12-28-2005, 11:11 PM
ஏக்கம்
இலண்டனுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டாச்சு
இருப்பிடம் வேலை பிள்ளைகள் இரண்டாச்சு
இன்னும் இரண்டு வீடு வாடகைக்குக் கொடுத்தாச்சு
மனைவிக்குச் சிறிய கார் எனக்குப்பெரிய "பென்ஸ் கார்"
பெரிய வீட்டோடு "பிரிட்டிஸ் பாஸ்போட்"
எல்லாமே வசதியாயிருக்கு எதுவித குறையுமில்லை
இப்படித்தான் எமைப்பார்ப்போர் எண்ணுவார் துன்பமில்லை
இருந்தும் என்மனதில் என்றுமே அமைதியில்லை
தமிழார்வம் எனக்குண்டு தமிழ்நூல்கள் பலவுமுண்டு
நினைத்தவுடன் கதைகவிதை எழுதிடவும் திறமையுண்டு
அன்பான மனைவியுண்டு அறுசுவைபோல் உணவுமுண்டு
ஆனாலும் பிள்ளைகட்கு தமிழுணவில் ஆர்வமில்லை
பிட்டென்றால் "பீசா" தோசையென்றால் "பற்சா"
மரக்கறி சோறுஎன்றால் மற்றவர்க்கு "மைக்டொனாட்"
இப்படியாய் இருபதாண்டு காலத்தைக் கழித்தாச்சு.
தமிழார்வம் கொண்டஎந்தன் தவமிருந்து பெற்றவாயில்
தவறிக்கூட ஏனும் தமிழைநான் கேட்டதில்லை
"அ" னாவும் தெரியாது அழகான தமிழிசையின்
தேனான பாடல்கள் தீண்டாது அவர்செவியை
பட்டுடுத்துப் பொன்நகைகள் பலவணிந்த மனைவியுடன்
பெருவிழா அழைப்பிற்சென்று பலர்பார்க்க முன்வரிசை
இருக்கையில் அமர்ந்து, இருவரும் எழுந்துசென்று
குத்துவிளக்கேற்றி, கூடவந்து அமர்ந்த டாக்டர்
பத்துக் கதைகள்கூற பல்தெரிய சிரித்தும்நெஞ்சு
பக் பக்கென்றே அடிக்கடி இடித்துநிற்கும்
வீதியுலா சென்றமகன் வேதனையை வளர்ப்பானோ?
பாதிஇரவு கழிந்தபின்னால் நாதிகெட்டு நுழைவானோ?
பாதி உடையணிந்து தோழருடன் சென்றமகள்
ஊதிப் புகைவிட்டு தோழருடன் உலள்வாளோ?
ஏழிசையைக் கேட்டுவிழி மேடையிலே மலர்ந்தபோதும்
பாழாய்ப் போனமனம் பெற்றவரையே நினைந்திருக்கும்
ஊரைவிட்டு தூர தேசம் வந்ததினால் பலஉழைப்பு
பேரைச் சொல்ல ஒருவரின்றி போனதினால் இது இழப்பு
நரைவிழுந்து போனபின் தான் ஞானக்கண் திறப்பு
யாருக்குச் சொல்லியழ இங்கு பலருக்கு இது நடப்பு

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->