள்ள தமிழர்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள்'' என இந்தியாவிலிருந்து வெளிவரும் "குமுதம் ரிப்போட்டரில்' சோலை எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்தியத் தலைநகருக்கு வருகை தந்தார். அவருடைய வருகை இலங்கைக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் போர் நிறுத்த உடன்பாடுகாண நோர்வே நன்முயற்சி எடுத்தது. ஆனால், அதன் பணிகள் இன்றுவரை சிங்கள இனவாதிகளுக்குத் திருப்தி தரவில்லை. எனவே, பேச்சுவார்த்தையில் இந்தியாவை இழுத்துவிட விரும்பினர். பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அரசின் இந்த யோசனையை ஏற்கவில்லை, நல்ல காரியம். "நோர்வே நாட்டுடன் ஜப்பான், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளையும் இணைத்து விடுகிறோம்' என்று இலங்கை அரசு கூறுகிறது. அதனையும் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கவில்லை. "ஈழ விடுதலை இயக்கத்துடன் பேச்சுவார்த்தையைத்தொடங்குங்கள்' என்று கூறியிருக்கிறார். நோர்வே நாட்டை நடுநாயகமாக வைத்துத்தான் பேச்சுவார்த்தை தொடரமுடியும். ஈழத்தில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற போர்ச் சூழலுக்கு ஈழவிடுதலை இயக்கம்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டவேண்டும் என்று சிங்கள இனவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் துடியாய் துடித்தனர். ஆனல் கூட்டறிக்யில் அப்படிக் குறிப்பிடப்படவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றம்தான். இந்தியா வந்த இலங்கை அதிபர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. காரணம், ஈழப் பிரச்னையில் நமது முதல்வரின் நிலை நாடறிந்ததுதான்.
ஆனால், தமிழக முதல்வருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்தச் சந்திப்பு சாத்தியமில்லை என்று டெல்லியில் அறிவித்தனர். இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலைத் தமிழகம் சந்திக்கப் போகின்ற நிலையில் எப்படி இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எண்ணிப் பார்க்க மறந்துவிட்டனர்.
எனவே, இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் எல்லா வகையிலும் தோல்வியைத்தான் சந்தித்தது. இன்றைக்கு ஈழத்தில் என்ன நடைபெறுகிறது ராஜபக்ஷ பரிபாலனம் செய்ய வந்த நாள் முதலாய் ஈழம் எரிந்து கொண்டிருக்கிறது. அநியாயத்தைத் தட்டிக் கேட்டால் ராணுவம் துப்பாக்கி தூக்குகிறது. யாழ் பல்கலைக்கழக மாணவி தர்சினி இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டார். கற்பழிக்கப்பட்டார். படுகொலை செய்யப்பட்டார். ஈழ மாணவர்கள் குமுறி எழுந்தனர். யாழ் நகர மாணவர்களோடு ராணுவம் மோதிப் பார்த்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இலங்கை ராணுவம் நுழைந்திருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பர ராஜசிங்கம். அவர் மட்டக்களப்பு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்குப் பின்னே இலங்கை ராணுவமும் அதன் சூத்திரப் பாவைகளும் இருக்கிறார்கள் என்பதனை ஈழ மக்கள் அறிவார்கள் . குறி பார்க்காது சுடுவதைப் போல விளைவுகளை எண்ணிப் பார்க்காது ஈழ அரசும் ராணுவமும் செயல்படுகின்றன. அந்த ராணுவம் யாழ். அருகில் உள்ள பலாலி விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தினரின் தாக்குதலால் பலாலி பாழாகி இருந்தது. அந்த விமான நிலையத்தை இந்தியா புதுப்பித்துத் தந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து பறந்த இலங்கை ராணுவ விமானங்கள் எத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்களைப் பலி கொண்டிருக்கின்றன போர் நிறுத்தத்தை மீறிச் செயல்படும் அரசிற்கு இத்தகைய உதவிகள் அளிப்பதென்பது, கள் குடித்த குரங்கு கையில் தீப்பந்தத்தைக் கொடுப்பதற்குச் சமமாகும்.
சென்ற மாதம் இலங்கை இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சியும் நடைபெற்றிருக்கின்றன. இந்த நிகழ்வுகளை இங்குள்ள தமிழர்கள் கவலையோடு காண்கிறார்கள். இந்தியா அளிக்கும் இத்தகைய உதவிகளை சர்வதேச அரங்கில் இலங்கை எப்படி எடுத்துக் கூறும் ஈழ மக்கள் மீது தொடுக்கும் அநியாய யுத்தத்திற்கு இந்தியா ஆதரவாக நிற்கிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்காதா இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் இலங்கை அரசிற்குச் சாதகமான காரியங்களைச் செய்வதாகத் தகவல்கள் வருகின்றன. ஈழ விடுதலை இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச் செல்வனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகத் தொண்டைமான் சந்தித்துப் பேசினார். உடனே இலங்கை அதிபர் ராஜபக்ஷவை அவர் சந்திக்க இந்தியத் தூதர் திருமதி நிருபமா ஏற்பாடு செய்ததாகச் செய்திகள் வருகின்றன.
இதற்கு முன்னர் எப்படிச் செயல்பட்டிருந்தாலும் இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இந்திய அரசு எச்சரிக்கையோடு செயல்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளந்து அடியெடுத்து வைக்கிறார். "ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டோம்' என்ற எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுடன் கூட்டுப் பாதுகாப்பு உடன்பாடு காண இலங்கை முயற்சித்தது. அந்த முயற்சியை முறியடித்ததில் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தலைவர் வைகோவிற்குப் பெரும்பங்கு உண்டு. அப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் முழுக்க முழுக்க சிங்கள இனவாதம் முடிசூட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஈழம் எரிந்து சாம்பலாகி இருக்கும். இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது ராஜபக்ஷ என்ன சொன்னார் "இலங்கை ஒரே நாடு. அதற்குள்ளே எந்த சுயாட்சிக்கும் இடமில்லை' என்றார்.
சிங்கள இனவெறியர்களின் இதயத்தைத் தடவிக் கொடுக்க எந்த அளவிற்கு ஈழத்தமிழர்களுக்கு எதிராக அனல் கக்க முடியுமோ அந்த அளவிற்குக் கக்கினார். "ஆனால் இந்திய அரசியல் அமைப்பைப்போல் இலங்கையிலும் ஏற்பாடு செய்வோம்' என்று இப்போது சொன்னார்.
தேர்தல் பிரசாரத்தின்போது அவர் முன்வைத்த முழக்கங்களை இப்போது வெத்துவேட்டு என்று அவர் ஒப்புக்கொள்ளத் தயாரா கொழும்பு நகரில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திற்குள்ளும் இலங்கை ராணுவமும் காவல்துறையும் நுழைகிறதே ஏன் ஏறத்தாழ ஆயிரம் தமிழ் இளைஞர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் உயிரோடு திரும்புவர் இந்த நிலையில் எப்படியாவது இந்திய ராணுவத்தை ஈழத்து மண்ணில் இறக்க இலங்கை பெரும்பாடு படுகிறது. அதற்காகக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்கிறது. நியாயம் பேசும் நோர்வேயைப் புறந்தள்ளி இந்தியாவை மோதவிடப் பார்க்கிறது. இலங்கையின் இந்த ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங் புறந்தள்ளியிருக்கிறார். ஈழத்தமிழர்களோடு இரத்த உறவுள்ள இங்குள்ள தமிழர்கள் பிரதமர் எடுத்துள்ள நிலையை வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள்.
நன்றி:லங்காசிறி

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>