Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதாம்.
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39633000/jpg/_39633977_saddamcaptured203.jpg' border='0' alt='user posted image'>
சதாம் 8 அடி ஆழமுள்ள சுரங்கத்துள் வைத்து கைது செய்யப் பட்டார்.

நன்றி பிபிசி தொலைக்காட்சி செய்திப் பிரிவு.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#2
http://news.bbc.co.uk/2/hi/middle_east/3317429.stm
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#3
தகவலிற்கு நன்றி நளாயினி அக்கா !
ஆனாலும், சதாம் கைதுசெய்யப்பட்டதை குர்திஸ் படைகள்தான் உறுதி செய்துள்ளன. அமெரிக்க படைகள் மறுக்கவுமில்லை ஏற்கவுமில்லை.

தற்போதைய அரேபிய செய்திகளின் படி சதாம் கைதுசெய்யப்படவில்லை
[b] ?
Reply
#4
Saddam Hussein arrested in Iraq


Video footage of Saddam receiving a medical check was shown
Ousted Iraqi President Saddam Hussein has been captured by US forces, says the US chief administrator in Iraq.
Idea

http://news.bbc.co.uk/2/hi/middle_east/3317429.stm
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#5
என்னவோ தெரியவில்லை. நான் மதியம் பிபிசி பார்க்கும்போது குர்திஸ் படைகள்தான் கைதுசெய்தததாகவும் அமெரிக்க தரப்பிடமிருந்து எதுவித பதிலும் இல்லை என்றும் இருந்தது. தற்போதைய அரபிய செய்தியில் அது பொய் என்று சொன்னதாக அரேபிய நண்பர் சொன்னார். ரொய்டரில் அவரை மருத்துவபரிசோதனைக்கு கொண்டுசென்றதாகவும் மருத்துவ பரிசோதனை செய்ய முதல் அவர் தாடி வைத்திருந்ததாகவும் பின்னர் எல்லாம் அகற்றப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றது.
முன்பும் அப்படித்தான் கொன்றுவிட்டோம் என்றார்கள். இரண்டாம் நாள் அவர் திரையில் தோன்றுவார்.
என்னவோ வெடட வெட்ட முளைக்கும் நகம்போல அவரும்.....
இவர்களுமு;
[b] ?
Reply
#6
எது என்னவோ ஆனால் அவர் பிடிபடாமல் இருப்பதே என்விருப்பம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x
Reply
#7
ஆனந்தப்படவும் முடியவில்லை.அனுதாபப் படவும் முடியவில்லை.

ஒரு சயனைட் குப்பி கூட சதாமிற்கு கிடைக்கவில்லையா?
Reply
#8
நான் உமது கருத்தில் சொல்லவில்லை யாழ் ..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#9
புரியவில்லை... அன்பகம்..

நான் எழுதியது சதாம் கைது தொடர்பாக...
Reply
#10
உங்கள் கருத்து என்ன என்று
தெளிவாக சொல்லுங்களேன்
அன்பகம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
நானும்தான் ஆனால் அந்த பார்வையில் அல்ல... வசிசுதாவுக்கு விளங்கிற்று ஆதனால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> செய்யுகிரா அவரிடமே கேளுங்கோ... :mrgreen:
Reply
#12
நீங்கள்தான பிடிபடுகிறீர்களில்லை
Reply
#13
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
Reply
#14
என்ன நித்திரை கலக்கமா ? ? ?
Reply
#15
யாருக்கு Confusedhock: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#16
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031214/capt.lon82812141626.iraq_saddam_capture_lon828.jpg' border='0' alt='user posted image'>

பார்த்தால் பரிதாபமாக இருக்கு.
இந்தக்கிழவனா இவ்வளவு அட்டகாசம் பண்ணியது?
மற்றவரின் உயிரை நாயிலும் கேவலமாக நினைத்து நடப்பவர்களுக்கு.
சதாமின் நிலை உதாரணமாக இருக்கட்டும்
Reply
#17
இப்ப கேள்வி பிடிப்பட்டது சதாமோ அல்லது சதாமின் டுப்பிளிகற்றா...கைத்துப்பாக்கி இருந்தும் சுட்டுக் கொள்ளவில்லையாம்...இவர்களிடம் பிடிப்பட்டால் என்னாகும் என்று உண்மையான சதாம் தெரியாமலா பிடிபட்டிருப்பார்... அவருடைய பிள்ளைகளே பிடிபடாமல் இறக்கும் போது இவர் மட்டும் ஏன் பிடிப்பட்டார்...?! அதன் பின்னணி என்ன...?! சதாம் பிடிபட்ட பின்னும் பக்தாத்தில் வன்முறை தொடர்கிறது....!
அப்போ சதாம் இல்லாமலே வேறு எவரேனும் அமெரிக்கப்படைகளை ஆட்டிப்படைக்கும் தகுதியுடனே இருக்கின்றார்களா...???? அப்படி இருந்தால் அவர்கள் தான் அமெரிக்காவின் தற்போதைய எதிரிகள்...! அல்லது இது அமெரிக்க படையினருக்கு ஊக்கமருந்து கொடுக்கும் திட்டமா....?!

கொஞ்சம் பொறுத்திருப்போமே....உண்மை தெளிவாகும் வரை....!

=====================================

சதாம் உசேன் கைது செய்யப்பட்டார்!

ஞாயிறு, 14 டிசம்பர் 2003

அமெரிக்கப் படைகளிடம் ஈராக் வீழ்ந்ததையடுத்து கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை அமெரிக்கப் படைகள் கைது செய்துவிட்டன!

சதாமின் சொந்த ஊர் என்று கூறப்படும் திக்ரித் அருகே உள்ள ஒரு இடத்தில் காகித கடை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பதுங்கு குழியில் அமர்ந்திருந்த சதாமை அமெரிக்கப் படைகள் நேற்று இரவு ஈராக் நேரப்படி 8 மணியளவில் கைது செய்ததாக அமெரிக்க தளபதி பாக்தாத்தில் இன்று அறிவித்தார்.

தலை கலைந்து, தாடி வளர்ந்து காணப்பட்ட சதாம் உசேனுக்கு மருத்துவ சோதனை செய்வது போன்ற படக்காட்சியை அமெரிக்கா எடுத்து தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பியது.

பிடிபட்டவர் சதாம் உசேன்தான் என்பதனை திசு ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்ததாக ஈராக்கின் ஆட்சியாளராக அமர்த்தப்பட்டுள்ள பால் ப்ரீமர் செய்தியாளர்களிடம் கூறினார். சதாம் உசேனுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், கூறிய அமெரிக்க தளபதி, அவர்கள் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சதாம் உசேன் மீது போர் குற்ற வழக்கு தொடரப்பட்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று கூறிய அமெரிக்க நிர்வாகி பால் ப்ரீமர், தற்பொழுது சதாம் உசேன் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார் என்கின்ற தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தாங்கள் நடத்திய விசாரணையின்போது எதையும் மறைக்காமல் சதாம் உசேன் சுதந்திரமாக பதிலளித்ததாக அமெரிக்க தளபதி தெரிவித்தார்.

----------------------------
Thanks webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
வெற்றுத்தோட்டா சுடுறாங்களப்பா.. (Firing Blanks)
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
டிசம்பர் 15, 2003

8 அடி குழியில் பதுங்கியிருந்த சதாம் ஹூசேன்: ஒத்துழைக்க மறுக்கிறார்

பாக்தாத்:

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்தில் அமெரிக்கா படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் எட்டு அடி பள்ளத்தில் ஆறு அடியே அகலம் கொண்ட ஒரு பள்ளத்தில் அவர் பதுங்கியிருந்தபோது அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது சதாம் உசேனும் எந்த வித எதிர்ப்பும் காட்டவில்லை என்று அமெரிக்கப் படையினர் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.

தாடி, அழுக்கு உடைகளுடன் இருந்த அவரை மரபணு சோதனை மூலம் சதாம் உசேன்தான் என்பதை உறுதிப்படுத்தினர். அவர் இப்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி பால் பிரெமர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர் மீதான குற்றங்கள் குறித்து ஜெனீவா ஒப்பந்தப்படி, சர்வதேச போர்க் குற்ற விதிமுறைகளின் கீழ்÷ வழக்கு நடைபெறும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.

இதற்கிடையே பிடிபட்ட சதாமை இப்போது பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமெரிக்கப் படைகள் விசாரித்து வருகின்றன.

விசாரணைகளுக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமெரிக்காவின் டைம்ஸ் வார இதழ் கூறியுள்ளது. விரைவில் வெளிவர உள்ள அந்த இதழில் சதாமுடன் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் பேட்டி இடம் பெறவுள்ளது.

இது குறித்து டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பெரும்பாலான கேள்விகளுக்கு சதாம் நேரடியாக பதில் தரவில்லை. தங்களிடம் அணு ஆயுதங்களே இல்லை என்று கூறிவிட்ட சதாம், ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா தானாகவே கனவு கண்டு கொண்டு தாக்கியதாகக் கூறியுள்ளார்.

பிடிபட்டதால் வருத்தமா என்ற கேள்விக்கு, என் மக்கள் உங்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதால் வருத்தப்படுகிறேன் என்று பதில் தந்திருக்கிறார்.

அதே போல குடிக்கத் தண்ணீர் கொடுத்தபோது, இதைக் குடித்தால் நான் பாத்ரூம் செல்ல வேண்டும். என் மக்கள் உங்களிடம் அடிமையாகக் கிடக்கும்போது நான் உங்கள் பாத்ரூமை பயன்படுத்த வேண்டியிருக்கிறதே என சம்மந்தம் இல்லாமல் பதில் தந்துள்ளார்.

பல நேரங்களில் கேள்விகளுக்கு தொடர்பில்லாத பதில்களையே தந்து வருகிறார்.

என் தனிமையை, அதிபரின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. இதனால் தான் ஐ.நா. அணு ஆயுத பார்வையாளர்களை நான் என் நாட்டுக்குள் அனுமதிக்க முதலில் மறுத்தேன் என்றும் கூறியுள்ளார் சதாம்.

Thanks thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
சதாம் கைது செய்யப்பட்டது பற்றி வந்த செய்திகள் உண்மையானவைதான் என்பது தற்போது தெளிவாகவுள்ளது. அனால் சதாம் கைது செய்யப்ப்பட்டமை அமரிக்காவிற்கு எந்த விதத்திலும் நன்மை அளிக்கப்போவதில்லை. இது ஒரு விளம்பரமாக இரக்குமே தவிர, அமரிக்கப்படைகள் மீதான கொரில்லா தாக்குதல்களை இது நிறுத்தப்போவதில்லை. அமரிக்கா மீது தற்போது தாக்குதல்களை நடாத்தி வரும் குழுக்களில் இரண்டு குழுக்களை தவிர சுமார் 15 அல்லது 16 குழுக்கள் தனிச்சையாக இயங்குபவை. இந்த குழுக்களில் பெரும்பான்மையானவை சதாமுக்கு எதிரானவை. எனவே சதாமின் கைது இவர்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை. அண்மையில் நடைபெந்ந தாக்தல்களின் அழுத்தங்களால்தான் ஈராக்கில் ஒரு தற்காலிக அரசை அமைக்க அமரிக்கா முன்வந்துள்ளது. இந்த கமிட்டியில் ஈராக்கியர்களின் பங்களிகப்பு அதிகமாக்கப்பட்டமைக்கு அண்மைய தாக்குதல்அழுத்தமே முக்கிய காரணங்கள். சதாம் நதியன் முன் நிறுத்தப்பட வேண்டிய ஒரு மனிதன். பல்லாயிரக்கணக்கான குர்திஸ் மற்றும் சியாற் முஸ்லீம்களை கொன்று குவித்த ஒரு மனிதன் நீதியின் மன் நிறுத்தப்பட வேண்டும். அமிரிக்கப் படைகளின் வெளியேற்ப் போராட்டத்தை சதாம் ஒரு போதும் நடாத்தவில்லை. சதாமின் பாத் கட்சி அமைப்பை சேர்ந்த இன்னுமொரு தலையே இந்த அமிரக்க எதிர்பு யுத்தத்தை தலை தாங்கி சௌ;கிறது. ஆனால் இந்த பாத் அமைப்பை விட அமரிக்க எதிர்ப்பு குழுக்கள் பல ஈihக் முழுவதும் பலமாக தற்போது முளை விட்டு வருகின்றனர். அண்மையில் ஈராக்கில் உள்ள அமரிக்க நிர்வாகம் ஈராக்கின் புதிய இராணுவத்திற்கு வளைத்துப் பிடித்து ஒரு 700 பேரை சேர்த்தனர், ஆனால் சில மாதங்களுக்குள் இதில் 300 பேர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டனர். காரணம் ஒன்று பயம் இரண்டு குறைந்த சம்பளம். ஈராக்கில் உள்ள அமரிக்க துருப்பகள் தற்போது இந்த கொரில்லா தாக்குதலால் பயத்தில் இருப்பதால் மக்களை கடுமையாக நடாத்துகின்றனர். இதன் விளைவு தான் கூடிய கொரில்லா தாக்குதல்கள். சதாம் ஈராக்கிற்காக ஒரு போதும் சண்டை பிடிக்கவில்லை, மாறாக தனது பதவியை தக்கவைக்க உளவுப்படையை பலமாக்கி தனது சொந்த மக்களையே கொன்று குவித்தவர். இவர் தண்டிக்கபட வேண்டியவர் என இந்த கொரில்லா அமைப்புகளே கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால் சதாம் கைது தமது தாக்குதலை தடைசெய்யப்பேவதில்லை என்றும், அமிரக்க படைகள் வெளியேறும் வரை தாம் போராடப் போவதாகவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமரிக்காவை பெறுத்தவரை வைத்த காலை எடுக்க முடியாத நிலை. அனால் சதாம கைதை சாட்டக வைத்து அமரிக்க தனது இழப்புகளை குறைக்க அடுத்த வருட மத்தியில் வெளியேறலாம் என எதிர் பாரக்கப்படுகிறது. ஆனால் அங்கு தனக்கு சார்பான ஒரு அரசை அமைக்காது வெளியேறுவது இந்த யுத்தத்தின் தேவையையே கேள்விக்குள்ளாக்கும். தனது நலன்களை குறிப்பாக எண்ணை வழத்தை கொள்ளையடிக்கும் நோக்குடன் ஈராக்கில் கால் பதித்த அமரிக்க இன்று இருதலைக் கொள்ளி எறும்பு நிiலையில். அனால் இதன்; காரண கார்தா சதாம் அல்ல. மாறக சதாம் கைது ஈராக் நாட்டிற்கு கடைத்த ஒரு சிறு சுதந்திரமே, ஆனால் அமரிக்க படைகள் வெளியேற்றமே அவர்களி;ன் நிரந்தர சுதந்திரமாகும். சதாம் நிரந்தரமாக கூண்டுக்குள் அடைக்கப்பட வேண்டிய ஒரு நபர்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)