01-09-2006, 11:49 AM
பயங்கரவாத செயற்பாடுகளை குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் ஜனாதிபதி
இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, தான் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனினும் தீவிரவாத செயற்பாடுகளைக் கண்டும் குருடனாகவோ அல்லது செவிடனாகவோ செயற்படும் வகையில் அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொண்டால் அது மிகத் தவறான எண்ணமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஹொரணை, குடா உடுவ நாலந்த வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதும் ஒரு நாட்டிற்குள் சகல இனத்தவர்களும் எவ்வித சந்தேகமும், அச்சுறுத்தல்களும் இன்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதாக தேர்தல் மேடைகளில் உறுதியளித்தேன். அதே நிலைப்பாட்டில் இருந்தே தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். நாட்டில் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
இனப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்க்க முடியுமென நான் இப்பொழுதும் கூறுகிறேன். இப் பிரச்சினையை பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இன்னுமிருக்கிறது.
பொறுமையுடனும், அவதானத்துடனும் செயற்பட்டால் தேசிய பிரச்சினைக்கு முடிவு காண முடியுமென நான் தற்போதும் நம்புகிறேன்.
ஒரு நல்ல பௌத்தன் என்ற வகையில் சிறு வயதிலிருந்தே பொறுமையாயிருக்க நான் கற்றுள்ளேன், பழக்கப்பட்டுள்ளேன். ஆனால், இந்த பொறுமையை எவரும் இயலாமையென நினைத்துக் கொண்டால் அது அவர்களின் முட்டாள் தனமாகும்.
அத்துடன், சமாதானத்திற்காக நான் கடப்பாட்டுடன் செயற்படுவேன். எனினும், இடம் பெறும் தீவிரவாத செயல்களை பார்த்துக் கொண்டு குருடனாகவோ அல்லது செவிடனாகவோ அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகள் அல்லது வேறு எவரும் நினைத்தால் அது தவறு. அவர்களின் குறைபாடு.
போர் நிறுத்தம் கடுமையாக மீறப்படுகின்றது. போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது தொடர்பாக இந் நாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் தெரிந்திருப்பது சந்தோஷமான விடயமொன்று. இருப்பினும், தேசிய பாதுகாப்பை வழங்கும் போது, எனக்கு வரும் எந்த சவால்களையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராகவுள்ளேன்.
இதேவேளை, ஜனாதிபதி என்ற வகையில் நானெடுக்கும் தீர்மானங்களை எவரும் தீவிரவாத நடவடிக்கைகள் மூலமாகவோ, பலாத்காரமாகவோ மாற்ற முடியுமென நினைத்தால், அந்த நினைப்பு தவறானதாகும்.
இதேவேளை, இடம்பெறும் தாக்குதல்களை, அவை மகிந்தவிற்கு விழும் அடிகளென சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இவ்வாறான தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்படுவது நாடும், அப்பாவி நாட்டு மக்களும் தான். எனவே, இனப் பிரச்சினையை சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வர சகல அரசியல் கட்சிகளையும் மக்களையும் ஒன்றுபட்டு முன்வருமாறு அழைக்கிறேன்.
http://www.thinakural.com/New%20web%20site...y/09/news-1.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>