12-21-2005, 12:00 AM
<img src='http://www.vikatan.com/av/2005/dec/25122005/p1.jpg' border='0' alt='user posted image'>
மழை நேரத் தேநீர், பின்னிரவின் மெலடி, ஸ்வீட்டான எஸ்.எம்.எஸ். போல இதமான சுகங்களின் வரிசையில் புதிதாக... கண்ட நாள் முதல்!
மோதல்&காதல் கதைதான். தந்த விதத்தில் இது ஃப்ரெஷ் லவ் ஜூஸ்!
கலகலப்பான கல்யாண வீட்டில், ஒரு பொடிய னுக்கும் சிறுமிக்கும் நடக்கிற டிஷ்யூம் டிஷ்யூமில் துவங்குகிறது கதை. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஒரு கல்லூரிக் கலை விழாவில் அவர்கள் இருவரும் (பிரசன்னா, லைலா) சந்திக்கும்போதும் அதே ஈகோ யுத்தம்!
<img src='http://www.vikatan.com/av/2005/dec/25122005/p2a.jpg' border='0' alt='user posted image'>
பிரசன்னாவின் நண்பனான அமெரிக்க ரிட்டர்ன் கார்த்திக்குக்கு பெண் பார்க்கப் போகும் இடத்தில், மணப்பெண்ணாக வந்து நிற்பது லைலா. இந்தப் பெண் வேண்டாம் என்று பிரசன்னா மல்லுக்கட்டியும் கேட்காமல், ஓ.கே. சொல்கிறார் கார்த்திக். உடனே நிச்சயதார்த்தம்!
அதன்பின், ஓரிரு சந்திப்புகளில் கார்த்திக் குக்கு ஏனோ லைலாவைப் பிடிக்காமல் போக, இந்தக் கல்யாணம் நடக்காது என்று லைலாவிடம் அறிவித்துவிட்டு அமெரிக்கா பறந்து விடுகிறார். அதே நேரத்தில், லைலாவின் தங்கை தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போக, பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு பிரசன்னாதான் தன் வாழ்க்கையுடன் விளையாடுகிறார் என்று நினைக்கிறார் லைலா. மோதல் வலுக்கிறது.
லைலாவுக்குத் தன்னைப் புரியவைக்கவும், கார்த்திக் & லைலா திருமணத்தை நடத்தவும் பிரசன்னா எடுக்கிற முயற்சிகளும், செய்கிற உதவி களும் லைலாவின் மனதை மாற்றுகின்றன. இருவருக்கும் இடையே இஞ்ச் பை இஞ்ச்சாக மலர்கிற நட்பு, காதலாகக் கனிகிற தருணம்.. மனம் மாறி லைலாவை மணக்க வந்து இறங்குகிறார் கார்த்திக். களேபரமான எமோஷனல் ரகளை... வெரி ஸ்வீட் க்ளைமாக்ஸ்!
இன்றைய இளைய தலைமுறையின் ரசனையை, வேகத்தை, கோபத்தை, இதயத்தை ஜில்லென்று காதல் கோத்துத் தந்திருக் கிறார் அறிமுக இயக்குநர் ப்ரியா. பெண் படைப் பாளிகள் அபூர்வமாக இருக்கிற திரைத்துறையில் ப்ரியாவின் வரவுக்கு ஒரு வெல்கம் பொக்கே!
கார்த்திகைத் தீபங்கள் ஏற்றிய ஹைகிளாஸ் அப்பார்ட்மென்ட் மாதிரி ஜொலி ஜொலிக்கிறது ஒவ்வொரு காட்சியும்!
காலேஜ் கல்ச்சுரல்ஸ§க்கு எத்திராஜ் கல்லூரி மாணவிகளை நாய் வண்டியில் அழைத்து வருகிற காட்சி... அமர்க்களமான ஆரம்பம். சமர்த்துக் குட்டியாக கார்த்திக் முன் நடிக்கிற லைலாவுக்குள் உறங்குகிற மிருகத்தை உசுப்ப பிரசன்னா முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் கலகலா! இருவருக்குமான ஈகோ மல்லுக்கட்டல்களில் ஜாலிக் கோழி சீறல்கள்!
படத்துக்குப் படம் பிரமாதப்படுத்து கிறார் பிரசன்னா. மிக இயல்பான நடிப்பு. லைலாவிடம் அங்கங்கே அறை வாங்கி அதிர்ந்து நிற்கிற இடங்கள்... ஜிலீர் பகீர்!
சின்னக் கண்ணும், சிங்கப் பல்லும், கன்னக் குழியுமாக... சுடிதார் போட்ட தூள் சொர்ணக்காவாக லைலா. மூக்கின் மேல் கொடி கட்டி நிற்கிற கோபப் பறவையாக லைலா எத்தனை படம் வந்தாலும் பார்க்கலாம் போல!
கார்த்திக்... ஜெனரேஷன் நெக்ஸ்ட் பையனை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். சற்றே அலட்சியமான அவர் குரல், இன்னும் ப்ளஸ்!
காட்சிக்கு காட்சி குறும்பு கொப்பளிக்கும் ஈ. ராமதாஸின் வசனங் கள், ஐஸ்க்ரீமாக வழியும் பி.சி. ஸ்ரீராமின் விஷ§வல்கள்,கிறங் கடிக்கும் யுவன் ஷங்கரின் மியூஸிக், தாமரையின் அழகுத் தமிழ் என மிதக்கிறது படம்!
மகள் ஓடிப் போனதும் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வருவது போன்ற சென்டிமென்ட் டிராமாக்கள் கொஞ்சம் போர்! லைலாவும் பிரசன்னாவும் எந்த நேரமும் காதலில் விழக்கூடும் என்பதை முதல் காட்சியிலே யூகிக்க முடிவதால், கார்த்திக் கல்யாணம், நிச்சயதார்த்தம் என்பதில் த்ரில் குறைச்சல். அதேபோல், க்ளைமாக்ஸில் கார்த்திக் வந்தாக வேண்டுமே என நினைக்கும்போது கரெக்டாக வந்து இறங்குகிறார் சார்.
ஆழம் அதிகமில்லை. ஆனாலும், அவர்களே விளம்பரப் படுத்திக்கொள்வது போல, அதிகாலை காபி மாதிரி, இது அழகான சினிமாதான்!
\ விகடன் விமர்சனக் குழு