12-19-2005, 04:45 PM
ஒரு பேப்பரில் இந்த தலைப்பை வாசிக்க கிடைத்தது. லிங்கை இங்கு போடுகிறேன்.
http://www.orupaper.com/issue37/pages_K__18.pdf
http://www.orupaper.com/issue37/pages_K__18.pdf
<b> .. .. !!</b>
|
ஒருபேப்பரில் வந்த செய்தி
|
|
12-19-2005, 04:45 PM
ஒரு பேப்பரில் இந்த தலைப்பை வாசிக்க கிடைத்தது. லிங்கை இங்கு போடுகிறேன்.
http://www.orupaper.com/issue37/pages_K__18.pdf
<b> .. .. !!</b>
12-19-2005, 05:02 PM
புதியவன் அண்ணா வணக்கமண்ணா!
உந்த வாங்கு வாங்கிறியள் வல் மொறினுக்கு போற ஆக்களை…ஒண்டு கவனீச்சிங்களோ?? ஒரு பேப்பர் அங்க ஒரு இடத்தில இருக்கிற ஒரு கோயிலுக்கு ஒரு பட்டாளம் போகும் என்று எழுதியிருக்கினம் அவை நீஙகள் சொன்ன மாதிரி பயந்த பீச்சாண்டிகள் போல . அண்ணா "ஒரு பன்னி" பேர் நல்லாயிருக்கு.ஆரம்பிக்க விடாம நீங்கள் எழுதினதை பப்ளிஸ் பண்ணிட்டினம்.வல் மொறினுக்கு போயிட்டு வந்த எருமைகளில நானும் அடக்கம்.உங்களுக்கு ஒன்று தெரியு எங்கட ஆக்கள வல் மொறினை வல்முருகன் என்றுதான் சொல்றவை. நான் கோயிலுக்கு போனமா நல்லா பிரசாதm சாப்பிட்டமா என்று வந்திட்டன்.ஆக்கள் காசு குடுத்தது எல்லாம் காணேல்ல.ஆனால் ஒரு விசயம் நாங்கள் கோயிலுக்குள்ள இருந்த கதைச்சுக் கொண்டிருக்க ஒராள் வந்து சொன்னார் என்ன கதை வேண்டிக்கிடக்கு வந்து இறைவனுக்குப் பணி செய்யுங்கோ எண்டு. ஒருத்தர் வந்து ஆக்களுக்குப் பிரசாதம் குடுக்க திருநீற்றை கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன பொட்டலம் கட்டித் தாங்கோ எண்டு சொன்னார்.நாங்களும் சரியென்று போய் பாயில உக்கார்ந்தா ஒரு அம்மா வந்து சொன்னா எல்லாரும் தலைமயிரைப் பின்னிக் கொண்டு வாங்கோ என்று.அதையும் செய்திட்டு வந்திருந்து பொட்டலம் கட்டத் தொடங்கினா திரும்ப வந்து சொன்னா உப்பிடிக் கதைச்சு கதைச்சு வேலை செய்யக்கூடாது…நீங்க கதைக்க கதைக்க எச்சில் எல்லோ திருநீற்றில விழும்….பிறகு மௌன விரதம் தான். அண்ணா உந்த பறவைக்காவடி விசயம் நானும் யோசிக்கிறது தான்.இங்க கனடாக் கந்தஸ்வாமி கோயில்ல போன திருவிழாவுக்கு 2 ஒ 3 பறவைக்காவடி பொலிஸ் பாதுகாப்போட வந்தது உங்களுக்குத் தெரியாதோ?? ஒரு ஜடியா சொல்லவா? உந்த "ஒரு பன்னி" விசயத்தை விட்டிட்டு ஒரு கோயில் கட்டுவமே?? நீங்கள் மந்திரம் சொல்லுவீங்கள் தானே? -சினேகிதி-
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
12-19-2005, 05:03 PM
இணைப்பிற்கு நன்றி இரசிகை. இது உங்கள் நாட்டுப் பிரைச்சினை என்ற படியால் முதலில் இது பற்றிய உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றோம். தொடர்ந்து எங்கள் கருத்தையும் வைக்கின்றோம்.
12-19-2005, 05:18 PM
ஆகா சிநேகிதி சூப்பர் ஐடியா கொடுத்து இருக்கிறீங்கள் புதியவனுக்கு.
வசம்பு அண்ணா கனடாக்கு வந்த்து நான் 6 வருடமாகுது அதுல 2 நாள் தான் அண்ணா கோயிலுக்கு போனான் எனக்கு உதுல எல்லாம் இஷ்டம் இல்லை அண்ணா. அதுக்காக நான் நாத்திகன் இல்லை. என்னைப்பொறுத்த வரையில் எனக்குரிய கடமைகளை ஒழுங்கா செய்து மனசால கடவுளை கும்பிட்டால் காணும் அதால எனக்கு பெருசா ஒன்றும் தேரியா கனடாக் கோவில்களில் என்ன நடக்குது என்று. ஆனால் கனடாவில நாளுக்கு நாள் நிறைய கோவில்கள் உருவாகிக்கொண்டு இருக்குது. கீரைக்கடைக்கும் எதிரிக்கடை மாதிரி. கனடாவில அதுவும் ரொரண்டோவில நிறையா கோவில்கள் அண்ணா உங்களுக்கு தெரியுமே. இங்க நல்லூர்க்கந்தன், செல்வச்சந்நிதியான் , ஐயப்பன். காளி எல்லாரும் இருக்கினம். அதைவிடப் பகுடி என்ன என்றால் ஒரு கோவிலில ஒருவருடத்துல 2 அல்லது 3 திருவிழாக்கள் நடக்கும் அண்ணா. ஒருக்கா பிள்ளையாருக்கு நடந்தால் பெந்து 2 அல்லது 3 மாதத்தால் அம்மனுக்கு திருவிழா செய்வார்கள். அதுக்கு வேற தொலைக்காட்சிகளில் விளம்பரம் வேற கொடுப்பினம். உதுக்கெல்லாம் யார் காரணம் எங்கட ஆக்க்கள் தானே. அவை காசு கொடுக்கிறதலதானே உது எல்லாம். எங்கட சனம் கோவிலுக்கு என்றால் கண்ணை மூடிக் கொண்டு 1000 , 2000$ எண்டு கொடுப்பினம். ஏதாவது கஷ்டப்பட்டவைக்கு நிதி சேர்க்க்கிறம் என்றாஒல் எச்சில் கையால காகம் துரத்தாதுகள். எப்பதான் எங்கட சமுதாயம் திருந்தப்போகுதோ.???
<b> .. .. !!</b>
12-19-2005, 05:23 PM
பின்ன என்ன அக்கா ஒரு கோயில் பிஸினஸ்ல எவ்வளவு லாபம் வரும் தெரியுமோ உங்களுக்கு?? கார் வீடெல்லாம் உடனே காசு குடுத்து வாங்கலாம் டவுன் கிவுன் ஒண்டும் போடாம.நீங்களும் வேணும் என்றால் பாட்னர் ஆகுங்கோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
12-19-2005, 05:50 PM
அக்கா என்ன கோயிலட பிஸினஸ்ல சேர வாறிங்களா என்ன மாதிரி??
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
12-19-2005, 07:43 PM
ரசிகையைப்போல தான் நானும் கனடா வந்து 10 ஆகின்றது. ஆனால் 10 நாள் தான் கோயிலுக்கு போயிருப்பேன். அதற்காக கடவுளை குறை சொல்லவில்லை. அங்கு வருபவர்கள் சாமி கும்பிட வருபவர்கள் மாதிரி இல்லை. சமர் வந்தால் காணும் எல்லா கோயிலிலும் எதாவது ஒரு பெரிய திருவிழா நடக்கும். ரசிகை சொன்னமாதிரி ஒரு கோயிலிலே பல தேர்கள் இழுபடும்.
சிநேகிதி ஒரு ரைப்தோறு கோயில் ஒன்று ஆரம்பிக்கின்ற திட்டம் இருக்கு... என்ன மாதிரி வாறிங்களா?
12-19-2005, 07:58 PM
றமாக்கா டிறைவ் த்று கோயில் ஐடியா சூப்பர்.பின்ன நான் வராம....நான் இருபாதாயிரம் டொலர் தாறன் முதலீட்டுக்கு.எனக்கு ஒவ்வொரு நாளும் ஜம்போ அர்ச்சனை செய்யோணும் சரியோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
12-19-2005, 11:56 PM
கட்டுரையாளர் பொதுவாக கோவில்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தால் சற்று யோசிக்கலாம். ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு கோவிலை மட்டுமே குறிப்பிட்டுத் தாக்கியுள்ளார். இதுபற்றி இங்கு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் நண்பரொருவரைக் கருத்துக் கேட்டேன். அவர் சிரித்த படியே சொன்னார். கனடாவில் பல கோவில்களை ஒரு குறிப்பிட்ட பகுதியினரே நடாத்துகின்றனர். ஆனால் இக்கோவிலை நடாத்துவோர்கள் வேறு. அதனால் இதனையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சித்தனர். அது சரிவரவில்லை. அதனால் அக்கோவிலைப் பற்றி இப்படியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள் என்று. எனவே எனது நண்பனின் பதிலால் நானும் கட்டுரையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன்.
12-20-2005, 12:38 AM
வம்பண்ணா நீங்க வம்பு பண்ணவே வாறனீங்களோ?, கட்டுரையில் உள்ள உண்மை நிலையை உராய்ந்து பாராது உடனேயே பழியை போட்டு விட்டீர்கள். கட்டுரைக்கு கருத்து எழுது என்றால் உங்கள் நண்பர் சொன்ன கருத்துக்கு எழுதிறியள், எனக்கொரு சந்தேகம் ஒரே குட்டையில் ஊறியமட்டைகள் எப்படி இருக்கும்?
.
.
12-20-2005, 12:46 AM
Quote:Hindus are idiots?? முதலில் இந்த தலைப்பை மாற்றுங்கள்..! இது இந்துகளின் மனதை தொடர்ந்து புண்படுத்த யாழ் களத்தை அனுமதிப்பதாகவே தெரிகிறது..! பெரியார் கொள்கை என்றும்..பின்னர் பாப்பர்ணியம் என்றும்...இங்கு இந்துகள் மிக மோசமாக வார்த்தைகளால் பரிகசிகப்பட்டது போய்..ஒரு ஆங்கில மொழி மூலத் தலைப்போடு இந்துக்கள் மேலான வார்த்தைத் துன்புறுத்தல் இங்கு நடத்தப்படுவதும்...அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும்.. வேதனை அளிக்கிறது..! ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் ஒரு மனிதன் அது சார்ந்து பரிகசித்து வேதனைப்படுத்துவது நிச்சயம் அடிப்படை மனித உரிமை மீறலாகும்..! hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
12-20-2005, 12:48 AM
[b]<span style='font-size:19pt;line-height:100%'>அண்ணா.. இங்கு வரும் கோவில் பிரச்சனைகள் எல்லாமே உண்டில்பணம் சம்பந்தப்பட்டதுதான்.. இங்கு களஜெயதேவன் தனது உண்டியல் சானக்கியம்பற்றி எழுதுவதும் நீங்கள் கூறிய கட்டுப்பாட்டு பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டதே.. மேல்நீதிமன்றம்வரை சென்றகதை லண்டன் அறியும்..
இறுதியில் கட்டுபாடுக்குள் கொண்டுவந்துவிட்டதாக மேல் நீதிமன்றம் போனவர் இரண்டுகிழமைகள் உண்டியல்பணம்.. நஸ்டஈட்டுத்தொகை.. சட்டத்தரணிகளுக்கான தொகை என பல பத்தாயிரங்கள் செலுத்தியது ஊரறிந்த உண்மை.. தற்போதுகூட வானொலி ஜெயதேவன் உண்டியல் பற்றிய சர்ச்சையை உலக சமுதாயத்துக்கு எடுத்துக்கூறியதால் இங்கு சேறு இறைக்கின்றார்கள்.. தமிழ்கார்டியன் ஆங்கிலப்பத்திரிகை ஸ்தாபகருடன் இவர்கள் மோதுகிறார்கள்.. வேடிக்கைபார்க்க நாமிருக்கிறோம்.. வளர்க களஜெயதேவன் தொண்டு..</span> Vasampu Wrote:கட்டுரையாளர் பொதுவாக கோவில்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தால் சற்று யோசிக்கலாம். ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு கோவிலை மட்டுமே குறிப்பிட்டுத் தாக்கியுள்ளார். இதுபற்றி இங்கு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் நண்பரொருவரைக் கருத்துக் கேட்டேன். அவர் சிரித்த படியே சொன்னார். கனடாவில் பல கோவில்களை ஒரு குறிப்பிட்ட பகுதியினரே நடாத்துகின்றனர். ஆனால் இக்கோவிலை நடாத்துவோர்கள் வேறு. அதனால் இதனையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சித்தனர். அது சரிவரவில்லை. அதனால் அக்கோவிலைப் பற்றி இப்படியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள் என்று. எனவே எனது நண்பனின் பதிலால் நானும் கட்டுரையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன்.
8
12-20-2005, 01:40 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா சம்பந்தப்பட்டவரை எழுத அனுமதியுங்கள்..
தமிழன் பிறப்பால் இந்து என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா? இந்து சமயம்பற்றி எழுதுபவர்கள் ஏடாகூடமாக சாடுபவர்கள் இந்து எட்டப்பர்கூட்டமென்று உங்களுக்கு தெரியாததா.. இவர்கள் நமது சரித்திரத்தை புரட்டிப்பார்த்தார்களானால்.. இவர்களது பரம்பரையை பின்நகர்ந்து பார்த்தார்களானால்.. எந்தத் தலைமுறையில் இவர்கள் எட்டப்பர்களாக மாறினார்கள்.. எந்த எந்த மன்னர்களையும் மக்களையும் காட்டிக்கொடுத்து தமிழையும் நமது மண்ணையும் விற்றார்கள் என்பது புலப்படும்.. இவர்கள் நாளாந்தம் நமது சமுதாயத்தை மேற்குலகிற்கு விற்றுக்கொண்டிருப்பது தற்போது புரியாவிட்டாலும் நமது பூட்டப்பிள்ளைகள் வேற்றுமொழி மாற்றுக்கலாச்சாரம்.. நமது நாடு என்று தாம்பிறந்து வளர்ந்த பிரதேசத்தை நாட்டை சொல்லும் நிலை வரும்வரை இது தொடரத்தான்போகின்றது.. இங்கு விறபவர் நல்லவராகவும் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர் எட்டப்பராக பார்க்கப்படுவதும் மற்ரொரு கருத்தில் பார்ப்போம்..</span> kuruvikal Wrote:Quote:Hindus are idiots??
8
12-20-2005, 02:18 AM
தலைப்ப மாத்துங்கப்பா............
அப்பிடியே என்னையும் உங்க business ல சேர்த்துக்கோங்க..... :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
12-20-2005, 02:22 AM
ஆஹா இந்த தலைப்பு நான் போடவில்லை. இப்படித்தான் அந்தப் பத்திரிகையில் போட்டி இருந்தது. அதையே போட்டன் சரி எப்படி மாத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். சொன்னீர்கள் என்றால் மாத்துகிறேன்.
<b> .. .. !!</b>
12-20-2005, 02:29 AM
Rasikai Wrote:ஆஹா இந்த தலைப்பு நான் போடவில்லை. இப்படித்தான் அந்தப் பத்திரிகையில் போட்டி இருந்தது. அதையே போட்டன் சரி எப்படி மாத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். சொன்னீர்கள் என்றால் மாத்துகிறேன். ஒருபேப்பரில் வந்த செய்தி என்றும் போடலாம் மோனை
12-20-2005, 02:35 AM
Kanthappu Wrote:ஒருபேப்பரில் வந்த செய்தி என்றும் போடலாம் மோனை சரி அப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நன்றி
<b> .. .. !!</b>
|
|
« Next Oldest | Next Newest »
|