Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டனில் தமிழ் வாலிபர் கொலை
#61
கொலை நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற மாதிரி சொல்லுவார்கள்.
[size=18]<b> ..
.</b>
Reply
#62
ஈழமகன் Wrote:கொலை நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற மாதிரி சொல்லுவார்கள்.

ஆகா நம்மட 8ம் வகுப்புக்குத் தானே சொல்லுறீர்
உதவிட அவரே மேல போய் கேட்டா வலுவளக்கமா சொல்லுவினமே
:?: Idea Idea Idea Idea Idea
[b]
Reply
#63
ஈழமகன் Wrote:குருவிகளுக்கு இப்போது புரிந்திருக்கும்.... இந்த கொலையின் பின்ணனி பற்றி......

kuruvikal Wrote:அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..! Confusedhock: :roll: Idea

எவர் செய்தாலும் ஏன் அவர்கள் தமிழர்களை அதிகம் செய்கிறார்கள்..! அவ்வளவுக்கு தமிழர்கள் மோசமாக நடக்கினமா..மற்றவையோட...! :?: :?:

மிகக் குறுகிய காலத்துள்...கொலை.. கொள்ளை.. கப்பம்.. கார் உடைப்பு.. பெண்களுக்காக தெருச் சண்டை.. இவற்றை லண்டன் அல்லாத பிற இடங்களைக் காட்டிலும் லண்டனில் மிக அதிகமாக அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கேட்கக் கூடியதாக இருக்கிறது. அநேக தமிழ் பத்திரிகைகளே தமிழர்களின் நடவடிக்கைகளை நல்ல மாதிரியா எழுதுவதாகத் தெரியவில்லை..! முன்னொரு காலத்தில் லண்டனில் தமிழர்கள் எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டதாக பல பெரியவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டதையும் கேட்டிருக்கின்றோம்... அப்படியான பலர் லண்டனை விட்டு பிற நகரங்களுக்கு செல்வதில் நாட்டம் காட்டுவதையும் அவதானித்திருக்கிறோம்..! அவர்கள் சொல்வதெல்லாம் தமிழர்களோடு வாழ முடியாது என்று...ஏன் இந்த நிலை..தமிழர்களுக்குள்ளேயே..! இத்தனை துன்பங்களை அனுபவங்களைப் பெற்ற பின்னும் தமிழர்கள் தரம் தாழ்வது அவசியமா...???! குறிப்பா இளையவர்கள் புலம்பெயர்ந்து வந்தோர் அனைவரும் இது பற்றி சிந்திக்க வேண்டும்..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
ஊமை Wrote:இதைப்பற்றி யாரையும் குறை கூறி பிரயோசனம் இல்லை. இதில் முழுத்தவறும் பிரித்தானிய சட்ட இயற்றுனரையும் காவல்துறையினரையும் தான் சாரும். ஏனெனில் அங்கு குண்டர்களுக்கும் தெருச்சண்டியர்களுக்கும் எதிரான சட்டங்கள் அவர்களை சரியாக தண்டித்து சீர்திருத்தவில்லை என்பதையே இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன. மற்றது பிரித்தானியாவில் காவல்துறையினரை உதவி கோரி அழைத்தால் அவர்கள் ஏறக்குறைய 01 மணித்தியாலத்தின் பின்னரே சம்பவ இடத்துக்குச் செல்கின்றனர். இது அவர்களின் அசண்டையீனமோ அல்லது இயல்போ என்பது புரியவில்லை. இங்கு ஜேர்மனியில் கத்திக்குத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் (டுஇஸ்பேர்க் Duisburg - Moers மோஎர்ஸ்) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் உடனே நான் சிறீலங்கன் எனவே என்னை சிறையில் இடாது சிறீலங்காவுக்கு அனுப்பும் படி நீதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதற்கு நீதிபதி புன்முறுவல் பூத்தபடி சரி உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ஜேர்மனியில் கொலைமுயற்சியில் ஏடுபட்டமைக்காக எமது நாட்டின் தண்டனையை அனுபவித்த பின்னரே நீங்கள் உங்கள் நாடு சென்று அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என தீர்ப்பளித்தார். எனவே அவருக்கு தண்டனை முடிவடைந்தபின்னர் இலங்கை நோக்கி செல்லும் விமானம் ஒன்று அவரையும் அவரது சோகச்சுமையையும் தாங்கிச்செல்லும் என்பது உண்மை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

100% உண்மையான கருத்து ஊமை அவர்களே..
ஐரோப்பாவில் வாழ்ந்தவன் என்ற வகையில்.. ஐக்கியராச்சிய காவல் துறை மட்டும் அல்ல .. போக்குவரத்து.. ஒழுங்கு நலவடிக்கை எல்லாமே மிக தாமதம் மற்றைய ஐரோப்பிய நாடுகளூடன் ஒப்பிடுகையில்!

உலகத்திலேயே கிரிமினல்களுக்கு எதிராய் விரைவாகவும்.. எந்தவித விட்டு கொடுப்புக்களும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் நாடுகள் ..நான் அறிந்தவரை சுவிஸும் சிங்கப்பூரும் மட்டுமே! 8)
-!
!
Reply
#65
Quote:உலகத்திலேயே கிரிமினல்களுக்கு எதிராய் விரைவாகவும்.. எந்தவித விட்டு கொடுப்புக்களும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் நாடுகள் ..நான் அறிந்தவரை சுவிஸும் சிங்கப்பூரும் மட்டுமே!

ஓமப்பு பின்னி எடுத்துடுவாங்கள் இங்கையும் பல குறூப் இருந்தது இப்ப அடியும் இல்லை நுனியும் இல்லை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#66
sinnappu Wrote:
Quote:உலகத்திலேயே கிரிமினல்களுக்கு எதிராய் விரைவாகவும்.. எந்தவித விட்டு கொடுப்புக்களும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் நாடுகள் ..நான் அறிந்தவரை சுவிஸும் சிங்கப்பூரும் மட்டுமே!

ஓமப்பு பின்னி எடுத்துடுவாங்கள் இங்கையும் பல குறூப் இருந்தது இப்ப அடியும் இல்லை நுனியும் இல்லை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- சிங்கப்பூரில வாலாட்டினா சூரியனையே பார்க்க முடியாது.
லீ குவான் யூ அவர்கள் நாட்டை ஆளத் தொடங்கியதும் துவங்கிய பணி அது.

- சுவிஸில் போண் பண்ணி 5 நிமிடத்துக்குள் போலீஸ் நிற்கும்.
ஒன்று உள்ள இல்ல நாட்டுக்கு வெளிய..........
சூரிச் நகரின் போதைக் கும்பலை ஒரு இரவுக்குள் துப்பரவாக்கினார்கள்.

இங்கு நாட்டை நெறிப்படுத்துவது போலீஸ்.
அரசியல் தலையீடு எல்லாம் இல்லை.

நம்மவர்கள் சில அச்சங்கள் - சுய கெளரவம் ஆகியவை காரணமாக ஆரம்ப காலத்தில் போலீஸுக்கு எதையும் அறிவிப்பதில்லை.

இன்று இங்கு படித்த குழந்தைகளே அவற்றை செவ்வனே செய்கின்றனர்.
எனவே இப்போ எல்லாம் அந்த ஜம்பங்கள் பலிப்பதில்லை.
Reply
#67
அஜீவன் வயதுக்க மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்காமல் தொலைபேசியில் காவல்துறையை கூப்பிடுவதை பெருமையாக சொல்லுகிறீர்களா? தமிழ் கலாச்சாரம் வெளிநாடுகளில் வந்து எந்தளவுக்கு சீரழியிது எண்டு பாருங்கோ? எங்களை மாதிரி ஊரிலை வழர்ந்திருந்;தா தொலைபேசி இருந்ததோ அப்படி இருந்தாலும் தொலைபேசயிலை கதைச்சு பொலிசை யாரும் வீட்டை கூப்புடுவியளோ? அங்கை எல்லாம் உந்த ஜம்பங்கள் பலிக்காது. கட்டுப்பாடா அடக்க ஒடுக்கமா இருந்து வழந்திருக்குங்கள்.
Reply
#68
உண்மையில் லண்டனிலுள்ள எல்லாத் தமிழருக்கும் மேலே குறிப்பிட்ட கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் யாருடைய கொலையும் மிகவும் வேதனையான விடயம் தான். முன்பு இன்றும் இலங்கையிலும் இந்நிலை இருந்திருக்கிறது. ஆனால் அவற்றை மேலே குறிப்பிட்டது போல் விவாதிப்பதாக அறியவில்லை. இன்று அப்படியான பல இடங்களில் மாற்றம் நடைபெற்றும் லண்டனில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டது அங்குள்ள அரசியல் வாதிகளால்த் தானென நான் நினைக்கின்றேன். இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறிய லண்டனில் இப்படியான நிலையும் இருந்ததற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் வெட்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் லண்டனில் காணப்படும் அதிமிஞ்சிய பாகுபாடுகளே. நீங்கள் அங்குள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளித்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து தயைங்கத்தால் தமிழரை கேவலப்படுத்த முயற்சித்திருப்பது தனக்குத்தானே துப்பியது போலாகிவிடுகின்றது.
Reply
#69
லண்டனில் தமிழர் ஒருவர் கொலை செய்யப்படும் போது தான் எமக்குத் தெரிகிறது,ஆனால் லண்டனில் நித்தமும் கொலை,கொள்ளை ,வன்புணர்வு என்பன நடந்தவண்னம் உள்ளன.இதனால் அனேகமாகப் பாதிக்கப் படுவது அண்மயில் குடியேறியோரும்,ஏழ்மையானவர்களும்,கறுப்பு மற்றும் ஆசியன் இனத்தவருமே.லண்டன் பொலீசு நிறுவனப்படுத்தப்பட்ட நிறவெறியுடயது என்பதை அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுக்களே அறிக்கை மூலம் சொல்லி உள்ளன.சும்மா ஒப்புதலுக்கு தொலைக்காட்சியில் அறிக்கை விடுவார்கள்.எங்காவது மேற்தர மக்கள் பாதிக்கப்படும் போது வெகு மும்முரமாக செயற்படுவார்கள்.இப்போது மும்முரமாக இசுலாமிய அமைப்புக்களைக் கண்காணிப்பதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.மக்களைப் பாதுகாப்பது என்பது இப்போது இரண்டாம் பட்சமே.

இங்கே ஒட்டுமொத்தமாக லண்டன் தமிழர் இப்படித் தான் என்று சொல்லுவதில் எதுவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.களவுகள் ,கொலைகள் செய்பவர்கள் எல்லாச் சமூகத்திலும் இருகிறார்கள். அண்மையில் ஒரு வெள்ளை இனத்தவர் ஒரு 3 வயதுக் குழந்தையைக் கடத்தி பாலியல் வதை செய்ததுவும் நடந்தது .இது எந்தளவுக்கு மோசமான காரியம்.இதை வைத்து வெள்ளயர் அனைவரும் இப்படித் தான் என்று கூற முடியுமா?
Reply
#70
ஓரு நாட்டின் காவல் துறை அலட்சியமாக இருக்கும் பட்சத்தில்
அந்த நாட்டில் வன்முறைகள் - கொலை -கொள்ளை -கற்பழிப்பு - இப்படி ......................
தொடர் குற்றங்கள் நடைபெறுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும்.

<b>ஆரம்ப அலட்சியமே தொடர் குற்றங்கள் பெருகுவதற்கு வழி செய்கின்றன.</b>
குற்றவாளிகள் முறையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் தவறுகள் பெருக வாய்ப்பு ஏற்படாது.

<b>ஓர் நிகழ்வு:-</b>
சுவிஸில் வதிவிட அனுமதி பெற்று வாழும்
எனக்கு தெரிந்த ஒரு யுகோஸ்லாவிய இளைஞனுக்கு போலீசார் ஒரு மடல் அனுப்பியிருந்தனர்.

அதில் மீண்டும் ஒரு முறை நீ ஏதாவது குற்றம் புரிந்தால்
உன் நாட்டுக்கு குடும்பத்தோடு அனுப்பப்படுவாய் என எழுதப்பட்டிருந்தது.

அவன் செய்த குற்றம் வேகமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் 3 முறை கார் ஓட்டி போலீசாரின் ராடாருக்கு மாட்டியது. ஒவ்வொரு முறையும் தண்டனை பணத்தை செலுத்தும் அவன்
தொடர்ந்தும் அதே தவறை 3வது முறையாக செய்திருக்கிறான்.

அவனுக்கு இப்போது கோட் வழங்கிய தண்டனை
தனது ஓய்வு கால நேரத்தில் 480 மணி நேரம்
மாநகர சபையுடன் சேர்ந்து பாதைகளை துப்பரவு செய்ய வேண்டும் என்பதே.

இதற்கு ஒரு ராப்பன்(சுவிஸ் நாணயம்) கூட ஊதியம் இல்லை.

அடுத்த முறை தவறு செய்தால்
நிச்சயம் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்.

குற்றவாளிக்குத்தான் தண்டனையே தவிர ஒரு இனம் பார்த்து அல்ல.
Reply
#71
அப்ப இந்த 2 நாடும் நமக்கும் நம்மட தலைக்கும் சரி வராது
<img src='http://img356.imageshack.us/img356/7933/media770144xu7ef.gif' border='0' alt='user posted image'>
Reply
#72
குருவிகள் நீங்கள் முதலில் லண்டனிலும் அதன் புறநகரங்களிலும் நடைபெறுகின்ற எல்லாவற்றையும் அறிந்து தெளிந்து லண்டன் தமிழர்கள் பற்றி கருத்தாடுவது நல்லது....
[size=18]<b> ..
.</b>
Reply
#73
லண்டனில ஒரு 200 பெடியள் தறுதலையாய் இருப்பாங்களே ? 40000 பேருக்கு மேல வாழுற நாட்டில 0.2% மான பெடியள் செய்யிறதை வச்சுக்கொண்டு எல்லாரையும் குறை சொல்லுறது நல்லதில்ல பாருங்கோ.

பெடியள் எண்டாலே குழப்படிதான். ஆனால் எல்லாரும் தறுதலைகள் இல்லைத்தானே.!
.
Reply
#74
ஆறுமுகம் Wrote:லண்டனில ஒரு 200 பெடியள் தறுதலையாய் இருப்பாங்களே ? 40000 பேருக்கு மேல வாழுற நாட்டில 0.2% மான பெடியள் செய்யிறதை வச்சுக்கொண்டு எல்லாரையும் குறை சொல்லுறது நல்லதில்ல பாருங்கோ.

பெடியள் எண்டாலே குழப்படிதான். ஆனால் எல்லாரும் தறுதலைகள் இல்லைத்தானே.!

அந்த 0.2% பேர் செய்வது எத்தனைபேர் வாழ்க்கையை சீரழிக்குது என்றும் சிந்தித்தால்.. நாட்டில சிங்களவன்
எங்கட வாழ்வை அழிக்கிறான் என்று ஓடிவந்திட்டு..

தப்பி வந்த எங்களூக்குள்ளயே ஒருவரை ஒருவர் போட்டு தள்ளி .. பாதுகாப்பா நாங்கள் வாழுற நாட்டுக்காரண்ட நிம்மதியையும் கெடுத்து...

இனிமேல் சிறிலங்கன் ஒருவனை ....அவன் உண்மையா பாதிக்க பட்டு வந்தாலும்...அக்செப்ற் பண்ணலாமா எண்ட சந்தேகத்தை அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தி...

கொஞ்சம் யோசியுங்கள்!
ஹ்ம்ம்....தஞ்சம் தந்த நாட்டில் இப்படி நடப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்று உணர்வீர்கள்! 8)
-!
!
Reply
#75
லண்டன் என்று சொல்வதை விட இங்கிலாந்தில் வாழும் எனச் சொல்வதே மேல் என நினைக்கிறேன்.
இங்கிலாந்து என்பதை லண்டன் என்றே சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம்.
இதுவே சில குளறுபடிகளை உருவாக்குகிறது என நினைக்கிறேன்.

இங்கிலாந்தில் வாழும் தமிழர்களில் பல முக்கிய பரிமாணங்களை அங்கு வந்த போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

1.ஆரம்ப காலத்தில் கல்வி கற்க என்று வந்து குடியேறியவர்கள்.

2.இவர்களுக்கு வாழ்கைப்பட்டு (மணமுடித்து) வந்து குடியேறியவர்கள்.

3.இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு வெளியேறியவர்கள்.

4.மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு வேலைக்கு போனவர்கள் இலங்கை திரும்பாமலே இங்கிலாந்து வந்து தஞ்சம் கோரியவர்கள்.

5.ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு
இங்கிலாந்துக்குள் வந்தவர்கள்

6.ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் தாம் கல்வி கற்க
அல்லது தமது குழந்தைகளின் கல்வியின் நிமித்தம் இங்கிலாந்துக்குள் வந்தவர்கள்.

7. கல்வியின் நிமித்தம் தற்காலத்தில் வந்தவர்கள்.

8.அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் பெற்று நேரடியா வந்தவர்கள்.

9. ஐரோப்பிய நாடுகளில் குற்றங்கள் செய்து விட்டுத் தப்பி வந்தவர்கள்.

இவர்களில் ஆரம்பத்தில் கல்வி கற்க வந்தவர்கள்
இவர்களுக்குப் பின்னால் வந்த எவரையும் கணக்கிலே எடுப்பதில்லை.
இவர்கள் படித்தவர்கள் என்ற தொனியோடு டாம்பீகமாக வாழ்பவர்களாகவே என்னால் உணர முடிந்தது.
இவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பாமரத் தமிழர்களோடு பழகுகிறார்கள்.
அதுவும் ஏதாவது சில விழாக்களில்தான்.
மற்றப்படி உள்ளுணர்வில் வித்தியாசமே இல்லை.

இனக்கலவரக் காலத்தில் அகதியாய் வந்தவர்களை விட
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள்
அங்கு வியாபாரங்களைத் தொடங்கி பெரிய வர்த்தகர்கள் ஆகியிருக்கிறார்கள்.
தவிரவும் அங்கு பிரபலமாக வாழ்வோரும் இவர்கள்தான்.

தாயகத்தில் அரசாங்க உத்தியோகத்தர் எப்படியோ
அந்த நிலையில் முதலில் இங்கிலாந்து வந்து கல்வி கற்றோரும் இருக்கிறார்கள்...........

இலங்கையின் வியாபார நிறுவனங்கள் போல
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் லண்டனில் கோலோச்சுகிறார்கள்.

யாருடைய பெயரிலாவது திருட்டுத் தனமாக வேலை செய்து
அல்லது அரசாங்க இலவசக் கொடுப்பனவுகளோடு வாழ்ந்து அல்லது
ஏனைய இடங்களில் இருந்து குற்றவியல் பிரச்சனைகள் காரணமாக வந்த <b>ஒரு சிலரே</b>
அங்கும் பிரச்சனைகளுக்கு வித்தாகி நிற்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அரசின் மந்தப் போக்கு என்பதை விட
அரசின் விட்டுக் கொடுப்புகள் கண்டு கொள்ளாதனம் என்பதே சரி.

ஜேர்மன் - சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற போலீஸ் அடையாள அட்டைகளை பரீட்சிக்கும் முறை
அல்லது இருக்கும் வீட்டு முகவரி போன்றவற்றை அரச திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லாம் அங்கு கிடையாது.
எவர் எங்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும்
திறமையிருந்தால் செய்யலாம்.

14 வருடங்களுக்கு மேல் திருட்டுத் தனமாக இருந்ததாக
உறுதிப்படுத்த முடிந்தால் குடியுரிமை கூட பெறலாம்.
சட்டத்தில் உள்ள முக்கிய ஓட்டைகள்...........ஏராளம்.

லண்டனில் இருக்கும் பல வாகனங்களுக்கே
உண்மையான இலக்கத் தகடுகள் இல்லை.
பொய்யானவை.

அதைக் கூட கண்டு கொள்ளாத போலீஸ்.
பெற்றோல் நிலங்களில் வேலை செய்யும் தமிழர்களைக் கேட்டால்
விலாவாரியாக கதை சொல்வார்கள்.

பெற்றோல் அடித்து விட்டு ஓடும் கார் பற்றிய தகவல்களை போலீஸுக்குக் கொடுத்தால்
அந்த நம்பரிலே வாகனமே இல்லை என்பார்களாம்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..............

தமிழர்கள் மட்டுமல்ல.
ஏனைய இனத்தவரும் இங்கே இப்படித்தான்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.
இதுதான் ஒரு நாள் கெடுதலாகவும் மாறும் நிலைக்கு தள்ளும்.

நாம்தான் கவலைப்படுகிறோமே தவிர அங்கு இதைவிட பெரிய விடயங்கள் சந்தடியின்றியே நடக்கின்றன.

Arrow <span style='font-size:19pt;line-height:100%'>(திருத்தத்துக்கு உதவிய <b>மீரா</b>வுக்கு நன்றி.)</span>
Reply
#76
அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......

ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......
<b> </b>
Reply
#77
அஜிவன் அண்ணா சரியாக கூறியிருக்கிறீர்கள்..
மீரா சொல்வதும் சரிதான் சட்டரீதியற்ற முறையில் 14
வருடங்கள் இருந்தால் தான் விண்ணப்பிக்கலாம்..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
MEERA Wrote:அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......

ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......

7 வருடங்கள் என்று ஒரு வழக்கறிஞர் கூறினார்.
அப்படி என் முன்னே ஒருவரது விடயத்தை
வழக்காக பதிவதற்கு
அந்த வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார். :?:


Arrow திருத்தத்துக்கு நன்றி மீரா + வசீ.
மாற்றி விடுகிறேன்.
Reply
#79
இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட விரும்பகின்றேன். இலங்கையில் மோசமாக கலவரங்கள் நடந்த காலத்தில் பிரித்தானியாவிற்குள் வந்த நம்மவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள தமிழர் யாராவது பொறுப்பெடுத்தால் அகதி அந்தஸ்து கொடுத்தார்கள். இந்த விடயத்தில் அப்போது ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வந்திருந்த பலர் முன்வந்து உதவினார்கள். ஆனால் வந்தவர்களோ சிறிது காலத்தில் தமது கைவரிசையைக் காட்டி பொறுப்பெடுத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு விட்டார்கள். இதனாலேயே முன்பு வந்தவர்கள் பலர் இப்போ தாமுண்டு தம் வேலையுண்டு என்று தெரிகின்றார்கள்.
Reply
#80
Vasampu Wrote:இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட விரும்பகின்றேன். இலங்கையில் மோசமாக கலவரங்கள் நடந்த காலத்தில் பிரித்தானியாவிற்குள் வந்த நம்மவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள தமிழர் யாராவது பொறுப்பெடுத்தால் அகதி அந்தஸ்து கொடுத்தார்கள். இந்த விடயத்தில் அப்போது ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வந்திருந்த பலர் முன்வந்து உதவினார்கள். ஆனால் வந்தவர்களோ சிறிது காலத்தில் தமது கைவரிசையைக் காட்டி பொறுப்பெடுத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு விட்டார்கள். இதனாலேயே முன்பு வந்தவர்கள் பலர் இப்போ தாமுண்டு தம் வேலையுண்டு என்று தெரிகின்றார்கள்.
வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)