01-02-2006, 06:39 AM
சென்னையில் கடந்த வியாழக்கிழமை (29.12.05) ஈழத் தமிழர் உரிமை-சமாதான வழித் தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரசுவதி தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்றோர் ஆற்றிய உரை:
<b>பேராசிரியர் சரசுவதி:</b>
ஈழத்திலே பதற்றமும் இராணுவ வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கிற நிலையில் நாம் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். ஈழத்தில் தமிழர்களின் மனித உரிமைகள்- வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் மனித உரிமை குறித்து அக்கறை கொள்கிற நாம் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
சமாதான காலத்திலும் கூட ஈழத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்பட்டதுமின்றி வன்முறைகள் திணிக்கப்பபட்டன என்பது சோகமானது.
சமாதானத்தைக் கொண்டு வந்தவர்களே தமிழர்கள்தான். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் கிறிஸ்துமசை ஒட்டி தம்பி பிரபாகரன்தான் இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார். அவர் போர் நிறுத்தத்தை அறிவித்த போது அவர் வலுவற்ற நிலையில் ஒன்றும் இருக்கவில்லை.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுப் போரையும் கட்டுநாயக்கா விமான நிலையத்தைத் தகர்த்த கையோடும் இராணுவச் சமநிலையில் நின்று போர் நிறுத்தத்தை அறிவித்தார் தம்பி பிரபாகரன்.
நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் அமைதிப் பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் பேச்சுகளுக்கு என்ன நேர்ந்தது? அமைதிப் பேச்சுவார்த்தைகளிலே மேற்கொள்ளப்பட்ட எந்த முடிவையுமே இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
முக்கியமாக அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களினது குடியிருப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும் என்பதையோஇ இதர தமிழ்க் குழுக்களினது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பதையோ இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த இரண்டும்தான் தமிழர்களினது அன்றாடா வாழ்க்கைக்குஇ இயல்பான வாழ்க்கைக்கு அடித்தளமானது. 4 ஆண்டுகால சமாதான காலம் எனப்படுகிற இந்தக் காலத்தில் இதை நிறைவேற்றாத காரணத்தால் தமிழ் மக்கள் வேறுவழியின்றி இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இராணுவமே வெளியேறு! எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்று பொங்கு தமிழ்ப் பிரகடனங்களை வெளியிட்டார்கள். எந்த ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்தையும் நசுக்கியே பழகிப் போன சிங்கள அரசு இந்தப் போராட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.
இதையடுத்துதான் மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் பகுதிகளில் உள்ள பிற இயக்கங்களின் ஆயுதங்கள் பறிக்கப்படாததால் பத்திரிகையாளர்கள்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டார்கள்.
பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற இடைக்கால அமைப்பை பிரபாகரன் முன்வைத்தார். இது அவர்கள் கோரிய தனிநாடும் அல்ல. ஒரு இடைக்கால ஏற்பாடுதான். இதையும் ஏற்றுக்கொள்ள அன்றைய அரச தலைவர் சந்திரிகா மறுத்தார். யு.என்.பி. ஆட்சியைக் கலைத்தார்.
தமிழகத்திலும் ஈழத்திலும் பல ஆயிரம் பேரை பலி கொண்ட சுனாமிக் கொடுமை நடந்த போது இலங்கைக்கு உதவி வழங்க பல நாடுகள் முன்வந்தன.
ஈழத்தின் 70 சதவீதப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சுனாமி நிவாரணங்களை மேற்கொண்ட வேண்டுமானால் விடுதலைப் புலிகளோடு இணைந்துதான் செயற்பட வேண்டும். அது யதார்த்தமானது.
இதை உணர்ந்துதான் சர்வதேச நாடுகள் இலங்கை அரசும் புலிகளும் இணைந்து செயற்படுகிற ஒரு அமைப்பை - அதை ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு என்று சொல்கிறார்கள்.
வீடுகளையும் உயிர்களையும் இழந்து அவதிப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் தருவதற்குத்தான் இந்த அமைப்பு. இந்த அமைப்பு நம்ம ஊர் கிராம சபை அளவிற்கான அதிகாரம் கொண்டது கூட கிடையாது. இந்த அதிகார அமைப்பைக் கூட அதாவது ஒரு சிறு துரும்பைக் கூட- தமிழன் செத்தாலும் தண்ணீர்கூட தரமாட்டேன் என்கிற மாதிரியாக இந்த அமைப்பையும் சிங்களவர்கள் செயல்படுத்தவிடவில்லை.
ஈழத்தில் மீண்டும் இன அழிப்புப் படுகொலையானது புதிய அரச தலைவராக சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த மகிந்தா ராஜபக்ச பொறுப்பேற்ற உடனே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை அதிகம்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் பெண் தர்சினியை சிங்களக் கடற்படை வெறியர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்து கிணற்றிலே கல்லைக் கட்டிப் போட்டுள்ளார்கள்.
மாணவர்களது இயல்பான கல்விச் சூழ்நிலையைக் கெடுக்கிற வகையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது.
ஒரு இனத்தினது ஆணிவேராக இருக்கக் கூடிய கல்வியாளர்கள்இ துணைவேந்தர்கள்இ பேராசிரியர்கள்இ மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இராணுவம் தனது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு உதவி கேட்டு வருகிறார் இலங்கையின் புதிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
நோர்வே நாட்டுக்குப் பதிலாக இந்தியாவை அனுசரணையாளர்கள் என்கிற ஏற்பாட்டாளர்கள் என்கிற நிலைக்கு உட்கார வைக்கிற இலங்கை அரசாங்கம் முயல்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் நோர்வே அரசு நடத்துகிற பேச்சுவார்த்தைகளுக்கு நாம் ஆதரவளிப்போம் என்று இந்திய அரசாங்கம் இதுவரைக்கும் தெரிவித்திருக்கிறது. இனி எப்படியும் மாறலாம்.
போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு மனிதாபிமானத் தேவைகளுக்காக தவித்து நிற்கிற ஈழத் தமிழர்கள் மீது மனித உரிமைகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்பது கொடூரமானது என்றார் பேராசிரியர் சரசுவதி.
<b>மக்கள் கவிஞர் இன்குலாப்:</b>
சென்னையில் ஒரே நாளில் இரு கூட்டங்கள் நடைபெறுவது தமிழர்களாகிய நமக்கு நிறைவு தரக்கூடிய ஒன்று. மகிழ்வு தரக்கூடியது என்று சொல்லமாட்டேன்.
ஏனெனில் இந்த அக்கறை மீண்டும் கனல ஆரம்பித்திருக்கிறது. சுட ஆரம்பித்திருக்கிறது. இது அவசியமானது ஒன்று என்று நான் கருதுகிறேன்.
நான் ஈழத்துக்குச் சென்று வந்திருக்கிறேன். போர் பற்றிய செய்தியைப் படித்திருக்கலாம். சித்தரிப்பைப் படங்களில் பார்த்திருக்கலாம். நானும் அப்படிப் படித்திருக்கிறேன். ஆனால் யாழ்ப்பாணத்துக்கு நாங்கள் ஒரு குழுவாக பயணம் மேற்கொண்ட போது போரின் சுவடுகளை நேரடியாகப் பார்த்தேன்.
பல கட்டடங்கள் காயப்பட்டு இருந்தன. மனிதருடைய காயங்கள் பின்னால். பல கட்டடங்களுக்குச் ஜன்னல்கள் கிடையாது. ஷெல்லடியால் தகர்ந்து போய்விட்டன. அம்மைத் தழும்பு போல அந்தக் கட்டடங்களில் அந்த குண்டு பாய்ந்த அடையாளங்கள் இருந்தன.
போகின்ற வழியெல்லாம் மிதிவெடிகள் குறித்த எச்சரிக்கைஇ புதிய நிலத்தில் நடக்காதீர்- பழகிய பாதையில் செல்லுங்கள் என்று ஒவ்வொரு திருப்பத்திலும் சிவப்புப் பலகைகளில் எழுதி வைத்திருந்தார்கள். ஒரு நீண்ட நேர பயணம் அது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்கு 10 மணிநேர பயணம் அது.
சிங்களப் பகுதிகளைத் தாண்டி தமிழீழப் பகுதிக்குள் நுழையும் போதே வண்டி தடுமாறத் தொடங்கியது. ஏனென்றால் சாலைகள் எதுவும் சரியாக இல்லை. மிக கரடுமுரடான பாதை. வாகனத்திலிருந்து நாங்கள் கீழே இறங்கும் போது திரும்புகிற பக்கம் எல்லாம் இத்தகைய அறிவிப்புகள். நடப்பதற்கே அச்சப்படக் கூடிய சூழல்.
கட்டடங்கள்இ ஜன்னல்கள்இ கதவுகள் சார்ந்தது அல்ல. பனைமரத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் குறியீடாகச் சொல்வார்கள். காசி ஆனந்தன் ஒரு அருமையான பாடலை எழுதியிருக்கிறார். அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வருமே என்று. நாங்கள் பார்த்தது பனைமரங்களை அல்ல. தென்னை மரங்களை அல்ல. வெறும் குச்சிகளைத்தான் பார்த்தோம். ஒரு மரத்தில் கூட ஒரு கீற்று கூட இல்லை. இது ஒரு அடையாளம். விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்டதால் இயற்கை எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதற்கு நாங்கள் பார்த்த ஒரு அடையாளம். பனைமரம் அழிகிறது என்பது யாழ்ப்பாணத்து அடையாளம் அழிகிறது என்பதுதான் பொருள்.
அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற மாநாட்டில் நான் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால்இ அய்யா இன்குலாப் அவர்களே உங்களோடு கதைக்க வேண்டும் என்று ஒரு பெண் கூறினார். இரவு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். கண்ணாடி அணிந்திருந்த பெண் அழைத்தார். நான் சரி என்றேன். கலைநிகழ்ச்சிக்குப் பிறகு வெளிச்சம் வந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன் ஒரு கண் இருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரு கை இல்லை. பலருக்கு இப்படியான நிலைதான் இருந்தது. நான் அந்தப் பெண்ணைப் பார்த்த போது ஒரு நிமிடம் தயங்கிவிட்டேன். ஆனால் அவர் சொன்னார்இ அய்யா நீங்கள் ஒன்றும் நினைக்காதீர்கள். நாங்கள் சரியான காரணத்துக்காகத்தான் இவற்றை இழந்திருக்கிறோம் என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இப்படி போரின் துயரங்களை நாங்கள் பார்த்தோம். நான் சொன்னது கொஞ்சம்தான். ஒவ்வொரு குடும்பமும் இதற்கு விலை கொடுத்திருக்கிறது. வியட்நாமிய இறுதி மக்கள் யுத்தம் போல் யாழ்ப்பாணத்தில் இறுதி மக்கள் யுத்தம் நடப்பதாக இங்கே பேராசிரியர் சரசுவதி கூறினார்.
வியட்நாமிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீரரை அல்லது வீராங்கனையை அர்ப்பணிப்புச் செய்திருக்கிறது என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தில் அதற்கும் கூடுதலாகவே நடைபெற்றிருக்கிறது. இது பேராசிரியர் சரசுவதி அவர்கள் குறிப்பிட்டதைப் போல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு மட்டும் அல்ல. அந்தப் போரில் அதே வயதிலான சிங்கள இளைஞர்களும் பலியாகி இருக்கிறார்கள். யுத்தத்துக்கு வந்துவிட்டால் குறைந்தபட்ச விலை உயிர்தான். இரண்டு தரப்பும் விலை கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பதுதான் முக்கியமானது.
ஒரு இனத்தை இன்னொரு இனம் அடையாளத்தால் மறுப்பது. அந்த இனத்தின் மீது வல்லாதிக்கம் செலுத்த முயல்வது. இது ரொம்ப காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு விடுதலை வந்ததாக சொல்லப்படுகிற காலத்தில் இது தீரும் என்றால் மாறாக அதிகரித்து இருக்கிறது. என்று இலங்கைக்குச் சிங்களம் மட்டும்தான் தேசிய மொழி என்று அறிவிக்கப்பட்டதோ அன்று இது தொடங்கிவிட்டது. ஏனெனில் இலங்கை என்பது இரண்டு பெரும்பான்மையான தேசிய இனங்களைக் கொண்ட நிலப்பகுதி என்பதுதான் உண்மை. முஸ்லிம்கள் பிரச்சனை வராது. முஸ்லிம்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தங்களைத் தேசிய இனமாக ஏற்கக் கோருவது தொடர்பாக நிறைய விவாதங்கள் உண்டு. அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதுதான் அடிப்படை உண்மை.
இலங்கையை விட அளவில் குறைவான நாடுகள் உள்ளன. சுவிசில் 4 மொழிகள் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமத்துவம் மறுக்கப்படக் கூடிய இடத்தில் போராட்டம் தவிர்க்க முடியாதது. இலங்கையில் சமத்துவம் மறுக்கப்பட்டது.
ஈழத்தில் தனிநாட்டுக் கோரிக்கை என்பது வானத்திலிருந்து குவித்தது அல்ல.
தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா முதலில் தனிநாடு கோரவில்லை. இலங்கை அரசியலுக்கு உட்பட்ட நிலையில் உரிமை கோரிக்கையைஇ சமத்துவம்இ தனிமாநிலம் எனக் கேட்டார்.
அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் தனிநாடு கோரிக்கை எழுந்தது.
தந்தை செல்வா உட்பட தமிழர் தலைவர்கள் வலியுறுத்திய சமத்துவம்இ தனிமாநிலக் கோரிக்கைகள் வன்முறைசார்ந்து நடைபெறவில்லை. அவை அனைத்துமே சத்தியாக்கிரகப் போராட்டங்களாக நடைபெற்றன.
இலங்கை அரசுதான் இத்தப் போராட்டங்களை வன்முறைப் போராட்டமாக மாற்றியது. வன்முறை அற்ற ஒரு போராட்டத்தை மேற்கொண்ட தமிழர்கள் உதைக்கப்பட்டு அடிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்கள். வீதிகளில் இழுத்து வரப்பட்டார்கள்.
இதனது தவிர்க்க முடியாத விளைவு தனிநாடுக் கோரிக்கையாக மாறியது. இலங்கையில் மட்டும் அல்ல உலக அளவிலும் இப்படித்தான் மாறும்.
ரசியப் புரட்சி நடந்த உடன் ரசியாவின் பெயரை சோவியத் ஒன்றியம் என்று மாற்றினார் லெனின். தனித் தேசிய இனப் பெருமிதத்தைத் துறந்தவர் லெனின்.
இது ரசியா அல்ல அதை ஏற்கமுடியாது என்று சொன்னவர் லெனின். சொந்தத் தேசிய இனம் பற்றிய பெருமிதத்தைத் துறந்தவர் லெனின்.
சோவியத் ஒன்றியத்திலிருந்து எந்த நாடும் பிரிந்து செல்லலாம் என்றார். ஏனென்றால் ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் பல நாடுகளின் பகுதிகள் வன்மையாக பிடித்து வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அதற்கு லெனினிடமிருந்து அத்தகைய குரல் வந்தது.
ஒரு அரசியல் அமைப்பில் பல்வேறு தேசிய இனங்கள் இனைந்திருக்கும்போது இனங்களின் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்வது என்பது சுயநிர்ணய உரிமைதான்.
இந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறவர்கள் சோசலிசப் புரட்சியின் மூலம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுயநிர்ணய உரிமை என்பது வேறு பொருளில் சொல்ல வேண்டுமானால் "பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்லலாம்" என்பதுதான். இதைத்தான் லெனின் அறிவித்தார்.
நான் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை பற்றி பேசக் காரணம் பெரியார்இ அண்ணா எழுத்துக்கள் எல்லாவற்றையும் விட லெனினுடைய வாதங்களும் சிந்தனைகளுமே என்னைக் கூர்மைப்படுத்தியது.
அவர் பிரிந்து செல்ல மட்டுமே சுயநிர்ணய உரிமை என்றார். ஆனால் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாறான நிலைப்பாடு. ஸ்டாலின் ஒரு ஜார்ஜியன். ஆனாலும் இதை ஸ்டாலின் இதை எதிர்த்தார்.
லெனின் மறைவுக்குப் பின்னர் அவரது கனவு தூள் தூளானது. அதை நாம் கண் முன்னாலேயே பார்த்தோம்.
ஒரு இனத்தினது மொழியை அங்கீகரிக்க வேண்டும். அதிகாரம் வேண்டும் என்று சொல்வது ஜனநாயகத்தின் மிகச் சிறந்த கோரிக்கைகள்.
சமத்துவத்தை நிலைநாட்டும் எல்லா முயற்சியும் ஜனநாயகம் சார்ந்ததே. இந்தியாவில் அது நடக்கவில்லை.
1922-ல் காந்தியடிகள் காங்கிரஸ் மாநாட்டில் குறிப்பிடுகிறார்.... இந்தியா விடுதலை பெறும்போது பல்வேறு தேசிய இனங்கள் தங்களது விருப்பத்தின் பேரில் சேர்ந்து இருக்கும் என்றார்.
1948 ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளினது கோட்பாடாக இருந்து.
சுயநிர்ணய உரிமை என்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்தது. ஆனால் திடீரென்று அகில இந்தியப் பார்வை வந்தது. அண்மைக்காலமாக வரலாற்றுப் படிப்பினைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இலங்கையிலே புத்த மதம் என்பது சிங்கள மதம். அது தமிழர்களை ஒன்று சேர்க்கப் பயன்படவில்லை.
மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது. ஆனால் அந்த பாகிஸ்தானிலிருந்துதான் வங்கதேசம் பிரிந்தது.
மதம்இ இனங்களை ஒன்றிணைக்கக் கூடிய சக்தி இல்லை. அப்படி இருந்தால் ஒரே இஸ்லாமிய நாடு என்று வந்திருக்க வேண்டும். மத்திய ஆசியாவிலேயே பல இஸ்லாமிய நாடுகள் தனியே உள்ளன.
இந்தியாஇ இலங்கை போன்ற நாடுகளைக் கணக்கில் எடுத்தால் சில தேசிய இனங்கள் வரலாற்று ரீதியாக தொன்மை தனித்தன்மை கொண்டிருக்கிறது. அந்த இனங்கள் விருப்பத்தின் பேரில் சேர்ந்திருக்கிறது என்பது அதை அங்கீகரிப்பதன் மூலமே அந்த தனித்தன்மை மதிக்கப்பட வேண்டும். அதை மறுப்பது என்பது சரி அல்ல.
துக்ளக் சோ போன்றவர்கள் இலங்கையில் தமிழர்கள் குடியேறியவர்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் அந்த மண்ணை தாயகமாகக் கொண்டவர்கள். ஈழத்துப் பூதனார் என்ற பாடல் சங்க இலக்கியத்திலேயே இடம்பெற்றுள்ளது. ஈழம் என்பது நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற சொல்.
அங்கே போய்க் குடியேறியவர்கள் யார் எனில் கொழும்பில் வணிகத்துக்காகப் போன மரைக்காயர்இ செட்டியார்கள்தான்.
அடுத்துஇ கண்டி போன்ற மத்திய இலங்கைப் பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கூலிகளாகத் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள்.
தமிழ்நாட்டில் கங்காணிகளால் ஏமாற்றிக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அவர்கள்.
அன்று கண்டி என்பது மலைப்பிரதேசமாக மட்டுமே இருந்தது. கோப்பித் தோட்டம் போடலாம் என்று ஆங்கிலேயர்களால் இறக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டின் சாதிய ஒடுக்குமுறைஇ நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்குள்ளானவர்கள் இலங்கைக்கு போனால் செல்வாக்காக வாழலாம் என்ற ஏமாற்றுக் கருத்துகளால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.
குடும்ப குடும்பமாக அங்கே போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்கொண்டதெல்லாம் காட்டு விலங்குளும் பூச்சிகளும் தொற்று நோய்களும்தான்.
அதற்கு ஈடுகொடுத்து காடுகளை அழித்து கோப்பித் தோட்டங்களை உருவாக்கினார்கள். போர்த்துகீசியர்களுக்குப் போட்டியாக ஆங்கிலேய அரசாங்கம் தமிழர்களை வைத்து கோப்பித் தோட்டங்களை உருவாக்கியது.
ஏனெனில் எந்த வம்பும் செய்யாதவன் தமிழன். அது உண்மை. 4 சீனர்கள் சேர்ந்தால் தொழிற்சங்கம் அமைப்பார்கள்.
அந்தக் காலகட்டத்தில் கறுப்பின அடிமை முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்தக் கூலி முறை உருவான காலம்.
அதற்குப் பயன்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்களே.
அவர்களே இலங்கைக்கும் பர்மாவுக்கும் பீஜிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
கோப்பித் தோட்டங்களில் அமோக லாபம் கிடைக்கவே கண்டி-கொழும்புக்கு பாதை உருவாக்கப்பட்டது.
கோப்பித் தொழிலில் நட்டம் ஏற்பட்ட காலத்தில்தான் தேயிலைத் தோட்டங்கள் வர ஆரம்பித்தன. தென்கிழக்கு ஆசிய பகுதியில் பெரிய தொழிற்சங்கமாக மலையகத் தொழிற்சங்கங்கள் உள்ளன.
இலங்கை விடுதலை வந்த பிறகு சிங்களப் பேரின முதலாளிகள் மற்றும் தமிழ் முதலாளிகளுக்கும் கூட தமிழர்களின் உதவி மறந்து போய்விட்டது.
அந்த மக்கள் தங்கள் அள்வில் இடதுசாரிச் சிந்தனையாளர்களாக இருந்தனர்.
தமிழ் உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.
இது சிங்களவர்களை அச்சுறுத்தியது.
உலக நாடுகளில் நீங்கள் ஒருநாட்டில் 2 அல்லது 5 ஆண்டுகாலம் இருந்தால் குடியுரிமை உண்டு. ஆனால் இலங்கையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகும் சிறிமா-சாஸ்திரியின் கேடுகெட்ட ஒப்பந்தத்தால் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு 7 இலட்சம் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு மக்களுக்கும் குடும்பமும் அந்த மண்ணிலே சிந்திய கண்ணீரும் இரத்தமும் எதுவுமே மதிக்கப்படவில்லை. ஒரே நாளில் ஒரே ஒப்பந்தம் மூலம் 7 இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர்.
இதைச் சொல்வது ஏனென்றால் இலங்கையிலே கவனிக்கப்படாத விடயமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள்.
பேராசிரியர் சரசுவதி சொன்னது போல்இ போரில் பின் தங்கிய நிலையில் பிரபாகரன் போர் நிறுத்தம் செய்யவில்லை. தனிநாடு கோரிக்கையைக் கைவிடவில்லை.
வலுவாக இருந்து கொண்டே உலக யதார்த்தத்தையும் ஈழ யதார்த்தத்தையும் உள்வாங்கிக் கொண்டு பிரிந்து செல்லும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட பிரபாகரன் முன்வந்தார்.
சிங்கள- தமிழ் அரசுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக இருக்கலாம் என்றார்கள்.
இது தனிப்பட்ட முடிவாகவும் அல்லாமல் பல்வேறு இயக்கங்களின் கூட்டு முடிவாக அறிவிக்கப்பட்டது.
இது பேச்சுவார்த்தையிலும் வந்தது. அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்து மக்கள் சமாதானத்தை அனுமதித்தார்கள். அவர்கள் முகத்தில் அமைதியும் புன்னகையும் இருந்தது.
மீண்டும் சிரிக்கக் கற்றுவிட்டார்கள். தெளிவாகச் சொன்னார்கள். நாங்கள் மண்டியிட்டு சமாதானத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
நோர்வே அமெரிக்காவின் மென்மை முகம். இஸ்ரேல் என்பது கோரமுகம் என்று தெளிவாகச் சொன்னார் பிரபாகரன்.
இப்போது நோர்வேயின் மென்மை முகத்துக்கு பதில் இந்திய முகத்தை நிறுவ முயற்சிகள் நடக்கின்றன.
இந்தியாவுக்குத் தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்களின் பிரச்சனை குறித்த அக்கறை இல்லை. தனது எல்லை விஸ்தரிப்பு என்ற கோட்பாட்டுடனேயே அரசியல் நலன்சார்ந்தே இந்த விடயத்தை அணுகியது.
இலங்கை இந்தியாவுடன் இணைந்த தனிமாநிலமாக இருக்கலாம் என்று இந்திய விடுதலைக் காலத்திலேயும் சொன்னார்கள். இப்போதும் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்.
இந்திய அரசியல் சாசனும் இந்த விஸ்தீரனப்படுத்துகிறப் போக்கை அனுமதிக்கிறது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சரசுவதி. நான் அதில் உடன்பட்டு கூட மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
பிற நாட்டினது தன்னதிகாரத்தையும் இறையாண்மையும் சுயேட்சைத் தன்மையையும் ஏற்றுக் கொண்ட வெளியுறவுக் கொள்கை அவசியமானது.
இலங்கை அரசு கோரக் கூடிய ஒற்றையாட்சி இந்தப் பிரச்சனைக்கான தீர்வுக்குப் போதுமானது அல்ல.
இதை அந்த அரசு வலியுறுத்தினால் போர் தவிர்க்க முடியாதது.
யாருமே போரை விரும்பவில்லை.
ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இந்தப் போருக்கு முதலில் தமிழர்கள் முகம் கொடுத்தார்கள். இனி சிங்கள மக்கள் முகம் கொடுப்பார்கள்.
ஈழப் பிரச்சனை பற்றி பேசுகிற நாம் தமிழ்நாட்டிலும் சுயாட்சி- தன்னாட்சி- பிரிந்து செல்கிற உரிமை தொடர்பாக மக்களிடத்திலே விளக்கம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார் இன்குலாப்.
இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் சி. மகேந்திரன்இ பத்திரிகையாளர் கே.வி. ரமணிஇ மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் உரையாற்றினார்கள்.
தகவல்: புதினம்

[size=14] ' '