12-29-2005, 10:08 AM
இலங்கைக்கு 2 ராடர்களை வழங்கியது இந்தியா யுத்தநிறுத்தத்தை தொடர கொழும்புக்கு அறிவுறுத்தல்?
இந்திய சமஷ்டி பற்றி ஜனாதிபதி மகிந்தவுக்கு இன்று விளக்கமளிக்க ஏற்பாடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா, இலங்கைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 இராணுவ ராடர்களை வழங்கியுள்ளது.
தாழ்ந்த மட்டத்தில் செல்லும் போர் விமானங்களை கண்டறியக்கூடிய இந்த ராடர்கள் வழங்கப்பட்டிருக்கின்றமை உயிரழிவை ஏற்படுத்தாத இராணுவ உதவிகளை 5 வருடங்களின் பின்னர் புதுடில்லி கொழும்புக்கு வழங்க ஆரம்பித்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
இந்த உடன்பாடு இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், கைமாற்றலை, பாதுகாப்பு அமைச்சு தகவல் தருநர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால் மேலதிக விபரங்களை அளிக்கவில்லையென சென்னையிலிருந்து வெளியாகும் `இந்து' ஆங்கில நாளேடு நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காண்பதற்கு கொழும்பை ஊக்குவிக்காத இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை நகல் வரைபின் அடிப்படையிலேயே ராடர் விநியோகம் இடம் பெற்றுள்ளதாக ஏனைய தகவல் தருநகர்கள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, வான் மார்க்க நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் பேராற்றலைப் பெறக்கூடிய சாத்தியப்பாட்டுக்கு எதிராக இலங்கையின் பாதுகாப்பை இது வலுப்படுத்துகின்றது. தற்போது, விடுதலைப் புலிகள் இரண்டு இலகுரக விமானங்களை வைத்துள்ளார்கள். அத்துடன் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இரண்டு விமான ஓடு பாதைகளை அமைத்துள்ளதாக நம்பப்படுகின்றது.
ஆனால், இந்த அளவிலான விமானங்களை ராடரால் கண்டறிய முடியாது என தகவல் தருநர்கள் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து 2000 இல் விரைவு ரோந்துப்படகுகள் உட்பட உயிரழிவை ஏற்படுத்தாத இராணுவத் தளபாடங்களை இந்தியா வழங்கியது. ஆனால், 1980 களின் இறுதிப் பகுதியில் இராணுவ தளபாட விநியோகங்களை நிறுத்தியதைத் தொடர்ந்து உயர் தொழில்நுட்ப விநியோகங்களை மேற்கொள்வதை அது பொதுவாக தவிர்த்து விட்டது.
இராணுவத் தளபாடங்களை இலங்கை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்ட ஆரம்பித்த பின்னர் இந்தியா ராடர் விநியோகத்திற்கு இணங்கியது என்று தகவல் தருநர்கள் தெரிவித்தனர். தனது கரைகளுக்கு அண்மையில் பாகிஸ்தான் கண்காணிப்புக் கருவியை நிலைப்படுத்தும் எண்ணக்கருவை இந்தியா அசௌகரியமாக உணர்ந்ததனால் இந்தவருட ஆரம்பத்தில் கொழும்பிற்கு முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார்சிங் வருகை தந்தபொழுது விநியோகத்தை முறைப்படியாக அறிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பாரத் எலக்ரோனிகஸ் நிறுவனம் ராடர்களை தயாரித்து இந்திய விமானப்படைக்கு இந்திரா ஐஐ ராடர்களை விநியோகிக்கின்றது. அதுதான் ராடர்களை கொழும்பிற்கு கையளித்துள்ளது.
பாதுகாப்பு உடன்படிக்கை முதலில் வரையப்பட்ட பின்னர் இரண்டு வருடங்களாக முட்டுக்கட்டை நிலையில் இருக்கின்ற போதிலும், இரண்டு நாடுகளும் இராணுவ மட்டத்திலான தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதுடன் இம்மாத முற்பகுதியில் முதன்முதலாக கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தின.
அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கான கூட்டுப் பயிற்சியை இந்தியா நடத்தும் பொழுது அடுத்த மாதம் இரண்டு கடற்படைகளும் சந்திக்கக் கூடும்.
இராணுவ தளபாட வழங்கல் ஏற்பாடுகள் மிக மெதுவாகவே இடம் பெற்றபோதிலும் பெரும்பாலான இலங்கை இராணுவ அதிகாரிகள் தமது தொழில் வாழ்க்கையில் ஏதாவதொரு காலகட்டத்தில் இந்தியாவில் பயிற்சிபெற்றவர்கள் என்பதனால் இருதரப்பு ஆயுதப்படைகளைச் சேர்ந்தோர் நெருங்கிய உறவால் மகிழ்ச்சியடைந்தனர் என்று தகவல் தருநர்கள் கூறினர்.
விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறைபாடுகள் இருந்தபோதிலும் அது தொடர்ந்து செயற்படுத்தப்படவேண்டும் என்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதிக்கு அந்நாடு தெரிவிக்கும்.
மகிந்த ராஜபக்ஷவின் வருகையானது இலங்கைப் படையினர் மீதான விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்பவற்றை இருதரப்பும் கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்றைய நிலக்கண்ணித் தாக்குதல் உட்பட கடந்த ஒரு மாதத்தில் விடுதலைப் புலிகள் 50 இற்கு மேற்பட்ட படையினரை கொன்றுள்ளதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் பாதுகாப்பு நிலைமை குறித்து மகிந்த ராஜபக்ஷ என்ன சொல்லப்போகின்றார் என பதைக்கேட்க இந்தியா விரும்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியா ஆற்றக் கூடிய பாத்திரம் குறித்த இலங்கை ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பிலும் ஆர்வம் காணப்படுகின்றது.
அண்மையில் தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும் மீண்டும் போர் எற்படாது என்று புதுடில்லி நம்புவதுடன் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆத்திரமூட்டல்களிருந்தபோதிலும் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டை வெளிக்காட்டியுள்ளதை பாராட்டியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக " ஒற்றையாட்சி முறையின் கீழ் சாத்தியமான உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வு " என்று ஜனாதிபதி குறிப்பிடுவது என்ன என்ற விளக்கத்தை இந்தியா எதிர்பார்க்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியால் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் மத்திய மாநில உறவு மற்றும் அதிகாரப்பகிர்வு பற்றிய விளக்கமொன்று அளிக்கப்படும்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-1.htm

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->