Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வா..வா!!
#1
<b>வா..வா!!
-----------------------

<img src='http://www.squaredanceland.de/images/happynewyear.jpg' border='0' alt='user posted image'>

கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே
2005 போய்வா தோழா!

சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை
கொன்று தொலைத்தாய்!

என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி?
இருந்தாலும் போய்வா!

2006 ஏ வா வா !
வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா?

வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை..
பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா?

கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை
எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்!

வாய் மூடிபோன பீரங்கி வாய்களை
ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்!

அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும்
எரித்திடாதே.. அணைத்திடாதே!

தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-நினைக்கிறோம்..
ஆனால் தர்ஷினிவரை இன்று பறி கொடுத்து நிற்கிறோம்!

தமிழராய் பிறந்ததை தவிர தவறு வேறென்ன செய்தோம்?

போனது போகட்டும்.. வாயிலில் கண்திறந்த
மலர்கள் இனி குருதியில் குளிக்காது பூக்கட்டும்!

சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்..
செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்..
வா வா 2006 ஆண்டே!!</b>
<b> .. .. !!</b>
Reply
#2
ஆகா அருமையான கவிதை. எம் உள்ளத்தை கண்ணாடியில் காட்டினாற் போல். வாழ்த்துக்கள். மேலும் பல ஆக்கங்கல் படைக்க வாழ்த்துக்கள்.
[b][size=15]
..


Reply
#3
துரோகிகளின் முகத்தை தெளிவாக இனம் காட்டி, புத்தாண்டே வா!!

நன்றி கவிதைகளுக்கு இரசிகை
[size=14] ' '
Reply
#4
ஆகா அக்கா..புத்தாண்டு கவியை வாசிச்சிட்டு...யோசிக்கப்போகுது..இப்பவே பிளான் போடப்போகுது...பாருங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எண்டாலும் இந்த 2005க்கு நிறைய கொழுப்புத்தான்...பார்ப்பம் அடுத்த தடவை அவருக்கு இருக்கு :wink:
..
....
..!
Reply
#5
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை  
எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படித்தான் ஒவ்வொரு புத்தாண்டையும் வரவேற்கிறோம், எங்களின் கெஞ்சல் சிங்கள அரசிற்குத்தான் கேட்கவில்லை அதானால் போராடப் புறப்பட்டோம் என்றால், உனக்குமா கேட்கவில்லைப் புத்தாண்டே!

கவிதை நன்றாக இருக்கிறது இரசிகை.<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#6
வா வா என்று புது ஆண்டை வரவேற்ற கவிதை நன்றாக இருக்கு அக்கா மேலும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்..  
செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்..  
வா வா 2006 ஆண்டே!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம் செங்கம்பளம் விரித்து 2006 ம் ஆண்டை வரவேற்றாச்சு இவர் வந்து என்ன செய்யுறார் என்று பார்ப்பம்... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
ரசிகை புத்தாண்டை வரவேற்கும் கவிதை அருமை... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் செங்கமலம் விரித்து வரவேற்று இருக்கிறீர்கள்... பார்ப்போம் 2006 என்னவெல்லாம் செய்கின்றார் என்று??????

Reply
#8
ப்ரியசகி Wrote:ஆகா அக்கா..புத்தாண்டு கவியை வாசிச்சிட்டு...யோசிக்கப்போகுது..இப்பவே பிளான் போடப்போகுது...பாருங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எண்டாலும் இந்த 2005க்கு நிறைய கொழுப்புத்தான்...பார்ப்பம் அடுத்த தடவை அவருக்கு இருக்கு :wink:

என்ன சகி ரொம்ப டென்ஸனா இருக்குறீங்கள் போல :wink:
<b> .. .. !!</b>
Reply
#9
வாழ்த்துச் சொன்ன தூயா தூயவன் அருவி அனித்தா பிரியசகி ரமா அனைவருக்கும் எனது நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply
#10
ரசிகை..

<b>சமகாலத்தோட ஒன்றி எழுதி இருக்கிறிங்க.. வாழ்த்துக்கள்.. </b>இப்ப கவிஞர் ஆகிட்டிங்க.. ஆரம்ப காலத்தில சொல்லுவிங்க.. கவிதை றை பண்ணினாலும் வராதாம் என்று.. இப்ப எடுத்த உடனே ஒரு கவிதை தூக்கி போடுறிங்க.. வாழ்த்துக்கள்.. மேலும் எழுதுங்க..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
Vishnu Wrote:ரசிகை..<b>சமகாலத்தோட ஒன்றி எழுதி இருக்கிறிங்க.. வாழ்த்துக்கள்.. </b>இப்ப கவிஞர் ஆகிட்டிங்க.. ஆரம்ப காலத்தில சொல்லுவிங்க.. கவிதை றை பண்ணினாலும் வராதாம் என்று.. இப்ப எடுத்த உடனே ஒரு கவிதை தூக்கி போடுறிங்க.. வாழ்த்துக்கள்.. மேலும் எழுதுங்க..

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் கூட சொல்கிறீர்கள்
உங்களால் முடியவில்லை என்று ஆனால் இப்ப எல்லாம் அந்த மாதிரி எழுதுறீங்கள். :wink: :wink:
உங்கள் புளக் பார்த்தன் அழகாக இருக்கிறது.

ம்ம் வாழ்த்துக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#12
அற்புதமான கவிதை. 2006 நல்லாத்தான் வரவேற்றிருக்கின்றீர்கள். சுனாமில் தொடங்கி பரராசசிங்கம் ஐயாவின் இளப்புவரை 2005ன் கோர நினைவுகளை நினைவுபடுட்தினீர்கள். ம்ம் இனி 2006ம் ஆண்டாவது நல்லதாக அமையட்டும். மேலும் கவிகள் காவி வாருங்கள் என வாழ்த்துகின்றேன் 2006ல்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#13
நன்றி மதுரன். நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#14
ரசிகை புதிசு புதிசா எழுதுறீங்க, நல்ல கற்பனை.
தொடர்ந்து கவி பாடி இருக்க வாழ்த்துக்கள்.
களத்தில் இருக்கும் கவனம் பாடத்திலும் இருக்கட்டும்.பிறகு பரீட்சயில போய் கதை,கவிதை எழுதுறேல்ல. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#15
narathar Wrote:ரசிகை புதிசு புதிசா எழுதுறீங்க, நல்ல கற்பனை.
தொடர்ந்து கவி பாடி இருக்க வாழ்த்துக்கள்.
களத்தில் இருக்கும் கவனம் பாடத்திலும் இருக்கட்டும்.பிறகு பரீட்சயில போய் கதை,கவிதை எழுதுறேல்ல. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி அண்ணா
முந்த நாள் தான் வகுப்புக்கள் தொடங்கினது. இந்த வீக் பெரிசா வேர்க் இல்லை.
சரி சரி கவலைப்படாதீங்கோ நான் கவனமாகப் படிக்கிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)