Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை மாணவி கொலை: மாணவர் விடுதலை
#1
இலங்கை மாணவி கொலை: மாணவர் விடுதலை
டிசம்பர் 23, 2005

மதுரை:



இலங்கை மாணவி மயூரணி கொலை செய்ப்பட்ட வழக்கில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மாணவர் பால பிரசன்னாவை விடுதலை செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகள் மயூரணி மதுரையில் உள்ள அம்பிகா கல்லூரியில் படித்து வந்தார். அந்தக் கல்லூரியின் உரிமையாளரான சோலமலைத் தேவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.

இந் நிலையில் வீட்டுக்குள் மயூரணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக சோலமலைத் தேவர், அவரது மனைவி, மற்றொரு இலங்கை மாணவர் பாலபிரசன்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மாயூரணிக்கு சோலைமலைத் தேவர் செக்ஸ் டார்ச்சர் தந்து வந்ததாகவும், பாலபிரசன்னாவை விட்டு மயூரணியைக் கொலையை செய்யச் சொன்னதே தேவர் தான் என்றும் புகார் எழுந்தது. முதலில் தேவர் மீதும், அவரது வீட்டு வேலையாட்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்த காவல்துறை பின்னர் தேவரைக் காப்பாற்றும் வேலையில் இறங்கியதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் இந்த கொலை வழக்கு விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் பால பிரசன்னாவைத் தவிர மற்ற அனைவரையும் விடுதலை செய்தது. பால பிரசன்னாவுக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.



இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கவும், உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைக்கவும் காவல்துறை முயல்வதாகக் கூறி மாயூரணியின் மாமா மோகன்தாஸ் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் மோகன்தாஸ் கோரியிருந்தார்.

அதே போல தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பால பிரசன்னா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மிஸ்ரா, ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தது.

பால பிரசன்னாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அந்த கொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் விடுவிச்சாச்சு. இப்ப யார் தான் குற்றவாளி? மயூரணியின் உயிருக்கு என்ன தான் பதில் ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
Mathan Wrote:அந்த கொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் விடுவிச்சாச்சு. இப்ப யார் தான் குற்றவாளி? மயூரணியின் உயிருக்கு என்ன தான் பதில் ?

வேறுயாரு அந்த வீட்டு உரிமையாளர்தான். Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#4
சோலைமலைத் தேவர்தான் :oops: :oops: :oops:
!!!
Reply
#5
பெயரை பாருங்க, செய்வதெல்லாம் வடி கட்டின அயோக்கியதனம். படத்தில் மட்டும் தான் கதாநாயகன் பாய்ந்து பாய்ந்து வில்லனை தாக்குவாரா? நிஜத்தில் இருந்தால் கொஞ்சம் தேவலை...
[b][size=15]
..


Reply
#6
காசு இருந்தால் இந்தியாவில் என்னவும் செய்யலாம், இவ்வளவு கொள்ளை அடித்த ஜெயலலிதாவும் கொலைசெய்த காஞ்சிமடாதிபதியும் வெளியில் வரவில்லையா? காசு கொடுத்தால் டெல்லிகோட்டைக்குள் அவர்களே குண்டும் வைப்பார்கள்.
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)