09-28-2003, 08:42 PM
<img src='http://www.cheap-auto-car-insurance-quotes.com/Clipcartoons6.gif' border='0' alt='user posted image'><span style='font-size:30pt;line-height:100%'>ஆறுதல்</span>
சாலையின் குறுக்கே போன பெண்மணியை கார் ஒன்று இடித்துக் கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டது
"பெண்மணிக்குக் காலில் காயம். ரத்தம் வழிந்தது.
யாராவது என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்களேன்" - அவள் புலம்பினாள்
பலர் வேடிக்கைமட்டும் பார்க்க, ஒருவர் மட்டும் துணிச்சலோடு ஆட்டோவை அழைத்து வந்து அவளை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
வழியில் அவர் அவளிடம் பேச்சுக்கொடுத்தார்.
"தப்பாக நினைக்காதீங்க... உங்க பேர், விலாசம் தந்தா உதவியாயிருக்கும்."
சொன்னாள்
"எந்தக் கார் உங்க மேலை இடிச்சதுன்னு சொல்லமுடியுமா?"
"ஆம்பாஸ்டர் கார்!"
"கார் நிறம் தெரியுமா?"
"ஆபத்து அவசரத்திலை யார் அதையெல்லாம் பார்த்தது"
"சரி போகட்டும்..... அது சொந்தக் காரா? இல்லை டக்ஸியா?"
"இதையெல்லாம் அங்கே இருந்தவங்க யாராச்சும் பார்த்து வைச்சிருந்தால்தான் உண்டு. அவங்களைத்தான் கேக்கணும்"
"வழக்குன்னு வரப்போ உங்க சாட்சியம் முக்கியமாச்சே. நீங்க எதையும் பார்க்கலியா? அந்தக் காரிலை எத்தனை பேர் இருந்தாங்க?"
"உம்... அதைப் பார்த்தேன்.! ரெண்டே பேர்! ஓரு ஆம்பளை! அவர் பக்கத்திலை ஒருத்தி"
"அப்படியா?"
"அந்தம்மா அரக்கு கலர்ல பட்டுப் புடவை கட்டியிருந்தாங்க! தலை நிறைய கனகாம்பரம் பூ! கழுத்தில ரெட்டைவடச் செயின் அப்புறம் சின்னதா ஒரு நெக்லஸ்! வைரத்தோடு.... தலைமுடி டை அடிச்சிருந்தாங்கண்ணு நினைப்பு..."
"ரொம்பப் பேசாதீங்க... மயக்கமா வந்திடப் போகுது." என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டார் துணைக்கு வந்தவர்-
-பர்வதவர்த்தினி

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->