12-12-2003, 11:34 AM
[b][size=18]வசியக்காரி...பகுதி-5
நான்
உன் கண்களாய்
இருக்கிறேன் என்றாய்...!
அதைவிட
கண்ணீராய் இருப்பதையே
நான் விரும்புகிறேன்...!
அப்போதுதான்
உன் கண்களில் இருந்து
ஒரு துளி கண்ணீர்கூட
வெளியேறாது...!
நீ என்னைக் காதலிக்கிறாய்
ஆசைமொழி பேசி
அரவணைக்கிறாய்...!
ஆதலால்த்தான் நான்
அன்பில் ஆதவனாய் இருக்கிறேன்...!
இல்லையேல்...
அன்பில்லாதவனாய்த்தான்
போயிருப்பேன்...!!!
இனி
மீண்டும் நளை சந்திப்போம்..!
நீ
சொல்லிக்கொண்டே
கையசைத்துச் செல்கின்றாய்
நான்
நாளைவரை
எத்தனை நிமிடங்கள் அல்ல
எத்தனை வினாடிகள்
என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன்...!
நீ என் காதலியா...?
இல்லை...
ஒருபோதும் சாத்தியமில்லை...!
இப்போது...
நீ என் மனைவி..!
நாளைதான்
நீ என் காதலி...!!!
தென்றல் தவிழ்கிறது
மேகம் கவிகிறது
தேகம் குளிர்கிறது
மோகம் முளைக்கிறது
காலை விடியும்வரை
கனவிலாவது வா...!
நான் ஒரு
காதல் குழந்தை...!
அதனால்தான்
உன்னைக்கண்டதும்
உடனே...
உன் மடியில்
தவழத் துடிக்கிறேன்...!
காதல் கலைவெண்ணிலா...
நிழலொன்றுக்கு
ஒளிகொடுத்து உயிர்கொடு...!
இல்லையேல்...
உடலொன்றுக்கு...
உயிர்கொடுத்து நிழல்கொடு..!
மோகத்தீ மோகினி...
எனக்காக காத்திரு
விரைவில் வருவேன்...!
என்னை உன்னுள்
விதைத்துவிட...!
இல்லையேல்...
நானே உனக்காகக்
காத்திருப்பேன்...!
உன்னாலே...
மண்ணுக்குள் புதைந்துவிட...!
மாயக்குரல் மாதவி...
ஒன்றில்...
மன்மதத் திரையை
திறந்துவைத்து
விடியும்வரை விருந்துக்களை...!
அல்லது...
ஆசைத்தீயை அணைத்துவிட்டு
சாகும் வரம் தந்துதொலை...!
பசிதீரப் பழம்தரும்
பதினெட்டுவயதுப் பாவையே....
எனக்கு இரண்டும் வேண்டும்...!
சுட்ட பழமும்
சுடாத பழமும்...!
தூக்கத்தை விற்று
உன் நினைவுகள் வாங்கிய
வியாபாரி நான்
நள்ளிரவில்
யன்னல் திறந்தேன்
யன்னல்வழிவந்த தென்றல்
என் மேனி தழுவியது
அதுவும் உன்னைப்போலவே
இடைவிடாமல்...
தொட்டும்...
தொடர்ந்தும்...!!!
இயற்கைதந்த இன்பநிலா...
இரக்கம்காட்டு...
இரும்புமனதை இளகவிட்டு
இளமைக்கதவை திறந்துவிடு
இன்பம் பொங்கிவழியட்டும்
இல்லை...
மாயவலை விரித்துவிடு
மரணத்தோடென்னைப்
பிணைத்துவிடு...!
இதில் என்ன
பிழைகண்டாய்...???
மோகமில்லையேல்
நீயும் இல்லை
நானும் இல்லை
யாருமே இல்லை...!
காதலில்லையேல் புவனமில்லை
வாழ்க்கையில்லை
தேடலில்லை
எதுவுமே இல்லை
இதிலிருந்து...
இன்னும் ஒன்றல்ல...!
இதிலிருந்துதான் எல்லாமே...!!!
நானும் உன்னை
அனைத்துக்கும்தானே அழைக்கிறேன்...!
இதில் ஏதும்
பிழையுண்டோ....???
அழியாத ஓவியமே
ஓடிவா...
வெட்கத்தை களைந்து
காலமழையில்
நானும் நீயும் நனைவோம்..!
காமத்தின் ஈரத்தை
துவட்டிவிட்டு
கடைசில்
தூய்மையான
காதலுடன் நடமாடுவோம்...!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
09.12.2003 (பாரீஸ்)
நான்
உன் கண்களாய்
இருக்கிறேன் என்றாய்...!
அதைவிட
கண்ணீராய் இருப்பதையே
நான் விரும்புகிறேன்...!
அப்போதுதான்
உன் கண்களில் இருந்து
ஒரு துளி கண்ணீர்கூட
வெளியேறாது...!
நீ என்னைக் காதலிக்கிறாய்
ஆசைமொழி பேசி
அரவணைக்கிறாய்...!
ஆதலால்த்தான் நான்
அன்பில் ஆதவனாய் இருக்கிறேன்...!
இல்லையேல்...
அன்பில்லாதவனாய்த்தான்
போயிருப்பேன்...!!!
இனி
மீண்டும் நளை சந்திப்போம்..!
நீ
சொல்லிக்கொண்டே
கையசைத்துச் செல்கின்றாய்
நான்
நாளைவரை
எத்தனை நிமிடங்கள் அல்ல
எத்தனை வினாடிகள்
என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன்...!
நீ என் காதலியா...?
இல்லை...
ஒருபோதும் சாத்தியமில்லை...!
இப்போது...
நீ என் மனைவி..!
நாளைதான்
நீ என் காதலி...!!!
தென்றல் தவிழ்கிறது
மேகம் கவிகிறது
தேகம் குளிர்கிறது
மோகம் முளைக்கிறது
காலை விடியும்வரை
கனவிலாவது வா...!
நான் ஒரு
காதல் குழந்தை...!
அதனால்தான்
உன்னைக்கண்டதும்
உடனே...
உன் மடியில்
தவழத் துடிக்கிறேன்...!
காதல் கலைவெண்ணிலா...
நிழலொன்றுக்கு
ஒளிகொடுத்து உயிர்கொடு...!
இல்லையேல்...
உடலொன்றுக்கு...
உயிர்கொடுத்து நிழல்கொடு..!
மோகத்தீ மோகினி...
எனக்காக காத்திரு
விரைவில் வருவேன்...!
என்னை உன்னுள்
விதைத்துவிட...!
இல்லையேல்...
நானே உனக்காகக்
காத்திருப்பேன்...!
உன்னாலே...
மண்ணுக்குள் புதைந்துவிட...!
மாயக்குரல் மாதவி...
ஒன்றில்...
மன்மதத் திரையை
திறந்துவைத்து
விடியும்வரை விருந்துக்களை...!
அல்லது...
ஆசைத்தீயை அணைத்துவிட்டு
சாகும் வரம் தந்துதொலை...!
பசிதீரப் பழம்தரும்
பதினெட்டுவயதுப் பாவையே....
எனக்கு இரண்டும் வேண்டும்...!
சுட்ட பழமும்
சுடாத பழமும்...!
தூக்கத்தை விற்று
உன் நினைவுகள் வாங்கிய
வியாபாரி நான்
நள்ளிரவில்
யன்னல் திறந்தேன்
யன்னல்வழிவந்த தென்றல்
என் மேனி தழுவியது
அதுவும் உன்னைப்போலவே
இடைவிடாமல்...
தொட்டும்...
தொடர்ந்தும்...!!!
இயற்கைதந்த இன்பநிலா...
இரக்கம்காட்டு...
இரும்புமனதை இளகவிட்டு
இளமைக்கதவை திறந்துவிடு
இன்பம் பொங்கிவழியட்டும்
இல்லை...
மாயவலை விரித்துவிடு
மரணத்தோடென்னைப்
பிணைத்துவிடு...!
இதில் என்ன
பிழைகண்டாய்...???
மோகமில்லையேல்
நீயும் இல்லை
நானும் இல்லை
யாருமே இல்லை...!
காதலில்லையேல் புவனமில்லை
வாழ்க்கையில்லை
தேடலில்லை
எதுவுமே இல்லை
இதிலிருந்து...
இன்னும் ஒன்றல்ல...!
இதிலிருந்துதான் எல்லாமே...!!!
நானும் உன்னை
அனைத்துக்கும்தானே அழைக்கிறேன்...!
இதில் ஏதும்
பிழையுண்டோ....???
அழியாத ஓவியமே
ஓடிவா...
வெட்கத்தை களைந்து
காலமழையில்
நானும் நீயும் நனைவோம்..!
காமத்தின் ஈரத்தை
துவட்டிவிட்டு
கடைசில்
தூய்மையான
காதலுடன் நடமாடுவோம்...!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
09.12.2003 (பாரீஸ்)
sharish

