Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய
#1
தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய கூறவில்லையாம் - மகிந்த தெரிவிப்பு
றுசவைவநn டில Pயயனெலையn ஆழனெயலஇ 02 துயரெயசல 2006

தமிழ் மக்கள் எனது நண்பர்கள், அவர்களுக்கு தீங்கேற்படுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை, குற்றவாளிகளையும் போதைப் பொருள் விற்பனையாளர் களையுமே கைது செய்யுமாறு கூறினேனே தவிர தமிழ் மக்களையல்ல என சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணன் நேற்று மகிந்தவுடன் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராதாகிருஷ்ணனிடம் மகிந்த மேலும் கூறுகையில், குற்ற வாளிகள்,போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கைது செய்ய உத்தரவிடப் பட்டவர்களையே தேடுதல் நடத்தி கைது செய்யுமாறு உத்தரவிட்டேன். கைது செய்யப்பட்டவர்கள். அனைவரும் இதனடிப்படையிலேயே பிடிக்கப்பட்டவர்கள். தமிழர்கள் எனது நண்பர்கள். அவர்கள் துன்பப்படுவதையும் அவர்களுக்கு தீங்கேற்படுவதையும் நான் விரும்பவில்லை. இது தொடர்பில் அதிக கவனம் கொண்டு செயற்படுகின்றேன் என்றார்.

சங்கதி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)