01-05-2006, 11:15 AM
நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் மாமனிதர் உரிய கௌரவத்துடன் நிலைக்கிறார்
இன்று குமாரின் 6 ஆவது நினைவு தினம்
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக அவர் செய்த உயிர்த் தியாகத்தைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள்இ நினைவுமலர்கள் வெளியாகியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவரின் உயிர்த் தியாகம் யாரும் மறக்கக்கூடிய காரியமல்ல. அதற்குரிய முக்கியமான காரணங்களாவன;
1. எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்?
2. தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் வெளிநாடுகளில் எங்கேயாவது சென்று வாழக்கூடிய சகல வசதிகள் இருந்தும் ஆயுதங்களைக் கையிலே வைத்துக் கொண்டு வாழும் எதிரிகளின் குகைக்குள்ளேயே தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். நான் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் சில காலம் இருந்து தமிழர் பிரச்சினைகளை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் படி கூறிய பொழுது இனவாத அரசாங்கங்களுக்கும் எதிரிகளுக்கும் பயந்து வெளிநாட்டிலிருந்து அரசியல் நடத்த விருப்பமில்லை என்று கூறினார்.
3. அவரைப் பொறுத்தவரையில் சகல விதமான சௌகரியங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டிருந்த பொழுதும் அவற்றை எல்லாவற்றையும் மறந்து செயல்பட்டவர். மாமனிதனைப்பற்றி பல நினைவுமலர்கள் வெளியிடப்பட்டு நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவு தினத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பதிலிருந்து அவருடைய உயிர்த் தியாகத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறக்கவில்லை என்பதே ஆகும்.
அவருடைய நினைவு மலர்கள் பலருக்கு கிடைக்காமல் இருக்கக்கூடும் என்று எண்ணி நினைவுமலர்களிலிருந்து சிலவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
கடும் குளிரிலும் மாமனிதனுக்கு கனடாவில் அஞ்சலி
கடும் குளிரிலும் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றிலில் திறந்த வெளி அரங்கில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற அஞ்சலிப் பொதுக் கூட்டத்தில் ஸ்காபுறோ - எஜின் கொட் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம். கரிஜியானிஸ்இ ஸ்காபுறா - எஜின் கோட் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்வின் கேளிங்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நோம்கெலிஇ ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர்கள்இ மனிதவுரிமை அமைப்புகள் ஏனைய இன அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாமனிதர் குமாரின் படுகொலையை வன்மையாகக் கண்டித்து அவர்கள் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய போராட்டத்திற்கு தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
உலகத் தமிழர் கனடா:
சிங்கத்தின் குகைக்குள் கொல்லாமை பேசிய அன்பனே துப்பாக்கி முதுகுறுத்தும் போதும் அஞ்சாமல் தமிழருக்காய் உரத்து முழங்கிய மறத்தமிழன் நீ. எங்கள் நெஞ்சுக்குள் கனன்றிருந்த கேள்விகளையெல்லாம் கடிதமாய் வடித்தாய் நீ. துப்பாக்கி ரவைகளை பதிலாகனுப்பினர் கோழைகள். உண்மையை ஓங்கியொலித்த உன் மூச்சையே பிடுங்கினர்.
தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்ஸ்
அமரர் குமார் பொன்னம்பலம் எம் தமிழ் மக்களுக்கும்இ எம் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாக மிகத் துணிவாக இன்னல்கள் நிறைந்த கொழும்புச் சூழ் நிலையிலும் குரல் கொடுத்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் கொழும்பில் மட்டுமல்லாது சர்வதேச அளவில்இ தான் பங்கு கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் எம் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும்இ அவர்களுக்குச் சிங்கள அரசு கொடுக்கும் இன்னல்களைப் பற்றியும் முற்று முழுதான உண்மைகளை எடுத்துக் கூறிவந்தார்.
இவ்வாறாக தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் உறுதியும் துணிவும் மிக்க ஒரு நல்ல மனிதன் இழப்பு தமிழ் இனத்திற்கு பேரிழப்பாகும்.
ஐ.பி.சி. குடும்பம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பி வந்தவரும் எதிரியின் வாசலில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆதரித்துக் குரலெழுப்பி வந்த அஞ்சா நெஞ்சன் குமார் பொன்னம்பலம் அவர்களது படுகொலைச் செய்தி கேட்டு தமிழ் தேசிய இனம் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.
தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்ட அளவற்ற நேயம் காரணமாக சட்டத்துறையில் பெற்ற அறிவையும் ஆற்றலையும் தமிழினத்தின் விடுதலைக்காய் அர்ப்பணித்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் அகாலமரணம் தமிழ் தேசிய இனத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
அடங்கி வாழும் இனமல்ல தமிழினம் என்பதை
ஸ்ரீலங்கா பேரினவாத அரசிற்கு எடுத்தியம்பி வந்த
சுதந்திர புருஷன் குமார் பொன்னம்பலம் அவர்களுடனான
நினைவை நாம் என்றும் மறக்க முடியாது
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே
ஈழத்தமிழருக்காய் பாரெங்கும் நீவீர் எழுப்பிய
குரல் இன்று நீதிமன்றங்கள்இ மனிதவுரிமை
நிலையங்கள்இ தொடர்பு சாதனங்கள்
உலகமெல்லாம் ஒலிக்கிறது ஐயா!
தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலை 2000 ஆம் ஆண்டு
ஆதரவற்று நின்ற தமிழ் அரசியல் கைதிகளான எங்களுக்கு தனது சட்ட அறிவைக் கொண்டு சிறந்த மீட்பராகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்து கொண்டு தாயக விடுதலையில் தணியாத தாகத்துடனும்இ தளராத உறுதியுடனும் தனக்கெனத் தனித்துவமான பண்பையும் இலட்சியத்தையும் வரித்துக் கொண்டு ஈழத் தமிழ் தேசிய இனத்தின் குரலாக தமிழ் அரசியல் வானில் தன்னிகரில்லாத் துண்மதியாக சிங்கள இனத்தின் சிரசில் இருந்து கொண்டே சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் கோரத்தனமானதும் கோழைத்தனமானதுமான படுகொலை எமக்கு அதிர்ச்சியையும் ஆறாத்துயைரையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாமனிதரின் இழப்பு தமிழ் தேசிய இனத்தால் என்றுமே ஈடு செய்ய முடியாது. அவர்தம் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேவேளைஇ அன்னாரின் வாழ்நாளில் வரித்துக் கொண்ட இலட்சியங்களால் கவரப்பட்டவர்கள் என்ற வகையிலும்இ எமது வளமான வாழ்வுக்காக வாதாடியவர் என்ற வகையிலும்இ துரோகக் கொலை செய்த கோழைகளின் நோக்கம் நிறைவேறாத வகையிலும் அவரது இலட்சியங்களை நிறைவேற்ற திட சங்கற்பம் கொள்கிறோம்.
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ருளுயு
ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள்இ படுகொலைகள்இ கைதுகள் இ சித்திரவதைகள்இ பாலியல் வன்முறைகள் இவற்றிற்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி நீதி கோரி வாதாடினார். பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்முறைக்குப் பலியாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீதிமன்றம்இ உலக மனித உரிமைகள் அமைப்புகள் இவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்தியவர் குமார் பொன்னம்பலம் அவர்களே.
மேலும்இ அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகளுக்கு செய்த பிரசாரத்தை எதிர்த்து அதற்கு மாறாக அவர்களின் சுயரூபத்தையும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும்இ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீதி நியாயத்தையும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள்இ கொழும்புக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களது தார்மீக ஆதரவை திரட்ட முயற்சி செய்தவர் குமார் பொன்னம்பலம். அவர் அந்நேரம் கொழும்பில் இருந்திராவிட்டால் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள்.
சிட்னி தமிழ் அமைப்புகள்
ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும்இ தமிழ் தேசம்இ சிங்களத் தேசம் என்ற இரண்டு தேசங்கள் இணைந்ததுதான் இலங்கை என்பதையும் ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தவர் அமரர் குமார் பொன்னம்பலம். இந்தக் கருத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு திணிக்கப்பட முடியாது. மாறாக ஈழத் தமிழர்களின் கைகளில் தான் தற்போதைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஆணித்தரமாக அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் தனித்து ஒலித்துவந்த இந்த ஜனநாயக மரபு வந்த தமிழ் அரசியல்வாதியின் குரல் ஒடுக்கப்பட்டமை மிதவாத அரசியலில் நேர்மையான ஈழத்தமிழருக்கு இடம் இல்லை என்பதைக் காட்டுகின்றது. வன்முறை அரசியலாக மாறிவிட்ட இலங்கை அரசியலில் ஜனநாயக கோட்பாடுகள் அடக்கப்படும் மற்றொரு துரதிர்ஷ்ட நிகழ்வே குமார் பொன்னம்பலத்தின் கொலை எனக் கூற வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அமரர் குமார் பொன்னம்பலம் என்ன இலட்சியத்துக்காக போராடி மரணித்தாரோ அதை நிறைவேற்றுவதுதான் தமிழ் மக்களாகிய நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - ஜேர்மனி
மாமனிதர் சட்டவல்லுநர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மனிதத்தை உலகத்தில் காப்பாற்ற தனது உழைப்பையும் காலத்தையும் அர்ப்பணித்து நின்ற ஒரு மனிதர். தாயகத்தில் எமது மக்களைக் காப்பாற்ற உயிர் கொடுத்து உழைக்கும் புலிகளை பகிரங்கமாக அங்கீகரித்து சிங்களத்துத் தலைநகரிற் துணிவோடு நின்ற ஒரேயொரு தமிழர்.
இவர் கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு நீதியின் துணை கொண்டு விடுதலை பெற்றுக் கொடுத்த பாசம் நிறைந்த சட்டவல்லுநர். தமிழரின் உரிமைக்காக உலகில் குரல் எழுப்பிய விடுதலை நேசர். சிங்கள அரசுகளின் கொடூரமான இராணுவச் சித்திரவதைகளையும் பாலியற் கொலைகளையும் சட்ட மீறல்களையும் உலக நாடுகளின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நீதியாளர்.
இவர் மரணத்தின் வாசலிலும் மண்ணை நேசித்தவர். மக்களை நேசித்தவர். நீதிக்காக போராடியவர். நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் "மாமனிதர்" என்ற உரிய கௌரவத்தைப் பெற்று நிலைக்கிறார்.
மேலே கூறியவற்றிலிருந்து எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்ற இரு கேள்விகளுக்குரிய விடை துலாம்பரமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அவரின் தியாகம் என்றும் அழியாது.
தினக்குரல்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->