Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்
#1
ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும், சில அபத்தக்கோடுகளும் நியாய விசாரிப்புக்களும்-பரணி (பிரான்ஸ்)-


<b>காலத்திற்கு காலம் ஈழ விடுதலைப் போராட்டம் எதிரிகள் தவிர்ந்து ஏதோ ஒரு வகையில் வேறு சில குறுக்கீடுகளையும் விரும்பாத சில அந்நிய தலையீடுகளையும் சந்தித்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை அது தன்னை ஒரு விரும்பாத் தலையீட்டிற்கு எதிராக தயார்ப்படுத்த வேண்டியுள்ளது</b>.

<b>ஆம் இந்தியா ஈழப் போராட்டத்திற்கெதிராக சில வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கத் தொடங்கிவிட்டது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு, புத்தர் சிலை, பிக்குகள் உண்ணாவிரதம், ஜே.வி.பி. வெளியேற்றம் என்று இலங்கை அரசியற் களத்தின் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. இந்த சுவாரசியங்கள் சுரத்திழக்கும் ஒரு தருணத்தில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</b>


இந்தியாவிற்கு ஈழம் என்றைக்குமே நேச சக்திதான். இதை எத்தகைய வழிகளில் எல்லாம் உரைய முடியுமோ ஈழத்தமிழினம் அத்தகைய வழிகளிலெல்லாம் உரைந்தாயிற்று.


<b>இந்திய கொள்கை வகுப்பாளர்களின்(?) ஒற்றை அறம் பாதுகாப்பு ஒப்பந்தமாக வடிவமெடுத்து ஈழத்தமிழினத்தை ஒருவித கிலிக்குள் தள்ளியுள்ளது.

[b]ஈழப் போராட்டம் மீதான இந்தியத் தலையீடு காலத்திற்குக் காலம் உருமாறி பல பரிமாணங்களாக விரிவடைவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதன் மைய விசையாய் வெளிவிவகாரக் கொள்கை என்ற கருத்தமைவு ஒழுங்கமைக்கப்படுகிறது.</b>

இந்தியா ஈழப்போராட்டத்தில் ஏன் தலையிடுகிறது. எதன் அடிப்படையில் எவ்வாறு தலையிடுகிறது என்பதை ஆராய்வதற்கு முன்பாக வெளியுறவுக் கொள்கை என்ற பதம் குறித்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.

<b>வெளிவிவகாரக் கொள்கை (குழசநைபn Pழடiஉல) பற்றி சாதாரண மொழியில் சொல்வதானால் ஒரு நாடு பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் பொதுவான சில நடைமுறைகள் என்று குறிப்பிடலாம். தமது சொந்த உள்நாட்டு நலன்களைப் பொறுத்து உலக நாடுகள் வெளிவிவகாரக் கொள்கைகளை வகுக்கின்றன. இதற்கு இந்தியாவும் விலக்கல்ல.</b>


வர்த்தகம், ஏற்றுமதி, தொடர்பாடல், பிராந்திய மேலாதிக்கம் போன்ற பல நோக்கங்களுக்காக வெளிவிவகாரக் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினாலும் தேசிய நலனை முன்னெடுப்பதே அதன் முக்கிய பாகமாகிறது. தேசிய நலனென்பது ஒரு நாட்டின் தற்பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார விருத்தி, பிராந்திய செல்வாக்கு போன்ற முக்கிய கூறுகளால் கட்டமைக்கப்படுகிறது.

தேசிய நலனின் முக்கிய அங்கமான தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியபடியே நகர்கிறது வெளிவிவகாரக்கொள்கை. தேசியப்பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் நிறைவான அரசியல், பொருளாதார, இராணுவ (தரை, கடல், வான்) பலத்தில் தங்கியுள்ளது.

இப்போது நாம் முக்கியமான பேசுபொருளுக்கு வருவோம். இந்தியாவி;ன் தேசியப் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் என்ன குந்தகம் விளைந்தது என்று இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா அவதிப்படுகிறது.?

இந்த வினாவிற்கு விடைகாண நாம் சற்று வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை தேசிய நலன் தொடர்பானதாக உள்ளபோதும் அது வேறுசில புறக்காரணிகளால் உருமாறும் வாய்ப்புக்களும் உள்ளது.

<b>இந்திய தேசிய நலனின் சில தோற்றுவாய்களையும் வரலாற்றின் போக்கில் அதை மாற்றியமைக்கும் சில புறக்காரணிகளையும் ஆராய்வதன் ஊடாக ஈழப்போராட்டம் மீதான இந்தியத் தலையீட்டை புரிந்து கொள்வோம்.</b>

1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசு ஈழப் போராட்டம் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறது. சிறந்த வெளியுறவுக் கொள்கைக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றாளர்களால் மேற்கோள் காட்டப்படும் இந்த முடிவு பின்னாளில் சில அகப்புறத்தாக்கங்களின் விளைவாய் புரட்டிப்போடப்பட்டது வரலாறு.


ஒரு நாட்டின் வெளிநாடுகளினுடனான உறவுகள் பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சகத்தி;னூடாக மட்டுமே நடைபெறுகிறது. இந்த அமைச்சை நிர்வகிப்பதும் கொள்கைகள் வகுப்பதும் அந்நாட்டு இராஜதந்திரிகளும் புலனாய்வுத்;துறையினருமே.

இந்திய வெளியுறவுத்துறை . சமகால, அரசியல், சமூக பிராந்திய நலன்களுக்கேற்ப வெளியுறவுத்துறை தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஆட்சியில் இருப்பவர்களால் கட்டுப்படுத்த முடியாதவாறு அரசியல் தலையீடுகளற்று சுதந்திரமாக இயங்குகிறது வெளிவிவகார கொள்கை வகுப்பாக்கம். ஆனால் விதிவிலக்காக எண்பதுகளில் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளை தீர்மானிக்கும் ஒரு தனிச்சக்தியாக முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி விளங்கினார்.

தெற்காசிய வல்லரசான இந்தியா


தெற்காசியப் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு காரணங்களின் சிறப்பால் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக திருகோணமலைத் துறைமுகம் விளங்குகிறது. ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் திருகோணமலைத் துறைமுகத்தை தனது பாதுகாப்பிற்குள் கொண்டுவர திட்டமிட்டார் இந்திரா காந்தி.

<span style='font-size:30pt;line-height:100%'>1971 இல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக டீகோகார்சியா தீவிலிருந்து அமெரிக்க கடற்படை புறப்பட்டு வந்ததும் இந்தியாவிற்கு ஆதரவாக சோவியத் கடற்படை புறப்பட்டு வந்தது. அமெரிக்க கடற்படை நெருங்குவதற்குள் டாக்கா துறைமுகத்தை இந்திய அரசு கைப்பற்ற முனைந்தது. டீகோசியாத் தீவிலிருந்து வருவதற்கும், திருகோணமலையிலிருந்து வருவதற்குமிடையிலான நேரக் கணக்குகளையும் மனதில் வைத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இந்திய அரசு கண் வைத்தது.</span>


<b>அத்துடன் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான தொன்மை வரலாற்றையும் அதன் நிமித்தமான சமகால தமிழக அரசியல் பின்விளைவுகளையும் மனதில் வைத்து ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார் இந்திரா காந்தி;. 1983 இல் ஈழப் பிரச்ச்pனை தொடாபான பாராளுமன்ற விவாதத்தின்போது பின்வருமாறு பதிலளித்தார் இந்திரா காந்தி.</b>


<b>'இலங்கையின் ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் இந்தியா எப்போதுமே மதிக்கின்றது. மற்ற நாடுகளில் எழும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் இந்தியா எப்போதுமே தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் அண்டை நாடான இலங்கையில் அங்குள்ள மக்களுக்கும இந்திய மக்களுக்கும் வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் வரலாற்றுக் காலம் தொட்டு நெருங்கிய உறவு உண்டு. குறிப்பாக இரு நாடுகளிலும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உறவு மிகவும் வலுவானது இறுக்கமானது. எனவே இலங்கையில் நடக்கும் துயரமான நிகழ்வுகள் யதார்த்தமாக இந்தியாவைப் பாதிக்கச் செய்யும். அவ்வாறு பாதிக்கும் போது இலங்கையில் நடக்கும் இனக்கலவரங்களைக் கண்டு இந்தியா ஒரு போதும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது."</b>

இதன் விளைவாய் ஈழப் போராட்டம் புதிய பாதையில் நகரத்தொடங்கியது. ?

நிலமையின் தீவிரத்தை உணர்ந்த ஜே.ஆர் அரசு, தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வந்ததுடன் இந்தியா தொடர்பான கடும்போக்கைத் தளர்த்தி மென்மையான போக்காளர்களாக தம்மை அடையாளப்படுத்துகிறது. இதனால் இந்திய மத்திய அரசு ஈழப் போராட்டம் தொடர்பான தனது போக்கில் சில மாற்றங்களை புகுத்துகிறது. விளைவாய் ஈழப் போராட்டம் இந்தியாவின் இடையூறுகளை சந்திக்கத் தொடங்குகிறது.

<b>இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்வோம். ஈழப் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்ததற்கான முக்கிய காரணம், அதன் தற்பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார விருத்தி, பிராந்திய செல்வாக்கு போன்ற முக்கிய கூறுகளை திடப்படுத்திக் கொள்வதற்காகத்தான். அத்துடன் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எம்.ஜிஆர் தலைமையிலான தமிழக அரசின் ஈழ விடுதலை ஆதரவையும் மனதில் வைத்துத்தான் இந்தியா ஈழப் போராட்ட ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இந்திரா காந்திக்கு ஈழத்தமிழர் தொடர்பாக இந்திய அரசியற்களத்தையும் தாண்டி ஒரு மென்போக்கான தன்மை இருந்ததையும பல தருணங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் பிராந்திய நலன்களும் அவை சார்ந்த ஒற்றை அறமும் ஈழ மக்களின் அவலத்தை புறந்தள்ளியது</b>.

இந்திய அரசின் கொள்கை மாற்றத்தால் இந்திய புலனாய்வுத்துறையின் முழுக்கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் ஈழப்போராளிகள்.


<span style='font-size:25pt;line-height:100%'>இலங்கை புலனாய்வுத்துறையுடன் கை கோர்க்கிறது இந்திய புலனாய்வுத்துறையான றோ. அந்த இணைப்பின் தொடர்ச்சியாய் தமிழகத்திலிருந்து நாடு கடத்தபடுகிறார் அன்ரன் பாலசிங்கம். புலிகளிடமிருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார் பிரபாகரன். அன்று தலைவர் பிரபாகரன் சக போராளிகளிடம் கூறிய புகழ்பெற்ற சொல்லாடல்தான் பின்நாளில் சுதுமலை பிரகடனமாய் வெளிவந்தது. </span>


<b>ஒரு வலுக்குறைந்த நாடு குறிப்பாக, தரைப்பரப்பு பொருளாதார பலம் போன்றவற்றில் சிறிய நாடு பிராந்திய மற்றும் அனைத்துலக மட்ட நிகழ்ச்சிகளை தமக்கு சாதகமாய் திருப்பிவிட இயலாது. உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அமைவாக தமது வெளியுறவுக்கொள்கையை உருவாக்க வேண்டிய நிலையிலுள்ளதாக வெளிவிவகாரக் கொள்ளகையின் ஒரு சரத்து அறிவுறுத்துகின்றது. ஜே.ஆரின் நரித்தந்திரமும் இதற்கமைய இந்தியாவுடனான வெளியுறவுக்கொள்கையில் மாற்றத்தை கொண்டுவருகிறது. வேறு வழியில்லாமல் இந்திரா காந்தி உண்மை நடப்பு (சுநயடளைஅ) நிலையிலிருந்து, உண்மை நடப்பும் இலட்சியவாதமும் கலந்த இரட்டை நோக்கு (சுநயடளைவ ஐனநயடளைவ னுiஉhழவழஅல) வெளிவிவகாரக் கொள்கையை கையிலெடுக்கிறார். ஈழப் போராட்டம் இறுகத் தொடங்குகிறது.</b>

<b>அத்துடன் ஜே.ஆர் தனது நரித்தந்திரத்தின் மூலம் புலனாய்வுத்துறையினூடாக தமிழ்நாட்டில் சில அசம்பாவிதங்களை நடத்தி புலிகளையும் தமிழக மக்களையும் பிரிக்கும் தந்திரத்தை தொடங்குகிறார். துரோகிகளுக்கும் துரோகங்களுக்கும் பஞ்சமில்லாத ஈழத்தமிழ்ச் சமூகம் ஈழப் போராட்டத்திற்காக ஆயுதம் தரித்த தலைமைகள் சிலவற்றில் இருந்தும் அது வெளிக்கிளம்பிய போது அதிர்ச்சியடைந்தது. இலங்கைப் புலனாய்வுத்துறையும், றோவும் இதைத்தமக்கு சாதகமாக்கி தமிழகத்தில் ஒரு குறிப்பான சலசலப்பை தோற்றுவித்தார்கள். ஈழப் போராளிகளையும் தமிழக மக்களையும் பிரி;த்தெடுத்தார்கள். இந்த துரோகிகளும் புலனாய்வுத்துறையினரும் சேர்ந்து நடாத்திய விளையாட்டில் எல்லாப்பழியும் புலிகளின் மேல் விழுந்தது. அந்நாட்களில் ஆயுதம் தரித்த அனைத்துப் போராளிகளையும் தமிழக மக்கள் புலிகள் என்றே அழைத்து வந்தது எதிரிகளுக்கு வசதியாகப் போய்முடிந்தது.</b>

<b>இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் வரை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த ஈழம் தொடர்பான வெளியுறவுக் கொள்கை அவர் மரணத்துடன் ஒரேயடியாக சிங்களத்தின் பக்கம் சாயத்தொடங்கியது. ஒரு தனிமனிதராக முடிவுகளை எடுக்கும் பலம் மிகுந்த சக்தியாக இருந்த இந்திராவின் மரணத்துடன் வெளியுறவுச் செயற்பாடுகள் அதிகாரிகளின் கைக்கு மாறியது. ஒற்றை அறம் பேசும் இந்துத்துவ பார்ப்பனிய கருத்தியலை விதைக்கும் புலனாய்வு அதிகாரிகள் ஈழப் போராட்டத்திற்கு எதிரான முழுநிலைப்பாட்டை எடுத்து இலங்கை, இந்திய ஒப்பந்தம் வரை கொண்டு வந்து விட்டார்கள்.</b>

தவறான வெளிவிவகாரக் கொள்கை அதை முன்னெடுக்கும் நாட்டை ஆபத்தான பாதையில் இட்டுச் செல்லும் என்பதுடன் அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் ஆபத்தையும் பிற நெருக்குதல்களையும் சந்திக்க வேண்டிவரும் என்பதை மறந்து ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது பின்நாளில் இந்திய வெளியுறவுக் கொள்கையையும் அரசியல் கட்டமைப்பையும் கலைத்துப் போட்ட வரலாறு எல்லோரும் அறிந்ததே. ஈழப்போராட்டம் வேறொரு பரிமாணம் அடைந்ததும் இக்காலகட்டத்தில்தான்.

இந்தியா எந்த வெளியுறவுக் கொள்கைக்காக ஈழப் போராட்டத்;தை நசிக்கியதோ, அதே வெளியுறவுக் கொள்கையின் ஒரு சரத்தின் ஊடாகவே தலைவர் பிரபாகரன் இராஜதந்திரக் காய்களை நகர்த்துகிறார். 1989-1990 இல் போர் நிறுத்தப் பிரகடனத்தையும் பேச்சுக்களுக்கான உடன்பாட்டையும் தலைவர் அறிவித்தவுடன் இந்திய அரசும் படைகளும் புறந்தள்ளப்பட்டன. சிறிலங்கா அரசால் அழைக்கப்பட்ட இந்தியப் படையினரை சிறிலங்காவாலேயே வெளியேற்ற வைத்தார் தலைவர் பிரபாகரன்.

பிரபாகரன் மிக இராஜதந்திரமான முறையில் தற்காலிகமாகவேனும் தனது கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்;. நவீன இராஜதந்திரத்தில் வெளியுறவுக்கொள்கை தொடர்பாக அரசியல் நகர்வு அல்லது நடவடிக்கையில் புதிய திருப்பமாக அமையும் கொள்கை முன்னெடுப்பை னுநஅயசஉhந என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியப் படையை வெளியேற்றுவதற்காக தலைவர் பிரபாகரன் னுநஅயசஉhந ஐ நிகழ்த்தினார்.

<b>ஒரு வெளியுறவுக் கொள்கையின் சரத்துடன் உள்நுழைந்த இந்திய அரசை வேறொரு வெளியுறவுக் கொள்கையின் சரத்து மூலம் தேசியத் தலைவர் வெளியேற்றினார். தெற்காசிய அரசியல் இராஜதந்திர வட்டாரம் அப்போது ஆசியாவின்; தலைசிறந்த ராஜதந்திரி ஒருவரை அடையாளம் கண்டு கொண்டது. ஈழப் போராட்டம் வேறொரு பரிமாணத்திற்குள் தன்னை பொருத்திக் கொண்டது.</b>

<b>காலச்சக்கரம் சுழல்கிறது அவமானத்துடனும் தோல்வியுடனும் வெளியேறிய இந்தியா நீண்டகாலம் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தது. இந்திய மத்திய அரசின் ஆட்சி மாற்றங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், பொருளாதாரப் பின்னடைவுகள் போன்ற பல காரணங்களால் இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்தியத் தலையீடு மீண்டும் மெல்ல நகர்ந்து பரவி பாதுகாப்பு ஒத்துழைவு ஒப்பந்தம் வரை வந்து நிற்கிறது.</b>

மத்தியில் காங்கிரஸ் பதவியிலிருப்பதும் எல்லைச் சண்டைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுக்கள் நடைபெறுவதும் புரிந்துணர்வு உடன் படிக்கைக்கு பிறகு இலங்கைக்கு வந்து போகும் நோர்வே, யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளினதும் அக்கறையும் இந்தியாவை ஈழம் தொடர்பான தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

<span style='font-size:30pt;line-height:100%'>ஒரு பிராந்திய வல்லரசு தனது பாதுகாப்பில் அக்கறை கொள்வது இயல்பானது. ஆனால் தீயசக்திகளை சரியான முறையில் இனங்கண்டு தீர்க்கமான வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந்தியா பழைய குருடி கதவைத்திறவடி நிலையில் தான் இன்னும்............ </span>

<b><span style='font-size:25pt;line-height:100%'>இந்திய புலனாய்வு நிறுவனமான றோ ஈழத்தில் ஒரு நிழல் தலையீட்டை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அதற்கான ஆதாரம் பல புலிகள் வசம் சிக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. நேரடித் தலையீட்டிற்காக தருணம்; பார்த்துக் காத்து நிற்கிறது இந்திய அரசு.</span>

இத் தருணத்தில் இந்திய அரசு பழைய சம்பவங்கள் சிலவற்றை மீட்டுப்பார்க்க வேண்டும்;.

[b]மீண்டும் ஒருமுறை தவறான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து இந்திய அரசியல் கட்டமைப்பையும,; பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்துவது அரசியல் விவேகமில்லை. புலிகள் என்றைக்குமே ஒரு நேசசக்தியென்பதை மறந்து விடவேண்டாம். இதை இந்திய அரசு ஏற்காமல் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதற்கெதிராக திரும்புவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதை நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஆலோசனை ஒன்றை வழங்குவதைத் தவிர ஈழத்தமிழர்களிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை. </b>


<b>எமக்குத் தெரியும் உலக வெளியுறவுக் கொளi;ககள் அறம், நீதி, உண்மையை வைத்து வகுக்கப்படுவதில்லை. மாறாக பிராந்திய நலன் சுயபாதுகாப்பு போன்ற குறுகிய வட்டத்தில் நின்று வரையப்படுபவை. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்திற்கு அதன் அரசு மட்டுமன்றி சில புறக்காரணிகள், தனிநபர்கள், நிறுவனங்கள் எல்லாம் பங்கு கொள்வதையும் அறிவோம். இந்திய இந்துத்துவ ஒற்றை அறம் எமக்கு சார்பானதாக என்றும் இருக்கப்போவதில்லை என்பதும் எமக்குத்தெரியும.; 'தேசிய நலனுடன் ஒத்துப்போகும் வரை உடன்படிக்கைகள் மதிக்கப்படுகின்றன" என்றார் நெப்போலியன். ஈழத்தமிழ்த் தேசியத்திற்கு எதுவித சேதமும் இல்லாத வரை நாமும் அதை மதிப்போம்.</b>

'நான் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட எப்போதும் தயாராக உள்ளேன். அதை முறிக்காமல் விலக எனக்குத் தெரியும்" என்றார் கிட்லர்.

நிலையற்ற குழப்பம் நிறைந்த ஒரு சிங்கள தலைமையுடன் ஒப்பந்தத்தை எழுதுவது கத்திமேல் நடப்பதற்கு ஒப்பானது. எந்தக் கணத்திலும் தமது பதவிக்கதிரைகளுக்காக திருத்தவாதம் (சுநஎளைழைnளைஅ) ஐ சிங்களம் பிரயோகிக்கலாம் அப்போது மீண்டும் முகத்தில் கெட்டியாக கரிபூசிக்கொண்டு இந்தியா வந்தவழியே திரும்பவேண்டி நேரிடலாம்.

இந்த அரசியல் சாத்தியங்களுக்கும் அப்பால் இந்த ஒப்பந்தம் மீது பிரபாகரன் எத்தகைய எதிர்வினையை நிகழ்த்தப்போகிறார் என்று ஒருவராலும் வாசிக்க முடியவில்லை. எல்லோருடைய கணிப்பீட்டையும் போல் அவர் அதை இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எதிர்கொள்ளப்போவதில்லை என்றே தெரிகிறது. அவருக்கே உரிய தனித்துவத்துடன் மிகவும் நுட்பமான முறையில் இராஜதந்திர முறையில் காய்களை நகர்;த்தக்கூடும். அப்போது தெற்காசியாவில் அதிசிறந்த ஒரு இராஜதந்திர நிகழ்வை உலகம் மீண்டும் ஒரு முறை தரிசிக்க கூடும். அவர் மீண்டும் ஒரு னுநஅயசஉhந நிகழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லோரும் ஒப்பந்தம் குறித்த கதையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது பிரபாகரன் மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறார். ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட முடியாமல் போவதற்கான சாத்தியங்களையே பிரபாகரன் தனது இராஜதந்திர மௌனத்தின் மூலம் நிகழ்த்திக்கொண்டிருப்பதாக தெற்காசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

<b>எல்லாவற்றையும் மீறி இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் எத்தகைய தலையீடுகளானாலும்; அதை சரியான முறையில் எதிர்கொள்ளும் சாணக்கியம் நிறைந்த தீர்க்கமான தெளிவான தலைமை தமிழீழத்தில் தோன்றி நீண்ட நாட்களாகி விட்டது. இதை எதிரிகளும் அந்நிய சக்திகளும் பல பாடங்களை கற்று தெளிந்தபின்னும் மறந்துபோனது ஆச்சரியமளிக்கிறது.</b>

<b>கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி நடைபெற்ற இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிதியைப் பங்கிடும் திட்டமான பொதுக்கட்டமைப்புக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. (பின்பு சொல்லியதை மாற்றியது வேறு கதை) இத்திட்டம் புலிகளை பலப்படுத்தப் போவதாக ஓலமிட்டது. அந்தக் கணத்தில் மனிதநேயம், மனித விழுமியம், உண்மை, அறம், நீதி எல்லாம் இந்திய அரசால் சாகடிக்கபட்டது. வீடிழந்து, சொந்தங்களைப் பறிகொடுத்து நிர்க்ககதியாய் நின்றவர்களுக்கு உலக தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் பணத்தை கொடுக்காதே என்று சொல்லுமளவுக்கு அதன் ஒற்றை அறம் இருக்கிறது.</b>

இறுதியாக ஒன்றை மட்டும் ஈழத் தமிழினம் சொல்லிக்கௌ;ள ஆசைப்படுகிறது.

ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை போராடி 1961 ஜனவரி 17 மடிந்தான் விடுதலை வீரன் பாடரிஸ் லுமும்பா. அந்த சிறிய தேசத்தின் அழிவுக்கும் அந்த விடுதலை வீரனின் படுகொலைக்கும் சூத்திரதாரிகளாக ஐ.நா தொடக்கம் பல மேற்குலக நாடுகள் வரை பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஏன்? கொங்கோவின் விடுதலை உலக காலனியத்திற்கெதிரான விடுதலையாகிப் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாய் கொங்கோவை ஆக்கிரமித்திருந்த பெல்ஜிய அரசிற்கு பல உதவிகளை செய்து பாட்ரிஸ் லுமும்பா படுகொலைக்கு துணை நின்றன. மனித விழுமியங்கள் உடைந்து சிதறுகின்றன நம் கண்முன்னே. அடிமைப்பட்டு அல்லலுறும் அந்த கொங்கோ மக்களின் மேல் யாருக்கும் பரிதாபம் வரவில்லை. மாறாக அரச பயங்கரவாதத்திற்கு (ளுவயவந வுநசசழசளைஅ) துணைபோனது உலகம். இன்றைய உலக ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது... இதை ஈழத்தமிழினம் சரியாக புரிந்துவிட்டது.

பாடரிஸ் லுமும்பா தான் கொல்லப்படுவதற்கு முன்பாக தனது மனைவிக்கு எழுதிய இறுதிக்கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

<b>'....அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவனாகவும் உயிர் வாழ்வதைவிட தலைநிமிர்ந்தபடி அசைக்க முடியாத பற்றுடனும் என் நாட்டின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் மரணமடைவதையே நான் விரும்புகின்றேன். வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா. விலோ வொசிங்டனிலோ புருஸ்ஸல்ஸிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக காலனியாதிக்கத்திடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆப்பிரிக்கா தன் சொந்த வரலாற்றை தானே எழுதும். அது சகாராப் பாலைவனத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதை சொல்லும் வரலாறாக இருக்கும்...</b>"

<b>ஆம், அந்த விடுதலை வீரனின் அரசியல் விருப்ப ஆவணத்தைப்போல் தமிழீழமும் இறுதி இலட்சியத்தை அடையும்வரை குறுக்கேவரும் எத்தகைய மாபெரும் சக்தியையும் எதிர்த்து போராடும். செய்யும் அல்லது செத்து மடியும். அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவர்களாகவும் உயிர்வாழ்வதை விட தலை நிமிர்ந்தபடி அசைக்க முடியாத பற்றுடனும் தமிழீழத்தின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் மடிவதையே விரும்புகிறது.</b>

<span style='font-size:30pt;line-height:100%'><b>வரலாறு ஒரு நாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு புதுடில்லியிலோ கொழும்பிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் அடக்குமுறையாளர்களிடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். தமிழீழம் தன் சொந்த வரலாற்றைத் தானே எழுதும்.</b></span>

நன்றி:MODERN DIPLOMACY
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
நல்லதொரு ஆக்கம். எழுதுரு மாற்றத்தில் குழப்பமடைந்த சொற்கள்
Foriegn Policy
Realism
Realist Idealist Dichotomy
Demarche
Revisionism
Demarche
State Terrorism
Reply
#3
நன்றி அண்ணா அதை நான் http://www.suratha.com/reader.htm முலம் தான் மாத்தி பேட்டனான் அதனால் ஆங்கில சொல் மாறிவிட்டது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
இந்தியா ட வெளியுறவுக் கொள்கை அது சின்ன பிள்லைகளை கேட்ட கூட சொல்லும்


அதை வச்சு கொண்டு இந்தியா ஜ.ந சபையில
நிரந்திர இடம்??????????????????

இதுக்பின் உலக வல்லரசு?
Reply
#5
நன்றி வினித் நல்ல கட்டுரை,இதை எங்கே இருந்து எடுத்தீர்கள் இணைப்பைத் தர முடியுமா?
Reply
#6
narathar Wrote:நன்றி வினித் நல்ல கட்டுரை,இதை எங்கே இருந்து எடுத்தீர்கள் இணைப்பைத் தர முடியுமா?

¾Á¢ú¿¡¾õ «¾¢Ä þÕóÐ ¾¡ý «ñ½¡

http://www.tamilnaatham.com/articles/paran...ni/20050705.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#7
நன்றி வினித்... நல்லதொரு கட்டுரை இணைத்தமைக்கு.........
Reply
#8
ம்ம் நல்ல கட்டுரை இணைப்புக்கு நன்றி வினித்.
<b> .. .. !!</b>
Reply
#9
ம்ம்... சரி.. உண்மையை வாழைப்பழத்தில் ஊசி போல ஏற்றி இருக்கிறார் ஆசிரியர்....

அது சரி புலிகள் பலம் அற்றவர்களாய் இருந்த போது புலிகளை அழிக்க வேண்டும் எண்டு படை நடாத்திய இந்திய அரசு புலிகள் பலமாய் இருக்கு இந்த வேளையும் அவர்களை எதிர்க்கிறார்கள்... அப்படியானால் இந்தியாவால் அவர்கள் தலைமை அழிக்கப் பட வேண்டியவர்களாகிறார்கள்....

இது சாத்தியமானதா. புலிகள் ஆட்லறியில் இருந்து அதிரடித்தாக்குதல்கள் வரை விசேட படைகளைக் குவித்திருக்கிரார்கள். அப்படி எண்றால் பயிற்ச்சி அளித்து இருக்கிறார்கள். அப்படியான போராளிகள் ஒரு கட்டமைபில் இருந்து பிரிந்து போவது இந்தியாவுக்கு லாபமானதா.....???? தென்னகத்தில் தன் வலுக்கள் எல்லாவற்றையும் திரட்டி வைத்திருக்கும் இந்தியா...(அணு, விண்வெளி, மின்சாரம்.,.EXT..) பிரிந்து போகும் போராளிகளால் ஆபத்து வராது எண்டு நினைக்கிறதா...???

புலிகள் தலைமையின் கீழ் கட்டுப்பாடுடன் இருக்கும் உறுப்பினர்கள் பிரிந்து சிதறினால் ... பாதிக்கபட வைப்பவர்களில்(இந்தியா) அன்பாக இருப்பார்களா..??? ISI போண்ற அமைப்புகளிடம் விலைபோகச் சந்தர்ப்பம் இல்லையா...???

இப்பிடி நிறையக் கேள்விகள்... சிங்களவனிட்டக் கேக்க ஏலாது... காரணம் அவங்கள் மோடர்..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#10
நன்றி வினித்.
அருமையான கட்டுரை.
Reply
#11
Thala Wrote:ம்ம்... சரி.. உண்மையை வாழைப்பழத்தில் ஊசி போல ஏற்றி இருக்கிறார் ஆசிரியர்....

அது சரி புலிகள் பலம் அற்றவர்களாய் இருந்த போது புலிகளை அழிக்க வேண்டும் எண்டு படை நடாத்திய இந்திய அரசு புலிகள் பலமாய் இருக்கு இந்த வேளையும் அவர்களை எதிர்க்கிறார்கள்... அப்படியானால் இந்தியாவால் அவர்கள் தலைமை அழிக்கப் பட வேண்டியவர்களாகிறார்கள்....

இது சாத்தியமானதா. புலிகள் ஆட்லறியில் இருந்து அதிரடித்தாக்குதல்கள் வரை விசேட படைகளைக் குவித்திருக்கிரார்கள். அப்படி எண்றால் பயிற்ச்சி அளித்து இருக்கிறார்கள். அப்படியான போராளிகள் ஒரு கட்டமைபில் இருந்து பிரிந்து போவது இந்தியாவுக்கு லாபமானதா.....???? தென்னகத்தில் தன் வலுக்கள் எல்லாவற்றையும் திரட்டி வைத்திருக்கும் இந்தியா...(அணு, விண்வெளி, மின்சாரம்.,.EXT..) பிரிந்து போகும் போராளிகளால் ஆபத்து வராது எண்டு நினைக்கிறதா...???

புலிகள் தலைமையின் கீழ் கட்டுப்பாடுடன் இருக்கும் உறுப்பினர்கள் பிரிந்து சிதறினால் ... பாதிக்கபட வைப்பவர்களில்(இந்தியா) அன்பாக இருப்பார்களா..??? ISI போண்ற அமைப்புகளிடம் விலைபோகச் சந்தர்ப்பம் இல்லையா...???

இப்பிடி நிறையக் கேள்விகள்... சிங்களவனிட்டக் கேக்க ஏலாது... காரணம் அவங்கள் மோடர்..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உதை போய் சிங்களவனிட்டா கோட்டா நல்லது எண்டு தானே சொல்லுவான். அவன் அந்தளவுக்கு மோடன் இல்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் தகுதியுடையவர்கள் எனக் கருதப்படுவோர் அதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அதாவது புலிகளோடு பேச வேண்டும் அவர்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும். ஆனால் புலிகளின் தற்போதை புலிகளின் தலமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் அர்த்தம் என்ன? விலைபோகக் கூடிய எட்டப்பர் கூட்டத்தைத்தான் அங்கீகரிப்போம். மானத்தமிழரின் விடுதலை இயக்கத்தின் தலைவர்களை அல்ல.

உலக வல்லரசுகள் தங்கள் நலன்களிற்கா எத்தனை இனத்தின் தேசியவிடுதலைப் போராட்டத்தை சிதைத்தார்கள். இந்தியா வல்லரசாக முதலே இத்தனை செய்துவிட்டது செய்யத்துடிக்கிறது. இனிவரும் காலங்களில் அதன் தேவையும் எதிர்பார்ப்பும் மேலாண்மை வாதமும் ஒரு உலக வல்லரசு நிலக்கு ஏறுமா இல்லை திருந்திக் கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பது யதார்த்தமா?
http://www.tamillinks.net/archive/2005/new..._30122005_a.htm
Reply
#12
kurukaalapoovan Wrote:உதை போய் சிங்களவனிட்டா கோட்டா நல்லது எண்டு தானே சொல்லுவான். அவன் அந்தளவுக்கு மோடன் இல்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் தகுதியுடையவர்கள் எனக் கருதப்படுவோர் அதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அதாவது புலிகளோடு பேச வேண்டும் அவர்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும். ஆனால் புலிகளின் தற்போதை புலிகளின் தலமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் அர்த்தம் என்ன? விலைபோகக் கூடிய எட்டப்பர் கூட்டத்தைத்தான் அங்கீகரிப்போம். மானத்தமிழரின் விடுதலை இயக்கத்தின் தலைவர்களை அல்ல.

இந்தியாவுக்கு இலங்கையில் பிரிவினைப்படைகள் வேணும் எண்டு நினக்குது எண்டு தெரியாமலா இலங்கை இந்தியாட்ட போய் நிக்கிது....??? அப்பிடித் தெரிஞ்சும் போய் நிண்டால் அவங்கள் மோடர் தானே...! :wink:

முன்னாள் உபதலைவரின்.......இந்திய உதவியுடன் எங்கள் தலைவரைக் கொல்ல முயற்சியும்.. அவரின் கிட்டண்ணாவின் பயணவிபரம்.... இந்தியாவிற்க்கு வளங்கப்பட இந்தியாவினா பலிகொள்ளப்பட்டதுமே போதுமான ஆதாரம்..... இந்தியாவின் நோக்கம் புரிபட

இப்போ இன்னும் ஒரு கேள்வி புலிகள்தலைமை மாறினால் புலிகள் இந்தியாவினால் புனிதர்கள் ஆக்கபடுவார்கள் எண்டு நினைக்கிறீர்களா... அல்லது பங்களாதேச <b>முக்திபாகினியரின்</b> நிலைமைதானா....????
::
Reply
#13
செயலுக்கு முக்கியத்துவம் நாம் கொடுக்கவேண்டிய காலகட்டம் இது என்று நினைக்கிறேன் :roll:
-!
!
Reply
#14
பரணியின் கட்டுரை மிகவும் அருமையானது. காலத்தின் தேவை கருதி மீள பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் பழமைவாதத்தில் இருப்பதுதான் வேதனைக்குரியது.

தற்போதைய காலகட்டத்தில் கொள்கை வகுப்பாளர்களுக்கு புரட்சிகர சிந்தனை வராமல் போனமை மிகவும் வருந்தத்தக்கது.

ஜே.வி.பி.பி, ஜாதிக ஹெல உறுமயவை இந்தியா தான் வளர்த்து வந்தது. இந்த இரு கட்சிகளும் தமக்கு தொடர்ந்து இராஜ விசுவாத்தைக் காட்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.

ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன?

மகிந்தவுடனான தூதுக்குழுவில் ஜே.வி.பி. இடம்பெற மறுத்துவிட்டது. ஏனெனில் எங்கே இந்தியா தம்மை சமாதான பேச்சு தொடர்பான விடயத்தில் வலியுறுத்திவிடுவார்கள் என்கிற அச்சத்தினால் அது செல்லவில்லை.

இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த ஆறுமுகன் தொண்டமான் கூட இந்தியாவின் சொல்லைக் கேட்பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார் (அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம்).

<b>ஆறுமுகன் தொண்டமான் ஒரு சந்தர்ப்பவாதி. சிலவேளை நாளை இந்தியாவின் சொற்கேட்டு ஆடக்கூடிய நபராக இருப்பார். எதற்கும் அவர் தொடர்பான பார்வையில் நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.</b>

இந்த விடயத்தில் நான் என்ன கூற வருகிறேன் எனில். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தற்கால சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிவிட்டன.

ஆனால் அந்தோ பரிதாபம் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து பழைய கொள்கை வகுப்புச் சிந்தனையில் இருக்கிறார்கள்.

மகாபாரதக் கதையை மாற்றினாலும் இந்தியா தனது கொள்கை வகுப்புச் சிந்தனையை மாற்றுமா என்பது சந்தேகமே!?

தமிழ்நாட்டில் மீண்டும் எமக்கான ஆதரவுத்தளம் உருவாகுகிறது. இதற்கு நாமும் எம்மாலான ஆதரவினை அதாவது ஊடகத்தளத்தில் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பூதாரகப்படுத்தி வெளிக்கொணர வேண்டும்.

இந்தியா எமக்கான ஆதரவுநிலையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறுமா?
S.Nirmalan
Reply
#15
nirmalan Wrote:<b>ஆறுமுகன் தொண்டமான் ஒரு சந்தர்ப்பவாதி. சிலவேளை நாளை இந்தியாவின் சொற்கேட்டு ஆடக்கூடிய நபராக இருப்பார். எதற்கும் அவர் தொடர்பான பார்வையில் நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.</b>

வணக்கம் நிர்மலன் தொண்டமான் மாறிவிடுவார் என்பது உண்மையாக இருக்கலாம்.. இல்லை அவர் இந்திய உத்தரவுக்கமையக்கூட இணைய முன் வரலாம்.. அது முக்கியமில்லை... அவர் விலகிப் போகும் போது அதற்கு காரணமாய் நாங்கள் அதாவது கூட்டமைப்பினர் இருக்க கூடாது.... அப்படி இருந்தால் அவர்தன் பெயரைத்தானே மக்களிடத்தில் கெடுத்துக்கொள்வார்...!
::
Reply
#16
தொடர்ந்தும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறீர்களே.
பழைய குப்பைகளை கிளறி என்னதான் ஆக போகுது?

காலத்தின் தேவை என்ன?

இன்னும் எத்தனை தர்ஷினிகளின் சாவை தடுக்கும் வழிகளை இப்படி பேசி பேசியே தவற விட போகிறோம்?
தமிழ் கூட்டமைப்பு என்ற ஒன்றை பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்து அனுப்பி எங்கள் தேசியத்துக்கு பலம் சேர்க்க அனுப்பினோமே எதனால்?

இந்த அமைப்பின் உள்ள ஒவ்வொரு கட்சிகள் பற்றியும் அதன் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து விட்டா அதை செய்தோம்?

காலத்தின் தேவையை கருதி ..எமக்கு சாதகமாய் உள்ள வழிகளை முதல் பயன் படுத்தலாம்! பிறகு மற்றவை பற்றி பேசலாமே? :roll:
-!
!
Reply
#17
Thala Wrote:இந்தியாவுக்கு இலங்கையில் பிரிவினைப்படைகள் வேணும் எண்டு நினக்குது எண்டு தெரியாமலா இலங்கை இந்தியாட்ட போய் நிக்கிது....??? அப்பிடித் தெரிஞ்சும் போய் நிண்டால் அவங்கள் மோடர் தானே...! :wink:

முன்னாள் உபதலைவரின்.......இந்திய உதவியுடன் எங்கள் தலைவரைக் கொல்ல முயற்சியும்.. அவரின் கிட்டண்ணாவின் பயணவிபரம்.... இந்தியாவிற்க்கு வளங்கப்பட இந்தியாவினா பலிகொள்ளப்பட்டதுமே போதுமான ஆதாரம்..... இந்தியாவின் நோக்கம் புரிபட

இப்போ இன்னும் ஒரு கேள்வி புலிகள்தலைமை மாறினால் புலிகள் இந்தியாவினால் புனிதர்கள் ஆக்கபடுவார்கள் எண்டு நினைக்கிறீர்களா... அல்லது பங்களாதேச <b>முக்திபாகினியரின்</b> நிலைமைதானா....????

சிங்களவர்களை பொறுத்தவரை தமிழர் படை பல்துறைக் கட்டமைப்புக் கொண்ட பலமிக்க இராணுவமாக கட்டுக்கோப்போடு இல்லாமல் ஒட்டுப்படைகளாக கூலிப்படைகள் ஆக இருப்பதை விரும்புவது மாத்திரம் அல்ல அந்த ஒட்டுப்படைகளும் கூலிப்படைகளும் இந்திய எதிர்புச் சக்திகளிற்கு விலைபோகும் என்றால் அதில் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி இருக்கும். சிங்களவர்கள் இந்தியா தான் தமிழர் போராட்டத்திற்கு ஆயதப்போராட்டம் என்ற பரிணாமத்தை சேர்க்க வழிகோலியவர்கள் என்றதை மறக்கவும் மாட்டார்கள் சந்தர்ப்பம் வரும் போது பழிவாங்காமலும் விடுவார்களோ என்றது சந்தேகமே. இதைத் தான் சொல்ல வந்தேன் சிங்களவன் மேடர் இல்லை என்று.

சதாம் கூட ஒரு காலத்தில் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக போர் செய்த மேற்குலகத்தின் புனிதர்தான்.

முக்திபாகினியர் பற்றி பெரிதாக தெரியாது. உங்களுக்கு தெரிந்த வற்றை எழுதுங்கள் நல்ல இணைப்புகள் இருந்தால் தாருங்கள்.
Reply
#18
முக்கிதிபாகினிப் போராளிகள் பங்களா தேசவிடுதலை போராளிகள். அவர்களின் உதவியோடுதான் இந்தியப்படையினர் பங்களாதேசத்துகுள் நுளைந்தனர். பின்னர் அவர்களின் தலைமை அச்சுறுத்தப்பட்டு அகற்றப்பட்டு பின் இந்திய பொம்மையரசு அமைக்கப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் பல கொலைகளும் நிகள்த்தப்பட்டது.

(பங்களாதேசிகள் இணையத்தில் தங்களது பதிப்புக்களை போட்டத நான் இதுவரை பார்த்தது கிடையாது. புலம் பெயரும் முன் பங்களாதேச விடுதலைப் போர் பற்றிய புத்தகம் ஒண்றில் படித்தேன்.)

அதைத்தான் இந்திய அரசு ஈழத்திலும் நடாத்த விரும்பியது என்பது தெளிவு. போராளிகளையோ அல்லது அவர்களின் தலைமையையோ எப்போதும் பயன் அடந்த அரசுகள் வைத்திருக்க மாட்டாது காரணமாய் அவர்கள் அதிர்ப்தி அடயும் போது மீண்டும் விடுதலைப் போரை ஆரம்பித்துவிடுவார்கள், நிலயில் இருந்து இறங்கிவர மாட்டார்கள் எண்டு பலகாரணங்கள் சொல்வார்கள்.
::
Reply
#19
யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா?

உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது..

அதே கொள்கையுடன்தான் இலங்கைக்குள்ளும் நுளைந்தது.. அதற்கு "ஏகம்" தடைநின்றது..

ஏகத்தின் பிரச்சார பீரங்கியால் சர்வதேசத்தை விலைக்குவாங்கமுடியவில்லை..

நாளுக்கு நாள் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கின்றது.. அதுதான் ஆயர்கள் தந்த செய்தி..

Thala Wrote:முக்கிதிபாகினிப் போராளிகள் பங்களா தேசவிடுதலை போராளிகள். அவர்களின் உதவியோடுதான் இந்தியப்படையினர் பங்களாதேசத்துகுள் நுளைந்தனர். பின்னர் அவர்களின் தலைமை அச்சுறுத்தப்பட்டு அகற்றப்பட்டு பின் இந்திய பொம்மையரசு அமைக்கப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் பல கொலைகளும் நிகள்த்தப்பட்டது.

(பங்களாதேசிகள் இணையத்தில் தங்களது பதிப்புக்களை போட்டத நான் இதுவரை பார்த்தது கிடையாது. புலம் பெயரும் முன் பங்களாதேச விடுதலைப் போர் பற்றிய புத்தகம் ஒண்றில் படித்தேன்.)

அதைத்தான் இந்திய அரசு ஈழத்திலும் நடாத்த விரும்பியது என்பது தெளிவு. போராளிகளையோ அல்லது அவர்களின் தலைமையையோ எப்போதும் பயன் அடந்த அரசுகள் வைத்திருக்க மாட்டாது காரணமாய் அவர்கள் அதிர்ப்தி அடயும் போது மீண்டும் விடுதலைப் போரை ஆரம்பித்துவிடுவார்கள், நிலயில் இருந்து இறங்கிவர மாட்டார்கள் எண்டு பலகாரணங்கள் சொல்வார்கள்.
8
Reply
#20
Quote:முக்திபாகினியர் பற்றி பெரிதாக தெரியாது. உங்களுக்கு தெரிந்த வற்றை எழுதுங்கள் நல்ல இணைப்புகள் இருந்தால் தாருங்கள்.

ஏய் குறுக்ஸ்!

"வங்கம் தந்த பாடம்" படிக்கவில்லையா :!: இல்லையாயின் வசம்பாரை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)