Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
பற்பல இடையூறுகளுக்கு, அவமதிப்புகளுக்கு மத்தியில் எனது தொடர் பயனத்தை யாழ் களத்தில் எழுதி வந்த எனது உண்மைத் தொடரை ஒருவர் இங்கு தடை செய்ய முற்பட்டார்!!!! அவர் கூறிய காரணங்கள் விசித்திரமாணவை!!! இன்று புலத்தில் நடக்கும் ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் நிகழ்வுகளே அறியாதவராயோ?? அன்றி "பால் குடிக்கும் பூனையாக" இருக்க முற்படுகிறாரோ தெரியவில்லை?? இல்லை இவற்றிற்கு மேலாக விலை போய் விட்டாரோ என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது!!!! எது எப்படியிருப்பினும் இவ்வுண்டியலானின் பயணம் தொடர வேன்டுமா??? கள உறவுகள் பதிலளிக்கட்டும்!!!!!
ஆரம்பத்தில் தேசியவாதியின் போர்வையில் உலாவிய நான், பின் ஈழ்பதீஸானின் உன்டியலில் செய்த சாகஸங்கல் மூலம் முகமூடி உடைந்து, இன்று இந்திய இராணுவ காலங்களில் கொலை, கொள்ளை, கற்பளிப்புகளில் ஈடுபட்டு ஐரோப்பாவிக்கு தப்பியோடி வந்த கும்பல்களுடனும், ஐரோப்பாவில் தமிழ் பேசும் எம்மவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வெளிக்கிட்டிருக்கும் ஒசாமா எனும் இஸ்லாமிய காட்டுமிராண்டிக் கும்பலுடனும், மொட்டையடித்த சிங்கள இனவாத காவிகளுடனும், புலத்தில் குறிப்பாக லண்டனில் ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........ தொடர்கின்றன!!!!
இந்த உண்டியலான் சம்பந்தமாக சென்ற தொடர்....
1) ஓர் அப்பாவி மீது தனிப்பட்ட கோபங்களுக்காக சேற்றை கொட்டப்படுவதாக நினைக்கிறீர்களா???
2) உண்டியலான் சம்பந்தமான விபரங்கள் உண்மைக்கு அப்பாற்பட்டவைகளாக நினைக்கிறீர்களா???
3) இந்த உண்டியலான் ஒரு அப்பாவித் தமிழ் மகனா?? இல்லை எம்மினம் வெட்கித் தலை குனியும் அவமானச் சின்னங்களாக இருக்கும் "டக்கிலஸ், ஆனந்தசங்கரி, கருணா, பரந்தன் ராசன், ...." வரிசையில், அன்னியர்களுக்கோ, எதிரிக்கோ விலை போயுள்ள துரோகக் கூலியா?????
பி.கு: மோகன்! தயவுசெய்து இக்கருத்தையும், முன்பு நடைபெற்றதுபோல் நீக்க அனுமதிக்க வேண்டாம்!!!
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அண்ணா திரும்பவுமா...??? தாங்காதண்ணா தாங்காது... உங்கட வீர பிரதாபங்களை நீங்களே சொல்லுறது நல்லால்ல... காணிக்கை போதாதெண்டாச் சொல்லுங்கோ அனுப்பிவைக்கிறன்..... நோகடிக்காதேங்கோ... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஜெயதேவன் என்பவர் குற்றவாளியாக இருந்தால் அதனை சமூக அக்கறை
கருதி நாகரீகமாக பொது விடயமாக எழுதினால் வரவேற்க கூடியதாக இருக்கும்.
அதைவிடுத்து நாகரீகமற்ற முறையில எழுதி களத்தை குப்பையாக்குவதோடு
எமது மனங்களை நோகடிப்பது உகந்ததல்ல...
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
ம்ம் இவ்வுண்டியலானின் பயணம் தொடரை.. தொடர்வதால் ஏன் களத்தில் தேவையில்லாத பிரச்சனைகள வளர்ப்பான். தவறுகளை தப்புகள சுட்டிக் காட்டலாம்.ரசி அக்கா சொல்லுற மாதிரி களத்தை குப்பையாக்காமல் நாகரிகமாக கருத்தை சொல்லலாம் தானே. இத இப்பிடி தொடருரது எல்லாரையும் முகம் சுழிக்க வைக்கும் என நான் நினைக்குறன் ..
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் ஜெயதேவன்...
எனக்கும் நீங்கள் இப்படி எழுதுவதில் உடன்பாடில்லை. எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன அறிவதற்கும், எழுதுவதற்கும், அலசுவதற்கும். தவறுகளை, குற்றங்களை சுட்டிக்காட்டுவதும், அவற்றின் பின்னணியை வெளிப்படுத்துவதும் நல்ல விடயம்தான். ஆனால், அவற்றை களத்தை அசிங்கப்படுத்தாமல் எழுதலாமே? இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு குற்றவாளிகளின் பெயர்களையும் களத்தில் பதிவுசெய்து கண்ட கண்ட மாதிரி எழுதுவார்கள். களம் மேலே அனிதாவும், இரசிகையும் சொன்னதுபோல் குப்பையாகிவிடும். குற்றவாளிகள், தமிழ்த்தேசியத்தை சீர்குலைப்பவர்கள், தமிழர் நலனுக்கு எதிராக செயற்படுபவர்கள், தமிழர் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் என்று பார்க்கப்போனால் பட்டியல் நீளுமல்லவா? அவ்வளவு பேரும் களத்தில் தமது சுயசரிதைகளை எழுதத் தொடங்கினால் அது நாகரீகமானதாக இருக்குமென்று நம்புகிறீர்களா? எனவே உங்களின் சொந்தப் பெயரில் வேறு புனை பெயரிலோ இணைந்து புலத்தில் நடக்கும் சமூகச் சீர்கேடுகள் பற்றி எழுதலாமே.
நீங்கள் இப்படி எழுதுவதால் களத்தில் வீண் சச்சரவுகளும், சண்டைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன.
இன்னொரு யோசனை. நீங்கள் ஏன் உங்களுக்கானதொரு வலைப்பதிவைத் தொடங்கக்கூடாது? ஒரு வலைப்பதிவைத் தொடங்கி அதிலே நீங்கள் என்னென்னெல்லாம் சொல்ல விருப்பமோ அவற்றை அங்கேயே எழுதுங்களேன். அங்கு யாரும் உங்களைத் தடுக்கமாட்டார்கள் தானே?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்படியான விடயங்களில் களப்பொறுப்பாளர் கள உறுப்பினர்களை அறிவுறுத்துவதே சிறந்தது..! மற்றும்படி எல்லோரும் தாங்கள் தாங்கள் நியாயமானவர்கள் என்று எண்ணிக் கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் கண்டு கள உறுப்பினர்களுக்கு உபதேசம் செய்வது என்று வெளிக்கிட்டுவிட்டால்...களத்தில் தாம் தாம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நியமங்களைப் புகுத்தவே நினைப்பர்..! "இங்க எழுது இல்லை என்றால் வலைப்பூ ஆரம்பி" என்பது போல..அநாவசிய அழுத்தங்களை ஏன் ஒரு கள உறுப்பினர் இன்னொருவர் மீது போடுகிறார்..இவைத்தான் வேண்டாத பிரச்சனைகளைக் களத்தில் உருவாக்க வகை செய்கிறது..! கள நிர்வாகம் இதில் நேரடியாக கள உறுப்பினர்களை அறிவுறுத்தலாமே..! அதுதான் ஆரோக்கியமான நிலை..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும். கள மட்டுறுத்தினர்களின் வளிநடத்தலோடு பயணிப்பதே எல்லா கள உறவுகளுக்கும் அழகினைத்தரும். நாம் எம்மை அறியாமலே சில நேரங்களில் கோபப் படுவதுண்டு. அன்நேரம் எம்மை கட்டுப்படுத்த ஒருவர் தேவைப் படிகின்றார். களத்தில் உள்ள ஏனைய கள உறவுகளால் சொல்லப்படுவது எநத எல்லா கள உறவுகளாலும் ஏற்றுகொள்ளக் கூடிய விடயமல்ல. ஆகையால் யாரின் மனதையும் புண்படுத்தாத வண்ணம் எடுக்கும் முயற்சி சிலவேளைகளில் எம்மை தாக்கிவிடும். எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை நாம் எழுதியது சரிதானா? என்று சிந்தித்து எழுதுங்கள். அது யாழ்களத்தையும் யாழ்கள உறவுகளாகிய எங்களையும் பண்படுத்தி நமது வளர்ச்சிக்கு உறுதுணையாகு.
யாழ்களத்தில் கண்ட அன்பை
புலம்பெயர்ந்து வேறெங்கும் நான் கண்டதில்லை.
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
யாழ் களத்தில் இப்படியான விடயங்கள் எழுதுவதால் களம் அசிங்கடிக்கப்பட்டுவிடும் என எண்ணும் தங்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே. ஆனால் ஜெயதேவன் என்ற நபர் கோயிலின் பெயரால் மக்களின் பணத்தை அபகரித்து அதிலிருந்து இலகுவாக தப்பிவிடுவதற்கு எங்களின் அசட்டையீனம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்பதனையும் நாங்கள் அவதானிக்கவேண்டும். இவரது செயற்பாடுகளை; ஆதாரபுூர்வமாக நிரூபிப்பதென்பது கடினம். எனவே பொறுப்பு வாய்ந்த களங்கள் எதுவும் இவர் பற்றிய செய்திகளை வெளியிட தயக்கம் காட்டும். ஏனெனில் அவர்கள் வெளியிடும் செய்திகளுக்கு அந்தந்த தளங்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் யாழ்களம் அப்படியானதல்ல. வெளியிடப்படும் கருத்துக்கள் உறுப்பிணர்களின் கருத்துக்கள். சம்பவங்களை சம்பவங்ககளாக எழுத அனுமதி வழங்கப்படவேண்டும்.
ஜெயதேவனிடம் சுனாமி காலத்தில் புனர்நிர்மானத்திற்கென சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பல உரிய இடத்தை சென்றடையாது அவர்களால் அபகரிக்கப்பட்ட விடயம் அவரது திருவிளையாடல்களில் ஒன்று. எனது நண்பர் இவரைப்பற்றி முன்னர் எதுவும் தெரிந்திராது சுனாமி காலத்தில் அகதிகளுக்கென இவர்களிடம் பணம் கொடுத்து பின்னர் அதற்கான எந்த கணக்குகளும் காட்டப்படாததினால் அவர்களிடம் கேட்டபோது சலாப்பல் பதில்களே விடையாக கிடைத்தன.
இவரைப் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் எனது நண்பர் இவர்களிடம் தனது கடினமாக உழைத்து சேகரித்த பணத்தை கொடுத்திருக்க நேர்ந்திருக்காது. எனவே நாங்கள் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். மேலும் எமது மக்கள் தமது பணத்தை இவர்களிடம் இழந்து ஏமாளியாக்கப்படுவது தடுக்கப்படவேண்டும். அதற்கு ஏன் யாழ்களம் ஒரு தளமாக இருக்கக்கூடாது.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஓய் இளைஞன் என்ன கதைக்கிறீங்க? எவர் எப்பெயரினாலும் உங்களுக்கு என்ன? ஜெயதேவன் எண்ட பெயரிலை எழுதுறவர் சொல்லுற கருப்பொருளைப்பாருங்க,, லண்டனில கோயில் கட்டினது யாருக்காக? எதுக்காகா? அங்க இருக்கிற உண்டியல்களை நிரப்புறது யார்? "றோவும், லண்டன் பொலிஸ்மா?
யாழ்களத்தை வாசிப்பது, கருத்து எழுதுவது யார்? சிங்களவனும், ஹிந்திக்காரனுமா? கருத்துக்களம் எண்டு உருவாக்கினதே, இப்படியான சில சிக்கலான பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை பற்றி மற்றயவர்களுக்கு தெளியப்படுத்துவதுதான்,, அதைவிட்டுட்டு கவிதை, கதை, பாடல்களை பிரசுரித்து அதனை பற்றி கதைக்கிறதுக்கு இங்க நிறையப்பேர் இருக்கினம்,, இப்படி சில சிக்கலான விடயங்களை கதைக்கிறதுக்கு ஒரு சிலர் தான் இருக்கினம்,,
இப்படியான விடயங்களை பற்றி கண்டிப்பாக கதைக்கவேண்டும், அதைபற்றிய விழிப்புணர்வை உண்டுபன்னவேண்டும், கோயில்கள், ரேடியோ நடாத்தி விபச்***ம் நடாத்தும் அரை வேக்காடுகளின் முகத்தை வெளீக்கொண்டுவரவேண்டும்,,
ஜெயதேவன், தொடருங்கள் உங்களின் கருத்துகளை,, :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
உப்படி இன்னொருவரின் பெயரிலேயே வந்து தனிநபர் தாக்குதல்களை நடாத்தவதில் எனக்கும் உடன்பாடில்லை. இங்கே எல்லோருக்கும் எது சரி எது பிழை என்று தெரியும். மற்றவர்களின் பெயர்களில் வந்ததை களம் அனுமதித்ததே தவறு. நாளை பிரபாகரன் என்றோ தமிழ்ச்செல்வன் என்றோ யாராவது வந்தாலும் களம் அனுமதித்தே ஆக வேண்டும். ஆகவே இப்படியான தவறான நடவடிக்கைகளுக்கு உங்களைப் போன்றோரே வழியமைத்துக் கொடுக்காமல் நீங்களும் ஆனந்தசங்கரி எனப் பெயரில் வரும் கள உறவும் வேறு புனைப்பெயரில் உங்களின் பெயர்களைப் பதிவு செய்து களமாடுவதே உகந்த செயல் என நான் கருதுகின்றேன். அதே போல் ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். இங்கு தனிநபர் தாக்குலாகத் தொடரும் போது அது களத்தைத்தான் அசிங்கப் படுத்தும். வீட்டுச் சண்டையை வீதிக்குக் கொண்டு வருவது நமக்குத் தான் அசிங்கம். இது என் கருத்துத்தான் திணிப்பல்ல. ஏற்பதும் விடுவதும் உங்களின் விருப்பம்.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Rasikai Wrote:ஜெயதேவன் என்பவர் குற்றவாளியாக இருந்தால் அதனை சமூக அக்கறை
கருதி நாகரீகமாக பொது விடயமாக எழுதினால் வரவேற்க கூடியதாக இருக்கும்.
அதைவிடுத்து நாகரீகமற்ற முறையில எழுதி களத்தை குப்பையாக்குவதோடு
எமது மனங்களை நோகடிப்பது உகந்ததல்ல...
ஹலோ களத்தில பாடல்கள், கவிதைகள், கதைகள், செய்திகளை பிரசுரித்தால் களம் பொழிவுடன், இருக்குமா? களத்தை பொழிவாக வைத்துக்கொண்டு மனதை எப்படி வைத்திருக்கபோறியள்?
ஜெயதேவன் செய்யும் தொண்டைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? ஒரு வகையில் சொல்லபோனால் எங்கள் மக்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும்,,மக்களின் உண்டியல் பணத்திலே உயிர்வாழுற நா***கள் அதையே அவர்களுக்கு எதிரா பயன் படுத்திக்கொண்டு இருக்கிறது எத்தனை பேருக்கு தெரியும்? :evil:
ஊரில இருக்கக்கைத்தான் வெளி நாடு போகனும், காசு உழைக்கனும் எண்டு கோயில் குளம் எண்டு சுத்தி காசுகளள அள்ளி கோயில்களுக்கு வாரி இறைச்சாங்கள், லண்டனுக்கு வந்து காசு உழைச்சும் திருப்பி எதுக்கு உண்டியலுக்கை காசை கொட்டுறாங்கள்? ஈழபதீஸ்வரர் எங்கயாவது அறிக்கை விட்டாரா? :evil:
தெளியவேண்டும் அல்லது தெளியவைக்கப்பட வேண்டும்,,  :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
Danklas Wrote:ஊரில இருக்கக்கைத்தான் வெளி நாடு போகனும், காசு உழைக்கனும் எண்டு கோயில் குளம் எண்டு சுத்தி காசுகளள அள்ளி கோயில்களுக்கு வாரி இறைச்சாங்கள், லண்டனுக்கு வந்து காசு உழைச்சும் திருப்பி எதுக்கு உண்டியலுக்கை காசை கொட்டுறாங்கள்? ஈழபதீஸ்வரர் எங்கயாவது அறிக்கை விட்டாரா? :evil:
தெளியவேண்டும் அல்லது தெளியவைக்கப்பட வேண்டும்,, :evil:
அதானே யாரோ ஒரு அன்னையைப் பற்றி எழுதலாம் துர்க்கை எண்டு. எங்கட "ஜெய" அண்ணாவைப் பற்றி எழுதுவதை தடுப்பது உரிமை மீறல்.. :evil:
:::::::::::::: :::::::::::::::
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
வணக்கம் ஜெயதேவன்????
நீங்கள் ஒருவரை பற்றி அம்பலப்படுத்துவது என்பதும், அதற்காக கையாளும் வசன நடைகளும் பொதுவாக நாகரீகமாக இருந்ததில்லை. நீங்கள் அப்படி எழுத வேண்டுமென்றால் அதை நாகரிகமாக எழுதினீர்கள் என்றால் நல்லது. அல்லது பழைய பாணியிலேயே அதிகளவான நாகரீகம் அற்ற சொற்பிரயோகங்களை பாவீப்பீர்கள் என்றால் என்னை பொறுத்தவரை யாழ் களத்தின் நன்மதிப்பை அது கெடுக்கும்.
இதை ஏற்பதும் ஏற்காது விடுவதும் உங்களது இஷ்டம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மணிமாறன்
யாழ்களத்தில் நேயர்கள் தான் வந்து கருத்து எழுதுகின்றார்கள் என்பதற்காக எதை வேண்டமானாலும் வந்து எழுதிவிட்டுப் போகமுடியாது. அதற்கும் ஒரு வரையறையுண்டு. அத்துடன் எந்த ஒரு தனிநபர் மீதான தாக்குதலையும் அனுமதிப்பது விபரீதமாகத்தான் வந்து முடியும். நீங்கள் பண விடயம் சம்பந்தமாக எழுதியுள்ளீர்கள். அது கோவில் சார்ந்ததாக சேகரிக்கப் பட்டால். அக் கோவிலுக்கென்றொரு நிர்வாகம் இருக்கும். அங்கு விபரத்தைக் கேட்கலாம். அக்கோவில் ஒரு குறிப்பிட்ட தனிநபரால் நடாதப்படவில்லையே??? உண்மையில் நிர்வாகத்திலுள்ள ஒருவர் தவறு செய்தால் அந்த நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நேரடியாக அந்தக் கோவிலிலேயே இப்பிரைச்சினையை தீர்த்துக் கொள்வதுவே நல்லது. அப்படி நடந்தால்த்தான் ஏனைய பக்தர்களுக்கும் எது உண்மையென்பதை புரிந்து கொள்ள ஏதுவாகவிருக்கும்.
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் உண்டியலான்!!!!
இதில் என் கருத்தையும் தெரிவிக்கலாமென நினைக்கிறேன்! அதற்கு முன் உங்களைப் பற்றி .... சில வரிகள் ....
நீங்கள் வன்னி சென்று உண்மைகளைக் கக்கி, லண்டன் திரும்பிய பின் ....
* வருடா வருடம் லண்டனில் நடைபெற்ற "தமிழர் விளையாட்டு விழா", த.பு.க இற்கான "புனர்வாழ்வு மாலை" நடைபெறுவதை ....
* தேசியத்திற்கு ஆதரவான நிறுவனங்களின் இருப்புக்களுக்கே ...
* தேசியத்திற்கான செயற்பாடளர்களை, அவர்களுக்கு விஸாக்கள் இல்லாதவிடத்து ....
* ....
போன்றவற்றிற்கு உங்களுக்கிருக்கும் லேபர்/பொலிஸ் தொடர்பைப் பாவித்து செய்தவைகள் கணக்கிலடங்காதவை!!!! இதன் உச்சக்கட்டமாக இந்தத் தடவை நடைபெற்ற "மாவீரர் நாள்" நிகழ்வைத் தடுப்பதற்கு நீதிமன்றத்தைக் கூட நாடினீர்களாம்!!!
.... இப்படியான அற்புதங்கள் செய்த உங்களைப்பற்றி எழுதிய பத்திரிகையாளர்களை/பத்திரிகைகளை பயமுறுத்தி நிறுத்தினீர்களாம்!!! ஆகவே இன்று உங்களைப்பற்றி உண்மைச் செய்திகல் வரும் ஒரே ஒரு ஊடகம் "யாழ் களமே"!!!!! இதற்கு மேலாக இன்று புலத்தில் குறிப்பாக லண்டனில் எம்மவர் மத்தியில் நடைபெறும் மிகப்பெரிய அவலம்/சீரளிவு உங்களது சாகஸச் செயற்பாடுகளே!!!
ஆகவே உங்களைப்பற்றி/உங்கள் சாகஸங்களைப்பற்றி இந்தக் களத்தினூடு வரும் உண்மைச் செய்திகள் நாலு பேருக்காவது சென்றடையுமென்றால்???? இத்தொடரை நீங்கள் தொடரத்தான் வேண்டும்!!!
ஆனால் இங்கு சில கள உறவுகள் தெரிவித்த கருத்துக்களையும் கவனத்தில் எடுங்கள்!!! சொற்பதங்கள் வரம்பு மீறிப் போகாமல் தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்!!!! எல்லாவற்றிற்கும் மேலாக மோகனுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படாமல் உண்மைச் செய்திகளினூடு தொடர்ந்து பயனியுங்கள் ............
"உரிய காலத்தில் மக்களுக்கு "எட்டப்ப/காக்கைவன்னியர்கள் அடையாளப் படுத்தப் படவேண்டும்"
" "
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
என்ன இருந்தாலும் அந்தாளின்ரை வயதுக்கு படிப்புக்கு மரியாதை குடுக்காப்பாருங்கோ. அந்தாளுக்கு இருக்கிற பவருக்கு எத்தினை செய்யும் நீங்கள் எல்லாம் பாவம் எண்டு கொஞ்சம் விட்டுபிடிக்கிறார்.
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது எண்டது சரியாத்தான் கிடக்கு.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<span style='font-size:20pt;line-height:100%'>ஜெயதேவன் எழுதுவது பிரச்சினை இல்லை.. நீங்கள்
பாவிக்கும் சில சொற்களும் சிலரின் பெயர்களை நேரடியாக
குறிப்பிட்டு எழுதுவதுமே களத்தில் பிரச்சினையை உருவாக்கும்.
இவற்றைத் தவிர்த்து எழுதினால் நல்லது.
இப்படி எழுது என்று உங்களுக்கு கட்டளை போடுவதாக
எண்ணிவிடாதீர்கள். களத்தில் பிரச்சினை இல்லாமல்
தொடர்ந்து எழுதவேண்டுமானல் இப்படி எழுதுவதே நல்லது.
மற்றபடி ஜெயதேவன் எழுதுவதால் களம் குப்பையாகிறது
என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அவருக்கு
மற்றவர்களைப் போல சிறந்த வார்த்தைகளை உபயோகித்து
எழுதத் தெரியவில்லை அவ்வளவுதான். மற்றபடி அவர்
எழுதுவதில் உண்மை இருப்பதாகத்தான் நினைக்கிறேன்.</span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
உண்மைதான் ஜெயதேவன், நீங்கள் யாருடய உடன்பாட்டுக்காகவும் எழுதாதீர்கள், உண்மையை எழுதுங்கள்.
உண்மைக்கு என்றும் அழிவில்லை, களைகள் களையப்படவேண்டியவை, புல்லுருவிகள் இனம்காட்டப்படவேண்டியவை, அவரின் ஆதரவாளருக்கு நடுக்கம் வருவது இயல்பே, அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உழைப்பை ஒருவன் சுரண்ட அனுமதிக்கக் கூடாது, எக்காலத்திலும் கயவர்கல் இனம்காட்டப்படவேண்டியவை, களவிதிமுறைகளுக்கு அமைய உங்கள் பணியை தொடருங்கள் எமது பூரன ஆதரவு உங்களுக்கு உண்டு, உண்மைகள் சுடும், சுடுபவர்கல் ஒதுங்கிக்கொள்ளட்டும். அல்லது அந்த சூட்டில் அழிந்து போகட்டும், உண்மை வெல்ல வேண்டும் இதுவே எமது அவா.
.
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஜெயதேவனைப் பற்றி எழுதுவதில் தப்பில்லை. சிலரின் சமூகத்துக்கு எதிரான முகமூடிகள் களையப்படல் வேண்டும். ஆனால் நாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பது தான் பலருக்கு உண்மைத் தன்மையைப் புரிய வைக்கும். இல்லாவிடின் கோபத்தில் எழுதப்படுதுவாதாகவே கருதுவார்கள்
[size=14] ' '
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதில் வேடிக்கையான விடயம் ஒன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்.. தீவிர இலக்கியம் என்று பேசப்படும் ஆபாசத்தனத்திலும் இங்கு பேசப்படும் வார்த்தைகள் களத்தை அதிகம் அசிங்கப்படுத்துமோ என்பதும்...இதில் கூட அது போல ஆபாசத்தை அசிங்கத்தை தவிர்த்து கருத்தாளர்கள் தேவையானதைப் பார்க்கட்டுமேன்..! மொத்த ஆபாசம் கலந்த பெரியாரின் சிந்தனைகள் என்று கொட்டப்பட்டவை பக்கம் பக்கமாக இருக்க...இதில் சொல்லப்படுபவை மட்டும்..பெரிய...குப்பை அசிங்கம் ஆகிடுமா...என்ன...???! :evil:  hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|