Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்
#1
[b]திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்
Written by Pandara Vanniyan Tuesday, 10 January 2006

இன்று பகல் 1.30 மணியளவில் திருநெல்வேலி பால் பண்ணையடியில் இளம் பெண்னொருவர் மீது இரானுவத்தினர் பாலியல் பலாத்காரத்தினைப் புரிந்துள்ளனர். இதனை தடுக்கச் சென்ற மக்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். (இது தொடர்பான மேலதிக விபரங்கள் மிக விரைவில்)

http://www.sankathi.com/
[b]

#2
Jaffna school girl abducted by SLA soldiers

[TamilNet, January 10, 2006 12:36 GMT]
A school girl, yet to be identified, was forcefully taken away by four Sri Lanka Army (SLA) soldiers when she was walking home along PaalPannai Road (Milk farm Road) from school between Kondavil and Thirunelvely junctions in Jaffna at 2 p.m. Tuesday, residents of the area who witnessed the incident said.

மேலும் வாசிக்க ...
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16817
[b]

#3
திருநெல்வேலியில் இளம் யுவதி இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
திருநெல்வேலியில் இன்று இளம் யுவதி ஒருவர் சிறீலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி பாற்பண்ணைத் தோட்டத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்கள் முன்னிலையில் இந்த யுவதி சிறீலங்கா இராணுவத்தினரால் இழுத்துச் செல்வதை கண்டுள்ளனர்.

இளம் யுவதியை விடுவிக்க தோட்டத் தொழிலாளர்கள் முயற்றி செய்தபோது துப்பாக்கி முனையில் தோட்டத் தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதி வாழ் பொதுமக்கள் யாழ் அரச அதிபரிடமும், போர்நிறுத்த கண்காணிப்புக் குழு ,யாழ் மனித உரிமைகள் அமைப்பிடமும் முறைப்பாட்டை செய்துள்ளனர்.

யாழ் அரச அதிபர் கணேஸ் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து யாழ் மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பலாலி யாழ் வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு விரைந்துள்ளனர்.

வீதியால் சென்ற வழிப்போக்கர் என்றபடியால் இளம் யுவதி பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. இருந்தும் இராணுவத்தினரால் இழுத்துச் செல்லும் இளம் யுவதிக்கு 22 வயது தொடக்கம் 26 வயது மதிக்கத்தக்கவர் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பதிவு
[b]

#4
சிறுமியை படையினர் இழுத்துச்சென்றனர் என
பரவிய செய்தியால் கோண்டாவிலில் குழப்பம்

பாடசாலை மாணவி எனக்கருதப்படும் சிறுமி ஒருத்தி படையினர் நால்வர் பல வந்தமாக பற்றைக்காட்டுப் பகுதியை நோக்கி இழுத்துச் சென்றனர் என்ற தகவல் பரவிய தால் கோண்டாவில், திருநெல்வேலிப் பகுதி யில் நேற்றுப் பெரும் பரபரப்பும் களேபரமும் ஏற்பட்டன.
சம்பந்தப்பட்ட சிறுமியைத் தேடி பொது மக்கள் பற்றைக்காட்டை சல்லடைபோட்ட சமயம் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொதுமக்களைக் கலைத்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றுப்பிற்பகல் 1.30 மணியளவில் திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதிக்கும், கோண்டாவில் கிழக்கு பழைய ஆணித்தொழிற்சாலைப் பகுதிக்கும் இடைப் பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இச்சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
பச்சைநிறப் பஞ்சாபியுடன் சென்ற சிறுமி ஒருத்தியை இராணுவத்தினர் இழுத்துச்சென் றதை தாம் கண்டார் என அந்த வீதி வழியே பயணித்த ஒருவர் பொதுமக்களிடம் தெரி வித்திருக்கிறார்.
அவ்வீதி வழியே வந்த வாய்பேச முடி யாத மற்றொருவரும் இதனைக்கண்டு தாம் அந்த இராணுவத்தினருடன் முரண்பட்ட போது அவர்கள் தம்மைத் தாக்கினர் என்று கைகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித் திருக்கின்றார்.
இதனால், அப்பகுதியில் பொது மக்கள் கூடிவிட்டனர்.
சிறுமியை இழுத்துச்சென்ற படையினர் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து சடலத்தை ஒளித்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருதியதால் அங்கு பெரும் பதற்றநிலையும் குழப்பமும் ஏற்பட்டன.
யாழ். பிரதேச செயலாளர், யாழ். மேலதிக நீதவான், அரசாங்க அதிபர், மனித உரிமை கள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தி னர் எனப்பல தரப்பினருக்கும் அறிவிக்கப் பட்டது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வுக்கும் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் அங்கு விரைந்தனர்.
இதனையடுத்து சிறுமியைத் தேடி அப் பிரதேசத்தில் உள்ள பற்றைக்காடுகள், பாழங் கிணறுகள் போன்ற பகுதிகள் எல்லாவற்றையும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சல்லடை போட்டனர்.
அப்படித் தேடுதல் நடத்தியோர் அப்பகுதி யில் கோண்டாவில் சந்திக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமை ஒட்டிப்பின் புறத்தில் உள்ள பற்றைக்காட்டையும் துழாவினர். அச்சமயம் அந்த முகாமிலிருந்த படை யினர் துப்பாக்கிப்பிரயோகம்செய்து தேடுதல் நடத்திய பொதுமக்களை விரட்டிக்கலைத்தனர். அவ்வேளை அப்பகுதியில் கண்காணிப் புக் குழுவினரும் காணப்பட்டனர்.
திடீரெனத் தீர்க்கப்பட்ட வேட்டுக்களால் பீதியடைந்த மக்கள் பற்றைக்காட்டுப் பகுதியிலிருந்து விழுந்தடித்து ஓடித்தப்ப முயன்றனர். அப்போது பற்றை முள்ளுகளில் சிக்கியும், விழுந்தும் பலர் காயமடைந்தனர்.
இச்செய்தி அச்சுக்குப் போகும்வரை சம் பந்தப்பட்ட சிறுமி யார் என்பது குறித்தோ, அச்சிறுமி பற்றிய தடயங்களோ அங்கு கண்டு பிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டது.
http://www.uthayan.com/pages/news/today/09.htm

#5
திருநெல்வேலியில் படையினரால் மாணவி கடத்தல்@ இளைஞர் மீது சூடு!
Wednesday, January 11 - 04:52:58

(நமது நிருபர்)
யாழ். திருநெல்வேலியில் சிறிலங்காப் படையினர் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட போது மாணவி எழுப்பிய அபயக்குரலைக் கேட்டு ஓடிச் சென்ற இளைஞர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மிரட்டியதால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இச்சம்பவத்தால் மக்களிடையே பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

நேற்று நண்பகல் நேரம் பாற்பண்னை வீதி வழியாக தனியே வந்த குறிப்பிட்ட பாடசாலை மாணவியை தோட்டவெளியில் நடந்து வந்த நான்கு இராணுவத்தினர் கையில் பிடித்து இழுத்து அருகில் உள்ள தோட்ட பற்றைகள் ஊடே கொண்டுசென்றுள்ளனர். பெண்ணின் அவலக்குரலைக் கேட்டு ஓடிச்சென்ற ஒரு இளைஞன் மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கியுள்ளதுடன் ஓடும்படியும் இல்லாது விட்டால் சுடப் போவதாகவும் பயமுறுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக பிரதேச செயலாளருக்கு பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மனித உரிமைகள் ஆனைக்குழு அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது

குறிப்பிட்ட இளைஞன் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பொது மக்கள் மத்தியில் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த இடத்தில் கூடி அங்குள்ள பற்றைகள் கிணறுகள் அனைத்தும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதே நேரம் குறிப்பிட்ட பகுதிக்கு பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த போர் நிறுத் தக்கண்காணிப்புக் குழுவினரும் பொது மக்களுடன் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேநேரம் இராணுவத்தினருடைய முகாமுக்கு ஒரு இளைஞன் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அங்கு சென்று வந்த இளைஞன் குறித்த மாணவியின் மிதிவண்டி பலாலி வீதியில் உள்ள கோண்டாவில் இராணுவ முகாமில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பாற்பண்னை வீதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட இளம் பெண்னைத் தேடிச் சென்ற பொது மக்கள் மீது போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினருடன் வந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் பற்றைகளைத் தேடிக் கொண்டு இருந்தார்கள் அவ்வேளையில் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினர் ஓருவர் குறிப்பிட்ட இராணுவ முகாமுக்கு பின் புறமாகச் சென்று மீண்டும் முகாமில் இருந்து இராணுவத்தினருடன் திரும்பி வந்தார். வரும் போது அவருடன் வந்த இராணுவத்தினர் மாணவியைத் தேடிய பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன் காரணமாக தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தவர்கள் எங்கு ஓடுவது என்று தெரியாது நாலாபுறமும் சிதறி ஓடினார்கள் தொடர்ந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இந்த சம்பவத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஓடியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற போதிலும் போர் நிறுத்தக்க ண்கானிப்புக் குழுவினர் ஏதும் செய்யாது பார்த்துக் கொண்டு நின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=4962

#6
நேற்று பரப்பாகிய இவ்விடயம் இன்று பேச்சு மூச்சற்றுப் போனது ஏனோ?? நான் ஏதாவது எழுதினால் விழுந்தடித்து துள்ளிக் குதிப்போர் இதுபற்றிய விளக்கத்தையும் தருவார்களா????
#7
[quote=Vasampu]நேற்று பரப்பாகிய இவ்விடயம் இன்று பேச்சு மூச்சற்றுப் போனது ஏனோ?? நான் ஏதாவது எழுதினால் விழுந்தடித்து துள்ளிக் குதிப்போர் இதுபற்றிய விளக்கத்தையும் தருவார்களா????

ஏனப்பூ வசம்பு. தின்னவேலியில சனம் ஓடுப்பட்டதும். இராணுவம் சுட்டதும் ஒண்டும் பொய் இல்லை. சீருடைப் பெண் ஒருவரை இராணுவம் இளுத்துக் கொண்டு போனதையும் இருவர் பாத்திருக்கிறார்கள். தேடிப்போன சனத்தை இராணுவம் சுட்டதும் உண்மை. என்ன ஊர் தின்னவேலிதான். என்ர உறவுகள் எனக்குச் சொன்ன செய்தி.

ஏனப்பு வசம்பு நீர்தானே. அண்டைக்கு நாடாளுமண்ற உறுப்பினர் ஜோசப்பையா சுடப்பட்ட அண்று வந்து ஒரு நடிகைக்கு அஞ்சலி செலுத்தின வீரவான். இப்ப கேள்வியோட வந்திடீர்.

நெடுந்தீவில கொல்ப்பட்ட பிள்ளையை போல இராணுவத்தின் காதலி காசுக்காக உடலைவிக்க போறவர் எண்டு இந்தப்பிள்ளையைப் பற்றியும் எதாவது கட்டுரை எழுதப்போறீரோ.?

#8
அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்.....

வ.ம்பு!

உங்கள் வேதனைகள் எனக்குப் புரிகிறது!! விட்டால் இலங்கை இராணுவத்தினர் இப்படியாக ஒன்றும் செய்வதில்லை என்று உங்கள் மனைவி, மக்கள், சகோதரிகளின் மேலேயே சத்தியமும் செய்யக்கூடியனீங்கள்!!! அவ்வளவு இனப்பற்று உங்களது!!

இந்த யாழ்கலத்தில் கடத்த சில தினங்களுக்குள்ளேயே ...

1) திருமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொலை!
2) புங்குடுதீவில் இளம்பெண், இலங்கை கடற்படையினரால் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்!
3) .........

..... இப்படியாக எத்தனையோ தலைப்புகளில் செய்திகள் வந்தது, அப்போதெல்லாம் கருத்தெழுதீனீரா?? அல்லது எங்கு சென்றிருந்தீர்???

".... சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கன்டும்
சிந்தை இரங்காரடி!
கிளியே!
செம்மை மறந்தாரடி ......"

சிங்கள இனவெறியாளன் எம்மவர்களை கொல்கிறார்களோ/கற்பளிக்கிறார்களோ/காடைத்தனங்கள் புரிகிறார்களோ இல்லையோ எம்மத்தியில் இருக்கும் இனவிரோதக் கூலிகளும் அவர்களது ஓரிரு ஒட்டுண்ணிகளும், அவற்றை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்பது மட்டுமல்லாமல் கூட்டியும் கொடுப்பார்கள்!!
[size=12]

"றோ"கரா........ "றோ"கரா......
#9
ஆறுமுகம்
முதலில் மனிதனாகக் கருத்தெழுதப் பாரும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதப் பண்பு. பரராஜசிங்கத்திற்கும் நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பானுமதிக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளேன். அதை விமர்சினம் செய்வதற்கு உமக்குத் தகுதி இல்லை. உமது ஊரில் நடந்தது என்று வக்காலத்து வாங்கியுள்ளீர். அப்படியாயின் நல்லது. முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???
#10
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி மக்களுக்கு உதவுவதற்கு அங்கு நிலை கொண்டுள்ள அரசபடைகள் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் முயற்சி தோல்வி கண்டு பேச்சு மூச்சு இன்றி போனது. வாய்மை என்றும் வெல்லும். எனக்கு எல்லாம் அத்துப்படி ஆனபடியா விழுந்தடித்து துள்ளிக் குதிக்கதேங்கோ இந்த வருடத்திலாவது நாகரீகமாக கருத்தொழுதப்பழகுங்கள்.
என்றென்றும் அன்புடன் xxx

நண்பர்xxx.. நீங்கள் வீரத்தை விட விவேகத்திற்கு தான் மதிப்பளிக்கிறீர்கள். உங்கள் போன்றோரால் தான் தமிழீழம் கிடைக்க சந்தர்ப்பம் அதிகரிக்கிறது.

ஆம் xதி xஜா அவர் என்றும் விவேகமாகத்தான் பேசுவார்
#11
[quote=Vasampu]ஆறுமுகம்
முதலில் மனிதனாகக் கருத்தெழுதப் பாரும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதப் பண்பு. பரராஜசிங்கத்திற்கும் நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பானுமதிக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளேன். அதை விமர்சினம் செய்வதற்கு உமக்குத் தகுதி இல்லை. உமது ஊரில் நடந்தது என்று வக்காலத்து வாங்கியுள்ளீர். அப்படியாயின் நல்லது. முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???

காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி
செய்திகள் வராது வசம்பு அண்ணா
[b]

#12
[quote]நேற்று பரப்பாகிய இவ்விடயம் இன்று பேச்சு மூச்சற்றுப் போனது ஏனோ??

ஆம் இதில் என்ன தவறு இருக்கிறது.

புங்குடுதீவு சம்பவம் எவ்வளவு பிரதிபலிப்பை ஏற்படுத்திய போதும் இந்த சம்பவம் ஏன் ஒரு பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை?
#13
[quote=Vasampu]ஆறுமுகம்
முதலில் மனிதனாகக் கருத்தெழுதப் பாரும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதப் பண்பு. பரராஜசிங்கத்திற்கும் நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பானுமதிக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளேன். அதை விமர்சினம் செய்வதற்கு உமக்குத் தகுதி இல்லை. உமது ஊரில் நடந்தது என்று வக்காலத்து வாங்கியுள்ளீர். அப்படியாயின் நல்லது. முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???

இப்போ தமிழர் எண்டால் மனிதர் இல்லை எண்டு பிரச்சாரம் ஆரம்பிச்சாச்சா? காரணம் நான் தமிழன்.

வீடுவீடாய் சாப்பாடு கேட்டு வாங்கித் திண்டபின் அதே சனத்தைக் கொண்ற இந்தியனுக்கு வால் பிடித்தவர்கள் தானே நீங்கள். மக்களுக்காக என்னத்தை கிளிச்சிட்டீங்கள் கேள்வி கேக்க?

பாக்கலாம் வசம்பின் பொய்:-
பாரராஜ சிங்கம் ஐயாவுக்கு வசம்பின் துயர் பகிர்வு.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15

#14
வினித் எழுதியது:
காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி செய்திகள் வராது வசம்பு அண்ணா

நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன: அப்படியாயின் மேலதிக தகவல்கள் (கண்காணிப்புக் குழுவின் அறிக்கை காயப்பட்டவரின் அறிக்கை அரசஅதிபரின் அறிக்கை போன்றன) என்னாயின. தற்போது யாழிலுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர் மீளக் கிடைக்கும் வரையில் காத்திருப்பார்களா?? அப்படியாயின் ஒரே நாளில் எல்லாம் அடங்கிவிட்டனவா??

ஆறுமுகம்

உம்மப்போல் பொய் பேசி வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் நான் இல்லை. இந்திய இராணுவத்தைப் பற்றி நான் எந்த இடத்திலும் வக்காலத்து வாங்கவில்லை. உம் போன்றோர் தேவையில்லாது இந்திய மக்களைச் சாடிய போதுதான் நான் அதைக் கண்டித்தென். அதுபோல் பரராஜசிங்கம் சுடப்பட்டார் என்ற செய்தி இக்களத்தில் இணைக்கப் பட்டதும் என் அஞ்சலியை அதே பக்கத்தில் செலுத்தியுள்ளேன். அஞ்சலி என்பது ஒவ்வொரு பக்கமாக விளம்பர்திற்காக செய்யப்படுவதில்லை.
#15
[quote=Vasampu] உமது ஊரில் நடந்தது என்று வக்காலத்து வாங்கியுள்ளீர். அப்படியாயின் நல்லது. முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???

வரும் பெண்கைது செய்யப்படாரா இல்லை கொல்லப்பட்டாரா எண்று அறிந்தபின்னர். அது உமக்காக இல்லை. ஈழ ஆதரவாலர்கள், மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் பேடிக் கூட்டத்துகாகவும் இல்லை. [size=18]நடிகைக்காய் துன்பப்படுபவர்களுக்காகவும் இல்லை.

#16
யாழ். குடாநாட்டில் ஆள்கள் மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுதல், காணாமல்போதல் மற்றும் இரவுவேளைகளில் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள், பயங்கரக் கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றால் மக்கள் பீதியில் உறைந்துபோய் இருக்கின்றனர்.பெரும் பதற்றமும், நிம்மதியுமற்ற சூழலுக்குள் சிக்கி அடுத்த கணம் என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் நாள்களைக் கழிக்கும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எப்போது, எங்கே, என்ன நடக்குமோ என்பது தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழவேண்டிய அச்சமூட்டும் சூழ்நிலை நீடித்துவருவதால் பலரும் பாதுகாப்பான பகுதிகளை நாடிச் செல்லத் தலைப்பட்டுள்ளனர்.
இரவுவேளைகளில் வாகனங்களில் வரும் ஆயுதபாணிகள் வீடுகளைச் சோதனையிடு வதாகக் கூறி, உள்நுழைந்து, அங்குள்ள ஆண் களை விசாரணைக்கென்று கூறி அழைத்துச் செல்வதும், அவ்வாறு அழைத்துச் செல்பவர் கள் பின்னர் காணாமல் போதல் அல்லது சூட்டுக் காயங்களுடன் சடலமாக வீசப்படுதல் போன்ற சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறு கின்றன.
தினசரி இரண்டு, மூன்று என்ற கணக்கில் மர்மக் கொலைகள் இடம்பெறுகின்றன.
சீருடையினரால் பகல் நேரத்தில் சோதனை யிடப்படும் வீடுகளுக்கு இரவில் வெள்ளை வானில் வரும் மர்ம நபர்கள் ஆண்களை மிரட்டி விசாரணைக்காக என்று கொண்டுசெல்கின்றனர்.
இளவாலை, அச்சுவேலி, புத்தூர், பருத் தித்துறை ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களில் பலர் இவ்வாறு மர்மமான முறை யில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர். இத் தகைய கடத்தல்கள் கிராமப் பகுதிகளில் மக் களைப் பெரும் பீதிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
இளவாலைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு மட்டும் இரண்டு பேர் வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
டெனிஸ் நாட்டுக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் தொண்டர்களாகப் பணியாற் றும் இரண்டு இளைஞர்கள் நேற்றுக்காலை பருத்தித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்தோரோல் கடத்திச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
புத்தூர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிலிருந்து சீருடையினரால் அழைத் துச் செல்லப்பட்ட 50 வயது குடும்பஸ்தர் ஒருவர் நெஞ்சில் துளையிடப்பட்டது போன்ற மிக ஆழமான காயம் ஒன்றுடன் நேற்றுக் காலை சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதேவேளை, பாடசாலை மாணவி என்று கூறப்படும் யுவதி ஒருவர் படையினரால் பல வந்தமாக தோட்டப் புறம் ஒன்றுக்கு இழுத் துச் செல்லப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் திருநல்வேலி மற்றும் கோண்டாவில் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை உரு வாக்கியுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்டார் என்று கூறப் படும் யுவதி பற்றி எந்தத் தகவலும் இது வரை தெரியவரவில்லை.
அவர் யார், எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற விவரங்களும் இன்னும் தெரியவர வில்லை என்றும், யுவதியைப் படையினர் இழுத்துச் சென்றதை வழிப்போக்கர்கள் கண் டிருக்கின்றனர் என்றுமே கூறப்படுகின்றது.இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் ஒரு புறம் நடக்க,

நன்றி:உதயன்
http://www.uthayan.com/pages/news/today/01.htm

தமிழிழ் தானே இருக்கு?

வழிப்போக்கர்கள் கண்டு மக்களிடம் சொன்ன படியால் மக்கள் அந்த யுவதியும் என்னும் ஒரு தர்சினி மாதிரி ஆக கூடாது என்று உடனே தேடினார்கள் தப்பா?
[b]

#17
Vasampu Wrote:வினித் எழுதியது:
காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி செய்திகள் வராது வசம்பு அண்ணா

நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன: அப்படியாயின் மேலதிக தகவல்கள் (கண்காணிப்புக் குழுவின் அறிக்கை காயப்பட்டவரின் அறிக்கை அரசஅதிபரின் அறிக்கை போன்றன) என்னாயின. தற்போது யாழிலுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர் மீளக் கிடைக்கும் வரையில் காத்திருப்பார்களா?? அப்படியாயின் ஒரே நாளில் எல்லாம் அடங்கிவிட்டனவா??

பிறகு என்ன செய்ய கதிர்காமத்துக்கு காவடியே எடுக்கிறது?

முடிவு எடுக்கவேண்டியவக்காக காத்திருக்குது சனம். முடிவு வரும் விடிவும் வரும்.

#18
Vasampu Wrote:வினித் எழுதியது:
காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி செய்திகள் வராது வசம்பு அண்ணா

நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன: அப்படியாயின் மேலதிக தகவல்கள் (கண்காணிப்புக் குழுவின் அறிக்கை காயப்பட்டவரின் அறிக்கை அரசஅதிபரின் அறிக்கை போன்றன) என்னாயின. தற்போது யாழிலுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர் மீளக் கிடைக்கும் வரையில் காத்திருப்பார்களா?? அப்படியாயின் ஒரே நாளில் எல்லாம் அடங்கிவிட்டனவா??

அண்ணா சுடப்பட்டு காயம் என்று செய்தியை நான் படிக்க இல்லை சுடும் போது மக்கள் பயத்தால் ஒடும் போது சிறு சிறு காயங்கள் என்று தான் புதினம், சங்கதி , பதிவு அப்படியான இனையதளத்தில போட்டு இருந்தார்கள்

பதிவில்........
இந்த சம்பவத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஓடியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

சங்கதியில்
[b]இதன் காரணமாக தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தவர்கள் எங்கு ஓடுவது என்று தெரியாது நாலாபுறமும் சிதறி ஓடினார்கள் தொடர்ந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.;

இந்த சம்பவத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஓடியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

http://www.sankathi.com/

புதினத்தில்

[b]இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட மக்கள் படையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் மேலதிக படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

மாலை 5 மணி அளவில் கண்காணிப்புக் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்த இராணுவத்தினர் மக்கள் கூட்டத்தைக் கலைக்க வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
http://www.eelampage.com/?cn=23292
[b]

#19
வினித்
கண்காணிப்புக் குழுவினரின் முன்னாலேயே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் என்று தமிழில் எழுதியதைத்தானே நீங்கள் இங்கு இணைத்தீர்கள். அப்போ அது பற்றிய விபரம் என்னானது. கண்காணிப்பக்குழு இலங்கை நிலவரம் பற்றிய இன்றைய நிலையை வேறு ஊடகங்களுக்கு தெரிவித்தபோது ஏன் இவ்விடயம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?????

ஒன்று மட்டும் சொல்லவிரும்புகின்றேன். பொய்களை மறைக்க மேலும் மேலும் பொய்கள் சொல்லத் தொடங்கினால் நாளைய உண்மைகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறிதான்
#20
[quote]நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன:
யாழ்பாணத்தில் இதுதான் முதல் தடைவையா காணாமல் போவது?

செம்மனி புதைகுழி எப்படி வந்தது ஏன் அப்போது யாழ் அரச அதிபர் இல்லைய?

சுடப்பட்டு காயம் என்று எந்த செய்தியில் படித்திர்கள் :roll: :roll: :roll: :roll:
[b]

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)