Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஒரே வயிற்றில் பிறந்தோம்
ஒரே உடுப்பை போட்டோம்
ஒரே கோப்பையில் சாப்பிட்டோம்
ஒரே படுக்கையில் படுத்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
ஒன்றாய் படித்தோம்
எச்சில் கடி கடித்து
ஏப்பம் விட்டு சாப்பிட்டோம்
இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில்
வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி
வழி போக தொடங்கினோம்
காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது
தனி குடித்தனம் போனோம்
அத்துடன் எல்லை சண்டையும்
பக்கென்று வந்தது
உன் மகளின் கலியாண கோலத்தை
என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம்
அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள்
கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள்
இன்று நீ யாரோ நான் யாரோ
வீதியில் போகும் போது முகம் பாராத
நாங்கள் கோட்டில் பார்க்கின்றோம்
எல்லை சண்டைக்காக
பெற்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால்
பித்து பிடித்திருக்கும் நம் நிலை பார்த்து
ஒருவருக்கு ஒருவர் துணை என்று
பாசத்தை ஊட்டி வளர்த்தவர்கள் அவர்கள்
எதிரிகளாய் நாம் நிற்கின்றோம் இன்று
கனவிலும் எதிர்பார்த்து இருப்பார்களோ இந்த நிலையை?
**** அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரு சகோதரார்களுக்கிடையில் நடந்த சம்பவம் ஒன்று மனதை உலுக்கியது. அதன் வெளிப்பாடு தான் இது. பிழைகள் இருந்தால் சுட்டிக்கட்டவும்*******
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ராமா நமது நாட்டில் அன்றாடம் நடக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அதை அழகாக கவி மூலம் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
<b> .. .. !!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
பிள்ளை நாட்டிலை ஆமிக்காரன் வீட்டை போய் பாத்திட்டு வரச் சொல்லி அனுமதி குடுத்தாலும் அங்கு போய் முதலில் எல்லைக்கல்லை சரியா வைச்சிட்டு வாற சனம்தான் அதிகம் இவை எமது பண்பாடுகள் இதை யார் வந்தாலும் மாற்றமுடியாது
றமா ஊரிலை இருக்கிற உங்கடை காணிக்கும் மதிலை கட்டி விடுங்கோ பிரச்சனை வராது...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ரமா கவிதையை பதிந்திருக்கிறீர்கள் என்பதை விட நடைமுறை வாழ்க்கையை கவிதையில் பதிவு செய்து இருக்கிறீர்கள் எண்டு சொல்லலாம்.
வெறும் கற்பனைகளை வைத்துக் கொண்டு எழுதும் கவிதைகளுக்கு ஆயுள் குறைவு. கற்பனைசக்தி எல்லாவேளையும் ஒரேமாதிரி இருப்பதில்லை.
அப்போது என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லயே அல்லது வார்த்தை வருகுதில்லயே என்ற பிரைச்சினைகள கொண்டு வரலாம்.
ஏற்கனவே எழுதிய வரிகளையே சிறுமாற்றத்துடன் எழுத வேண்டியும் வரலாம். ஆகவே யதார்த்தத்தை பதிவு செய்யும் உங்களுக்கு அந்த பஞ்சம் வராது என்றதே என் எண்ணம்.
இவ்வளவும் நீங்கள் கருத்து கேட்டதுக்காகவே சொன்னன் . அதுக்காக நான் ஒண்டும் கவி சூறாவளி இல்ல. 8)
-!
!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கருத்துக்களும் வாழ்த்துக்களும் கூறிய ரசிகை முகத்தார் அங்கிள் மற்றும் வர்ணன் அகியோருக்கு எனது நன்றிகள்..
தமிழர்களோடு ஒட்டிப்பிறந்தது தான் இந்த எல்லைப்பிரச்சனை. பாவம் பெரியவர்கள் அடிபட்டால் அந்த பிள்ளைகளும் தங்களும் கோபம் என்று திரிவது தான் பரிதாபம்..
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வேலிச்சண்டையையும் யாழ்ப்பாணமும் இரண்டற கலந்தது போலிருக்கிறது. கண்ணில் பட்ட செய்தியை வைத்து எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து நடப்பு நிகழ்வுகளை வைத்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசமான உலகத்திலே... :roll: :roll: நானும் பல கதைகள் கேள்விப்பட்டு இருக்கிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லை பிரச்சினை இல்லை என்பது சந்தோசமான ஒன்று தான்... இருதால் இங்கயும் பிரச்சினையா தான் இருக்கும். :roll:
ரமா.... நல்ல எழுதி இருக்கிறிங்க... மேலும் சமகால பிரச்சினைகளை வைத்து கவிதைகள் ஆக்குங்கள். எழுத எழுத கவிதைகள் இன்னும் வளம் பெறும்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வாழ்த்துக்களும் கருத்துக்களும் கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
ரசிகை இது தாயகத்தில் நடைபெறும் முக்கிய பிரச்சனை என்பது உண்மை தான். அது தான் முகத்தார் அங்கிள் சொன்னமாதிரி எனக்கு வரவேண்டிய காணிக்கு எல்லாம் மதில் கட்ட சொல்லிவிட்டேன்.
அங்கிள் அது தானே மதில் கட்ட சொல்லி விட்டேன இனி ஒரு கவலை போச்சு
ஆமாம் வரன் எனக்கு கற்பணை பண்ணி எழுதும்போது வார்த்தைகளை தேட வேண்டிதாய் இருக்கின்றது. எதாவது என்னைப் பாதித்த விடயங்களாக இருந்தால் சொற்களை ஒன்று சேர்ப்பது சுகமாக இருக்கின்றது.
ஆமாம் சோழியன் அண்ணா புலத்திலும் பல கோபக்காரர்கள் உலாவுகிறார்கள் தான் என்ன செய்ய? நம்மினம் அதில் ஊறி விட்டதே.
ஆமாம் கீதா சிறு பாரத்தை இப்போது உங்கள் மனதில் ஏற்றிவிட்ட சந்தோசம் இப்போது எனக்கு...
மதன் கட்டாயம் நிஐக்கவிதைகள் எழுவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
விஷ்ணு நிறைய சமகால நிகழ்வுகளை வைத்து கவிதை எழுதினால் கட்டாயம் அது சோக கவிதைகளாக தான் தென்படும் என்பது எனது கருத்து...
மீண்டும் நன்றிகள்
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ரமா கவிதை நன்றாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்
இலகுவான சொற்களில் நன்றாக இருக்கிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
sOliyAn Wrote:Quote:பாவம் பெரியவர்கள் அடிபட்டால் அந்த பிள்ளைகளும் தங்களும் கோபம் என்று திரிவது தான் பரிதாபம்..
புலத்திலயும் நாங்க இப்பிடித்தானே?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்படியா சோழியன் அண்ணா,
விதி விலக்காயும் சிலர் இருக்கினம் :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
MUGATHTHAR Wrote:பிள்ளை நாட்டிலை ஆமிக்காரன் வீட்டை போய் பாத்திட்டு வரச் சொல்லி அனுமதி குடுத்தாலும் அங்கு போய் முதலில் எல்லைக்கல்லை சரியா வைச்சிட்டு வாற சனம்தான் அதிகம் இவை எமது பண்பாடுகள் இதை யார் வந்தாலும் மாற்றமுடியாது
றமா ஊரிலை இருக்கிற உங்கடை காணிக்கும் மதிலை கட்டி விடுங்கோ பிரச்சனை வராது...........
இப்ப ஆமிக்காரன் எல்லா மதிலயும் உடைச்சிடுவான் பிறகு திரும்பவும் சண்டைவருமப்பு <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி அருவி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும்
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
றமாக்கா நல்லாச் சொன்னீங்கள் கவிதையில.எங்கட ஊரிலயும் எல்லைச்சண்டைகள் நடந்திருக்கு.கோழி வருது எண்டு பாழ்கிணற்றில பிடிச்சு போட்ட ஆக்களும் இருக்கினம்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>