rajathiraja Wrote:இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?
நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன்.
அது தவறு என்று பின்னர் உணர்ந்தேன்.
நாங்கள் தற்போது இருப்பது அவனது நாட்டில்.
அவனது நாட்டு சட்ட திட்டங்கள் கலாச்சாரங்கள் வேறு.
அவனது மொழி தெரிந்தால் மட்டுமே அங்கு நடைபெறும்
அரசியல் மாற்றங்கள் தொட்டு அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
இல்லாவிடில் அங்குள்ள சட்டங்கள் தெரியாது தவறிழைத்து குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.
எனவேதான் இந்நாடுகளுக்கு அகதியாக வருவோருக்கு கூட ஆரம்பத்தில் அந்த மொழியை கற்பிக்கிறார்கள்.
ஐரோப்பாவில் <b>ஆங்கிலம்</b> புழக்கத்தில் இருப்பதாக இலங்கை - இந்தியா போன்ற நாடுகளில் இருப்போர் நினைக்கிறார்கள்.
இங்கு வந்தால்தான்
அவர்கள் தனது தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்பது தெரியும்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட சுவிற்சர்லாந்தில் உள்ள 3 பகுதிகளில் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி - ரொமானிஸ் ஆகிய மொழிகள் பேசினாலும் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பேசும் பகுதிகளில் இவையே தனித் தனி ஆட்சி மொழியாக இருக்கிறது.
Quote:உதாரணமாக :
ஜேர்மன் பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.
அல்லது
பிரென்ஜ் பேசுவோர் ஜேர்மன் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.
அல்லது
இத்தாலி பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.
ஒரு சிலரே ஆங்கிலத்தை கற்கின்றனர்.
அதுவும் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்வோர் அல்லது வியாபார - அரசியல் தேவைகள் கருதி...........
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் இவர்கள் பின்னடைந்தவர்கள் அல்ல.
பலர் ஆங்கிலம் தெரிந்தாலும் பேசுவதில்லை.
கொஞ்சம் தெரியும் என்று சொல்வார்கள்.
இலக்கணம் பிசகாது பேசுவார்கள்.
நமக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை.
அவர்கள் ஒரு நாட்டுக்கு போகு முன் அந்த நாடு - கலாச்சாரம் - மக்கள் - சட்ட திட்டங்கள் - மொழி - இப்படி பல வற்றை தெரிந்து கொண்ட பின்தான் போவார்கள்.
நாம் புறப்பட்டா போதும் என்ற நிலையில் போகுறோம்?
தவிர
தமிழ் நாட்டில்
தமிழ் நாடு என்று பெயரே தவிர
எல்லாமே ஆங்கிலம் கலந்த தமிழை பட்டி தொட்டி முழுவதும் பார்க்கலாம்.
[quote]ரைஸ்