12-19-2005, 02:01 PM
<b>இராணுவ வன்முறைக்கு எதிராக போர்ப் பயிற்சி- மாணவர்கள் எச்சரிக்கை! நாளை முதல் முழு அடைப்புக்கு அழைப்பு!!</b>
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை துணைவேந்தர்இ நாடாளுமன்ற உறுப்பினர்இ பேராசிரியர்கள்இ மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை இனியும் பொறுத்திருக்க நாம் தயாரில்லை. மக்களுக்கு முன்னோடியாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற வேண்டும் என்று மாணவர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை முதல் குடாநாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் யாழ். கல்விச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தகவல்: புதினம்

[size=14] ' '