Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உருவாகிவரும் மூன்றாவது சதி வலை
#1
<b>உருவாகிவரும் மூன்றாவது சதி வலை</b>

கிரிஜா

"[b]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம்" என பல பத்தாண்டுகளுக்கு முன்பே இவ்விடுதலையுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்த மார்க்சிய தேசியவாதிகள் சிலர் `எதிர்வு' கூறினர். அன்று இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வழி நடத்துதலின் கீழ் தமிழ் தேசம் இதன் அர்த்தத்தை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.

தேச விடுதலைப் போராட்டம் கருநிலையிலிருந்த போது மக்கள் உட்பட போராட்ட அமைப்புகள் இந்தியாவை முழுமையாக நம்பினர். தமிழீழத்தை மீட்கவும் தேசத்தை மீள் நிர்மாணம் செய்யவும் இந்தியா பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கை ஆழமாகக் காணப்பட்டது. இதை நம்பி `பெரிய' இயக்கங்கள் அனைத்துமே இந்தியாவின் கால்களில் சரணடைந்தன. எண்ணிக்கை ரீதியாக சிறிதாகவும் போர்க் குணாம்சத்தில் திடமாகவும் இருந்த புலிகள், "அரசியல் இல்லாதவர்கள்" என சக அமைப்புகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்த புலிகள் இந்தியாவின் உதவிகளைப் பெற்றாலும் அரசியல் விழிப்புடன் இருந்ததால் இந்தியாவின் நகர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதனால் தான் பலவந்தமாக தமிழீழத்தின் மீது திணிக்கப்பட்ட இந்திய-சிங்கள உடன்படிக்கையின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவும் ஆக்கிரமிப்புப் படைகளை மண்ணிலிருந்து துரத்தியடிக்கவும் முடிந்தது.

பிராந்திய வல்லாதிக்கத்துக் கெதிரான மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டத்தின் அனுபவத்தால் புலிகளின் சர்வதேச அரசியல் கண்ணோட்டம் புதிய வளர்ச்சியை கண்டது. அது மாத்திரமல்ல, உலகெங்கும் புலிகள் உருவாக்கியிருக்கும் வலைப் பின்னல்கள் உலக ஏகாதிபத்தியத்தினதும், சர்வதேச சமூகத்தினதும், உலக நாடுகளினதும் அரசியல் பண்பைப் புரிந்து கொண்டு ஆழமான சர்வதேச அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதில் புலிகளுக்கு உதவி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆனையிறவு படைத்தள தகர்ப்புடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் அரங்குக்கு வருகின்றன. இந்த இரண்டாவது கட்ட சர்வதேச உறவை தமக்கு சாதகமாக திருப்புவதில் புலிகள் கடினமாக உழைத்தாலும் எந்த நாட்டிடமும் ஏமாறவில்லை. மாவீரர் தின உரை அதை உறுதிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் புலிகளை அரவணைத்து பணிய வைக்க திட்டமிட்ட இணைத் தலைமை நாடுகள் தற்போது பயணத் தடை, விமர்சனங்கள், கண்டனங்கள் மூலம் அழுத்தங்களை ஏற்படுத்தி பணிய வைக்க முயல்கின்றன.

எனினும், தேசிய விடுதலையின் சுயாதீனத்தைக் காப்பதில் உறுதியுடன் செயற்படும் புலிகள் சர்வதேச அழுத்தங்களைக் கடந்து தேச அரசியலை முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் மூன்றாவது கட்ட ஆக்கிரமிப்பு வலைப் பின்னலொன்று பின்னப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது. தற்போதைய இணைத் தலைமை நாடுகளையும் இந்தியாவையும் உள்ளடக்கி ஒரு கூட்டு உருவாகும் சாத்தியம் அதிகமாய்த் தென்படுகிறது. இந்தியா, இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருக்கும் வரையில் அதன் பிராந்திய அரசியல் ஆதிக்கம் முழுமை பெறாது. தனது அரசியல், பொருளாதார,இராணுவ நலன்களை இந்து சமுத்திர பிராந்தியத்தில் மீளப் புனரமைத்திட வேண்டுமானால், இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து தனக்குரிய வகிபாகத்தை ஆற்றிட வேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டுள்ளது.

இணைத் தலைமை நாடுகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் மீது உளவியல் போர் தொடுப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக அவை இந்தியாவைக் காண்கின்றன. இந்தியாவைப் பயன்படுத்தி சில காய் நகர்த்தல்களை அவை செய்ய முனையலாம். அதனால் இந்த நாடுகள் இந்தியாவை தமது கூட்டுக்குள் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டலாம்.

இந்நிலையில் இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய ஆதிக்க சக்திகளின் கண்டனங்கள் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் போட்டா போட்டி அரசியல், அதன் விளைவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை, தமிழ் மக்களுக்கு விரைவில் ஏற்படலாம். மறுபுறம் உள்நாட்டில் அதிகரித்து வரும் அரச பயங்கரவாதம்.

இந்தப் புறக்காரணிகள் யாவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தப் போவதில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுயாதீனத் தன்மை மேலும் புடம் போடப்பட்டு வலுப்பெறும். தமிழ் மக்கள் தமது சொந்தக் கால்களால் தமது வரலாற்றை எழுதுவார்கள்
நன்றி:தினக்குரல்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
மீண்டும் ஒரு நல்ல கட்டுரையய் இணைத்தமைக்கு நன்றி.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு எதிரான உலகலாவிய போராட்டத்தின் ஓர் அங்கம் என்பது பல தடவைகள் மெய்பிக்கப் பட்டுள்ளது.எமது மக்களின் ஆதரவில் எமது சுய பலத்தில் போராடும் வரை நாம் எமது பூரணமான விடுதலயைப் பெறுவோம்.
உலகலாவயிய ரீதியில் வெளிச் சக்திகளின் ஆதரவில் நடைபெற்ற எந்தப் போராட்டமும் வெற்றி அடைந்ததில்லை.ஈற்றில் போராட்டம் தங்கி நின்ற அச்சக்திகளின் நலனை முன் நுறுத்துவதாகவே முடிந்தது.

மார்க்சிய தேசியவாதிகளின் எதிர்வு கூறல்கள் என்றும் பொய்ததில்லை, ஏனெனில் அவை நிதர்சனமான உண்மைகளின் அடிப்படையில் சமூக அரசியல் இயங்கு தளங்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து பெறப்படுபவை.
Reply
#3
வினித்...நன்றி மோனை நல்லதொரு கட்டுரையை மீண்டும் இணைத்தமைக்கு......
Reply
#4
இனைத்த எனக்கே இப்படி நன்றி எண்டா இதை எழுதியவர்
ரைப் பன்னியவ்ர்களை நாம் பாராட்டாவேனும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)