Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மா கிடைக்குமா? :(
#1
<img src='http://img398.imageshack.us/img398/5862/a0nf.jpg' border='0' alt='user posted image'>


<b>தபால்பெட்டியை அடிக்கடி திறந்து பார்த்தாள் சுமதி. வேலைக்கும் நேரம் ஆகின்றது... அட எதிர்பார்த்தால் தான் எப்பவும் லேட்டாகத்தான் வருவான் இந்த தபால் காரன் என்று நினைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டாள்.

அதே நினைப்பில் இருந்தவளுக்கு வேலையிலும் நிம்மதியாக இருக்க முடியலை. வந்திருக்குமோ வந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருதாள். வரவில் போடவேண்டியதை செலவில் இட்டு மனேஐரிடம் திட்டும் வாங்கிகொண்டாள். தலையிடி என்று சாட்டு சொல்லி விட்டு அவசரமாக வீடு திரும்பிளாள். பாதையிலும் பல நினைவுகள் அவளுக்கு.... வந்திருக்குமா என்று. அம்மாவிற்கு போன் பண்ணி கேட்டுவிடலாமோ என நினைத்து கைத்தொலைபேசியை எடுத்தாள்.

"சீ அம்மாவை இனியும் போன் பண்ணி கேட்டால் போனிலே அடித்து விடுவா" என்று நினைத்து வைத்து விட்டாள். " என் ஏக்கம் யாருக்கு புரியப்போகின்றது" என்று ஏக்க பெருமூச்சு விட்டபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

ஸூ கழட்ட முன் தாபல்பெட்டியை பார்த்தாள். வாவ் !!!!!!!! என்று துள்ளிக்குதித்தாள். இவ்வளவு நேரமும் யாருடைய கடிதத்துக்காக காத்திருந்தாளோ அந்த அழகிய கையெழுத்துடன் ஒரு கடித உறையை கண்டாள். நச்சென்று அதுக்கு ஒரு முத்தமும் கொடுத்தாள். விரைந்து சென்று ஸூ கழட்டி விட்டு நேராக தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள்.

இவற்றை எல்லாம் சோபாவில் இருந்து அவதானித்த அம்மா "ம்ம் வந்திட்டுது அக்கும் இனி இவளுக்கு இரண்டு மூன்று நாளைக்கு சாப்பாடு தேவையில்லை". அது அவளின் வழமையான நச்சரிப்புத்தான். சுமதி அதை கண்டு கொள்ளவில்லை.

உள்ளே சென்ற சுமதி கடிதத்தை உடைத்தாள். ம்ம்..... ஆளைப்போல கையெழுத்தும் அழகு தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு கடிதத்தை வாசிக்க தொடங்கினாள். அந்த நேரத்தில் "நினைத்து நினைத்து உருகினேன்......உன்னால் தானே உயிர் வாழ்கின்றேன" என்ற பாடலின் ஒலியுடன் கைத் தொலைபேசி அலற.... . சீ நிம்மதியாய் ஒரு கடிதம் கூட படிக்க வழியில்லை என்று நினைத்தபடி தொலைபேசியை எடுத்து

"யாராய் இருந்தாலும் சுருக்கமாய் ஒரு வரியில் கதையை கூறி விட்டு வையுங்கள்" என்று கூறினாள். அப்போது யாரோ கோபத்தில் தொலைபேசியை டங்கென்று வைக்கும் சத்தம் கேட்டது. குட் என்று நினைத்து விட்டு கடிதத்தில் பார்வையை செலுத்தினாள்.

"அன்பின் அம்மாவிற்கு!" இது அவள் எதிர் பார்க்காத ஆரம்பவரிகள்...அந்த வரிகளை மீண்டும் மீண்டும் மீண்டு வாசித்தாள். வயிற்றில் இனம் புரியாத உணர்வு ஒன்று எழுந்தது. மிகுதியை வாசிக்க முடியவில்லை அவளுக்கு. கண்களில் அவளை அறியாமல் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்...

என்ன இது அந்த அம்மா என்றா சொல்லுக்கு இவ்வளவு சக்தியா?

மீண்டும் பார்வையை செலுத்தினாள் கடிதத்தில். " அம்மா நீங்கள் அனுப்பிய கடிதமும் பிறந்தநாள் கார்ட்டும எனக்கு கிடைத்தது. சந்தோசமாய் இருந்தது. உலகில் எனக்கு யார் இருக்கிறாங்க என்று நினைத்த எனக்கு ஆறுதலாக... என்னை கவனித்துக்கொள்ளும் அன்னையாக எனக்கு கிடைத்தீர்கள்... என் முகம் கூட காணாமல் என்னை வழிநடத்தும் உங்களை பெற்றுக்கொண்டதுக்காக நான் சந்தோசப்படுகிறேன். இறவனுக்கு நன்றி கூறுகிறேன்.... ஆனாலும் சிறு கவலையும் கூட இருக்கிறது.... எனக்கு நல்ல அம்மாவாக நீங்கள் கிடைத்திருப்பது போல் ஏன் இங்கு இந்த முகாமில் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு கிடைக்கலை?? உதவிக்கு நன்றியோடும் முகாமில் இருக்கும் மற்றவர்களுக்கும் என்னைப்போல் ஒரு அம்மா கிடைக்குமா? என்று கேள்விக் குறியோடும் அந்த கடிதத்தை முடித்திருந்தது அந்தக் குழந்தை.

ம்ம்.......... எனக்கு கிடைத்த அம்மா போல் மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்காதா? என்றா கேள்விக்கு சுமதிக்கு பதில் தெரியவில்லை.

அப்போது தான் அவளுடைய குடும்ப வைத்தியார் எல்லாவித மருத்துவ சேக்கப்பையும் முடித்து இனி உனக்கு அம்மா பாக்கியம் ஆகும் சந்தர்ப்பம் குறைவு என்று நமட்டு சிரிப்புடன் சொல்லி தந்த மருத்துவ அறிக்கை அவளைப் பார்த்து சிரித்தது. நாளைக்கு கட்டாயம் டொக்டரிடம் போய் இந்த கடிதத்தை காட்டவேண்டும். எனக்கு அம்மா பாக்கியம் கிடைத்து விட்டது என்று சொல்லி அந்த நமட்டுச்சிரிப்பை நானும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து விட்டு கடித்தத்தை மீண்டும் படிக்க தொடங்கினாள்.

********************

இது தான் எனது தொடக்கம்.. ஆகவே பிழைகளை சுட்டி காட்டவும்
</b>

Reply
#2
ரமா கதை மிக அழகாக வித்தியாசமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
<b> .. .. !!</b>
Reply
#3
ஆகா கதை நன்றாக இருக்கு ரமா அக்கா.... எழுத்து வடிவத்தை மற்ற வடிவத்தில் போட்டால் வாசிக்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் .... தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் முதல் முயற்சி நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#4
நன்றி ரசிகை அனிதா உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்.
அனிதா நீங்கள் சொன்ன மாதிரியே எழுத்து வடிவத்தை மாத்தி விட்டேன். இப்போ சரி என்று நினைக்கின்றென். நன்றி சுட்டி காட்டியமைக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#5
அக்கா உங்கள் கதை ஓரு பெண்ணின் மனதில் உள்ள கவலையை எடுத்துகாட்டுகின்றது.

வாழ்த்துக்கள்
<<<<<..... .....>>>>>
Reply
#6
நன்றாக எழுதியிருக்கிறியள் ரமா. பெற்றால்த்தான் பிள்ளையா? குழந்தை இல்லாதவர்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி கவலைப்பட்டு வாழ்வதைவிட.. தாய் தந்தை இன்றித்தவிக்கும் பிஞ்சுகளை பிள்ளையாக்கி அதரவாய் இருந்தால் இருவரது ஏக்கங்களும் நீங்கும். அந்தக்குழந்தையின் கேள்வியில் குழந்தை தாயின்றி பட்ட துன்பம் தெரிகிறது. ம் ஆரம்பமே அசத்தல் தொடருங்கள். எழுதியபின்னர் மறுபடி ஒருமுறை வாசித்தால் இருக்கும் ஒருசில எழுத்துப்பிழைகளையும் திருத்தலாம். வாழ்த்துக்கள் றமா.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
நன்றாக இருக்கு ரமா. உங்கள் முயற்ச்சி தெடர வாழ்த்துகள் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
!!!
Reply
#8
ரமா கதையை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியுள்ளீர்கள். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்க.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#9
அந்தக் குழந்தை கேட்பது நியாயம் தானே? ஒரு குழந்தைக்கு
அம்மா கிடைத்தால் போதுமா அங்குள்ள மற்றய குழந்தைகளுக்கும்
அந்த ஏக்கம் இருக்கும் தானே? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நல்லதொரு சிந்தனை ரமா.. பாராட்டுக்கள்....
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
ரமாவின் வித்தியாசமான பார்வை இந்த நாகாPக உலகில் எடுபடுமா என்பது கொஞ்சம் யோசனைதான் இருந்தாலும் இது பெண்கள் சம்மந்தப்பட்ட விடயமென்பதால் அவர்களின் மனநிலையை அளவிடுவது கஷ்டம்தான் சில வேளைகளில் மாறியிருக்கலாம்??????????????ஃஃ
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
நன்றி உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் சுட்டிகேர்ள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழினி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஐிவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வசி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அங்கிள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமாம் தமிழினி சொன்ன மாதிரி பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டு கொண்டு திரிவதை விட இப்படியான ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பது எவ்வளவு புண்ணியம். பெத்தால் தான் பிள்ளையா? ஒரு பிள்ளைக்கு தாய் அன்பை கொடுப்பது போல் மகத்தான காரியம் ஒன்றும் இல்லை என்பது எனது கருத்து...
இந்த குழந்தை போல் எவ்வளவோ குழந்தைகள் தாய் தந்தை பாசம் இல்லமால் மனவேதனையில் துடித்துக்கொண்டு இருப்பார்கள். யார் என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் ஒரு தாய் தந்தை தன் குழந்தைக்கு செய்யும் அன்புக்கு ஈடாகுமா?
புலத்தில் இருக்கும் நாம் மிகவும் ஆழமாக சிந்திக்கணும். தத்து எடுத்து அவர்களை எம்முடன் அழைக்க வேண்டும் என்று இல்லை. அவர்களின் அன்றாட செலவுக்கு நாம் அனுப்பும் சிறு தொகையும் கடிதங்களுமே அவர்களுக்கு மிக்க ஆறுதலாய் இருக்கும். தாயின் அன்பை அவர்களுக்கு சிறிதாக என்றாலும் புரிய வைக்கணும். இது எனது தாழ்மையான கருத்து தான்....

Reply
#12
ரமாக்கா வித்யாசமாக எழுதி உள்ளீர்கள்...வித்யாசமான கரு கூட...வாழ்த்துக்கள்..தொடர்ந்தும் எழுதுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#13
ரமா.... வித்தியாசமான ஒரு கதையுடன் ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறிங்க.. வாழ்த்துக்கள். உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள நிறைய பேர் இப்படி செய்து வாறாங்க... நானும் நிறைய இடங்களில் கேள்விப்பட்டு இருக்கிறேன்..

தொடர்ந்து எழுதுங்கள். மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
நல்லதொரு கருத்தை கதையின் கருவாக கொண்டிருக்கிறீர்கள் ரமா. வாழ்த்துக்கள்.

ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டு டாக்டர் நமட்டு சிரிப்பு சிரித்தார் என்று கூறி இருக்கிறீர்கள்?
அதற்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா கதையோடு சேர்ந்து?
இல்லையென்றால் ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் ஒரு உடலியலால் பாதிக்க பட்டவரின் குறைகளை கண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கவே மாட்டார் என்று நினைக்கின்றேன்!
இது உங்களின் கதையில் பிழை பிடிக்கும் நோக்கத்துடன் அல்ல.
குறைகளை சுட்டி காட்டுவதும் ஒரு நல்ல படைப்பாளியின் திறனை மேலும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில்.. தொடருங்கள் உங்கள் படைப்புக்களை! 8)
-!
!
Reply
#15
றமாக்கா கதையின் கருவும் அதை நீங்கள் கையாண்ட விதமும் நல்லாயிருக்கு.கதையெல்லாம் எழுதுவீங்களா சொல்லவேயில்லை.தொடர்ந்து எழுதுங்கோ.எனக்குத் தெரிந்த சிலரும் இப்படி அம்மாவாக இருக்கிறார்கள்.வரவேற்கத்தக்க விடயம்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
Snegethy Wrote:றமாக்கா கதையின் கருவும் அதை நீங்கள் கையாண்ட விதமும் நல்லாயிருக்கு.கதையெல்லாம் எழுதுவீங்களா சொல்லவேயில்லை.தொடர்ந்து எழுதுங்கோ.எனக்குத் தெரிந்த சிலரும் இப்படி அம்மாவாக இருக்கிறார்கள்.வரவேற்கத்தக்க விடயம்.

ஏன் உங்களுக்கு மட்டும் தான் கதை எழுத வருமாக்கும் :wink: :wink:
-!
!
Reply
#17
ஏன் வர்ணன் நீங்கள் என்ன றமாக்கான்ர பி.ஏ வா??அவா நேற்று கதைக்கேக்க சொல்லேல்ல அதான் கேட்டனான்.அதென்ன வாயுந்தக் கோணலா நிக்குது.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
Snegethy Wrote:ஏன் வர்ணன் நீங்கள் என்ன றமாக்கான்ர பி.ஏ வா??அவா நேற்று கதைக்கேக்க சொல்லேல்ல அதான் கேட்டனான்.அதென்ன வாயுந்தக் கோணலா நிக்குது.
நேற்று என்ன அவவை கேட்டிங்க? அவ என்ன உங்களுக்கு சொல்லல? எதையும் முழுசா சொல்ல மாட்டிங்களா?
:roll:
என் வாய் றப்பர் வாய் அப்பிடிதான் இருக்கும் கண்டுக்காதீங்க. :wink:
-!
!
Reply
#19
என்ர ஐயோ கதையெழுதினது தெரியாதெண்டு சொன்னன் அப்பனே. றப்பர் வாயா அதான் எந்தப்பக்கமும் இழுபடுது.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
Snegethy Wrote:என்ர ஐயோ கதையெழுதினது தெரியாதெண்டு சொன்னன் அப்பனே. றப்பர் வாயா அதான் எந்தப்பக்கமும் இழுபடுது.

அதை சொல்லுங்க முதல்.
விளக்கத்துக்கு நன்றி!(ஆமா பெரிய விளக்கம்) :wink:
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)