Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி..பகுதி-6
#1
[b][size=18]வசியக்காரி..பகுதி-6


ஆண்மைக்கும்
பெண்மைக்கும் இடையில்...
மோகம் என்ற ஒன்னு
இல்லையேல்.....
தற்கொலைதான் தலைசிறந்த
பொழுதுபோக்காகியிருக்கும்..!


ஞனப்பழம் கேட்டு
வினாயகன்...
அம்மையப்பனைச் சுற்றிவந்தானாம்...!
நான் உன்னைத்தானே
சுற்றி சற்றி வருகிறேன்
காதல்ப்பழம் கேட்டு...!


அலைகள் அடிக்காமல்போனால்
கடலில் அழகில்லை
இதயம் துடிக்காதுபோனால்
உடலில் உயிரில்லை
உன்னை நினைக்காதுபோனால்
எனக்குள் நானில்லை...!


அரைகுறையாய் மரணித்தபின்
மறந்துவிடு என்கிறாய்...?
மரத்துப்போன
மனம்கொண்ட மாயக்காரி....
எப்படி உன்னால் முடிந்தது...
குற்றுயிராய் கிடக்கும்
என்னுயுரை கொலைசெய்ய...???


கண்களால் காயம் செய்தாய்
பார்வையால் கைதுசெய்தாய்
வார்த்தையால் கொலையே செய்தாய்
இனியும் என்ன...???
வாழ்வை முடித்து...
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
இதயம் புறப்படுகிறது
வழியனுப்ப வா...!


காதலில்
தோற்றுப்போன காதலர்களே...
வாருங்கள்
காதலின் ஆழம் அறியாத
ஆண்களின் காதல் புரியாத
காதலிகளுக்கா ஒரு முறை
அழுதுவிடுவோம்...!


காதல் தோல்வியை
தாங்கிக்கொள்ளும்
மனப்பக்குவம் கொண்டவன்
விகடனாகிறாம்...!
இல்லாதவன்...
முரடனாகிறான்..!


காதலர்கள் ஏன்
தற்கொலை செய்கிறார்கள்...?
இந்தக்கேள்வி எழும்போதெல்லாம்
நான் ஆத்திரப் படுவதுண்டு...!
ஆனால்...
அது நல்ல வழிதானே...!
எத்தனை தடவைதான்
செத்துச் செத்து பிழைப்பது...?
ஒரே தடவையில் தற்கொலை
இது...
நல்ல வழிதானே...!!!


கல்லறையில் இருக்கின்ற
காதலர்கள் கோபம்கொண்டு
கொதிக்கின்றார்கள்...!
நீ அந்தவழியால் செல்லாதே அன்பே...!
அவர்கள்...
என்மீது இரக்கப்பட்டு...
உன்னைத் தாக்கவரக்கூடும்...!


வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில்
எதையெதையோ எல்லாம்
கண்டுபிடிக்கிறார்கள்
உன் மௌனத்தின் அர்த்தத்தை
கண்டுபிடிக்கும் கருவியைத் தவிர...!


ஆண்மீகவாதியையும்
தீவீரவாதியையும்
ஒரு பெண்னே
உருவாக்குகின்றாள்..!


வல்லரசுகள் எல்லாம்
ஏன் இந்த
அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள்...?
பதிலாக...
பெண்மனதை அறிந்துகொள்ள
ஏதாவது தயாரித்தால் போதும்...!
ஏனெனில்...
உலக யுத்தங்கள்
உருவாகுவதற்கு...
ஏதோ ஒரு வழியில்
ஒரு பெண்தான்
காரணமாய் இருப்பாள்..!!!


கல்லறையை கடந்துசெல்லும்
காற்றே.....
நீ என்னைத் தொட்டுத் தழுவு
இறந்துபோன காதலர்
கனவுகள் எல்லாம்
மூச்சுக்காற்றினூடாக என்னுள்
புகுந்துகொள்ளட்டும்...!


நீ
என்னைக் காதலிக்கும் முன்பே
நான் இறந்துவிடுவேனா...?
அன்புக்குரிய நண்பர்களே....
நான் சிலவேளை
இறந்துபோனால்...
என் கல்லறைமீது எழுதிவிடுங்கள்
இப்படி....
""ஒரு காதலன் கவிஞனாகினான்
காதலிக்காக மட்டும்
கவிதைகள் எழுதியவன்
இப்போது ஓய்வெடுக்கிறான்""


(இன்னும் வரும்..)

த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
அருமை அருமை.காதல் வலியது வலியது.

sharish Wrote:[b][size=18]வசியக்காரி..பகுதி-6


அலைகள் அடிக்காமல்போனால்
கடலில் அழகில்லை
இதயம் துடிக்காதுபோனால்
உடலில் உயிரில்லை
உன்னை நினைக்காதுபோனால்
எனக்குள் நானில்லை...!


அரைகுறையாய் மரணித்தபின்
மறந்துவிடு என்கிறாய்...?
மரத்துப்போன
மனம்கொண்ட மாயக்காரி....
எப்படி உன்னால் முடிந்தது...
குற்றுயிராய் கிடக்கும்
என்னுயுரை கொலைசெய்ய...???

காதலில்
தோற்றுப்போன காதலர்களே...
வாருங்கள்
காதலின் ஆழம் அறியாத
ஆண்களின் காதல் புரியாத
காதலிகளுக்கா ஒரு முறை
அழுதுவிடுவோம்...!


காதல் தோல்வியை
தாங்கிக்கொள்ளும்
மனப்பக்குவம் கொண்டவன்
விகடனாகிறாம்...!
இல்லாதவன்...
முரடனாகிறான்..!


காதலர்கள் ஏன்
தற்கொலை செய்கிறார்கள்...?
இந்தக்கேள்வி எழும்போதெல்லாம்
நான் ஆத்திரப் படுவதுண்டு...!
ஆனால்...
அது நல்ல வழிதானே...!
எத்தனை தடவைதான்
செத்துச் செத்து பிழைப்பது...?
ஒரே தடவையில் தற்கொலை
இது...
நல்ல வழிதானே...!!!


கல்லறையில் இருக்கின்ற
காதலர்கள் கோபம்கொண்டு
கொதிக்கின்றார்கள்...!
நீ அந்தவழியால் செல்லாதே அன்பே...!
அவர்கள்...
என்மீது இரக்கப்பட்டு...
உன்னைத் தாக்கவரக்கூடும்...!


வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில்
எதையெதையோ எல்லாம்
கண்டுபிடிக்கிறார்கள்
உன் மௌனத்தின் அர்த்தத்தை
கண்டுபிடிக்கும் கருவியைத் தவிர...!

கல்லறையை கடந்துசெல்லும்
காற்றே.....
நீ என்னைத் தொட்டுத் தழுவு
இறந்துபோன காதலர்
கனவுகள் எல்லாம்
மூச்சுக்காற்றினூடாக என்னுள்
புகுந்துகொள்ளட்டும்...!


நீ
என்னைக் காதலிக்கும் முன்பே
நான் இறந்துவிடுவேனா...?
அன்புக்குரிய நண்பர்களே....
நான் சிலவேளை
இறந்துபோனால்...
என் கல்லறைமீது எழுதிவிடுங்கள்
இப்படி....
""ஒரு காதலன் கவிஞனாகினான்
காதலிக்காக மட்டும்
கவிதைகள் எழுதியவன்
இப்போது ஓய்வெடுக்கிறான்""


(இன்னும் வரும்..)

த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)