Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயர் பாதுகாப்பு வலய மக்கள்படை தாக்குதல்
#1
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினன் ஒருவர் உயர்பாதுகாப்புவலய மக்கள்படையால் கத்திகுத்திற்கு இலக்கியுள்ளார். இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அஜத் குமார என்ற இராணுவத்தினனே படுகாய மடைந்துள்ளார். இவர் தற்போது பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை மணற்காடு, குடத்தனைப் பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினர் தேடுதல்களை நடாத்தியுள்ளனர். வீடு வீடாகச் சென்று கடற்படையினர் மேற்கொண்ட இந்த தேடுதலினால், அப்பகுதி மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
Reply
#2
Reply
#3
யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவ வன்முறைகளை அடுத்து இன்று செய்வாய்கிழமை பிற்பகலில் சாவகச்சேரி சங்கத்தானையில் படையினர் மீது உயர் பாதுகாப்பு வலய மக்கள் படையால் துப்பாகி பிரயோகம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் படைவீரர் காயமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் பழைய புூங்க வீதியில் இன்று பகல் கைகுண்டு வீச்சு சம்பவம் எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிய முடிகிறது.
Reply
#4
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் இன்று இரவு கிளைமோர் தாக்குதல் ஒன்று உயர் பாதுகாப்பவலய மக்கள் படையால் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இத்தாக்குதல் குறித்த சேதவிபரங்கள் எதுவும் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை.

நித
Reply
#5
சங்கத்தானையில் குண்டு வீச்சு இரு இராணுவத்தினர் காயம்
சங்கத்தானையில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் இடம் பெற்ற கைக்குண்டு வீச்சுக் காரணமாக இரு இராணுவத்தினர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப் பகுதியால் வந்த வாகனங்களை தாக்கியதுடன் பொது மக்களையும் தாக்கியுள்ளார்கள் இதன் காரணமாக கண்டி வீதி வழியிலான போக்குவரத்துப் பாதிப்புக்கு உள்ளாகியது.

பதிவு
Reply
#6
ராணுவத்திற்கு இனி மங்களம் தான்
Reply
#7
யாழ்.சிவன்கோவில் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரியதர்சன என்ற இராணுவ சிப்பாய் கொல்லபட்டுள்ளார். யாழ் உயர் பாதுகாப்பு வலய மக்கள் படை இதற்கு உரிமை கோரியுள்ளது. மேலதிக தகவல் தொடரும்.

நிதர்சனம்
Reply
#8
நர்மதா அனைத்து செய்திகளையும் இங்கு இனைத்தமைக்கு நன்றி. மக்கள் படை பொங்கி எழுந்து விட்டது. இனி இராணும் ஒடவேண்டும் இல்லாவிடின் முகாமில் முடங்க வேண்டித்தான் வரப்போகுது

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)