Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
ஆகா அனித்தாவா இது. அசத்திவிட்டீர்கள் போங்கள். கருத்தாளர்கள் பித்தளைத்தாமரையில் இருக்கின்றார்கள் என்று எழுதினீர்கள். ஆனால் உங்களைப் போல பலம் சேர்க்கும் கருத்துக்கள் எனும் தங்க முலாமை புூசி அதனையும் தங்கமாக்கலாம் தானே. வாழ்த்துக்கள்.
Reply
AJeevan Wrote:ஆகா
நம்ம அணித் தலைவர் இளைஞன்
நறுக்கு தெறித்தது போல் அடுக்கிக் கொண்டு போகும் போதே மகிழ்வாக இருந்தது.

அனித்தாவை
நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.
போட்ட போடுல
எதிரணித் தலைவர் சோழியன் காதை சொறியிறதை பார்த்து
என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை.

சும்மா சும்மா தரவுகளை எடுத்துக் கொடுத்து
சுண்டல் பண்ண வச்சிட்டீங்க.

மன்னிக்கவும்
அடுத்து நம்ம பாட்டி வந்தா
நீங்க <b>சுண்டல்</b>தான்?

<img src='http://img121.imageshack.us/img121/662/866481481lo.gif' border='0' alt='user posted image'> <img src='http://img527.imageshack.us/img527/5324/soli0yy.gif' border='0' alt='user posted image'>
ரொம்பத்தான் ஆடாதீங்க... சொல்லிட்டேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
இங்கே இளைஞர் என்ற சொல் பற்றிய சிறு விளக்கத்தை நான் தரலாம் என எண்ணுகின்றேன்.

பொதுவாகவே இளைஞர் எனும்போது அது வயது வந்தவர்களையே குறிக்கின்றது. அதாவது 16-18 வயதிற்கு மேற்பட்டோரையே குறிக்கின்றது. அதனால் அதற்கு கீழுள்ளவர்களை (சிறுவர்) அது உள்ளடக்காமல் போய்விடுகின்றது. அதனால் இளையோர் என்ற சொல்லைப் பாவிப்பதே சிறந்தது. அது போல் இளைஞர் என்பது ஆண்பாலுமல்ல பெண்பாலுமல்ல. அது இரண்டிற்கும் பொதுவான பொதுப்பால்.

<b>சில உதாரணம்:</b>
இளைஞன் - ஆண்பால்
இளைஞி - பெண்பால்
இளைஞர் - பொதுப்பால்

ஆசிரியன் - ஆசிரியை - ஆசிரியர்
தலைவன் - தலைவி - தலைவர்
அவன் - அவள் - அவர்
சிறுவன் - சிறுமி - சிறுவர்

ஆனால் நாம் ஆசிரியர் தலைவர் போன்ற சொற்கள் ஆண்பாலென தவறாகவே கருதி வருகின்றோம்.

செல்வமுத்து அண்ணா ஓரளவு மனம் தேறி வரும்வரை பட்டிமன்றம் தொடரட்டும். அதுவரை தமிழினியின் பணியும் தொடரட்டும். பின்பு இருவரும் சேர்ந்து அலசித் துவைத்து திர்ப்பை வழங்கட்டும்.
Reply
Vasampu Wrote:இங்கே இளைஞர் என்ற சொல் பற்றிய சிறு விளக்கத்தை நான் தரலாம் என எண்ணுகின்றேன்.

பொதுவாகவே இளைஞர் எனும்போது அது வயது வந்தவர்களையே குறிக்கின்றது. அதாவது 16-18 வயதிற்கு மேற்பட்டோரையே குறிக்கின்றது. அதனால் அதற்கு கீழுள்ளவர்களை (சிறுவர்) அது உள்ளடக்காமல் போய்விடுகின்றது. அதனால் இளையோர் என்ற சொல்லைப் பாவிப்பதே சிறந்தது. அது போல் இளைஞர் என்பது ஆண்பாலுமல்ல பெண்பாலுமல்ல. அது இரண்டிற்கும் பொதுவான பொதுப்பால்.

<b>சில உதாரணம்:</b>
இளைஞன் - ஆண்பால்
இளைஞி - பெண்பால்

உங்கள் கருத்தின் கடைசி இரண்டு வரிக்கு மேலே உள்ளவற்றை எல்லாம் எதற்காக சொன்னீர்கள் வசம்பு அவர்களே? :roll:
இளைஞர் - பொதுப்பால்

ஆசிரியன் - ஆசிரியை - ஆசிரியர்
தலைவன் - தலைவி - தலைவர்
அவன் - அவள் - அவர்
சிறுவன் - சிறுமி - சிறுவர்

ஆனால் நாம் ஆசிரியர் தலைவர் போன்ற சொற்கள் ஆண்பாலென தவறாகவே கருதி வருகின்றோம்.

செல்வமுத்து அண்ணா ஓரளவு மனம் தேறி வரும்வரை பட்டிமன்றம் தொடரட்டும். அதுவரை தமிழினியின் பணியும் தொடரட்டும். பின்பு இருவரும் சேர்ந்து அலசித் துவைத்து திர்ப்பை வழங்கட்டும்.
-!
!
Reply
நான் முதல் அனுப்பின தகவலை காணவில்லை மேற்கோள் மட்டும் தெரியுது.

சரி திரும்பவும் கேக்கிறேன் .. நீங்கள் கடைசியாய் சொல்லி முடித்த இரண்டு வரிகளுக்கு மேல் உள்ளவற்றை எல்லாம் எதற்காய் இப்போ சொன்னீர்கள் வசம்பு அவர்களே? விவாதம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சே? அதுதான்
-!
!
Reply
நீங்க இப்படி வந்து கேள்வி கேட்கணும் என்று அல்ல. ஒருமுறை இதற்கு முன் பக்கத்தையும் வாசியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால். ஆண்டவன் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.
Reply
இளைஞர் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்லவா? அப்போ ஏன் யுவதி என்ற சொல் தேவை இல்லாமல் பாவிக்கிறோம்? இளையோர் என்பதுதான் பொதுபால் என்று நினைக்கிறேன்! வசம்பு அவர்களே.
அத்துடன் இளைஞி என்று ஒரு சொல் வளக்கில் இருக்கா???இளம் பெண் என்றுதான் இருக்குமோ?

அதை விட உங்கள் வரிசையில் சொன்ன தலைவன் - தலைவி -தலைவர் என்று முடியாது -தலைமை என்று முடியும் என்று நினைகிறேன்!
அதே போல அவன் - அவள் - அவர் என்று முடியாது அவர்கள் என்று முடியும் என்றும் கருதுகிறேன் சரியோ தவறோ தெரியவில்லை!
-!
!
Reply
Vasampu Wrote:நீங்க இப்படி வந்து கேள்வி கேட்கணும் என்று அல்ல. ஒருமுறை இதற்கு முன் பக்கத்தையும் வாசியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால். ஆண்டவன் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.

வசம்பு அவர்களே ஏன் இப்படி கடும் வார்த்தைகள்?
சரி அறிவு இல்லாத என்னை ஆண்டவன் காப்பாற்றினால் அவருக்கு நன்றி!
-!
!
Reply
-!
!
Reply
"ஞி" என்ற எழுத்து தமிழ் சொற்களில் பாவனையில் உண்டா?
வேறு எந்த தமிழ் செற்களில் "ஞி" பாவிக்கப்படுகிறது?

இளைஞன்
யுவதி
இளைஞர்கள்
யுவதிகள்
இளையோர்
போன்றவற்றை பாவனையில் கண்டுள்ளோன்.

ஆனால் "இளைஞி" என்ற சொல் "ஞி" என்ற எழுத்து? :roll:
சத்தியமாக நான் தமிழ் பண்டிதன் இல்லை, ஆனால் குழப்பமாக இருக்கு :?

இன்னொன்று "அகமும் புலமும்" என்பது எதிர்கருத்துள்ள செற் சோடி இல்லையா?
Reply
ஞ...ஞா.... ஞி.......ஞீ....... என்று எங்கையோ படித்த மாதிரி இல்லையா குறுக்காலபோவானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry
Reply
அப்போ எங்குபாவனையில் உண்டு?

சொற்களில் பாவிக்கப்படாத எழுத்துக்கள் ஒரு மொழியில் இருக்குமா?
உதாரணம் தாருங்கோ. முந்தி படிச்சது எல்லாம் மறந்து போச்சு, படிக்கேக்கையும் ஒழுங்கா தமிழ் படிக்கவில்லை.
Reply
kurukaalapoovan Wrote:இன்னொன்று "அகமும் புலமும்" என்பது எதிர்கருத்துள்ள செற் சோடி இல்லையா?

அகம் - புறம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
kurukaalapoovan Wrote:அப்போ எங்குபாவனையில் உண்டு?

இந்த உயிர் மெய் எழுத்துக்களை தமிழ் மொழியில் பாவிப்பதில்லை. பின்னை என்ன அலங்காரத்துக்காகவா கட்டித்தொங்கவிட்டிருக்கு என்று கேட்டுப்புடாதீங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவற்றை சமஸ்கிரதத்திலே தாராளமாக காணலாம்.
Reply
நன்றி அருவி பிழையை திருத்தியதற்கு

ஊமை, தமிழில் பாவனையில் உள்ள சமஸ்கிரத மொழிச் சொற்களிற்கு எழுத்து வடிவம் கொடுக்க உயிர் மெய் எழுத்துக்கள் இருக்கு என்றீங்கள்? அப்போ இளைஞி சமஸ்கிருதச் சொல்லா?
Reply
Vasampu Wrote:இங்கே இளைஞர் என்ற சொல் பற்றிய சிறு விளக்கத்தை நான் தரலாம் என எண்ணுகின்றேன்.

பொதுவாகவே இளைஞர் எனும்போது அது வயது வந்தவர்களையே குறிக்கின்றது. அதாவது 16-18 வயதிற்கு மேற்பட்டோரையே குறிக்கின்றது. அதனால் அதற்கு கீழுள்ளவர்களை (சிறுவர்) அது உள்ளடக்காமல் போய்விடுகின்றது. அதனால் இளையோர் என்ற சொல்லைப் பாவிப்பதே சிறந்தது. அது போல் இளைஞர் என்பது ஆண்பாலுமல்ல பெண்பாலுமல்ல. அது இரண்டிற்கும் பொதுவான பொதுப்பால்.

<b>சில உதாரணம்:</b>
இளைஞன் - ஆண்பால்
இளைஞி - பெண்பால்
இளைஞர் - பொதுப்பால்

ஆசிரியன் - ஆசிரியை - ஆசிரியர்
தலைவன் - தலைவி - தலைவர்
அவன் - அவள் - அவர்
சிறுவன் - சிறுமி - சிறுவர்

ஆனால் நாம் ஆசிரியர் தலைவர் போன்ற சொற்கள் ஆண்பாலென தவறாகவே கருதி வருகின்றோம்.

செல்வமுத்து அண்ணா ஓரளவு மனம் தேறி வரும்வரை பட்டிமன்றம் தொடரட்டும். அதுவரை தமிழினியின் பணியும் தொடரட்டும். பின்பு இருவரும் சேர்ந்து அலசித் துவைத்து திர்ப்பை வழங்கட்டும்.

varnan Wrote:இளைஞர் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்லவா? அப்போ ஏன் யுவதி என்ற சொல் தேவை இல்லாமல் பாவிக்கிறோம்? இளையோர் என்பதுதான் பொதுபால் என்று நினைக்கிறேன்! வசம்பு அவர்களே.

அத்துடன் இளைஞி என்று ஒரு சொல் வளக்கில் இருக்கா???இளம் பெண் என்றுதான் இருக்குமோ?

அதை விட உங்கள் வரிசையில் சொன்ன தலைவன் - தலைவி -தலைவர் என்று முடியாது -தலைமை என்று முடியும் என்று நினைகிறேன்!
அதே போல அவன் - அவள் - அவர் என்று முடியாது அவர்கள் என்று முடியும் என்றும் கருதுகிறேன் சரியோ தவறோ தெரியவில்லை!

வசம்பு - உங்கள் வழியிலேயே சிறுவன் என்பதன் பன்மை என்ன..???! சிறுமி என்பதன் பன்மை என்ன..??! ஆசிரியன் என்பதன் பன்மை என்ன..??! இளைஞன் என்பதன் பன்மை என்ன..??! தலைவன் என்பதன் பன்மை என்ன..??! தலைவி என்பதன் பன்மை என்ன..??!

காளை - காளையர் இவை இரண்டும் ஆண்பால் சொற்கள்.!
கன்னி - கன்னியர் இவை இரண்டும் பெண்பால் சொற்கள்..!

இளைஞன் - இளைஞர்கள் ( இது ஆண்பால் சார்ந்த ஒருமை பன்மை - காரணம் இளைஞன் - இளைஞன்கள் ( என்று புணரிலக்கணம் வர இடமளிக்காது..அதுவே திரிபுற்று இளைஞர்கள் என்றாகிறது - இதற்கு வேறு ஆண் - பெண் சம உரிமை மொழிக்குள்ளும் புகுந்து விளையாட புதிய விளக்கங்களோடு.. இளைஞர்கள் என்பதில் பெண்களும் உள்ளடக்கப்படுவதாக சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் அர் ஆர் கள் விகுதிகள் எல்லோருக்கும் பொது என்றும். அன் ஆன் ஆண்களுக்கும் அள் ஆள் அட்டி ஆத்தி இ ஐ இவையெல்லாம் பெண்களைக் குறிக்கும் என்றும் பெண் மேலான்மையை மொழிக்குள் திணிக்கிறார்கள்..அதை இலக்கண விதியோடு செய்தார்கள் என்றால் சுபம்.

ம்ம்ம் ஆண் - பெண் சமூகநிலை சமத்துவம் என்பது எவ்வாறெல்லாம் தவறாக உணரப்பட முடியுமோ அவ்வாறெல்லாம் நன்கே உணரப்படுகிறது. மொழியிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. என்ன இவர்கள் தந்த மாற்றங்களை மொழி உள்வாங்கிக் கொள்கிறதா என்பதுதான் வினாக்குறி...! காரணம் விதிக்குள் அடங்காத எதுவும் கண்மூடி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருக்க முடியாது.)

நன்றி வருணன். நாங்களும் சமீப காலம் வரை தமிழ் இலக்கணத்தில் இலக்கண விதியோடு இளைஞி என்ற சொல்லைப் படிக்கவே இல்லை..! புதிசு புதிசா இலக்கண வரம்பு மீறி வரும் சொற்கள் அவை..! குறிப்பா ஆண் - பெண் சமத்துவம் என்பது மொழிப் பயன்பாட்டிலும் நடைமுறை விதிமுறைக்கு அப்பால் திணிக்கப்பட இவை சிலரால் உச்சரிக்கப்படுகின்றன..! அல்லது உண்மையாகவே ஆண் மேலாதிக்கம் மொழிப் பயன்பாட்டிலும் ஆதிக்கம் செய்ததால்... அப்படியாகி இருக்குமோ தெரியாது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(மேலுள்ள சில கருத்துக்கள் சமூகத்தில் உள்ள சில பெண்ணிலைவாதிகளால் முன்வைக்கப்பட்ட அல்லது அவர்கள் சார்ந்தோரால் முன்வைக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இருந்து பெறப்பட்டுள்ளது. குறித்த கட்டுரையாளரிடம் நிறையவே தமிழ் புணரியல் தொடர்பில் கேட்க வினாக்கள் இருந்தும் அவர் எந்த மூலைக்குள் பதுங்கி இருந்து இதை எழுதி இணையத்தில் வெற்றிகரமாக பிரசுரித்த திருப்தியில் இருக்கிறாரோ தெரியாது. இணையத்தில் வரும் பல விடயங்கள் சுய விருப்பு வெறுப்பின் பேரில் வெளியாகும் ஆக்கங்களே. அவற்றிற்கு சமூக அல்லது கல்வியியல் தரத் தகமை என்பது யாராலும் உறுதிப்படுத்தப்படுவதாக நமக்குத் தெரியவில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இளைஞன் - இளைஞர் (கள்)
யுவதி - யுவதிகள்
அப்படி என்று தான் நானும் கேள்விப்பட்டிருக்கன். இளைஞிகள் என்பது இணையத்தில் அறிந்தததுவே?? பொதுவா இளையோர் என்பார்கள் இது பொதுப்பால். சரி இப்ப இதில என்ன பிரச்சனை..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஞ்+ இ = ஞி

ஆனால் சொல்லீற்றில் ஞி வரத்தக்கதாக தமிழ் இலக்கண விதி அறியவில்லை. அறிந்தவர்கள் சொல்லுங்களேன். இளைஞர்கள் என்பதுக்குள்.. ஆசிரியன் ஆசிரியை ஆசிரியர் என்பது போல் ஒரு பொதுமையை காட்ட உருவாக்கப்பட்டதே இளைஞி என்பது..! சமகால ஆண்- பெண் சமத்துவ வித்தகர்கள் உருவாக்கியதோ தெரியவில்லை..! இப்படி உருவாக்க நமக்கும் தெரியாது என்றில்லை. ஒரு விதியமைச்சு உருவாக்கினால் சிறப்பு மொழிக்கு. கண்டவரும் கையாடல் செய்யும் அளவுக்கு தமிழ் ஒன்றும் சீரழிஞ்ச மொழியல்ல..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> http://womankind.yarl.net/archives/2005/02/10/346

[quote]மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன்
தமிழன் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டத்தை எட்டிவிட்டான் என்பதற்குத் தமிழச்சியே சான்று. தாய்மொழியை மேம்படுத்துவதாக நினைத்து அதனைக் கேவலப்படுத்தும் தமிழர்கள் யார் பெற்ற பிள்ளைகள்? பிறந்தவன் ஓரினம், பெற்றவள் வேறினமா? வெட்கம் இல்லையா உங்களைத் தமிழர்கள் என்றும் கவிஞர்கள் என்றும் பறைசாற்றுவதற்கு?

மணி வேலுப்பிள்ளை
கனடா

ஆளை ஆளைப் பார்க்கிறார், ஆளை ஆளைப் பார்க்கிறார்,
ஆட்டத்தைப் பார்த்திடாமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்,

என்பது ஒரு திரைப்படப் பாடலின் தொடக்கம். ஒரு பெண் தனது ஆட்டத்தைக் கண்டுகளிக்க வந்திருக்கும் ஆடவரின் மனநிலையை உணர்த்திப் பாடும் பாடல் அது.

அந்தப் பாடலின் பொருள் எவ்வாறாயினும், ஆட்டத்தைப் பாராது ஆளைப் பார்க்க வேண்டிய தேவை சில சமயங்களில் சில தரப்பினருக்கு ஏற்படுவது நியாயமே. நாட்டிலுள்ள மக்களுள் எத்தனை பேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் என்பதைப் புள்ளிவிபரத் திணைக்களம் அறிந்து வைத்திருக்கிறது. மக்களை ஆண்கள், பெண்கள் என்றோ வைத்தியர்களை ஆண் வைத்தியர்கள், பெண் வைத்தியர்கள்; என்றோ பகுத்துக் காட்டவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. திட்டம் தீட்டும் துறையினருக்குத் திட்டவட்டமான பால்வேறுபாட்டுத் தரவுகள் தேவைப்படும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.

வேற்று மொழியினரின் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு நாங்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் வேற்று மொழிகளில் அமைந்த பேர்வழிகளைப் பற்றித் தமிழில் எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு. எங்கள் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு அவர்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் தமிழ்ப் பேர்வழிகளைப் பற்றி வேற்று மொழிகளில் எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு.

ஏன்? தாய்மொழியிலும் இது நேர்வதுண்டு. ஆண், பெண் இருபாலாரும் தயா, சுபா, மணி, இராசு, இரத்தினம்…என்று பெயர்சூடுவதால் விளையும் விபரீதம் அது. அத்தகைய பெயர்களை மட்டும் வைத்து அவர்கள் ஆண்களா பெண்களா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. எனினும் அவர்களுடன் உறவாடுவோருக்கு அவர்கள் ஆண்களா, பெண்களா என்பது தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்கள் ஒரு வசனத்தில் இடம்பெறுமாயின், அந்த வசனத்தின் பால்படு விகுதிகளையோ, அதில் பேசப்படும் உடலுறுப்புகளையோ, அணிமணிகளையோ கொண்டு எவருமே அவர்களை இனம்காணலாம். பின்வரும் வசனங்கள் அத்தகையவை:

இராசு பாடினாள்.
மணியின் தாலி தாவணிக்குள் மறைந்தது.
இரத்தினம் இன்னும் சவரம் செய்யவில்லை.

அவற்றை விதிவிலக்குகளாகக் கொள்ளலாம். மற்றும்படி பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம்:

இளங்கீரன் ஓர் எழுத்தாளர்.
பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர்.

பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம் என்ற உண்மை சொல்லளவில் ஏற்கப்படுவது அதிகம். செயலளவில்; பின்பற்றப்படுவது குறைவு. பின்வரும் வசனங்களைக் கவனிக்கவும்:

1. இளங்கீரன் ஓர் எழுத்தாளன்.
2. இளங்கீரன் ஓர் எழுத்தாளர்.
3. பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர்.
4. இளங்கீரன் ஓர் ஆண் எழுத்தாளர்.
5. பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்.

1ஆவது வசனத்தில் -அன் விகுதி பால் காட்டியுள்ளது. அது நியாயமே. ஏனைய வசனங்களில் பால்படு சமத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால் 2ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளர் 1ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளனையும் 3ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளரையும், 4ஆவது வசனத்தில் உள்ள ஆண் எழுத்தாளரையும் செயலிழக்கச் செய்வதுண்டு. 4ஆவது வசனம் கண்ணில் படுவதோ காதில் விழுவதோ அரிது. 5ஆவது வசனம் அடிக்கடி இடம்பெறுகிறது. அதாவது:

2. இளங்கீரன் ஓர் எழுத்தாளர். ஆனால்:
5. பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்!

-அர் விகுதியின் இடத்துக்கு -அன் விகுதி உயர்த்தப்பட்டமை (-அன் விகுதியின் இடத்துக்கு -அர் விகுதி தாழ்த்தப்பட்டமை) 2ஆவது வசனத்தில் தெரிகிறது. பெண்- ஒட்டுச்சொல் -அர் விகுதிக்கு முண்டு கொடுப்பது 5ஆவது வசனத்தில் தெரிகிறது.

பெண்-ஒட்டுச்சொற்கள் பெரிதும் இறக்குமதிச் சரக்காகவே எங்களை வந்தடைகின்றன. இன்று தமிழில் வழங்கும் பெண்-ஒட்டுச்சொற்களுள் பெரும்பாலானவை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் புகுந்தவை. ஆங்கிலத்தில் பெண்குலத்தைச் சமாளிக்கும் சொல்லாட்சிக்கு Woman ஒட்டுச்சொல்லாய் நின்று முண்டு கொடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் Woman ஒட்டுச் சொல்லாய் நின்று பெண்மைக்கு முண்டுகொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அது ஒரு பால்படு சமாளிப்பாகும். ஆங்கிலத்தில் இடம்பெறும் பால்படு சமாளிப்பை இறக்குமதி செய்யவேண்டிய (மொழிபெயர்க்க வேண்டிய) தேவை தமிழுக்கு இல்லை. பெண்மைக்கு முற்றிலும் நெகிழ்ந்து கொடுக்கும் தமிழுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் அறவே கிடையாது. தேவைப்படாத இறக்குமதியாக (குருட்டு மொழிபெயர்ப்பாக) புகுத்தப்படும் பால்படு சமாளிப்பு தமிழைப் பாழ்படுத்தி வருகிறது. ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது.

எடுத்துக்காட்டாக spokeswoman என்பது பெண்குலத்தைச் சமாளிப்பதற்காக ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சொல்லாட்சி. ஆங்கிலத்தில் இடம்பெறும் அந்தப் பால்படு சமாளிப்பை ஈ அடித்த பிரதிக்காரரைப் போன்று (பெண் பேச்சாளர் என்ற உருவத்தில்) தமிழுக்குள் புகுத்துவதைவிட மோசமான முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. எனினும் spokeswoman பேசும் பெண் ஆகாமல், பெண் பேச்சாளர் ஆகியமை மாபெரும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை!

பேச்சாளர் என்றால் ஒரு கூட்டத்தில் உரையாற்றுபவர் (speaker) அல்லது நாவலர் (orator) என்று பொருள். Spokesperson ஒரு பேச்சாளரோ நாவலரோ அல்லர். அவர் ஒரு தரப்பின் சார்பாக மொழிபவர். ஆதலால்தான் 1958ல் வெளிவந்த இலங்கை அரச சொல்தொகுதி ஒன்று அவரை மொழிவாளர் என்று குறிப்பிட்டுள்ளது. மொழிபவர் ஆணாயினும் ; (spokesman) பெண்ணாயினும் (spokeswoman) மொழிவாளர் ((spokesperson) பொருந்தும். அது தமிழ் இலக்கணத்துக்கும் மரபுக்கும் அமைந்த செப்பமான, நுட்பமான சொல்லாட்சி. மொழியும் பொருளும் அறிந்தவர்களுக்கு அது எத்துணை நேர்த்தியான சொல்லாட்சி என்பது புரியும். அத்தகைய அரிய தமிழ்ச் சொற்கள் மங்குவதும், ஈ-அடிப்புச் சொற்கள் ஓங்குவதும் தமிழ்மொழி வரலாற்றில் இடம்பெறும் விந்தை ஆகும்.

கீழ்வரும் சோடியைக் கருத்தில் கொள்ளவும்:

1. அப்பா வந்தார், அண்ணா போனார். ஆனால்:
2. அம்மா வந்தாள், அக்கா போனாள்!

புனைகதையில் (சிறுகதையில், நாவலில்) ஆண்கள் உயர்த்தப்படுவதையும், பெண்கள் தாழ்த்தப்படுவதையும் மேற்படி கூற்றுகள் இரண்டும் ஒட்டுமொத்தமாகப் புலப்படுத்துகின்றன.

அப்பா வந்தார், அண்ணா போனார் என்றுதான் எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார் என்று நமது கதாசிரியர்கள் எழுதுவது மெத்தச் சரியே. அப்புறம், (ஈழத் தமிழில்) அம்மா வந்தா, அக்கா போனா என்றுதானே எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அம்மா வந்தா, அக்கா போனா என்றல்லவா அவர்கள் எழுத வேண்டும்? அம்மா வந்தாள், அக்கா போனாள் என்ற பேச்சுக்கே இடமில்லையே! எப்படி எழுத்துக்கு இடம் வந்தது? ஆண்களின் கையெழுத்து பெண்களின் தலையெழுத்தாகுமா? ஆகாது.

ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார் என்று எழுதும் அதே கையினால், அம்மா வந்தார், அக்கா போனார் என்றும் எழுத வேண்டும். அல்லது அம்மா வந்தாள், அக்கா போனாள்; என்று எழுதும் அதே கையினால், அப்பா வந்தான், அண்ணா போனான் என்றும் எழுத வேண்டும். அப்பா வந்தான், அண்ணா போனான் என்று எழுதக்கூடாது என்றால், அம்மா வந்தாள், அக்கா போனாள் என்றும் எழுதக்கூடாது.

முறைசார் வழக்கில் (சபையில் அல்லது புனைகதை அல்லாத ஆக்கங்களில்) அம்மா வந்தார், அக்கா போனார் என்று குறிப்பிடுகிறோம். பேச்சு வழக்கில் அம்மா வந்தா, அக்கா போனா என்று குறிப்பிடுகிறோம். பேச்சு வழக்கை ஒட்டி எழுதுவதாகத் தம்பட்டம் அடிப்பவர்கள் அம்மா வந்தா, அக்கா போனா என்றல்லவா எழுத வேண்டும்? பேச்சு வழக்கை ஒட்டி எழுதுவதாகக் கூறுவது வெறும் பேச்சுக்காகவா? ஒன்றில் பேச்சு வழக்கு ஓங்க வேண்டும். அல்லது தம்பட்டம் ஓயவேண்டும்.

அம்மா வந்தாள், அக்கா போனாள் என்று எழுதுவதே மரபு, அந்த மரபை மாற்றுவது தப்பு என்று நமது கதாசிரியர்கள் கதையளக்கக்கூடும். அது பொதுமக்கள் மரபல்ல, ஆணாதிக்க மரபு என்பதை அவர்களுக்கு இடித்துரைப்போம். மரபின் பெயரால் அநியாயம் தொடர்வது முறையா, நியாயத்தை ஏற்று மரபு மாறுவது முறையா? மரபில் நியாயம் உள்ளவரை அதனை நாம் நிலைநிறுத்தவே வேண்டும். மரபில் அநியாயம் பொதிந்திருந்தால் அதனை நாம் ஒழித்துக்கட்டியே தீரவேண்டும்.

-அர், -ஆர், -கள் விகுதிகள் சமூகத்தின் பொது உடைமையாய் எழுந்தவை. அவை ஆண்களின் தனி உடைமை ஆக்கப்பட்டு விட்டன. அவை மீண்டும் சமூகத்தின் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் - அவை ஆண், பெண் இரு பாலாருக்கும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும். அதாவது பெண் போராளி, பெண் எழுத்தாளர், பெண் வைத்தியர், பெண் வழக்குரைஞர்… போன்ற ஒட்டுச் சொற்கள் இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும். அல்லது ஆண் போராளி, ஆண் எழுத்தாளர், ஆண் வைத்தியர், ஆண் வழக்குரைஞர்… போன்ற ஒட்டுச் சொற்கள் இயன்றவரை புகுத்தப்பட வேண்டும்.

ஆண்கள் மொழிக்குள் தமது ஆதிக்கத்தை அநியாயமாகவும் அப்பட்டமாகவும் இறுமாப்புடனும் புகுத்தியுள்ளார்கள். மொழிக்குள் தாம் புகுத்திய ஆணாதிக்கத்தை ஆண்களே மனமுவந்து களைய வேண்டும். களையத் தவறினால், பெண்கள் கிளர்ந்தெழுந்து களையெடுப்பில் குதிக்க வேண்டும். அதனை விடுத்து மொழியை நோவது, எய்தவன் இருக்க அம்பை நோவது போலாகும்; என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அம்பை நோவதை விடுத்து எய்தவனை எதிர்கொள்வோம்:

1.-அர், -ஆர், -கள் விகுதிகள் ஆண்களை மாத்திரமன்றிப் பெண்களையும் குறிப்பவை. ஆகவே ஆண்களைப் போலவே பெண்களும் தங்களைக் குறித்து -அர், -ஆர், -கள் விகுதிகளைத் தாராளமாகக் கையாள வேண்டும். அந்த வகையில் கவிஞர் உமா மஹேஸ்வரி, கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி, ஆண் கவிஞர் பிரம்மராஜன் என்றெல்லாம் லதா ராமகிருணன் போன்றவர்கள் எழுதிவருவது வரவேற்கத்தக்கது (படைப்பாளி-வாசகர்-விமர்சகர், கணையாழி, ஜனவரி 2002, ப.59-61).

2.-அன், -ஆன் ஆகிய ஆண்பால் விகுதிகளுக்கு எதிராக மாத்திரமே -அள், -ஆள், -ஆட்டி, -ஆத்தி, -இ, -ஐ… முதலிய பெண்பால் விகுதிகளைக் கையாள வேண்டும்:

ஆசிரியன் ஆசிரியை
நண்பன் நண்பி
இளைஞன் இளைஞி

3.-அர், -ஆர், -கள் விகுதிகளுக்கு எதிராக (அதாவது அவற்றைக் கலப்பற்ற ஆண்பால் விகுதிகளாகக் கொண்டு, அவற்றுக்கு எதிராக) பெண்;பால் விகுதிகளைக் கையாளக் கூடாது. (ஆசிரியர், நண்பர், இளைஞர் போன்ற சொற்களைக் கலப்பற்ற ஆண்பாற் சொற்களாகவோ ஆசிரியை, நண்பி, இளைஞி போன்ற சொற்களை முறையே அவற்றின் பெண்பாற் சொற்களாகவோ எடுத்தாளக் கூடாது).

4.-அர், -ஆர், -கள் விகுதிகளின் இடத்தை -அன், -ஆன் விகுதிகள் அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. பொதுவாக ஆண்கள் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் பெண்களும் வகிக்கிறார்கள். ஆகவே என்னுடைய அக்கா ஓர் ஆசிரியை என்று குறிப்பிடத் தேவையில்லை. என்னுடைய அக்கா ஓர் ஆசிரியர் என்றே குறிப்பிடலாம். குறிப்பிட வேண்டும்.

5.எழுத்தாளர் பாலேஸ்வரி. அவ்வளவுதான். பெண் எழுத்தாளர் பாலேஸ்வரி என்பது அநாவசியம், முட்டாள்தனம், கூறியது கூறல். தவிர்க்கமுடியாத காரணம் இருந்தால் ஒழியப் பெண் போராளி, பெண் எழுத்தாளர், பெண் வைத்தியர், பெண் வழக்குரைஞர்… போன்ற பெண்-ஒட்டுச் சொற்களைப் பெண்கள் கையாளக் கூடாது. அத்தகைய சொல்லாட்சியை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. அந்த வகையில் இந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. எங்கேயாவது பெண் ஒட்டுச் சொல்லாய் அமைந்தே தீரவேண்டிய கட்டம் எழக்கூடும். எடுத்துக்காட்டாக ஈழ வரலாற்றில் உண்ணா நோன்பிருந்து மாண்ட முதற் பெண் தியாகி அன்னை பூபதி அவர்களே எனலாம். எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு என்பது ஒப்புக்கொள்ளப்படும் அதேவேளை, அந்த விதிவிலக்கையே விதியாக விதிக்கலாகாது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.

6.பழமொழிகளைப் பொறுத்தவரை எவருக்கும் ஆக்கவுரிமை கிடையாது. ஆதலால் ஆணாதிக்கம் தொனிக்கும் பழமொழிகளை இருபாலார்க்கும் பொதுவானவையாக மீட்டியுரைக்கலாம். எடுத்துக்காட்டாக தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை தினை விதைத்தவர் தினை அறுப்ப(h)ர், வினை விதைத்தவர் வினை அறுப்ப(h)ர் என்று மீட்டியுரைக்கலாம்.

7.பிற இலக்கியங்களைப் போலவே தமிழ் இலக்கியத்தையும் ஆணாதிக்கம் பீடித்துள்ளது. எனினும் இலக்கியத்தில் நாம் இலகுவில் கைவைக்க முடியாது. இயற்றியவர் அதற்கு உடன்படப் போவதில்லை. இயற்றியவர் உயிருடன் இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆக்கவுரிமை பெற்றவர் களையெடுக்கத் துணிபவர்மீது வழக்கு வைத்தல் திண்ணம். வள்ளுவரே மறுபடி தோன்றி,

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் (386)

என்ற தமது குறளை அதன் பொருளில் எதுவித மாற்றமுமின்றி,

காட்சிக்கு எளியர் கடுஞ்சொல்லர் அல்லரேல்
மீக்கூறும் மன்னர் நிலம்

என்று மீட்டியுரைத்தால், யாரோ ஒரு கிழட்டு நெசவாளன் தன்னை வள்ளுவர் என்று முரசுகொட்டி ஆள்மாறாட்டம் செய்வதாகக் குற்றம்சாட்டி வழக்கு வைப்பதற்குத் தயாராய் இருக்கிறது பூம்புகார் பதிப்பகம்!

8.கண்ணில் படும், காதில் விழும் எந்த வசனத்திலும் ஆணாதிக்கம் தென்பட்டால், அதனை இருபாலார்க்கும் பொதுவானதாக மீட்டியுரைத்து, அதனைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக்காட்டலாம். எடுத்துக்காட்டாகத் தமிழர் தகவல், தமிழர் மத்தியில் என்பவை போலத் தமிழன் வழிகாட்டி என்பதைத் தமிழர் வழிகாட்டி என்று மீட்டியுரைக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக்காட்டலாம். எங்களைத் தமிழா! தமிழா! என்று விழித்து எழுதுவதை விடுத்து, தமிழரே! தமிழரே! என்று விழித்து எழுதும்படி நமது புத்திமான்களுக்கும் புத்தி புகட்டலாம்.

தமிழில்தான்; ஆணாதிக்கம் நிலைத்துள்ளது, ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் அது களையப்பட்டுவிட்டது, ஏனையவை ஆணாதிக்கத்தைக் களையவல்லவை, தமிழ் களையவல்லதல்ல என்று கருதிச் சிலர் தெம்புகுன்றக்கூடும். இவை வெறும் தப்புக் கணக்குகள். தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தைக் காட்டிலும் கிரேக்க, ஆங்கில, அறபு… மொழிகளில் காணப்படும் ஆணாதிக்கம் பன்மடங்கு அதிகம். அந்த மொழிகளிலிருந்து ஆணாதிக்கத்தைக் களைவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தை -அர், -ஆர், -கள் விகுதிகளைக் கொண்டே பெருமளவு களையலாம். தமிழின் நெகிழ்வைப் பெண்கள் முற்றுமுழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆணாதிக்கம் சமூகத்திலிருந்து மொழியினுள் கசிந்;து, மொழியிலிருந்து சமூகத்துக்கு மீள்வது. அந்த வகையில் ஆணாதிக்கம் ஒரு சமூகக் கொடுமை மட்டுமல்ல, அது ஒரு மொழிக் கொடுமையும்கூட. சட்டத்தின் முன் மட்டுமல்ல, மொழியின் முன்னும் யாவரும் சமன் என்பதைப் பெண்கள் நிலைநாட்ட வேண்டும். அதனைச் சொல்லிலும் செயலிலும் அவர்கள் காட்ட வேண்டும். தமது ஆக்கங்களில் அதனை ஊட்ட வேண்டும். நமக்கேன் வம்பு என்று பெண்கள் வாளாவிருக்கக்கூடாது.

ஒரேயொரு கேள்வி இக்கட்டுரையைச் சரிவரப் பூர்த்திசெய்ய விடாது எமது அடிமனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது: தொழிலாளன், எழுத்தாளன், பேச்சாளன் போன்று -ஆளன் விகுதி கொண்ட ஆண்பாற் சொற்களின் பெண்பாற் சொற்கள் யாவை? தொழிலாளி, தொழிலாளர் இரண்டும் இரு பாலாரையும் கருதும். தனியே பெண்பாலாரை மட்டும் குறிக்கும் சொல் என்ன? தொழிலாளள் அல்லது தொழிலாட்டி அல்லது தொழிலாளினி எனலாமா? அவை பெண்பாலாரைக் குறிக்கும் என்றால், அவை ஏன் வழக்கில் இல்லை? தொழிலாளினி, எழுத்தாளினி, பேச்சாளினி… என்று ஏற்கெனவே தாம் பாவித்ததுண்டு என்று தெரிவிக்கும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கம் அவர்கள், அப்படிப் பாவித்தால் என்ன என்றும் வினவுகிறார். தொழிலாளள் அல்லது தொழிலாட்டி என்பதைவிடத் தொழிலாளினி ஓசைநயம் மிகுந்தது. ஆனால் அதனை உச்சரிப்பது சற்றுச் சிரமம். எனினும் திரு.முத்துலிங்கம் அவர்களின் பாவனையும் வினாவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.

பி.கு: இக்கட்டுரையைச் சரிவரப் பூர்த்திசெய்ய முடியாத எரிச்சலிலிருந்து விடுபடும் நப்பாசையுடன், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா? என்ற தலைப்பினைக் கொண்ட பட்டிமன்றப் பதிவு நாடாவை ஓடவிட்டுப் பார்த்தோம். தலைவரே ஒரு பெயர்போன தமிழ் ஆசிரியர். ஆசிரியர்களும் கவிஞர்களுமே பட்டிமன்றத்தில் பங்குபற்றுகிறார்கள். அவர்களுள் ஒரு கவிஞரை பெரும் புலவர் என்று தலைவர் வேறு அறிமுகப்படுத்தியும் வைக்கிறார். அப்புறம் பெரும் புலவர் எழுந்து தமிழர்களே! தமிழச்சிகளே! என்று அவையோரைத் விழித்து உரையாற்றத் தொடங்குகிறார். அது கேட்டுப் புளகாங்கிதமடையும் தலைவர், கவிஞரை இடைநிறுத்திப் பாராட்டி, அவரைப் பின்பற்றும்படி அனைவரையும் வேண்டிக் கொள்ளுகிறார்!

எமக்கென்னவோ சாணேற முழம் சறுக்கிய உணர்வே ஏற்பட்டது. தமிழருள் தாய்க் குலம் அடங்கவில்லையாம்! ஆதலால் பெரிய மனது பண்ணி தாய்க் குலத்தைத் தமிழச்சிகள் என்று குறிப்பிடுகிறார்களாம்! அடுத்த பட்டிமன்றத்தில் ஆசிரியர்களும் கவிஞர்களும் அவ்வையார் ஒரு புலவச்சி, ஜெயலலிதா தமிழக முதலமைச்சி என்றெல்லாம் குறிப்பிடுவார்கள்; போலும்! தமிழன் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டத்தை எட்டிவிட்டான் என்பதற்குத் தமிழச்சியே சான்று. தாய்மொழியை மேம்படுத்துவதாக நினைத்து அதனைக் கேவலப்படுத்தும் தமிழர்கள் யார் பெற்ற பிள்ளைகள்? பிறந்தவன் ஓரினம், பெற்றவள் வேறினமா? வெட்கம் இல்லையா உங்களைத் தமிழர்கள் என்றும் கவிஞர்கள் என்றும் பறைசாற்றுவதற்கு?

மணி வேலுப்பிள்ளை 2002.03.08
காலம் - 16, யூன் 2002, கனடா, இதழில் வெளிவந்த கட்டுரை.
Reply
எல்லாரும் நல்லா எழுதியிருக்கீங்க..............எனக்கு பயமாக் கிடக்கு..........<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->...............எப்ப நான்??????????????????????????????
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)