12-27-2005, 11:27 AM
ஜோதிகா `ஈநாடு' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-
கே: தெலுங்கில் நீங்கள் நடிக்கும் `ஷாக்' படம் பற்றி சொல்லுங்களேன்.
ஜோதிகா: `ஷாக்' படத்தில் எனது ஜோடி ரவி தேஜா. அவர் நல்ல நடிகர். எனக்கு நல்ல நண்பர். எப்போதும் கலகலப்பாக பேசுவார். ராம்கோபால் வர்மா தயாரிக்கும் இந்த படத்தில் நடிப்பது பெருமையான விஷயம்.
கே: தெலுங்கு படங்க ளில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற வர்களிடம் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே?
ஜோதிகா: ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில் நடிக்கவில்லை.
எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். அடுத்து டைரக்டர் பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்கு கதைதான் முதலில் `ஹீரோ' மற்றவை அதற்குப்பிறகுதான.
கே: `சந்திரமுகி' படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி?
ஜோதிகா: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.
கே: அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள்தான். எப்படி உங்களை தேர்ந் தெடுத்தார்கள்?
ஜோதிகா: அந்த படத்தில் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததைவிட அது நன்றாக வந்தது. இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.
கே: வெற்றி யாருக்கு, அந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன?
ஜோதிகா: வழக்கம்போல்தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோப னாவும், சவுந்தர்யாவும் நடித் திருந்தார்கள். அëந்த படத்தை பல முறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.
கே: படத்தின் வெற்றியில் யாருக்கு பங்கு அதிகம்?
ஜோதிகா: ரஜினிசாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகர்களும் வெற்றிக்கு காரணம்.
கே: உங்களை சுற்றித்தான் கதை வருகிறது. இதில் ரஜினிக்கு வெற்றி என்பது எப்படி பொருந்தும்?
ஜோதிகா: ரஜினிசாரின் படத்தில் அவரது பெயருடன் படத்தின் தலைப்பு பெயராக எனது பெயரும் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இதற்காக ரஜினிசாருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
கே: உங்கள் கண்கள் அவ்வளவு பெரிதாக தெரிகிறதே எப்படி?
ஜோதிகா: ஏற்கனவே என்னுடைய கண்கள் பெரியவை தான். மேலும் கொஞ்சம் பெரிதாக்க முடியும். டைரக்டரும், கேமராமேனும் அந்த காட்சியை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியம்.
கே: சூர்யாவுடன் உங்களுக்கு திருமணம் எப்போது?
ஜோதிகா: அதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். நான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன. அவரும் பிசியாக இருக்கிறார்.
கே: எப்போது என்று சொல்ல முடியுமா?
ஜோதிகா: விரைவில் நடக்கும். எல்லோரிடமும் சொல்லிவிட்டுத்தான் நாங்கள் திருமணம் செய்வோம்.
கே: `ஜில்லுன்னு ஒரு காதல்' படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறீர்களே அதைப்பற்றி...
ஜோதிகா: அவருடைய சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார் ஆகிறது. தெலுங்கிலும் இது வெளியாகும்.
இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.
Thnaks;Malaimalar...

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............