Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கல் - சசிகலா - ஜெயலலிதா
#1
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள தனது தனி பங்களாவில் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தேசித்துள்ளார்.

இப்போதெல்லாம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது பங்களாவில் பெரும்பாலும் தங்குவதில்லை. மாமல்லபுரத்திற்கு அருகே சிறுதாவூரில் பல ஏக்கர் பரப்பளவில் மிக மிக பிரமாண்டமாய் எழுப்பப்பட்டுள்ள பங்களாவில் தான் தங்குகிறார்.

[b]சசிகலா சகிதமாய் அடிக்கடி இங்கு போய்விடுகிறார்.

டிசம்பர் 27ம் தேதி சிறுதாவூர் பங்களாவுக்குச் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். இந்த பங்களாவிலேயே புத்தாண்டை ஜெயலலிதா கொண்டாடினார்.

தொடர்ந்து இதே வீட்டிலேயே தங்கியிருக்கும் ஜெயலலிதா, பொங்கல் பண்டிகையையும் இங்கேயே கொண்டாட முடிவு செய்துள்ளாராம். அடுத்த வாரம் ஹைதராபாத் செல்லும் ஜெயலலிதா சென்னை திரும்பி சிறுதாவூருக்குச் செல்கிறார்.

அங்கு பொங்கலைக் கொண்டாடிவிட்டு போயஸ் கார்டனுக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது.

கிராமிய முறைப்படி சூரியனுக்குப் பொங்கலிட்டு, படையலிட்டு கொண்டாட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த புதிய பங்களாவில் தொடர்ந்து ஏதாவது யாகம் நடந்தவண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)