Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் IV - Sydney முருகனின்......
#21
முகம்ஸ்,நல்ல யோசனை, அடுத்த தொடருக்கு இந்த பெயரை வைப்பம் என்ன <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#22
தூயா பபா இப்பதான் வாசிச்சன் புலம்பல் நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து எழுதுங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி ஏன் எல்லாரும் துயா பபாவின்ர சொந்த அனுபவம் எண்டுறீங்க எல்லா இடத்திலும் நடக்கிறது தானே :evil: :roll: :roll:

இதே ஆண்களும் இப்படித்தான் மனைவி தனது தந்தையையோ சகோதரனை பற்றியோ உயர்வா கதைச்சா காணும் அவர்களை மட்டம் தட்டுவார்கள் அதே போல மாமனாரும் செய்வார் (இது எனது சொந்த அனுபவம் இல்லை :wink: )


ஆனா மாமியார் மருமகள் மட்டும் தான் சண்டை பிடிக்கிற மாதிரி உருவகப்படுத்துறதுதான் ஏனெண்டு தெரியேல்லை :roll: :roll: :roll:
. .
.
Reply
#23
Quote:தூயா பபா இப்பதான் வாசிச்சன் புலம்பல் நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

நல்ல இருக்குறதல தான் போட்டு இருக்க பிறக்கு என்ன
நல்லதான் எண்டு புலம்பின <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#24
தூயாவின் புலம்பல்ஸ் சுப்பர்................. 8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
தூயாவின் புலம்பல் கற்பனையாக இருந்தாலும் அது புலத்தில் நடக்கும் ஒன்றுதான். இதில் வரும் செல்வி தொடர்நாடகம் குறித்தபேச்சு புலம்பெயர்ந்த தமிழர்களில் வாழ்வில் இந்த தொடர் நாடங்கங்கள் எவ்வளவு தூரம் ஊருடுவிட்டது என்பதை காட்டுகின்றது.

தூயாவின் புலம்பல் தொடரட்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#26
தூயா

நல்லாத்தான் புலம்பியிருக்கின்றீர்கள். தொடர்ந்து புலம்புங்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#27
[b]உங்கள் ஆதரவுடன் இதோ "புலத்தில் இருந்து ஓர் புலம்பல்" தொடர்கிறது...


<img src='http://www.chennaionline.com/cityfeature/NanganallurNotes/images/pongal.jpg' border='0' alt='user posted image'>


[size=18][b]தை பிறந்தால் வழி (லி) பிறக்கும்


14-01-06 அதிகாலை காலை 6 மணி. பகுதி நேர வேலையால் 3மணிக்கு வந்து தூங்கிய ராஜன் கண்களை திறந்து "குட் மோர்னிங் ராதி".

"குட் மோர்னிங் ராதி"

மனைவியை தேடிய ராஜனின் காதுகளில் "சுப்ரபாதம்" கேட்கிறது.

"வேறு என்ன ஏதாவது நாடகத்தில போகுது போல...ம்ம்ம்ம் என்ட வீட்டில எங்க இதெல்லாம்..ஆகா என்னடா இது அதிசயமா கிடக்குது என்ட வீட்டில தான் போல" என நினைத்தவன் வெளியே மண்டபத்திற்கு விரைகிறான்.

"குட் மோர்னிங்" என காலை வணக்கம் கூறியவாறு மனைவி ராதிகா கையில் சாம்பிராணி தட்டுடன் கடக்கவும் ராஜனுக்கு தலைசுற்றி விழாத குறை தான்.

"அம்மா அம்மா..." என தாயை அழைத்தவாறு தாயின் அறைக்கதவை தட்டினான்.

பதில் இல்லாது போகவே மறுபடியும் தாயை சற்று உரக்க அழைத்தான்.

"என்னங்க எதுக்கு இப்ப நல்ல நாள் அதுவுமா கத்துறிங்கள். அத்தை சமையல்கட்டில தான் இருக்கா.அங்க போய் கதைக்கிறத கதையுங்கோ" என கணவனை முறைத்தவாறு தன் சாம்பிராணி நடயை தொடர்ந்தால்.

"என்னடி இது, சாமி கும்பிடுறது என்றால் ஒரு பக்தி வேணும், சிரத்தை வேணும். இந்த படங்கள்ள வாற போல கதைச்சு கதைச்சு..ஒரு நாளைக்கு பார் கடவுளுக்கே பொறுக்காமல் எழும்பி ஓட போறார்"

"என்ன உங்கட ஆற்றாமையின் வெளிப்பாடு போல, அப்பவே என்ட அப்பர் சொன்னவர். வெளிநாட்டுகாரனை நம்பாத என்று. அத்தையின்ட மகனை கல்யாணம் பண்ணடி என்று கத்து கத்தென்று கத்தினார். நான் தான் கேட்கல..ம்ம்ம்ம்" என் ராதிகாவிடம் இருந்து ஓர் நீண்ட பெரு மூச்சு.

"அது சரி, உன்ட அத்தை மகன் குடுத்து வச்சவன் தப்பிட்டான்."

சாம்பிராணி தட்டில் கவனமாக இருந்தவள் சரேலென திரும்பி "என்ன சொல்லுறிங்கள்????"

"இல்லை என்னக்கு இருந்த அதிஸ்டம் அவனுக்கு இருக்கவில்லை என்று சொன்னென்" என வெளியே கூறியவன்,மனசுக்குள் "காலம் பொங்கல் அன்றும் பொய் சொல்ல வேண்டிய நிலமை"

இதுக்கு மேல் நின்றால் பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிடும் என தெரியவெ, தாயை நாடி சமையல் அறைக்குள் சென்றான்.

"தம்பி எழும்பிட்டியே, போய் குளிச்சிட்டு வா அப்பன். பொங்கள் பானையை அடுப்பில வைக்கவேணுமெல்லோ??"

"ஓமனை அதைவிடு, உங்களுக்கும் உங்கட மருமகளுக்கும் என்னனை நடந்தது. மெட்டி ஒலியில இப்படி எல்லம் பொங்கள் நாளில நடந்ததோனை??"

"போடா போய் குளிட, என்ட மருமகளோடயும் என்னொடையும் உனக்கு எப்பவும் ஒரு தணகல் என்ன?"

ஆம மொத்தம் இதில என்னமோ மர்மம் இருக்குட என நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.

சாம்பிராணி நடை முடித்துவிட்டு சமையல் கட்டுக்குள் வந்த ராதிகா, "அத்தை ஒரு தேத்தணி போடுறன் குடியுங்கோ.உங்களுக்கு இப்படி சாப்பிடாம விரதம் இருக்கிறது உடம்புக்கு நல்லதில்லை"

"பிள்ளை நானும் கேட்க வேணும் என்று இருந்தனான், ஒருக்க சிரமம் பாராமை ஒரு தேத்தணிய போடு பிள்ளை. அதுக்குள்ள நான் இந்த கொழுக்கட்டையை பிடிச்சு வைக்கிறன்"

"சரி மாமி, ஏன் மாமி இந்த மெட்டி ஒலி பார்த்தம் தானே, அதில இந்த லீலாவின்ட புருசனுக்கு வாறானே ஒரு கிராகதன், அவனை எல்லம் எப்படி மாமி அந்த பெட்டை சகிச்சுக்குது??"

"இதை கேட்டாயென்றா உண்மை பிள்ளை, இப்படி தான் என்ட மனுசனின்ட சகோதரியின்ட புருஸன். மகா பாவியாம். உன்ட மாமனார் அரிவாளோட எல்லோ போய் மிரட்டி போட்டு வாறவறாம்."

"இங்க அத்தை, மாமக்கு அப்படியும் தைரியம் இருந்ததோ??? ஊரில மாமாவை பற்றி வேற மாதி எல்லோ கதை. மனிக்கு பயந்த மனுசன் என்று"

"என்ன எவன் சொன்னது? ஆம்பிளை என்றால் மனிசிக்கு பயந்து, ஊருக்கு வீரனா தான் இருக்க வேணும். இப்ப என்ட பிள்ளை இல்லையா?"

வாசலிக்கு பிளாஸ்டிக் தோரணம் கட்ட நூல் எடுக்க வந்த ராஜன், "கதையை என்டா கைலாசம் தானெ உங்க ரெண்டு பேருக்கும்..இஞ்ச ராதி என்ன செய்யிறீர் அடுப்பில?"

"பின்ன என்ன நீங்கள் பெரிய வளவோட வீடா வாங்கி தந்திருக்கியள்?? கோலத்தை எங்க போடுறது நான்? அது தான் காஸ் அடுப்பை சுத்தி போடுறன்"

"சரி சரி பொங்கல் நாள் அதுவுமா ஆரம்பிச்சாச்சா?"

வாசலில் மாவிலை தோரணம் கட்டிகொண்டு இருக்கும் போது மேல்வீட்டு நடேசன் வருகிறார்.

"பொங்கல் வாழ்த்துக்கள் ராஜன்"

"நன்றி அங்கிள், வாழ்த்துக்கள். என்ன பொங்கல் எப்படி?"

"போகுதடா தம்பி, என்ட மனிசி இன்னும் நித்டிரை விட்டு எழும்பினா தானே. அது தான் உன்னோட சும்ம கதைச்சு கொண்டு இருப்பம் என்டு"

மனசுக்குள் "வீட்டில இருக்கிற தொல்லை போதாது என்று, மேல் வீட்டு, கீழ் வீட்டு தொல்லை வேறு"

"ஓம் அதுக்கென்ன அங்கிள், வாங்கோ வாங்கோ"

ராஜனின் பின்னால் வீட்டுக்குள் நுழந்த நடேசன், "பிள்ளை ராதிகா..இருக்கியோடி அம்மா?"

நடேசனின் குரலை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த ராதி "யாரு நடேஸ் அங்கிளா? வாங்கோ வாங்கோ"

"நீ தான்டி பிள்ளை என்ட பேரை சரியா கூப்பிடுறாய். இந்த நாட்டில வந்துஇ போட்டு பட்டிக்காட்டு தனமா முழு பெயரையும் சொல்லியா கூப்பிட முடியும்?"

ராஜன் (மனசுக்குள்) : ஆமா இந்த கிழட்டுக்கு இப்ப இது தான் குறை. நடேஸாம் நடேஸ். ஏன் "நட்" என்று பெயரை மாத்த வேண்டியது தானே?

"என்ன ராஜன் பலமான யோசனை போல??"

"இல்லை அங்கிள் அப்படி ஒன்றும் இல்லை. கப்பல் ஒன்று கவிழ போது போல..நீங்கள் கதைச்சு கொண்டு இருங்கோ, நான் ஒரு டெலிபோன் செய்து போட்டு வாறன்"

ராஜன் அறைக்குள் சென்று மறைய,

"பிள்ளை நான் கோவிக்கிறன் என்று குறை நினைக்க கூடாது. தம்பி ராஜன் ஒரு நல்ல வேலைக்கு போகலாம் தானே? ஒரு வீட்டை கீட்டை வாங்கி, பிள்ளையளை பெத்து இருக்க வேண்டிய நேரத்தில என்ன பிள்ளை இது. உன்னை பார்க்கவெ எனக்கு கவலையா கிடக்குது.."

"இங்க என்ன மதுரை ஆட்சியா நடக்குது. எனக்கு மட்டும் என்ட புருஸன் நல்ல வேலை செய்ய வேணும் என்று ஆசை இல்லையா?பாருங்கோ அங்கிள் ஒரு கோலத்தை போட்டு பொங்க கூட மனிசருக்கு வழி இல்லை.."

"கவலை படாத பிள்ளை, நான் தம்பிக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தாறன். என்ட மூத்தவனை தெரியும் தானே வங்கியில நல்ல உத்தியோகம். அவனை கேட்டு பார்க்கிறன். நான் சொன்னா கேட்பான்."

"சரி அங்கிள்"

"பிள்ளை நான் வெளிக்கிட போறன், குறை நினைக்காம இந்த இலங்கைக்கு கதைக்கிற டெலிபோன் காட் இருந்தா தாடியம்மா. வயசான காலத்தில அடிக்கடி வெளிய போக முடியாம கிடக்குது"

"இருங்கோ அங்கிள் தாறன்.."

நடேசன் வந்த வேலை முடிந்து திரும்ப, அறைக்குள் இருந்து வெளியே வந்த ராஜன்,

"இந்த மனிசனுக்கு நடேசன் என்று பெயர் வைக்காமல் நாரதர் என்று வைத்திருக்கலாம்"

"அப்ப சும்மா நடேஸ் அங்கிளை குறை சொல்லாதிங்கோ"

"ஓம் ஓம் அவருக்கு பெரிய ரசிகர் மன்றமே ஆரம்பித்துவிடுவாய் போல. மகனிட்ட சொல்ல போறாறோமோ?? கதைய பாரன். மகன் அடிச்சு வெளிய துறத்தினது மறந்து போச்சாமோ??..."

"உங்களுக்கு எப்பவும் யாரிலயாவது குறை கண்டி பிடிக்கிறதே தொழிலா போச்சு.." என கூறி மண்டபத்தைவிட்டு நகர..

"தை பிறந்த வழி பிறக்குமா?? இல்லை "வலி" பிறக்குமா?? என்ட நல்லூர் கந்தா????"

காதை அலறுவது போல சத்தம் போட, "கற்பூரத்தை அதிகம் காட்டதிங்கோ என்று எத்தனை தடவை சொல்லுறது??? வீடு கரி பிடிச்சா அதுக்கு வேற காசு அறுக்கணும். ஒரு சொல் சொல்லகோடாதா?? இது வேற.."

கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்து கொண்டு கதிரை மேல் ஏறி Fire Alarmக்கு விசிறியபடி "கடைசியில என்ன இப்படி நிப்பாட்டி போட்டாயே கடவுளே.. :oops: :? "

[b][size=14]புலம்பல் தொடரும்....
[b][size=15]
..


Reply
#28
ஆஹா உங்கள் பொங்கல் புலம்பல் நல்லா இருக்கு தொடர்ந்து புலம்புங்கோ. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#29
தூயா உங்கள் புலத்திலிருந்து புலம்பல் நல்லாய் இருக்கு. உண்மை நிகழ்வுகளுக்கு கற்பனை பாத்திரம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Reply
#30
Rasikai Wrote:ஆஹா உங்கள் பொங்கல் புலம்பல் நல்லா இருக்கு தொடர்ந்து புலம்புங்கோ. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மிக நன்றி சகோதரி.
உங்கள் ஊக்கத்தால் தான் நான் எழுதுதவே ஆசைபட்டேன்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#31
RaMa Wrote:தூயா உங்கள் புலத்திலிருந்து புலம்பல் நல்லாய் இருக்கு. உண்மை நிகழ்வுகளுக்கு கற்பனை பாத்திரம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்


உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி சகோதரி.
தவறுகளையும் சுட்டி காட்டினால், அடுத்த புலம்பல் மேலும் நன்றாக எழுத உதவியாக இருக்கும்..
[b][size=15]
..


Reply
#32
தூயா Wrote:கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்து கொண்டு கதிரை மேல் ஏறி Fire Alarmக்கு விசிறியபடி "கடைசியில என்ன இப்படி நிப்பாட்டி போட்டாயே கடவுளே.. :oops: :?

இந்த Fire Alarm சென்சர் அவசியமான ஒன்று என்றாலும் சிலநேரங்களில் உபத்திரவத்தையும் தரும். கொஞ்சம் சமையல் புகைக்கும் அலற ஆரம்பித்துவிடும். சமர் நேரங்களில் BBQ போடும்போது திறந்திருக்கும் ஜன்னல் வழியே புகை வந்து அலார்ம் அடித்திருக்கின்றது. முன்பு விடுதியில் தங்கியிருக்கும் போது சமையல் நேரத்தில் இதை துணி வைத்து மூடி விடுவோம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#33
தூய்ஸ் புலம்பல் நன்றாக இருந்தது. எங்க பெண்கள இப்படி சீரியலில அலையவிட்டிட்டியள். ம் ம். நடேஸ் மாதிரி ஒரு பிட்டைப்போட்டிட்டு நமக்கு தேவையானதை மற்றவையிட்ட இலகுவா வாங்கலாம் என்றியளா.. பாப்பம்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
தூயா பபா புலம்பல் நல்லாயிருக்கு தொடருங்க

ஆனா எனது அனுபவத்தில எல்லா புலத்திலுள்ள பெண்களும் இப்படி தொடர் நாடகம் பார்ப்பதில்லையே பெரும்பாலும் 45க்க மேற்பட்ட வயதினரும் வேலைக்க போகாமல் வீட்டில இருப்பவர்களும் தானே நாடகம் பார்ப்பினம் (ஒரு வேளை எனக்கு நாடகம் பார்ப்பவர்களோடு சரியான பரிட்சயம் இல்லை போல)

புல புலம்பலின் தொடர்ச்சி விரைவில வருமா புபா
. .
.
Reply
#35
புலத்தில் இருந்து புலம்பலில் வரும் பெண்கள் வீட்டில் இருப்பவர்கள் தானே நித்தி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பாராட்டுகளுக்கும், பதில்களுக்கும் மிக்க நன்றி சகோதரங்களே..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அக்கி - இப்ப ஆரம்பம் தானே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> போக போக பாருங்கள்
[b][size=15]
..


Reply
#36
[b][size=20]மீண்டும் புலத்தில் இருந்து ஓர் புலம்பல்...


Spice கடை

<img src='http://www.toothpastefordinner.com/061302/i-hate-grocery-shopping.gif' border='0' alt='user posted image'>

[b]

புலத்தில் இருக்கும் எங்கள் வாழ்க்கயில் தமிழ் கடைகள் பெரும் உதவி புரின்றன. ஊரில் உள்ள பொருட்களை எல்லாம் பெற்றுகொள்ள முடிகிறது.

இப்ப இங்க அவுஸ்திரேலியாவில இருக்கிற தமிழ் கடைகளை எங்கட சனம் "ஸ்பைர்ஸ் (spice) கடை" என்று தான் சொல்லுவினம் என்ன..என்னமோ ஸ்பைர்ஸ் கேள்ஸ் மாதிரி..சரி கதைக்கி வருவமன்..


ராஜன் வீட்டுக்கு செல்வோமா?

மாலை 6 மணி, தொலைக்காட்சியில் அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் கிரிக்கட் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். ராஜன் தொலைக்காச்சியின் முன்னால்..

வெளியால போக தயாராகி வந்த ராதிகா, "என்னங்க?என்ன்ன்னங்க..."

"ராதி தள்ளி நில்லும் பார்ப்பம். மட்ச் பார்க்கிறன் தெரியவில்லையா??"

"அதை சொல்லுங்கோ, சரியா மட்ச் பார்த்திருந்தா உங்களிட்ட மாட்டி இருப்பனா?"

"பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு, நிம்மதியா மனிசனை ஒரு மட்ச் பார்க்கவிடமாட்டியளா?"

"மாமி..மாமி இங்க ஒருக்கா வாங்கோ?"

"இப்ப எதுக்கு உன்ட கொத்தையை கூப்புடுறீர்?"

அதற்குல் ராதிகாவின் குரல் கேட்டு வீட்டின் மண்டபத்திற்குள் ரஜனின் தாயார் வர,

"மாமி இவர என்ன என்று கேளுங்கோ, எங்கள வெளிக்கிட சொல்லி போட்டு டீவீக்கு முன்னால குந்தி கொண்டு இருக்கிறார்"

"தம்பி அப்பு, ராசா இந்த ஸ்பைர்ஸ் கடைக்கு போக வேணும் அப்பன், விடிய காலையில இருந்து கேட்கிறமல்லோ.." என கூறி பக்கத்தில் வந்து அமர,

"சரி சரி விட மாட்டியளே ஒரு ரெணுடு நிமிசத்தில வாறன், காரில போய் இருங்கோ" என கூறி கை கால் கழுவ செல்ல, ராதிகாவும் புவனேஸ்வரியும் கீழ் தளத்தில் இருக்கும் காரை நாடி செல்கின்றனர்.

"என்ன மாமியும் மருமகளும் சீட் பெள்ற்றை போடுறமாதிரி ஏதாவது யோசனை இருக்கா இல்லையா?" என கேட்டவாறு காருக்குள் ராஜன் ஏற.

"என்டா தம்பி நாங்கள் அந்த காலத்தில பார்க்காத காரா? அங்க எல்லாம் சீற்று பெல்ற்றே போடனாங்கள்??"

"எனை என்ட லைஸன்ஸ நீங்களே பிடுங்கி பொலிஸிற்ற குடுப்பியள் போல, ரெண்டு பேரும் பெல்ற்றை போடுங்கோ"என கூறி காரை ஓட தொடங்கினான்.

"ராதி என்ன என்ன வேண்டுறது என்று பட்டியல் போட்டாச்சு தானே, பிறகு கடையில நின்று கொண்டு மாமியாரும் மருமகளும் லிஸ்ட்போடாதிங்கோ , இப்பவே சொல்லிபோட்டன்"

"அதெல்லாம் போட்டாச்சு...என்னங என்னங்க பார்த்து வெள்ளை கோட்டை தாண்டி கார் போகுது"

"தொடங்கியாச்சா? இது தான் அம்மாவோட உம்மளை பின்னால காரில இருக்க சொல்லுறனான். பக்கத்தில இருந்து கொண்டு புதுசா வீதி முறை எல்லாம் கண்டு பிடிக்கிறீர்"

கணவவின் பேச்சுக்கு முகத்தை சுளித்திவிட்டு, காரின் பின் இருக்கையில் இருந்த மாமியாருடம் என்ன பொருட்கள் வாங்குவது என பேச்சில் இறங்கினாள்.

10 நிமிடங்களின் பின்னர் எவரெஸ்ட் ஸ்பைர்ஸ் கடையில் ராஜன் குடும்பம்...

"வணக்கம் சேகர் அண்ணை, எப்பிடி சுகம்?"

"வணக்கம் ராஜன், வாங்கோ வாங்கோ,என்ன கன நாளா ஆட்களை காணம்?"

இடையில் குறுக்கிட்ட ராதிகா "அது சேகர் அண்ணை இவருக்கு வேலை போய்வரவே நேரம் சரியா இருக்கு என்ன, ஏதோ இப்பதான் கன நாளுக்கு பின்னால நேரம் கிடைச்சு இருக்கு"

சேகர் மனதிற்குள் "இது தான் எங்கட பொம்பிளையளின்ட மனசு, புருசன பூரிக்கட்டையால வீட்டில அடிசாலும் , வெளியில ஒரு சொட்டு தன்னும் விட்டுகுடுக்க மாட்டாங்கள்"

"சேகர் அண்ணை ,ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு போக வேணும், என்னத்தை குடுக்கிறது என்று தெரியலை, கடையில ஏதாவது பரிசுபொருட்கள் இருக்கே?"

"இடது பக்கத்தில இருக்கும் பாருங்கோவன் ராதிகா, ராஜன் யாருடைய அரங்கேற்றம்?"

"இவை பாலா அண்ணையிட மகளின்ட தான்?"

"என்ன? அந்த பிள்ளை நான் இங்கு வந்த பிறகு தானே பிறந்தது..ஒரு 10 வயசு இருக்குமா?

"10 இல்லாட்டி 11 தான் இருக்கும்..சின்ன பிள்ளை தான்"

"எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு வேலை என்ன? பிள்ளையளையும் கஸ்டபடுத்தி, காசையும் சிலவு செய்து....அதுக்குள்ள என்னத்தை அரங்கேற்றம்"

"இந்த சன்.டீவியில பாட்டு போட்டியல சொல்லுவினமே "நான் 2 வயசில இருந்து பாட்டு கத்துகிறேன்" "

"அது என்டா சரிதான், எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு மான பிரச்சனை என்ன. தாங்கள் நல்ல வசதி என்று காட்ட இதுவும் ஒரு வழி.."

"சரி தம்பி சேகர் செல்வி புதுசா வந்ததே" ராஜனின் தாய் தன்னுடைய வேலையில கவனமாக..

"வந்தது வெளியில போட்டுது என்ன, அடுத்த முறை எடுங்கோவன்"

"என்ன தம்பி சரியா மேசைக்கு கீழ பாருமன், வேண்டியவைக்கு குடுக்க எடுத்து வச்சிருப்பியள்" <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கடைக்காரன் முகத்தில் அசடு வழிய "ஈஈஈஈஈஈஈ" <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

"இங்ச சேகர் சொல்ல வேணும் என்று நினைச்சனான் இந்த கஸற்றுகளை ஏன்டா பழைய கஸட்டில அடிக்கிறியள்? கிளியர் இல்லை?"

"அம்மா உங்களை ராதி கூப்பிடுற போல இருக்கு" என ராஜன் தாயை எங்கிருந்து அகற்றமுயல..

"சரி காரில இருக்கிறம், காசை குடுத்து போட்டு வா அப்பு, அப்ப தமி சேகர் பிறகு பார்ப்பம் என்ன"

"ஓம் அம்மா பிறகு பார்ப்பம்.."

பணத்தை குடுத்து பொருற்களுடன் காரில் ஏறிய ராஜன் தாயை பார்த்து "எனை அம்மா எதுக்கு கடையில சேகர் அண்ணாவோட அப்பிடி கதைக்கிறியள்?"

"பின்ன என்னடா பூனைக்கு யாராவது மணி கட்ட வேணும் தானே?"

காரை கிளப்பியவாறு "என்ன வீட்டில இருக்கிற ரெண்டு பூனைக்கு யார் மணிகட்டுறது.?" என சத்தம் போடாமல் கூற..

ராதிகாவும், புவனேஸ்வரியும் ஒன்றாக "என்ன?"

"இல்லை இந்த காரை முன்னுக்குவிட்டவன் சரியா விடலை என்ன, காரை எடுக்க சிரமமாஇருக்கு.."என்றவாறு ராஜன் தன் காரை வீதியில் நகரவைத்தான்...

புலம்பலுக்கு ஒரு சின்ன இடைவேளை....
[b][size=15]
..


Reply
#37
Cry Cry Cry Cry Cry
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#38
வணக்கம் சாத்திரி....தொலைக்கு போனனியளே..... கன காலம் காணலை ... அதிருக்கிட்டம்...என்ன சாத்திரி சீரியல் பார்த்த மாதிரி அழுகிறியள்....
Reply
#39
தூய்ஸ் நல்லா எழுதிறியள் தொடருங்கோ.. செல்வி என்ற எந்தச்செல்வி என்டு யோசிச்சன்.. ராதிகாவைச்சொன்னியள் என்று பிறகு தான் புரிஞ்சிது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#40
தூயா பாப்ஸ் வீட்டில நடக்கிறதை அப்படியே நல்லா எழுதுறீங்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)